பாரதியின் கவிதைத் தேடல்
முனைவர் மோ.கோ. கோவைமணி
துறைத்தலைவர்
ஓலைச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் - 613 010
இந்தியாவில் தோன்றிய பௌத்த மதம் சீனாவில் வடவியீ (கி.பி.386-636) வமிச காலத்தில் பரவத் தொடங்கியது. சீனாவில் தோன்றிய அனைத்துக் கலைகளும் பின்னாளில் கி.பி.6ம் நூற்றாண்டில் ஜப்பானிலும் செழித்தோங்கச் செய்தன. சீனக் கலைகளே ஜப்பானியக் கலைகளாயின. காமாக்கூராக் (கி.பி.1192-1332) காலத்தில் 'ஜென்' என்னும் பௌத்த மதம் ஜப்பானில் தலைமை வகித்தது. தியானத்திலேயே ஞானமும் முத்தியும் சித்திப்பதாக ஜென்மதம் போதித்தது. இந்நிலையில் கி.பி.17ஆம் நூற்றாண்டில் ஜப்பானில் தோன்றிய இலக்கிய வடிவமே ஐக்கூ. இவ்வடிவம் ஜென் பௌத்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஜென் பௌத்தம் பற்றி அறிந்து கொள்வதற்காக சீனா சென்ற ஜப்பானிய பௌத்த குருமார்கள், அளவில் சிறியதான சீனக் கதைகளை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். இதுதான் ஐக்கூவின் தொடக்கம்.
ஐக்கூவில் குறியீடு இல்லை; படிமம், அணி, அலங்காரம் இல்லை. ஒரு குறிப்பிட்ட மனநிலையைத் தோற்றுவிக்கக் கவிஞன் ஒரு செய்தியைச் சொல்வான். அதோடு கவிஞனின் வேலை முடிந்துவிடும். அதன்பிறகு அதிலுள்ள கருத்தாழப் பொருள்களை வாசகனோ கேட்போனோ தோண்டி இறைத்துக்கொள்ள வேண்டும். இவ்வகைப்பட்ட ஐக்கூக் கவிதைகள் 17ஆம் நூற்றாண்டு முதல் ஜப்பானில் வளம் சிறந்த இலக்கிய வடிவமாகத் திகழ்ந்து வருகின்றது.
மேலை நாடுகளில் ஐக்கூ
ஜப்பானிய இலக்கிய உலகில் வரலாறு படைத்த ஐக்கூக் கவிதையானது பதினைந்தாம் நூற்றாண்டில் அரும்பி, பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மலர்ந்து, மணந்து உலகத்தின் கவனத்தைத் தன்பால் ஈர்த்தது. மோரிடாகே (1473 - 1549), சோகன் (1465 - 1553) என்பவர்கள் தான் ஐக்கூவின் முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள். பாஷோ (1644 - 1694)தான் மிகப் பெரிய ஐக்கூக் கவிஞராகத் திகழ்ந்தார். பாஷோவிற்குப் பிறகு ஐக்கூவிற்கு மேன்மையையும் புலனுணர்வையும் எண்ணத்தையும் தந்த பூசன் (1716 - 1784), ஐக்கூவை சாமான்யர்களின் கையில் கொண்டுவந்து கொடுத்த இஸ்ஸா (1763 - 1823) ஐக்கூவில் இயற்கையான, உண்மையான சித்திரங்களையே வரையவேண்டும் என்ற ஷிகி (1867 - 1902) மற்றும் கோஷி (1874 - 1959) ஆகியோர் ஐக்கூக் கவிதையின் பரிணாம வரலாற்றில் குறிப்பிடத்தகுந்தோராவர்.
கி.பி. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஜப்பானிய ஐக்கூக் கவிதை வடிவமும் அதன் செறிவும் உள்ளடக்கமும் ஃபிரான்சில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவ்வடிவத் தாக்கத்தின் காரணமாக 1910இல் Anthologie de la Litterature Japanise - Marcel Revon's பிரென்ஞ்சு மொழியில் வெளியிட்டார். அதன்பின் 1920இல் பன்னிரண்டு கவிஞர்களின் பிரென்ஞ்சு ஐக்கூக் கவிதைகளைத் தொகுத்து (Nouvelle Rewe Francaise Published) வெளியிடப்பட்டன.
ஜப்பானிய ஐக்கூக் கவிதைகள் பிரென்ஞ்சு நாட்டில் வரவேற்புப் பெற்ற அதே காலகட்டத்தில் ஆங்கில, அமெரிக்க படிமவியல் வாதிகளின் கவனத்தையும் இக்கவிதை வடிவம் கவர்ந்தது. தொடக்க காலத்தில் டி.,இ. உற்யூம், எப்.எஸ். ஃபிலிண்ட், அமிலாவல், ஜான் கோல்ட் ஃலக்சர் மற்றும் ஜேம்ஸ் கிர்குப் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
தமிழில் ஐக்கூ
தமிழ்க் கவிதை உலகில் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். அவரின் இலக்கிய ஆர்வம் தமிழுக்குப் பல இலக்கிய வடிவங்களைத் தேடித் தந்திருக்கின்றன. அவரின் முயற்சியின் விளைவே வசன கவிதை என்னும் புதுக்கவிதை. ஐக்கூவைப் பற்றிய சிந்தனையையும் முதன் முதலில் அறிமுகம் செய்தவரும் பாரதியார் தான். 1916ஆம் ஆண்டு உயோநே நோகுச்சி என்னும் ஜப்பானியக் கவிஞர் எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு சுதேசமித்திரன் இதழில் அதே ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் நாளில் ஐக்கூக் கவிதையைப் பற்றிய ஜப்பானியக் கவிதை எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் ஐக்கூக் கவிதை பற்றிய அவரது கருத்துகளையும் எண்ணங்களையும் காணமுடிகிறது. ஜப்பானியக் கவிதை பற்றி பாரதியின் கூற்றினை அப்படியே இங்குக் காணுவது அவரின் சொல் வண்மையையும் கருத்துத் தெளிவையும் புலப்படுத்தும் என்பதால் பின்வருமாறு தரப்பெறுகிறது.
மேற்குக் கவிதையில் சொல் மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கையில்லாமல் சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலேயில்லை. எதுகை சந்தம் முதலியவற்றைக் கருதியும், சோம்பற் குணத்தாலும், தெளிவில்லாமையாலும் பல சொற்களைச் சேர்த்து வெறுமே பாட்டை அதுபோகிற வழியெல்லாம் வளர்த்துக் கொண்டு போகும் வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிக மிருக்கிறது. தம்முடைய மனதிலுள்ள கருத்தை நேரே வெளியிடுவதில் மேற்குப் புலவர் கதைகளெழுதுவோரைக் காட்டிலும் சக்தி குறைந்திருக்கிறார்கள்.
‘‘ஐப்பானில் அப்படியில்லை. வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பது கிடையாது. 'கூடை கூடையாகப் பாட்டெழுதி அச்சிடவேண்டும்’’ என்று ஒரே ஆவலுடன் ‘‘எப்போதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதை யெழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையையே கவிதையாகச் செய்தோன்-அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனிமை, மோனம், மலர்களின் பேச்சு-இவற்றிலே ஈடுபட்டுப்போய் இயற்கையுடனே ஒன்றாக வாழ்பவனே கவி.
‘‘கற்று முடிந்து வீட்டுக்குத் திரும்புகையிலே ஒரு சீடன் ஹவாஷோமத்ஸுவோ’’ என்னும் புலவரிடம் மூன்று ரியோ (அதாவது ஏறக்குறைய முப்பது வராகன்) காணிக்கையாகக் கொடுத்தானாம். இவர் ஒரு நாளுமில்லாதபடி புதிதாக வந்த இந்தப் பணத்தை வைத்துக் காப்பது தொல்லையாதலால் வேண்டியதில்லை என்று திரும்பக் கொடுத்து விட்டாராம். இவருக்கு காகா என்ற ஊரில் ஹொகூஷி என்றொரு மாணாக்கர் இருந்தார். இந்த ஹொகூஷியின் வீடு தீப்பட்டெரிந்து போய்விட்டது. அந்தச் செய்தியை ஹொகூஷிப் புலவர் தமது குருவாகிய 'வாஷோமத்ஸுவோ’’ புலவருக்குப் பின்வரும் பாட்டில் எழுதியனுப்பினார்.
'தீப்பட்டெரிந்தது, வீழுமலரின் அமைதியென்னே!’’
‘‘மலர் தனக்கு வாழுங் காலம் மாறிக் கீழே விழும்போது எத்தனை அமைதியுடன் இருக்கிறதோ, அத்தனை அமைதியுடன் ஞானி தனக்கு வருந்துன்பங்களை நோக்குகின்றான். 'வீடு தீப்பட்டெரிந்தது. ஆனால், அது பற்றித் தன் மனம் அமைதியிழந்து போகவில்லை’’ என்ற விஷயத்தை ஹொகூஷி இந்தப் பாட்டின் வழியாகத் தெரிவித்தார்” என்று மேலது கவிதைக்கு உரை கண்டிருக்கிறார் பாரதியார்.
'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் ஜப்பானியக் கவிதையின் விசேஷத் தன்மை’’ யென்று நோகுச்சிப் புலவர் சொல்லுவதுடன் ஆங்கிலேயரின் கவிதை இதற்கு நேர்மாறாக நிற்கிறதென்றும் சொல்லுகிறார். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது; ‘‘கடுகைத் தொளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்.” கிழக்குத் திசையின் கவிதையிலே இவ்விதமான ரஸம் அதிகந்தான். தமிழ் நாட்டில் முற்காலத்தில் இது மிகவும் மதிப்பெய்தி நின்றது. ஆனாலும், ஒரேயடியாகக் கவிதை சுருங்கியே போய் விட்டால் நல்லதன்று. ஜப்பானிலே கூட எல்லாக் கவிதையும் ‘‘ஹொகூஷி” பாட்டன்று. ‘‘நோக்குச்சி” சொல்வதிலே அருமையான உண்மையிருக்கிறது என்கிறார்.
‘‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” ஜப்பானியக் கவிதையின் சிறப்புத் தன்மை என்று நோக்குச்சிப் புலவர் சொல்வதாக பாரதியார் குறிப்பிட்டதுடன் ஐக்கூப் பாட்டைப் படித்துவிட்டுத் திரும்பத் திரும்ப மனனம் செய்யவேண்டும்; படிப்பவனுடைய அனுபவத்திற்குத் தக்கபடி அதிலிருந்து நூறு வகையான மறைபொருள் தோன்றும் என்கிறார். சில கவிதைகளை மொழிபெயர்த்தும் தந்துள்ளார். பூஸோன் யோஸாவேறா என்ற ஜப்பானியக் கவிராயரின் கவிதையையும், ஹொகூஷி என்ற ஜப்பானியக் கவிராயரின் கவிதையையும் முறையே,
‘‘பருவ மழையின் புழையொலி கேட்பீர்
இங்கென்
கிழச் செவிகளே” (சுதேசமித்திரன், 18.10.1916)
என்றும்,
‘‘தீப்பட்டெறிந்தது;
வீழு மலரின்
அமைதியென்னே” (சுதேசமித்திரன், 18.10.1916)
என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது.
பாரதியின் தொடக்கமும் தமிழர;களின் தொடர;ச்சியும்
பாரதியார; தமிழுக்கு அறிமுகப்படுத்திய இக்கவிதை வடிவம். அவரைப் பின்பற்றியவர;களால் பெரிதும் வளர;க்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. பாரதியாரின் ஐக்கூ மோகத்தைப் பாரதிதாசன், பாரதிக்கும் தனக்கும் உள்ள தொடர்பு பற்றி 1960இல் எழுதி கட்டுரை ஒன்றில்,
‘‘மயங்கினேன் முயங்கிலாள், ப்ரீசு
வாய்ந்து - எழில் மறந்திலேன் காவின்
தயங்குபுறவு, தன்பெடை மருவலின்
தளிர்ந்து உயிர், திரும்பிட ஆங்கு
முடிந்த வாழ்வு, இதழ் உணவின் மீண்டது;
முயங்கிலை; முயங்கினை ஏன்? - என
முயக்க நிலவுக்கு எனப்பினும் முயங்கினாள்”
(காற்றின் கைகள், ப.12)
என்று குறிப்பிட்டதுமல்லாமல், பாரதியார் மொழிபெயர்த்த 'வெர்க்ஷேஉறரன்' கவிதையை எடுத்துக்காட்டி இருப்பதையும் காணமுடிகிறது. இப்படியாக பாரதியாரும் பாரதிதாசனும் ஐக்கூக் கவிதைகளைப் பற்றிய செய்திகளைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் சில கவிதைகளை மொழிபெயர்த்து முன்மாதிரியாகவும் காட்டித் தத்தம் இலக்கியப் பணியைச் செம்மையாகச் செய்து முடித்திருக்கின்றனர்.
அதன்பின் நீண்ட நெடுங்காலமாக தூங்கிவிட்டு இருந்த ஐக்கூ இலக்கிய வடிவம் சிலரின் முயற்சியால் ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு மறுபிறவி எடுத்து வந்துள்ளதெனலாம். இந்தக் கால கட்டத்தில் அப்துல்ரகுமான், சி. மணி, தமிழ்நாடன் போன்ற தமிழ்க்கவிஞர்கள் ஜப்பானிய ஐக்கூக் கவிதைகளை மொழிபெயர்க்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். தமிழைப் பொருத்த வரையில் மொழிபெயர்ப்பு முயற்சிகளே முதலில் தொடங்கின. அப்துல்ரகுமான், நீலமணி, வைத்தியலிங்கம், கலாப்பிரியா, வைத்தீஸ்வரன், கல்யாண்ஜி போன்ற கவிஞர்கள் ஐக்கூ பாணியில் அமைந்த கவிதை வடிவங்களைக் கையாண்டுள்ளனர். படிம, குறியீட்டு கவிதைகளும், ஜப்பானிய ஐக்கூக் கவிதைகளும் 'எழுத்து’’க் கவிஞர்களின் மனத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. இம்மாற்றத்தினால் தமிழ் இலக்கிய வடிவம் பாதிப்பையும் மாற்றத்தையும் கண்டன. இதுவரை மொழிபெயர்ப்புக் கவிதைகளின் மூலம் வளர்ந்து வந்த ஐக்கூக் கவிதையானது இந்தக் காலகட்டக் கவிஞர்களால் தமிழ் ஐக்கூக் கவிதைகள் தோன்றலாயின.
”ர்நச கநநவ டிநநெயவா hநச pநவவiஉழயவ
டுமைந டவைவடந அiஉந, ளவழடந in யனெ ழரவ”
என்ற ளுரமமடiபெ இன் கவிதையை வைத்தீஸ்வரன் மொழிபெயர்க்கும் போது,
”கிளைக்குத் திரும்பும்
விழுந்த சருகா
பட்டுப்பூச்சி” (வைத்தீஸ்வரன், நடை இதழ்)
என்ற வடிவம் பெற்றிருப்பதைக் காணலாம்.
மொழிபெயர்க்கும் முயற்சியில் இருந்து 1980க்குப் பிறகே தமிழில் ஐக்கூக் கவிதைகள் தோன்றலாயின. இந்த ஆரம்பக் காலகட்டத்தில் ஐக்கூவின் இலக்கண வரம்புகளை மீறி, மூன்றடிகளுக்கு உட்பட்டதும் முதல் இரண்டு அடிகள் ஒரு கூறாகவும் ஈற்றடி பிறிதொரு கூறாகவும் கொண்டு பொருளமைதியோடு எழுதியிருக்கின்றனர். இந்த நிலையில் முழுமூச்சோடு ஈடுபட்டவர்கள் அமுதபாரதி, அறிவுமதி, கழனியூரன், தமிழன்பன், சாந்தானந்தன், கோவைமணி, மேத்தாதாசன், புதுவை சீனு. தமிழ்மணி, செருவென்றான், வாவேந்தரன்பன், தாமரைக்கோ, பாரதிவசந்தன், கோ. செந்தமிழன், எஸ். அறிவுமணி, சூலூர் நா. தமிழ்நெஞ்சன், புதுவை தமிழ்நெஞ்சன், திறவோன், தரங்கை பன்னீர்செல்வம், தோழன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
ஐக்கூவின் மரபுத் தன்மையான 5-7-5 அசை அமைப்பினைக் கொண்ட கவிதைகளை டாக்டர் கு. மோகனராசு அவர்கள் முதன் முதலில் எழுதி இருக்கிறார். அவரின் கவிதைகள் 'ஒன்றே உலகம்' என்னும் திங்களிதழில் இடம்பெற்றுள்ளன. அவரைத் தொடர்ந்து இலக்கண வரம்போடு கூடிய கவிதைகளைக் கவிஞர் அமுதபாரதி (காற்றின் கைகள்)யும், மோ.கோ. கோவைமணி (ஐக்கூ ஐநூறு)யும் எழுதியிருக்கின்றனர்.
‘‘இளங்காலைப் பொழுது
மேனி இருட்டையா கழுவும்
நீர் குளிக்கும் காக்கை” (அமுதபாரதி, காற்றின் கைகள், ப.33)
‘‘குடிக்கத் தயாரான
பாலில் வந்து விழுந்ததே ஈ!
திருமணத்தில் ஜாதகம்” (கோவைமணி, ஐக்கூ ஐநூறு, ப.22)
போன்ற கவிதைகளைக் குறிப்பிடலாம்.
‘‘ஜப்பானிய மொழியில் அசை என்பது வெறும் ஒலிக்குறிப்பு, உச்சரிப்பு விதம் மட்டுமே என்றுரைக்கலாம்” (தமிழில் iஉறகூ, ப.50). ஆனால், தமிழில் அப்படி இல்லை. தமிழில் ஓரசைச்சொல், ஈரசைச்சொல், மூவசைச்சொல், நான்கசைச்சொல், ஐந்தசைச்சொல் என அமையக் காணலாம்.
பழந்தமிழ்ப் புலவர்கள் நிகண்டுகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களால் சித்திரக் கவிதைகளை எளிதாக யாக்க முடிந்திருக்கிறது. ஜப்பானிய சீர் எழுத்தைப் போல் நம் புலவர்களும் 'ஓரெழுத்துப்பாட்டு’’ எழுதி இருக்கின்றனர். வே.இரா. மாதவன் அவர்கள் தம்முடைய 'சித்திரக்கவி' என்னும் நூலில் தண்டியலங்கார மேற்கோள் பாடலாக,
”காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்கக் - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா”
என்ற நேரிசைச் சிந்தியல் வெண்பாவையும்,
”தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைத்ததா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது”
என்ற இன்னிசை வெண்பாவையும் பக்கம் 146இல் குறிப்பிடுகின்றார். இந்த அமைப்பே ஜப்பானிய ஐக்கூவிலும் இருக்கின்றது. ஜப்பானிய ஐக்கூ வடிவம் எப்படி இருக்கிறது என்பதை நெல்லை சு. முத்து அவர்கள் 'தமிழில் iஉறகூ' என்னும் நூலில் (ப.51) பின்வருமாறு எடுத்துரைக்கின்றார்.
”ய-தொ-நொ-உற-ரு
ந-னி-மொ-ந-கி-கொ-ஸொ
ந-னி-மொ-அ-ரெ
என்ற யமகுச்சி ஸோடோ எழுதிய இந்த ஐக்கூவின் பொருள்,
வசந்தத்தில் என் குடிசை
பொருள் ஏதுமில்லை - உண்மையில்
பொருளெல்லாம் அதுவே”
என யமகுச்சி ஸோடோ அவர்களின் கவிதை உட்பொருளை மட்டுமே மேலோட்டமாகக் கொண்டு தமிழில் பொருத்தமான வார்த்தைகளில் வடித்து வருகின்றோம் என்கின்றார்.
ஜப்பானிய சீர் எழுத்து ஐக்கூக் கவிதையைத் தமிழில் எழுத முடியுமா என்ற வினா நீண்ட காலமாகவே என்னுள் இருந்து வருகிறது. தமிழின் பழமை, யாப்பமைப்பு, மொழியமைப்பு, சொற்றொடரமைப்பு இவற்றையெல்லாம் மனதில் கொண்டு பார்க்கும் போது தமிழிலும் சீர் எழுத்துக் கவிதைகளை ஐக்கூவிற்கு ஒப்ப எழுத முடியும் என்று முயற்சித்துள்ளேன்.
நா-மா-க-தூ-வீ
வை-தீ-க-ம-து-ஆ-வீ
வை-தீ-க-பா-மா
(நா-அயலார்; மா-நிலம், புமி; க-அரசன்; தூ-பகை; வீ-விரும்புதல்; வை-வையகம்; தீ-தீய; க-காற்று; ம-நஞ்சு; து-வளர்தல்; ஆ-பசு,உயிர்; வீ-சாவு; வை-வைக்கோல்; தீ-நெருப்பு; க-காற்று; பா-பரவுதல்; மா-துகள்)
(இ-ள்.) நா-மா-க-தூ-வீ என்பது அயல் நிலத்தரசன் மீது பகைகொண்டு; வை-தீ-க-ம-து-ஆ-வீ என்பது வையகம் முழுவதும் தீய காற்றில் கலந்த நஞ்சு அதிகரித்து உயிர்கள் மடிவது; வை-தீ-க-பா-மா என்பது வைக்கோலில் பட்ட நெருப்பு காற்றில் பரவும் துகள்.
பா-கை-சீ-க-தை
க-தா-கௌ-சீ-தா-மா-யா
மா-சீ-பூ-கோ-தை
(பா-நெசவு செய்யும் பாவு; கை-படை வகுப்பு; சீ-பெண்; க-உடல்; தை-தைத்துக்கொள்ளல்; க-காமன்; தா-கேடு; கௌ-கொள்ளுதல்; சீ-பெண்; தா-அழிவு; மா-சீலை; யா-இல்லை; மா-வண்டு; சீ-நித்திரை; பூ-மலர்; கோ-இறைவன்; தை-தைத்துக்கொள்ளல்)
(இ-ள்.) பா-கை-சீ-க-தை என்பது நூலை(இழை)ப் படை வகுத்து நெசவு செய்து துணியாக்கிப் பெண்கள் தங்களின் உடலை மறைக்க ஆடையாக தைத்துக்கொள்ளுதல்; க-தா-கௌ-சீ-தா-மா-யா என்பது பெண்களின் மீது காமுகன் ஒருவன் கேடு கொள்வானேயாயின் ஆடையால் அழிவைத் தடுக்க முடியுமா?; மா-சீ-பூ-கோ-தை என்பது வண்டு உறங்கிய(நித்திரை) மலரை இறைவனுக்குச் சூட்டுவதைப் போன்றது.
மகாகவி பாரதியாரால் தமிழுக்கு அறிமுகப்படுத்திய ஐக்கூக் கவிதை வடிவம் இன்று புற்றீசல்போல் பல்கிப் பெருகித் தமிழின் இலக்கிய வளத்தைப் பெருக்கி இருக்கிறது என்றால் அதற்கு வித்திட்டவர; பாரதியார; என்று பார;க்கும்போது பெருமைப்பட வைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக