வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
அருளிச் செய்த
ஏபாதம் உரையுடன்
கலி விருத்தம்
முருக வேடன் முதற்குரு நாதனே
முருக வேடன் முதற்குரு நாதனே
முருக வேடன் முதற்குரு நாதனே
முருக வேடன் முதற்குரு நாதனே.
பதவுரை : முருகனுடன் – சமணரை வாதிற்
செயிக்கப்பெற்ற அழகிய பனையேட்டையுடையவர், முதற்கு – சிவபெருமானைக் குறித்து, உரு –
யாவரு முருச்செபிக்கத்தக்க, நாதன் – பண்ணோடு கூடிய பதிகங்களையுடையவர், ஏ – பூ வம்புகளைக்
கொண்டு, முருகு – திருவிழா நடத்தும். அவேள்தன் – அம்மன்பதவேளினாலுண்டாகும், முது –
முதிர்ந்த, அற்கு – மோகவிருளைக் கெடுப்பதற்கேற்ற, உரு – ஓரி பிரகாச வடிகத்தையுடையவர்,
நாதன் – சகலலோக நாயகர், ஏம – கண்டோரிறுமாப்பானது,
உருகு – கரையும் படியான, அம் – அழகிய, வேடன் – திருவேடத்தையுடையவர், முதல் – முதற்பொருள் போன்ற, குரு – வியாழசம்பந்தமுடைய,
நாதனேம் – நாவின்றன்மையை யுடைய இலாபத்தை வினைக்கு எங்களது, முருக வேடன் – முருகக் கடவுளாகிய
வேட்டுக்குமரர், முதல் – தலைமைபேற்ற, குருநாதன் – ஆசாரியராவார். ஏ – அசை.
இதன்பொருள் : சமணரை
வாதிற் செயிக்கப்பெற்ற அழகிய பனையேட்டையுடையவர், சிவபெருமானைக் குறித்து யாவரும் உருச்
செபிக்கத்தக்க பண்ணோடு கூடிய பதிகங்களை உடையவர், பூ அம்புகளைக் கொண்டு திருவிழா நடத்தும்
அம்மன் பதவேளினால் உண்டாகும் முதிர்ந்த மோக இருளைக் கெடுப்பதற்கு ஏற்ற ஓரி பிரகாச வடிவத்தை
உடையவர், சகலலோக நாயகர், கண்டோர் இறுமாப்பானது
கரையும் படியான அழகிய திருவேடத்தை உடையவர், முதற்பொருள் போன்ற வியாழ சம்பந்தமுடைய நாவின் தன்மையை
உடைய இலாபத்தை வினைக்கு எங்களது முருகக் கடவுளாகிய வேட்டுக் குமரர் தலைமை ஏற்ற ஆசாரியராவார்
என்றவாறு.
(1)
கலித்துறை
கந்தனைச் சிந்தையிற் கண்டார் வலங்கழித் தருமே
கந்தனைச் சிந்தையிற் கண்டார் வலங்கழித் தருமே
கந்தனைச் சிந்தையிற் கண்டார் வலங்கழித் தருமே
கந்தனைச் சிந்தையிற் கண்டார் வலங்கழித் தருமே.
பதவுரை : கம்தன் - ஆகாயத்தினது, ஐ
– நுட்ப வடிவத்தையும், சிந்து – முரசாகிய சமுத்திரத்தையுமுடைய, ஐ – மன்மதனுக்கு, இல
– உறைவிடமாகிய கடித்தாடச் சம்பந்தத்தாலுண்டாகிற, கண்டு – கற்கண்டு போன்ற வினியகலவி,
ஆர – அநுபவித்தனாலுண்டான, அலம் – சஞ்சலத்தை, கழி – மிகவும், தரு – கொடுக்கவல்ல, மேகம்
– மேகரோகமானது, தன் – தன்மைகளை நைச்சர் முழுதுங் கெடுத்து, ஐ - இந்துவில் கூடிய ரோகங்கொண்ட
சந்திரனைப்போல், கண்டார் – தோற்றப்படுமவர்களது,
அ – அத்தன்மையையுடைய, அல – உள்ளிருளை, அங்கு – உதித்தவிடத்திலேயே, அழி – ஒடுங்கும்படி
செய்யத்தக்க, தரு – இசைப் பாட்டுக்களைச் சூடிக்கொண்டிருக்கிற, மேகம் – கிருபா மேகமும்,
தன் ஐ – தமக்குத் தாமே சுவாமியாகிய, சிந்து – குறள்வடிவமுடையவருமாகிய, அயிற்கு – வேலாயுதத்திற்கு,
அண் – பொருந்திய, தார் – வெற்றித் தன்மையை, அவல் – பள்ளமாகிய, அம் – நீரையுடைய, கழி
– சமுத்தரத்தினாலும், தரு – மாமரத்தினாலும், மே – பொருந்தும்படி செய்த, கந்தனை – கந்தக்கடவுளை,
சிந்தையில் - இருதயத்தின்கண், கண்டார் – தரிசித்தவர்களுடைய, அல்லம – துன்பமானது, கழிதரும்
– நீங்கிவிடும். ஏ – அசை.
கழி – ஆகுபெயர், கிருபா மேகமும் குறள்வடிவமுடையவருமாகிய கந்தக்
கடவுளையெனக் கூட்டுக.
இதன்பொருள் : ஆகாயத்தினது
நுட்ப வடிவத்தையும் முரசாகிய சமுத்திரத்தையுமுடைய மன்மதனுக்கு உறைவிடமாகிய கடித்தாடச்
சம்பந்தத்தால் உண்டாகிற கற்கண்டு போன்ற இனிய கலவி அநுபவித்தனால் உண்டான சஞ்சலத்தை மிகவும்
கொடுக்கவல்ல மேக ரோகமானது தன்மைகளை நைச்சர் முழுதுங் கெடுத்து இந்துவில் கூடிய ரோகங்கொண்ட
சந்திரனைப்போல் தோற்றப்படும் அவர்களது அத்தன்மையையுடைய
உள்ளிருளை உதித்த இடத்திலேயே ஒடுங்கும்படி செய்யத்தக்க இசைப் பாட்டுக்களைச் சூடிக்
கொண்டிருக்கிற கிருபா மேகமும் தமக்குத் தாமே சுவாமி ஆகிய குறள் வடிவம் உடையவருமாகிய
வேலாயுதத்திற்குப் பொருந்திய வெற்றித் தன்மையை பள்ளமாகிய நீரை உடைய சமுத்தரத்தினாலும்
மாமரத்தினாலும் பொருந்தும்படி செய்த கந்தக் கடவுளை இருதயத்தின்கண் தரிசித்தவர்களுடைய
துன்பமானது நீங்கிவிடும் என்றவாறு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக