"பத்து மிளகு இருந்தா பகைவன் வீட்டிலேயும் சாப்பிடலாம்” என்பர். இது, கொடி வகையைச் சார்ந்தது. இம்மிளகில் வைட்டமின் ஏ மற்றும் சி, கரோடின்கள்
இருக்கின்றன. இம்மிளகில் வால்மிளகு, மிளகு
என்ற இரண்டு வகையுண்டு. வெண்மிளகு, பச்சை மிளகு, சிவப்பு மிளகு, கருமிளகு என மிளகில்
பல வண்ணங்கள் உண்டு. காம்புடன் காணப்படும்
மிளகு வால்மிளகு எனப்படும். இம்மிளகை
நேரிடையாகவும் பிறவற்றுடனும் சேர்த்துப் பயன்படுத்தும் போது பல நோய்கள்
குணமாகின்றன. அவற்றுள் சில மட்டும் இங்கு
எடுத்துரைக்கப்படுகிறது.
- தினமும் அரை கிராம் மிளகுப் பொடியை வெதுவெதுப்பான நீரில்
பருகி வந்தால் பசியின்மை நீங்கி, நல்ல பசியெடுக்கும்.
- மிளகு ரசம் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுக்கோளாறு,
சுவாச நோய்கள் வராமல் தடுக்கும்.
மேலும் மூளையின் செயற்பாடுகளை அதிகரிக்கச் செய்யும்.
- மிளகுத்தூளை சிறிதளவு தண்ணீரில் கொதிக்க வைத்து பனவெல்லம்
சேர்த்து அருந்தினால் வாய்வுக் கோளாறு, சளி மற்றும் இருமல் குணமாகும்.
- மிளக்குத்தூளுடன் அருகம்புல் சிறிதளவு சேர்த்து நீரில்
கொதிக்க வைத்து குடிக்க பூச்சி கடியினால் ஏற்பட்ட தோல் தடிப்பு மற்றும் தோல்
அரிப்பு குணமாகும்.
- மிளகுடன் வெற்றிலை ஒன்று சேர்த்து நீரில் கொதிக்க வைத்து
அருந்தினால் தும்மல், மூக்கில் நீர் சொட்டுதல் குணமாகும்.
- மிளகுப் பொடியுடன் உப்பு கலந்து பல் தேய்க்க பல் கூச்சம்,
பல் சொத்தை, வாய் துர்நாற்றம், ஈறு வலி, ஈறுகளில் இரத்தம் வடிதல் ஆகிய
நோய்கள் குணமாகும்.
- மிளகுடன் உப்பு சேர்த்துச் சாப்பிட தொண்டை கரகரப்பு
குணமாகும்.
- மிளகுடன் பெருஞ்சீரகம் சேர்த்துப் பொடி செய்து தேனில்
கலந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.
- மிளகு 50 கிராம், சோம்பு 70 கிராம் சேர்த்துப் பொடித்து அத்துடன் 350 கிராம் தேன் சேர்த்து லேகியமாக்கிக்கொண்டு தினமும் இருவேளை கழற்சிக்காய் அளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர மூலநோய் தீரும்.
- தினமும் நான்கு பாதாம் பருப்போடு ஆறு மிளகைத் தூளாக்கிப்
பாலோடு சேர்த்துக் குடித்தால் ஆண் அல்லது பெண் மலட்டுத்தன்மை நீங்கும்.
- மிளகைப் பாலில் சேர்த்து அரைத்து தலைக்குத் தடவி சிறிது நேரம் ஊற வைத்தபின் குளிக்கப்
தலையில் உள்ள பொடுகு போகும், தலைமுடி வளரும்.
- மிளகுத்தூள் பத்து கிராம், எருக்கன் வேர் பதினெட்டு
கிராம் எடுத்துக்கொண்டு அதனுடன் போதிய அளவு பனைவெல்லம் சேர்த்து அரைத்து
கடுகு அளவு மாத்திரைகளாக செய்து வைத்துக் கொண்டு தினந்தோறும் இருவேளை ஒரு
மாத்திரை சாப்பிட பால்வினை நோய்க் கொப்புளங்கள் குணமாகும்.
- வெருகடியளவு மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்தால்
அஜீரணம் குணமாகும்.
- மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு
வர தலைவலி, தலைபாரம் குறையும்.
- மிளகை அரைத்துத் தலையில் பற்று போட்டால் தலைவலி தீரும்.
- மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி,
நீர்ச்சளி நீங்கும்.
- மிளகுடன் கல்யாண முருங்கை இலை, முருங்கை இலை மற்றும்
பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட இரத்தசோகை தீரும்.
- மிளகுப் பொடியுடன் சம அளவு தூதுவளைப் பொடியும் சேர்த்து
தேனில் குழைத்துச் சாப்பிட தொடர்ந்து வரும் தும்மல் குணமாகும்.
- 35 கிராம் மிளகுடன் 180 மி.லி.வெற்றிலைச்சாற்றில் ஒரு
நாள் முழுவதும் ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கிப் பீங்கான் பாத்திரத்தில்
வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப்
பொடியை இருவேளை வெந்நீரில் எடுத்துவர பூரான்கடி விஷம் நீங்கும். உப்பு, புளி
சேர்க்கக் கூடாது.
- பத்து
மிளகை ஒரு கைப்பிடி அருகம்புல்லோடு அரைத்து தீநீர் வைத்து குடித்துவர பல்வேறு விஷக்கடிகள் தீரும்.
- மிளகுப் பொடியைத் தேனுடன் இருவேளை எடுத்துவர ஞாபகமறதி,
உடல்சோம்பல், சளித்தொல்லைகள் நீங்கும்.
- மிளகை நெய்யில் வறுத்து பொடி செய்து தினம் அரை ஸ்பூன்
மூன்று வேளையும் சாப்பிட மிகுசளி தீரும்.
- கல்யாண முருங்கை இலை, பச்சை அரிசியுடன் மிளகு சேர்த்து
அரைத்து தோசை செய்து சாப்பிட சளி குணமாகும்.
- ஒரு ஸ்பூன் வறுத்த மிளகுப் பொடியுடன் கைப்பிடியளவு துளசி
இலையைச் சேர்த்து கொதிக்க வைத்து, பின் ஆற வைத்து அதனுடன் தேவையான அளவு தேன்
கலந்து சாப்பிட பசியின்மை மற்றும் வயிறு உப்பிசம் குணமாகும்.
- தினந்தோறும் ஐந்து மிளகை மென்று தின்பதால் ஆஸ்துமா
குணமாகும்.
- துளசி இலை 10, மிளகு 5, 200 மி.லி. தண்ணீர் சேர்த்துக்
கொதிக்க வைத்து குடித்தால் நெஞ்சுச்சளிக்கட்டு நீங்கும்.
- 10 கிராம் மிளகுத்தூளும் சிறிது மஞ்சள் தூளும் சேர்த்து
பாலில் கொதிக்க வைத்துக் குடிக்க தும்மலும் சளியும் நீங்கும்.
- ஆறு மிளகுடன் சிறிது பூவரச கொழுந்திலையைச் சேர்த்து
அரைத்து சுண்டைக்காய் அளவு மோரில் கரைத்து தினமும் மூன்று வேளை குடித்து வர
மஞ்சள் காமாலை தீரும்.
- முருங்கை இலைச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்துக் குழைத்து நெற்றிப்பொட்டில் பற்றிட ஒற்றைத்தலைவலி தீரும்.
- அரை ஸ்பூன்
மிளகுத்தூளை சுடுநீரில் இட்டுத் தேவையான அளவு பனைவெல்லம் சேர்த்து கொதிக்க வைத்துச்
சாப்பிட காய்ச்சல் தீரும்.
- சிறிது மிளகுத்தூளுடன்
வேப்பிலை 6ஐ நீரிலிட்டு கொதிக்க விட்டு சாப்பிட காய்ச்சல் தீரும்.
- மிளகையும் தும்பைப்
பூவையும் சம அளவு எடுத்துக்கொண்டு அரைத்து மிளகளவு மாத்திரைகளாக்கிக் காய வைத்து
எடுத்துக் கொண்டு 2 அல்லது மூன்று மாத்திரைகளை வெந்நீரில் முழுங்க காய்ச்சல்,
மூளைக்காய்ச்சல் குணமாகும்.
இவ்வாறு பல நோய்களுக்குப்
பயன்படும் மிளகு நமக்கு ஒரு வரப்பிரசாதம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக