வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
படைவீட்டுத்
திருப்புகழ்
ஆட்டுப் பரிக்குமர னாடலக லாதபடை
வீட்டுத் திருப்புகழை விள்ளுதற்கு - நீட்டுக்
கிரியா திபன்வளர்த்த கிள்ளை பயந்த
கரியா னனத்துமுன்னோன் காப்பு.
நூல்
1. திருச்செந்தூர்
தந்த தானன
தானன - தனதானா
தங்க மால்வரை போல்வளர்
கொங்கை யார்மய லாலவர்
தங்க ளேவலி னாடொறு - முயலாதே
சந்த மோதிய
பாவலர்
வந்த போதுமி டாதுறு
சண்டி மானிடர் வாசலி - னடவாதே
பங்க யாதன வேதனை
மந்த மாருத மேல்வரு
பஞ்ச பாணனை யேமனை - மதியாதே
பஞ்சு
போனரை யாமுன
முன்றன் வார்கழல் பேணிய
பண்பு ளாரொடு கூடிட - வருள்வாயே
திங்கள் சூடிய நாயகர்
மங்கை பாகமு ளார்திமி
திந்தெய் தாவென நாடக - மிடுதாளார்
சென்று
தானவர் மூவெயில்
வெந்து போநகை கூர்பவர்
செங்கண் வாணுத லால்வரு - முருகோனே
சிங்க மாவொரு தூணிடை
வந்த நாரண னோதிய
தெம்பு மேன்மையு நீடிய - குகவேளே
சிந்து
மோதிய சீர்திகழ்
சந்த னாசல மார்தரு
செந்தின் மாநகர் மேவிய – பெருமாளே.
(1)
2. திருப்பரங்குன்றம்
தனத்தனந்
தந்த தானன - தனதானா
தவப்பயன் கொண்டு பாடல்கண்
மிகப்பகர்ந் துன்றன் வார்கழ
றனிற்புனைந்
திங்கு வாழ்நல - மடையாதே
தரித்திரந்
துன்று பாவல
ரெனத்திரிந் தன்பி லாதவர்
தமைப்புகழ்ந் தஞ்சி நாணமொ - டலைவேனோ
நவப்பெருந் தண்கொண் மூவலை
கடற்புகுந் துண்டு மேல்வரி
னடித்திடுந்
துங்க மாமயி - லுடனேநீ
நகைத்தவெண்
டிங்க ணேர்முக
விளக்கமுஞ் செங்கை வேலுட
னறைக்கடம்
புங்கு லாவிட - வருவாயே
நிவப்புறுங் குஞ்சி யோடொரு
பகட்டிவர்ந் தன்பன் மேலடர்
நெருப்பெனுஞ்
சண்ட னாருயிர் - கவர்தாளார்
நிணக்குழம்
பொன்று மூவிலை
யயிற்கொளுஞ் செங்கை யார்நித
நினைத்திடுந்
தஞ்ச மாகிய - குருநாதா
சிவப்பொருங் கொன்று தாமரை
மலர்க்குள்வந் தன்று நான்மறை
தெரித்தவன்
கண்டு நாணிய - புலவோனே
திருக்கொழிந்
தும்ப ரூரையும்
வெறுக்குமின் பங்கொள் வார்புகழ்
திருப்பரங் குன்றின் மேவிய – பெருமாளே.
(2)
3. பழனிமலை
தனன தானன
தானன - தனதானா
கனியை நேரித ழாரிள
நகையி னான்மய லாயிரு
கணைக
ளாம்விழி யான்மன - முடையாதே
கருணை
யோரணு வாயினு
மருவி டாமுழு லோபியர்
கடைக
டோறுமெ நேரமு - மலையாதே
யினிய தேன்மிக நாணிய
மதுர கோமள சாகர
மெனநி
லாவிய பாடல்கள் - பலவாலே
யிடைவி
டாதுனை யேபுகழ்
முறைமை யால்வழி பாடுசெய்
திணையி
லாதுயர் வீடது - பெறுவேனோ
மனித வேடுவ னாமென
வுருவ மாறியு மோர்கவி
மகிழு
மாறுமு னாடிய - குமரேசா
வகுள மாலிகை
மாரனு
மவனை யீனிய மாயனு
மனது
நாணுற நீடழ - குடையானே
பனிகு லாவிய மால்வரை
யுதவு வாண்மடி தோய்தரு
பதும
மேநிக ராமிரு - கழலோனே
பரவை சூழ்புவி
மேல்வரு
முனிவர் தாரக மாகிய
பழனி மாமலை மீதுறை – பெருமாளே.
(3)
4. திருஏரகம் (சுவாமி மலை)
தனதான
தத்த தந்த - தனதானா
கவிமாலை கட்டி யுன்ற
னிருதாள்க ளிற்பு னைந்து
களிகூரு
முத்தர் தங்க - ளுறவாலே
கமலாச
னத்தி ருந்த
பிரமாவெ ழுத்தை வென்று
கதிசேர்வ
தற்கி ரங்க - லறியாயோ
புவியோர்தொ ழச்சி றந்து
திகழ்வேய்வ னத்த றைந்த
புதுவாச
கத்தை யும்பொ - யெனலாமோ
பொதியாச
லத்த மர்ந்த
முனிவோனு ளத்த மைந்த
பொதுஞான
வித்தை யொன்றை - யருள்வாயே
யவியாமெ னத்து ணிந்து
தகர்கோறு மற்பர் நெஞ்ச
மறியாத
நிச்ச யங்களு - டையோனே
யமராப
திப்பெண் வென்றி
வனவேடர் பெற்ற மங்கை
யளிகூர்ம
லர்க்க டம்பு - புனைமார்பா
செவியாறி ரட்டி துன்று
முகமாறு பெற்று யர்ந்த
சிறுவாவெ
னச்சொ லன்பர் - துணையாவாய்
சிவனார்த
மக்கி சைந்த
பொருளோதி வைத்து யர்ந்த
திருவேர கத்தி னின்ற – பெருமாளே.
(4)
5. பழமுதிர்சோலை (சோலைமலை)
தனதன தானதனத்
- தனதானா
அணிமுகில் போலுமெழிற்
குழலியர் மோகமிகுத்
தணையிடை
கூடநினைத் - ததனாலே
மடன்மத
வேள்பொரமிக்
குளமெலி வேனுமுனக்
கடிமைசெய்
தார்வமிகப் - பெறுமாறோர்
பிணிமுக வாகனமுற்
றயிலொடு நீகுலவிப்
பெருகிய
தாரகமெய்ப் - பொருளாலே
பிழைமுழு
தோடவொழித்
தரனரி வேதன்முதற்
பிரபலர்
நாடுமிலைப் - பொடிதாராய்
கணிமர மாகிவனத்
தொருகுற மாதெதிர்முற்
கவினும்வி
னோதமுடைக் - குகவேளே
களியொடு
தேனுமுணச்
சிறுகுடி லூடொருகைக்
கழியொடு
போய்வருபொய்ப் - பசியோனே
பணிபவர் மீதிலெதிர்ப்
பவர்களை மோதுமடற்
பறவைகு
லாவுகொடிக் - குரியோனே
பழுதறு
மாதவர்துய்த்
தகமகிழ் வாகமிகப்
பழமுதிர் சோலைமலைப் – பெருமாளே.
(5)
6. குன்றக்குடி
தந்தத்தன
தானன - தனதானா
என்றைக்குமு னாளென
நம்பித்திரி வேனையு
மிந்தப்படி
நீதுயர் - செயலேனோ
வின்றைக்கிது
நாளையி
தென்றுட்குறி யாதெழு
மின்பக்கட
லாரமு - தருளாயோ
வன்றைக்குரு மாமலை
யின்கட்கன வூடெனை
யங்கக்கிளி
யேயெனல் - பிழைதானோ
வந்தச்சொலை
நாடிய
தெம்புற்றுமெ னாருயி
ரஞ்சத்திரி
யேடணை - வரலாமோ
கன்றைக்கனி மீதெறி
யுங்கைத்திரு மால்பல
கண்பெற்றவர்
பானுவல் - புகழோனே
கண்டுக்கிணை
யாகிய
மென்சொற்குற மாதெழில்
கண்டுட்களி
கூர்மய - லுடையோனே
கொன்றைச்சடை யாருமை
பங்கிற்றிகழ் காரணர்
கொஞ்சச்சிறு
பாலனில் - வருதேவே
கொம்புக்களி
றாடிய
சந்தப்பொழில் சூழ்தரு
குன்றக்குடி மேவிய – பெருமாளே.
(6)
7. திருவுருமாமலை (குறுக்குத்துறை)
தனதன தானனத்
- தனதானா
கவளம தாசலத்
தினைநிகர் பூண்முலைக்
கணிகையர்
மோகமுற் - றதனாலே
கவலையின்
மூழ்கிமெய்ப்
பிணிமிடி யாதியிற்
கழிவுப
டாதெழிற் - சிகிமீதே
பவளமு நாணுறத்
திகழ்வடி வோடயிற்
படைகொடு
வாரணக் -கொடிகூர்வாள்
பலகைவி
லாழியொப்
பனமிளிர் சீர்தரப்
பகலினு
நீவரப் - பெறுவேனோ
குவலய மாதினைத்
திருவொடு சேர்புகழ்க்
கொளுநெடு
மாயனுக் - கினியோனே
கொதிதிரை
வாரியிற்
புலைமிகு மாமரக்
குருதிகு
லாவிடப் - பொருவோனே
சிவன்மக வாசைவிட்
டருள்குரு வேயெனத்
தினம்வழி
பாடியற் - றிடவாழ்வாய்
திகழ்பொதி
யாசலப்
பொருநைம காநதித்
திருவுரு மாமலைப் – பெருமாளே.
(7)
8. திருமலை
தனதனத்
தான தந்த - தனதானா
மயிலிடத் தேறி யும்பர்
முனிவரொப் போர்நெ ருங்க
வருமுனைத்
தேடி நொந்த - துயராலே
மனமிளைப்
பாய்மெ லிந்த
வுடலினைச் சாடு மன்று
மடியவொட்
டாம லிந்த - விதமாநான்
வெயிலினிற் சோரு கின்ற
புழுவினைப் போல்வ ருந்த
விடலொழித்
தாள வென்று - நினைவாயோ
வெகுதமிழ்ப்
பாடல் விண்டு
னடிகளிற் சூடி யும்பொன்
விழையுமித்
தீமை மிஞ்சன - முறைதானோ
குயிலெனச் சார லின்க
ணிதணிடத் தேயி ருந்த
குறமகட்
பேணி யுய்ந்த - புனவேடா
குகுகுகுக்
கூகு வென்று
தருதொனிச் சேவ லொன்று
குலவுமற்
றோள்பெ றுஞ்சண் - முகவேளே
செயிருடைத் தேவர் சிந்தை
மகிழ்வுறச் சூர னென்ற
திருடனைக்
கீறும் வென்றி - வடிவேலா
செழுமலர்ச்
சோலை யைந்து
தருவினிற் கூட நின்ற
திருமலைக் கோவில் கொண்ட – பெருமாளே.
(8)
9. வள்ளி மலை
தய்ய தானனத்
தனதன தனதன - தனதானா
துய்ய வாணகைச் சிறுமியர் கலவியின்
மைய
லாகியெப் பொழுதினு மவரிரு
தொய்யி லார்புயத் தொடுமுலை களைமிக
-
நினையாதே
சொல்லு
நான்மறைச் சுருதியை யிழிவென
வையு மாறுயிர்க் கொலைமக முயல்பவர்
துர்வி
சாரமுத் தமமென மொழிபிழை
-
யணுகாதே
கைய மாமுகக் கணபதி யுடன்வரு
செய்ய
னேபரப் பிரமமெ னிலையினர்
கள்ளு நாணுறக் கழறிய கவிகளை
-
மறவாதே
கல்வி
வாழ்வுமுத் திகண்முத லியநலம்
வௌவு வார்களுக் குதவிடு முயர்புகழ்
கல்லின்
மேலெழுத் தெனநிலை பெறவருள்
-
புரிவாயே
பைய ராவணைத் துயிலினன் மலர்வரு
தையல்
வாழுரத் தரியலை யுலவிய
பௌவ மானதைக் கிரிகொடு கடைபவன்
-
முகினேர்மால்
பள்ள மாதர்கச்
சறுமுலை முகையென
வெள்ளை வாளைமுட் டியவள மலிதரு
பள்ள
நீர்வயற் குருகையில் வருமுனி
-
யுணர்மாயோன்
வைய மேழுமுட் கொளும்வயி றுடையவன்
மொய்ய
றாதிசைத் தவிர்துள வணிபுய
வள்ள லாமவற் குவகையை மிகவருண்
-
மருகோனே
மையை நேருருக்
கொடுதொடர் வனசர
ரைதி லாவிவிட் டுயமுன மருளிய
வள்ளி யூர்மலைக் குகையினின் மருவிய
-
பெருமாளே.
(9)
10. கழுகு மலை
தனனதன
தானதன - தனதானா
கொடியமத வேள்சொரியு
மலர்சுடுவ தான்மகளிர்
குசயுகள
மீதுமயல் - பெருகாதே
கொடையறிகி
லாதமுழு
மடையர்மிசை பாடியவர்
குறுகும்வழி
தோறுநித - மலையாதே
பொடியணியு மேனியொடு
திரியுமுனி வோர்பனுவல்
புகலுநெறி
யேயொழுக - விடுமாறே
புலவர்மக
ளோடுமெழின்
மறவனிதை யோடுமிரு
பொழுதுமயி
லேறிநிதம் - வருவாயே
நெடியதிரு மாலவுணர்
குலகலக மேகமிக
நினைவுறுது
ரோபதிதன் - மனமேபோ
னிமிடமருள்
கூர்வரத
னமரருட னோதுபுகழ்
நிறையுமறி
வாளரொடு - தினம்வாழ்வாய்
கடியநம ராயனுயிர்
மடியமுனி வார்தமது
கனல்விழியி
னூடுவரு - புதல்வோனே
கதலிகுலை
சாயவுதிர்
பழமதுவி னாறுமலி
கழுகுமலை மீதுவளர் – பெருமாளே.
(10)
11. வாசகிரி
தானன தனத்த
தானன - தனதானா
ஓய்வறு தொழிற்செய் பாழ்மன
மாயிரம் விதத்தி னாடொறு
மோடலின்
மிகுத்த தீமைக - ளறியாயோ
வோகைம
லிபத்தி யாலுனை
வேலொடு நினைத்தும் வீணினி
லூரவ
ரிகழ்ச்சி மேலிடன் - முறைதானோ
தேய்வறு மதிக்கு நேர்முக
மாதரி ருவர்க்கு மூடொரு
சேய்பவ
ளத்து மால்வரை - யெனவேநீ
சேணுலக
முற்ற மேலவர்
தாமும கிலத்து லாவிய
சீரியரு
மெச்சு மாறெதிர் - வருவாயே
வேய்வன நகர்க்கு ளேபல
காலுமு னுரைத்த வாய்மையின்
மேன்மையை
மதித்தும் வாடிட - விடுவோனே
மேதகு
குறத்தி பாலொரு
கோலொடு மிகத்த ளாடிய
வேதிய
ரெனச்செல் சீர்சொலின் - மகிழ்வோனே
வாய்வுட னெதிர்த்த நாள்பொரு
மாயிர முகத்து மாசுணம்
வாய்விட
நடிக்கும் மாமயி - லிவர்வோனே
வாவிமலி
வுற்ற சாரலி
லானையின் முழக்க மார்தரு
வாசகி ரியிற்கு லாவிய – பெருமாளே.
(11)
12. இலஞ்சி
தனந்த
தானன - தனதானா
பொருந்து பாடல்கண்
மொழிந்து னாறிரு
புயங்கண்
மேனித - மணியேனோ
புலன்க
ளியாவையு
முனிந்த மேலவர்
புகன்ற
நூல்வழி - நடவேனோ
வருந்து மேதினி
மெலிந்தி டாதுள
மகிழ்ந்து
வாழ்வது - புரியேனோ
வசந்த
னூர்மத
னொதுங்க நீடெழில்
வயங்கு
மேனியொ - டெதிர்வாராய்
குருந்தை நீழலி
லிருந்த தேசிகர்
குனிந்து
பேணிய - கழலோனே
கொழுஞ்ச
ரோருக
விரிஞ்ச னார்முடி
குலுங்க
மோதிய - புலவோனே
யிருந்தை போலுரு
விலங்கு நேர்நடை
யிசைந்த
சாரணர் - குலகாலா
விலங்கு
சீர்திகழ்
குறிஞ்சி யாகிய
விலஞ்சி யூரமர் – பெருமாளே.
(12)
13. வேள்வி மலை
தான தானன
தத்த - தனதானா
காசு தேடியி ளைத்து
மாதர் சேனைப டைத்த
காம
ராயனை மெச்சி - யுழலாதே
காவி தோயந
னைத்த
தானை நீறணி யக்கு
காணு
மாதவ முத்த - ருடனேபோ
யாசு பாட;னமு தற்சொ
னாலு மோதிம கிழ்ச்சி
யாகும்
வாழ்வு பொறுக்க - விடுமாறே
யானை யாடுந
டித்த
தோகை யாகுமி வற்றி
லாசை
யானப டிக்கு - வருவாயே
தேசு மீறிய வெற்றி
வேலை யேபுகழ் பத்தர்
சீவ
தாரக மெய்ச்சொல் - பகர்வோனே
தேவி யாமளை
சத்தி
மூவ ராதியர் மெச்சு
சீலி
மார்பில ணைத்த - புதல்வோனே
வீசு காதுத டக்கை
யாதி யாலுயர் பொற்பு
மேவு
வானொடு தித்த - துணைவோனே
வேட ராசன்வ
ளர்த்த
நீல மாதைம ணத்து
வேள்வி மாமலை யுற்ற – பெருமாளே.
(13)
14. திருவரிப்பாடு
தனதனத்
தான தானன - தனதானா
அறிவுகெட் டீனர் வாழ்பல
மனைகளிற் போயெ நேரமு
மவர்களுக்
கான வாறுசொல் - புலவோர்தா
மதிகநிட்
டூர மாயெனை
யிகழவிட் டாயை யோவுன
தருளினுக்
காசை கூர்வது - பிழைதானோ
பொறிமயிற் றோகை நீழலி
லிருவருக் கூடு வேல்கொடு
பொழியுநற் சேவை யானது - தருவாயோ
புவியழத்
தேவ ரூரழ
வுயிர்வதைத் தூனை யார்பவர்
புகழ்பெறச்
சாகு மாறுகை - விடுவாயோ
மறியினைக் கீறி வேள்வியி
லிடுமுழுப் பாவ மானிடர்
மனதினிற்
றோய்வு றாவடி - வுடையோனே
மதுரவித்
தார கோமள
வினயவுற் சாக நாவலர்
வனைதமிழ்ப்
பாடன் மாலிகை - புனைதோளா
செறிமலர்ச் சோலை நேர்குழ
லுமைமுலைப் பாலின் மால்கொடு
சிறிதுதைத்
தாதி நாளையி - லழுதோனே
செழுமுகிற்
போர்வை தோய்தரு
நெடுமலைச் சார லூடுறு
திருவரிப் பாடு மேவிய – பெருமாளே.
(14)
15. சிவகிரி
தனதன தானன
- தனதானா
கருமுகி னேர்நட
மிடுமயி லேறிய
கவினொடு
நீயெதிர் - வருமாறே
கருதிய
நானுன
தருள்கொடு பாடிய
கவிகளை
யீனர்க - ளிகழாதே
யருமைய வாகிய
திருவிளை யாடல்க
ளடிமையு
மாடிட - விலையூடே
யமையும்வெ
ணீறதை
யொருகன வூடுமு
னருளிய
வாறினி - தருள்வாயே
குருபர னேசர
வணபவ னேயொரு
குறமகண்
மேவிய - புயவேளே
குலிசவ
லாரிதன்
மருமக னேதகர்
குதிரைய
தாமென - விவர்வோனே
திருவருள் வாரிதி
யனையவ னேயிரு
சிறையறை
வாரண - முடையோனே
தெளிதமிழ்
மாமுனி
யுணர்பொரு ளேவளர்
சிவகிரி மீதுறை – பெருமாளே.
(15)
16. எட்டிக்குடி
தத்தத்
தனத் தானன தானன - தனதானா
கொச்சைக் கவிக் காரன்மு னோர்மொழி
கற்றுப்
படிக் காதவன் மாதவர்
குற்றத் தினைப் பேசிய வாயினன்
-
மடமானார்
குத்துத்
தனத் தாசையி னான்மதி
கெட்டுக் கிடப் பேனிமை யார்புகழ்
கொற்றத்
தனிச் சேவலி னாண்மையை
-
நினையாதார்
பிச்சைக் குவப் பாகிய தீயவ
னற்பக்
குணத் தேன்முறை மாறிய
பித்தர்க் குயிர்த் தோழமை யாய்மகிழ்
-
தமியேனோர்
பெற்றத்
தினிற் பார்வதி யோடுறு
முக்கட் பொருப் பேநிக ரீசுரர்
பெற்றிட்
டமெய்த் தாரக வாழ்வையு
-
முணர்வேனோ
பச்சைப் பரித் தோகையி லேறிய
சத்திப்
படைச் சேவக னேமுதிர்
பத்தர்க் கருட் காரனை யானெனின்
-
மகிழ்வோனே
பத்துத்
தலைத் தானவ னாருயிர்
சொற்கத் தினுக் கேகிட வோர்சிலை
பற்றிக்
கடற் றீயெழ மோதினன்
-
மருகோனே
யிச்சைப் பெருக் காலொரு கோலொடு
மெத்தப்
பசித் தாரென வேகிமு
னிட்டப் படிக் கோர்குற மாதினை
-
யணைவோனே
யெத்திக்
கிலுற் றோர்களு நாடொறு
நத்தித் தமக் காகிய பேறுறு
மெட்டுக் குடிக் கோயிலின் மேவிய
-
பெருமாளே.
17. எண்கணூர்
தந்த தானன
- தனதானா
சிந்து தேன்மழை
யென்று தோணிய
செஞ்சொல்
வாணரொ - டிகலாதே
சிம்புள்
போன்மிளிர்
கின்ற சேவல்கொ
டிண்பு
யாசல - மறவாதே
சந்து நாறிய
தென்றன் மால்வரை
தங்கு
மாமுனி - யுடனேநீ
தஞ்ச மாமென
முன்சொ லோர்பொரு
டந்து
சேவடி - புனைவாயே
யைந்து பாணனை
வென்ற யோகித
னங்க
ணால்வரு - குமரேசா
வம்பு
யாதனன்
வென்றி போயழு
தஞ்ச
மோதிய - புலவோனே
யிந்து நேர்முக
மங்கை மார்பல
ரென்று
நாடிய - குகவேளே
யின்ப
சாகர
மன்பர் தோய்தரு
மெண்க ணூரமர் – பெருமாளே.
(17)
18. விராலிமலை
தானதன
தானதன தான தந்த - தனதானா
பாவவடி வானகொடி யோர்கண் முன்பு
போயவரை
மாயன்மலர் மார னென்று
பாடியலை வார்களுட னேயி ணங்கி
-
மெலியாதே
பாகரச
மானதுதி யாலு முன்ற
னாறுபொறி யாலுமுயர் மாத வஞ்செய்
பான்மையினர்
மீதுபகை யாகி நிந்தை
-
பகராதே
யாவலொடு கோடிமலை தோறு மன்பு
மீறுகவு
மாரரொடு போய்வ ணங்கி
யாசுதவிர் ஞானவநு பூதி கண்டு
-
மகிழேனோ
வாறதென
வோடுமத யானை யங்கி
யூடுவரு மேடமட வார்க ளொஞ்ச
வாடுமயி
லாகுமொரு மூணு ளொன்றில்
-
வருவாயே
மாவதென வாரியத னூடெ ழுந்த
சூரர்குல
மாளவடி வேலெ றிந்து
வாழுமதி கோரரண வீர துங்க
-
முருகோனே
வானரம
தானபடை யோடு சென்று
சீதைமிசை மோகமறு தான வன்றன்
வாகுபல
மாயவிடு சாய கன்சொல்
-
புகழோனே
தேவர்தரு பாவைவன வேடர் தங்க
ளேனலிதண்
மேயகுயி லோடி ருந்த
சீலமக லாதவிரு பாக மொன்று
-
மணவாளா
சீதளவி
னோதமலர் வாவி மிஞ்சு
சோலையிடை நாளுமுனி வோர்நெ ருங்கு
சீர்திகழ்வி ராலிமலை வாழ வந்த
-
பெருமாளே.
(18)
19. மயிலம்
தனனா தனத்த
தனதன - தனதான
கயல்போல் விழிக்கும் விழியினர்
குயில்போ
லுரைக்கு மொழியினர்
கரிபோ னடக்கு நடையின - ருலவாதே
கனிபோ
லினிக்கு மிதழினர்
சிலைபோல் வளைக்கு நுதலினர்
கடிநாக
மொத்த குறியினர் - பிறகேபோ
யியமாதி விட்டு மறுகிய
தமியே
னுனக்கு முனதடி
யிணைபே ணுநர்க்கு மடிமைசெய் - துயுமாறே
யெழில்வேய்
வனத்தி லொருகன
வதனூடு ரைத்த விதநிச
மெனநா
னுணர்ச்சி யுறவருள் - புரிவாயே
செயபேரி டுட்டு டுடுடுடு
வெனவே
முழக்கு களமிசை
திறல்வீரர் செப்பி மகிழ்வுறு - புகழோனே
திருநீறு
சற்று மணிகிலர்
கழுமீது றச்செய் திடவொரு
சிறுமேனி
யுற்று மதுரையில் - வருவோனே
மயனோய் மிகுத்து வலிதொரு
குறமாதி
டத்தி னரைதிரை
மலிவே டமுற்று வழிபடு - மிளையோனே
வருவார்க
ளிச்சை வழியருள்
பொழிமேக மொத்து வளமிகு
மயிலாச லத்தி லினிதுறை – பெருமாளே.
(19)
20. திருத்தணி
தனத் தனனத்
தனத் தனனத் - தனதானா
உருக் கயிலொத் திருக் கும்விழிச்
சிறுக்
கியரைத் துதித் தவருக்
குளத் தைவிலைப் படுத் திமிகத்
-
தளராதே
உயிர்க்
கொலையிட் டசுத் தநிணத்
தினைக் கனலிட் டெரித் ததுதுய்த்
துவக்
குமகத் தினைப் புகழ்தற்
-
கிசையாதே
கருக் குழியைத் தவிர்ப் பதெணிச்
சகத்
துறவைத் துறக் குமுதற்
களிப் பினருட் கடுப் பதனைப்
-
புரியாதே
கனிச்
சுவையைப் பழிக் குமொழித்
திருப் புகழைத் தொடுத் துனெழிற்
கழற்
கணியப் பெறத் தமியற்
-
கருள்வாயே
யெருக் கதனைக் கடுக் கையினொப்
பெனச்
சடையிற் றரிப் பவருக்
கிருக் கதன்மெய்ப் பொருட் பகர்சற்
-
குருநாதா
விலக்
குமியைப் பரிக் குமுரத்
தரிக் கெதிர்துட் டனைப் பலியிட்
டிழப்
புறுசக் கரத் தையளித்
-
திடுவோனே
செருக் களமுட் டுடுட் டுடுடுட்
டெனப்
பறைகொட் டிடத் தகுவத்
திரட் கதறப் புகத் தகுபொற்
-
கதிர்வேலா
தெளித்
தபுனற் றடத் திடமற்
புதக் குவளைப் பெருக் கவிர்நற்
றிருத் தணிகைக் கிரிக் குமரப் – பெருமாளே.
(20)
21. திருப்போரூர்
தனத்தானா
தானன - தனதானா
முகிற்போலே தோணிய
குழற்சோர்வாய் வேர்வையு
முகத்தூடே
யார்தர - வணைமீதே
முலைப்போரா
லேகனி
யிதழ்த்தேனா லேபகர்
மொழிச்சீரா
லேயுயிர் - கவர்மானார்
தகிப்பார்போ லூடியு
முதைப்பாரா னாலவர்
தமைத்தாழ்வார்
பானித - மலையாதே
தமிழ்ப்பாவா
லேமிக
வுனைத்தானே பாடிய
தவத்தாலே
மேன்மைகள் - பெறுவேனோ
வகிப்பூணார் மேனியர்
நுதற்றீயூ டேவரு
மருட்சேயே
யாகிய - குருநாதா
வடற்சூர்மா
வாதியர்
முனைக்கூர்வே லாலற
வழித்தேவா
னோர்துயர் - களைவோனே
திகிற்றீரார் போலுரு
மறைத்தோர்மா னாளுறு
தினைக்காவூ
டேகிய - குமரேசா
சிகிக்காரா
மாய்வறு
முதற்றேவா சீர்மலி
திருப்போரூர் மேவிய – பெருமாளே.
(21)
22. திருவேங்கடம்
தனனாந்
தனத்தத்த - தனதானா
கயல்பாய்ந் திடற்கொத்த
விழிமான் களுக்கிச்சை
கடல்போன்
றுவைத்தெய்த்து - மடியாதே
கமழ்பூம்
பொழிற்பொற்பு
மலிபாண் டியிற்சொற்ற
கவினார்ந்
தசொற்பொய்த்து - மறையாதே
யயலூன் களைத்துய்க்கு
மகமோங் கிடச்சித்த
மயர்தீங்
கரைச்சற்று - மதியாதே
யயிலேந்
தியொப்பற்ற
மயிலூர்ந் துநற்புத்தி
யதையீந்
திடற்கெற்றை - வருவாயோ
புயநான் குடைச்சத்தி
யுறுபாங் கினர்க்கொப்பில்
பொருளாய்ந்
துரைத்திட்ட - குமரேசா
புவியீன்
றவெற்பொக்க
வரசாண் டணிச்செச்சை
புனைமாண்
புறப்பெற்ற - முருகோனே
செயலோர்ந் துமெய்ப்பத்தி
யதிலாழ்ந் தருட்சித்தி
தினம்வேண்
டெனைத்தொட்ட - குருநாதா
திகழ்பாம்
பணைக்கத்த
னெனநீண் டறற்கொட்டு
திருவேங் கடத்துற்ற – பெருமாளே.
(22)
23. சத்திமலை
தத்ததனத்
தானன தானன - தனதானா
அற்பநினைப் பாளர்கள் வாசலி
னிற்பதொழித் தாரண நூல்வழி
யத்துவிதச்
சீரநு பூதியி - லமிழேனோ
வக்குவடத்
தோடுவெ ணீறணி
பத்தர்களைச் சீறிடு மீனர்க
ளச்சமுறப்
பாடிய தான்மகிழ் - வடையேனோ
சொற்பனமுட் கூறிய வாசக
மெய்ப்படிலப் போதடி யார்பலர்
சுற்றிடவிப்
பூமியி லார்வமொ - டுலவேனோ
தொக்குதொகுத்
தோமென வாடிய
பச்சைமயிற் றோகையி லோரிரு
சுத்தநகைப்
பாவைய ரோடெதிர் - வருவாயே
பற்பமிகப் பூசிய வேதியர்
கொக்கிறகைச் சூடிய வேடுவர்
பக்கமுடைத்
தேவிய நாள்பய - மடையாதே
பத்துமுகத்
தானழ வோர்நெடு
வெற்பின்முகட் டோர்விர லூணினர்
பத்தரெனப்
பேணிய சேவடி - யுடையோனே
சற்பவணைக் கார்முகில் பூமக
ளுற்றவுரத் தானடி யார்பிழை
சற்றுநினைக்
காநெடு மாயவன் - மருகோனே
தத்துவசிற்
கோலம னோலய
முற்றவரெப் போதுமு லாவிய
சத்திமலைச் சாரலின் மேவிய – பெருமாளே.
(23)
24. நட்சேத்திர மலை
தத்தாத்
தனதன தானன - தனதானா
விற்போற் றிகழ்நுத லார்பகர்
சொற்கேட் டவர்பிற கேகியு
மெய்ப்பேற்
றினையிகழ் தீவினை
-
யணுகாதே
மிக்காற்
றியதவ யோகியர்
முற்போய்த் தொழுதுல காசையை
விட்டோட்
டிடமுயல் வார்மிசை
-
வெகுளாதே
கற்போற் கடினம தாமன
முற்றோர்க் கிதமிக வோதிடல்
கற்றாற்
றலுமறி வானது
-
நழுவாதே
கைக்காச்
சுவையின வாமிளிர்
முப்பாற்
றமிழ்கொடுன் மால்வரை
கட்போற்
றிடுநல மேவிட
-
வருள்வாயே
மற்போர்த் திறல்மிகு தாருகன்
வெற்பாய்த் துயர்புரி தானவன்
வற்றாக்
கடல்வரு மாவற
-
விடும்வேலா
மட்டார்த்
திடமலர் கூதள
முற்றாக் கனதன மாதர்கண்
மைச்சீர்க்
குவளைகு ராமுத - லுறுதோளா
நற்போக் கியமருள் கார்முகி
லட்டாட் சரமதில் வாழரி
நட்டார்க்
குயிர்நிகர் மாயவன் - மருகோனே
நத்தார்க்
கருள்புரி யாயரு
மைக்கார்த் திகைமக னேயெழி
னட்சேத் திரமலை மீதுறை – பெருமாளே.
(24)
25. அருணாசலம் (திருவண்ணாமலை)
தனதான
தத்த தத்த - தனதானா
பயிலாக மத்து ரைத்த
முறைதீதெ னத்த விர்த்த
பழிகாரர்
சொற்ப கட்டின் - மருளாதே
படிறேமி
கப்ப டித்த
மதவாத ருக்க டுத்த
படிபேசு
மற்பர் பக்க - லணுகாதே
மயில்வாக னத்தி ருக்கு
முருகாவெ னத்து தித்து
மகிழ்வார்க
ளைப்ப ழித்து - நசியாதே
வளர்வேய்வ
னத்தி டத்தி
லொருநாளெ னக்க ளித்த
வரமான
தைக்கு றிப்ப - தறியாயோ
கயிலாய வெற்பெ டுத்த
புயராவ ணற்செ குத்த
கணையோன்வ
குத்து முற்சொல் - புகழோனே
கருணாக
ரக்கு றத்தி
தினைமாவி னைப்பு சித்த
கணமேமி
கப்ப ருத்த - புயவேளே
யயில்வேல்வி டுத்த ரக்கர்
குலநீறெ ழப்ப டுத்தி
யமரேச
னைப்பு ரக்கு - மிளையோனே
யடியார்மி
கப்ப டைத்த
புகழாலு யர்ச்சி பெற்ற
வருணாச லத்தி லுற்ற – பெருமாளே.
(25)
26. சோமாசிப் பாடி
தானான
தானத் – தனதானா
ஆராதி யாமற்
பாடாமன் மோகத்
தாவேச
மாகிக் - கெடுவேனோ
வாபாச
லோபத்
தோர்வீடு தோறுற்
றாயாச
மீறித் - தளர்வேனோ
தீராத கோபப்
பேயோடு கூடித்
தேகாபி
மானத் - துழல்வேனோ
சீர்மேவு
தோகைக்
கார்மாவி லேறிச்
சேணாடர்
சூழத் - திகழ்வாயே
கூராழி யான்முற்
றாராள மாகக்
கூறாண்மை
சேரப் - பெறுவோனே
கோடாத
வீரத்
தீராறு தோளிற்
கூதாள
மாரப் - புனைவோனே
சூராதி சூரர்க்
கோர்கால னாகிச்
சோகார்வ
மாகப் - பொரும்வேளே
சோராத
யோகர்க்
காதார மாநற்
சோமாசி பாடிப் – பெருமாளே.
(26)
27. அவலூர் மலை
தனனா தனதன
தானன - தனதானா
கடிநா யனையவர் வாசலி
னடவா ததிநய மார்பல
கவியா
லுனைவழி பாடுசெய்
-
தளிகூர்வோர்
கழலா கியமலர்
தாமரை
யதனா லுதிர்பொடி வாசனை
கமழ்சீர்
குலவுவ தாலுயர்
-
தலைமீதே
கொடியா டியசிறு தாள்களை
யணிவா யெனமிக நாடிய
குணம்வீ
ணெனவுல கோர்நித
-
மிகழாதே
குகுகூ
குகுகுகு கூகுகு
வெனவோ லிடுமொரு சேவல்கொள்
கொடிமே
விடும்விளை யாடல்கள் - புரிவாயே
நெடியோன் மலர்மகள் காவல
னரிகேச வனெழி னாரண
னினைவார்
பிழைகரு தாதவன் - மருகோனே
நிறைதா
துகுபனி நீபமும்
வடிவேல் குலிசம்வில் வாண்முத
னிகழா
யுதமும்வி டாதுறு - புயவேளே
யடியார் புடைநடு வேமுழு
மதிபோ லுலவிய மேலவ
ரனைவோர்
களுமணி பூணிகர் - கலையோனே
யருமா
மறையுட னாகம
முணர்வார் தவமென நீடிடு
மவலூர் மலைமிசை மேவிய – பெருமாளே.
(27)
28. சித்தர் மலை
தத்த தானன
தானன - தனதானா
அத்த மேபொரு ளாமென
நத்தி வாடுவ தானித
மற்பர்
வாசல்க டோறலை - வுறுதீயே
னட்ட பாலொடு
தேனிகர்
சொற்கள் பேசிடு மாதர்மு
னச்ச
மோடடி பேணியு - மகிழ்கூர்வேன்
முத்தர் மாதவர் பாவல
ரொத்த மேலவர் தாள்களின்
மொட்ட
றாமலர் தூவிடு - நெறிசேரேன்
முக்க
ணாயக னார்தமிழ்
வெற்பின் மாமுனி யாதியர்
முற்கொ
ளோர்நல மானதை - யடைவேனோ
சத்த சாகர நீறெழ
வொற்றை மாமர மேல்விடு
சத்தி
வேன்மகிழ் பூசனை - தருவோனே
தர்க்க
மேயிடும் வாயினர்
பத்தி யேதுமி லாதவர்
சற்று
மோர்வரி தாகிய - புகழோனே
தித்த தாதிமி தோமென
நித்த நாடக மாடிய
சிக்க
மாமயின் மேல்வரு - முருகோனே
செட்டி
யாயிணை தீரொரு
சுத்த வீரனு மாயுயர்
சித்தர் மாமலை மீதுறை – பெருமாளே.
(28)
29. வேலுடையான் பட்டினம்
தானன தாந்தத்
தனதானன - தனதானா
தேனிகர் தீஞ்சொற் பகர்வாயிள
நீரென வீங்கித் திகழ்பூண்முலை
சேலென
நீண்டுற் றகணார்கலி
-
யதனூடே
சேர்புனன்
மாந்திச் செறிகார்முகில்
போல்வளர் கூந்தற் சுமையாதிய
சீருரு
வாய்ந்திக் குவில்வேளுடன்
-
வருமானார்
பானித மேங்கித் திரிவேனவ
ரேவல்செய் தீங்கர்க் கரசாகிய
பான்மையி
னேன்சித் தியுஞானமு
-
முறுமாறே
பாடிய
தாம்பற் பலபாடலை
நீமிக வாஞ்சித் தணியாதவை
பாழ்பட
லீண்டெப் படியானுய்வ
-
னறியாயோ
நானில மாந்தர்க் கொருதாயக
மாமடல் வேந்தர்க் கரசாமெழி
னாரண
னாண்டப் படியோதிய
-
புகழோனே
நாடரி
தாம்பற் பலயோனியின்
மாய்வினை தீர்ந்திட் டவர்நேயமு
நாறிய
பூஞ்செச் சையுநீபமு
-
மணிதோளா
மேனியெ லாஞ்சத் தியமார்திரு
நீறணி மாண்புக்கவு மாரரும்
வேடரு
மோங்கப் பெறுமாயிர
-
மலையோனே
வேதனை
நீங்கித் தினநாடிய
பேறுற வேண்டிப் பலபேர்வரும்
வேலுடை யான்பட் டினமேவிய
-
பெருமாளே.
(29)
30. பெரும்பேறு
தனத்தாத்த
தனதன - தனதானா
பொலம்பூத்த மணியிழை
யணிந்தார்க்கு மயல்கொடு
புகழ்ந்தாற்ற
லழிகுவ - தறியாயோ
புதன்கேட்டு
மகிழ்நய
முறும்பாட்டு னடிமிசை
புனைந்தார்க்கு
மிடியுறன் - முறைதானோ
நலம்பூத்த முனிவரர்
பதம்போற்று மவர்களை
நகுந்தூர்த்த
ரிடமெனை - விடலாமோ
நடங்காட்டு
மயிலொடு
விடந்தோய்த்த வயிலினை
நமன்றோற்று
முனம்வர - விடுவாயே
வலம்பூத்த சிறுகுயி
லிடம்பூத்த பிடியிரு
மதம்பூத்த
முலையமர் - பொருமார்பா
வளந்தேக்கு
பொதியையி
னிளங்காற்றி லுலவிய
மதன்றோற்க
வளரெழி - லுடையோனே
பிலம்பூத்த பணியின
மடுஞ்சேட்டை மலிதரு
பெருங்காற்பு
ளிலகிய - புயவேளே
பிறந்தேக்க
முறும்வினை
யறுந்தீர்க்க நெறியினர்
பெரும்பேற்று மலையுறை – பெருமாளே.
(30)
31. கல்லாலம் பூண்டி
தய்யானந்
தாந்தன தானன - தனதானா
மெய்வேடங் காண்டகு மேனியர்
பொய்யாவுந் தீர்ந்துயர் பான்மையர்
வெய்யோனென்
றோங்கிய பேரறி
-
வுறுமேலோர்
வில்வேள்கண்
போன்றுள மாதர்கள்
சொல்லாளென் றீங்குழ லாதவர்
வெவ்வாயின்
பாம்பினை நேர்சின
-
மருவாதார்
மைவேழந் தாங்கிய சேவகர்
பல்லோர்தந் தூண்பொரு தோளடும்
வல்வீரந்
தோய்ந்தவ ராதிய
-
ருடனேநீ
வைவேலுங்
கூன்றிகழ் வாணுதல்
கொள்வார்தம் பாங்கு நிலாவிட
மல்கார்வந்
தோன்றிட மாமயின்
-
மிசைவாரா
யைவேலென் றான்புகழ் பாடிய
நல்லாளன் போர்ந்தவ ளாவலை
யைதேயன்
றீந்திடு மானையி
-
னிளையோனே
யல்லாகன்
பாண்டவ ரேவல்கொ
டொவ்வார்முன் போந்தவ னாரண
னையாருஞ்
சார்ங்கமு ளான்மகிழ்
-
மருகோனே
கைவேதந் தேர்ந்தவ னோர்தின
மையோவென் றேங்கிட மோதிய
கள்ளூறுங்
காந்தளை நேர்கர
-
மிகையோனே
கல்லாருந்
தேந்தமிழ் வாரிதி
யுள்ளாரென் றாம்பெரு வாழ்வுறு
கல்லாலம் பூண்டியின் மேவிய
-
பெருமாளே.
(31)
32. உடுப்பிச் சுப்பிரமணியம்
தனந்தத்
தத்தன தனதத்த தானன - தனதானா
கறங்குக் கொப்பென வுழல்சித்த மோடுனை
மறந்திட்
டெய்த்திள நகையுற்ற மாதர்கள்
கருங்கட் பொய்க்கணை யதுபட்டு வீணினி;ன
-
மடியாதே
கலங்கித்
தட்டழி வுறமுற்று பாழ்மிடி
யெனுந்துக் கத்தழன் மலிவுற்ற தாலுயிர்
கரிந்தற்
பர்க்கித மொழிசெப்பி நாடொறு
-
மலையாதே
குறங்கிற் சத்திக ளிருவர்க்கு மூடொரு
செழும்பொற்
புக்கிரி யெனவெற்றி வேலொடு
குலுங்கச் சித்திர நடனத்து லாவிய
-
மயின்மேலே
குளிர்ந்துற்
றுத்தெரி சனையெற்றை நீதர
லுவந்திட் டத்தினர் குலமெற்றை வாழ்வுறல்
குணுங்கத்
துட்டர்செய் துயரெற்றை மாறுத
-
லறியேனே
யறங்கட் குத்துணை யெனநிற்கு மாதவன்
முகுந்தக்
கற்பக முகில்சக்க ராயுத
னலம்பட் டுப்பகை கெடநத்தி யூதிடும்
-
வளைசேர்மா
லரங்கத்
திற்றிகழ் பவனச்ச ராமிசை
யுறும்பச் சைக்கிரி நிகர்பொற்பு ளான்மன
தழுங்கிச் சற்றழு மவளுக்க நாள்கலை
-
தருமாயோ
னுறங்கற் கொத்தொளிர் தருசுத்த யோகின
னிலங்கைக்
குட்செலும் விறல்பெற்ற தூதின
னுகங்கட்
குத்தகு முருவத்தி னான்மகிழ்
-
மருகோனே
யுணர்ந்துட்
பத்திசெய் பவரிட்ட காமியம்
விரைந்துற் றுக்கதி பெறநித்த மீகிற
வுடும்பைச் சுப்பிர மணியத்தின் மேவிய
-
பெருமாளே.
(32)
33. கதிர்காமம்
தனதான
தத்ததன - தனதானா
மதவேள்வி டுத்தகணை
படலாலி ளைத்திளைய
மடவார்ம
யற்கடலி - லமிழாதே
மறைநூல்வி
தித்தவிதி
யறியாது யிர்க்கொலைசெய்
மகமேலெ
னச்சொல்பிழை - வினவாதே
சிதறாம னத்தினொடு
தவமேமு டிக்குமவர்
திருவேட
முற்றதனை - யிகழாதே
சிவனார்செ
விக்குளொரு
பொழுதோதி வைத்தபொருள்
சிறிதீவ
தற்குமயின் - மிசைவாராய்
பதவாரி சத்துணையை
மிகநாடு முத்தர்பகர்
பலபாட
லுற்றிலகு - புயவேளே
பனிவேய்வ
னத்திலொரு
கவுமார னைத்தனது
பழையோ
னெனத்தினமு - மொழிவோனே
கதமோடெ திர்த்துவரு
முதுசூர னைப்புலவர்
களிகூர
வெட்டிவரும் - விறல்வீரா
கதிசேர்வ
ழிக்குரிய
திரையே ழினுக்குளுயர்
கதிர்காம
முற்றுவளர் – பெருமாளே.
(33)
34. கந்தமாதன கிரி
தந்த தானன
தனதன தனதன - தனதானா
தண்கு லாவிய திருவருள் பெறவுன
தன்பு
மேலிடு நெறிகொடு னடிமிசை
சந்த மாலிகை பலசொலி யநுதின
-
மணியேனோ
சண்ட னாகிய
கொடியனு மலர்கணை
சிந்தும் வேளொடு பிரமனு மெனுமிவர்
தங்க
ளால்வரு துயர்கெடு முயர்தவ
-
முயலேனோ
விண்கு லாவிய மகபதி முதலினர்
கண்டு
நாணிட வுலகிடை யளவறும்
விந்தை யார்பணி புரிபவ ரொடுமகிழ்
-
வடையேனோ
விண்டு
வாதிய கடவுளர் வளைதர
வுய்ந்த மாதவர் துதிசெய வவுணரை
வென்ற
வேல்கொடு நினைதொறும் வரமன
-
மிசைவாயே
பண்கு லாவிய பழமறை முடிவினை
யிந்து
சேகரர் வளையணி செவியிடை
பண்டு கூறிய குருபர சரவண
-
பவவேளே
பந்து
நேர்முலை யுமையவண் மகிழ்வுற
முன்பு லாவிய குகனென நினைபவர்
பந்த
வேதனை யறவரு ளிடும்விழி
-
மிகையோனே
கண்கு லாவிய மரகத நிறமயி
லங்கி வேள்வியில் வருதக ரளிநுகர்
கந்த மாமத களிறெனு மிவைமிசை
-
வரும்வேளே
கங்கை
நீரினி லறுவகை வடிவுகொ
டொன்றி யோர்திரு வுருவென வளமலி
கந்த மாதன கிரிதனின் மருவிய – பெருமாளே.
(34)
35. பல மலைகள்
தனதனத்
தான தந்த - தனதானா
அருளினுக் காசை கொண்டு
பொருளுடைத் தீயர் தங்க
ளகமதிற்
போய லைந்து - கெடலாமோ
வருணையிற்
கோபு ரங்கொள்
கிளியெனக் கூறி யும்பொ
யதனிடத்
தேய ழுந்த - விடலாமோ
கருமநிட் டூர வஞ்சர்
மகமதற் கூன ருந்தல்
கடனெனப்
பேசும் வம்பு - மிகலாமோ
கலபவித்
தார துங்க
நடனவுற் சாக வென்றி
கமழ்வனப்
பார்சி கண்டி - மிசைவாராய்
பொருதிறற் சேவ லொன்று
குகுகுகுக் கூகு வென்று
புயமதிற்
கூவ நின்ற - புனவேடா
புலவனுக்
காயி ரங்கி
யலகையைக் கீறி வந்து
புகழ்தமிழ்ப்
பாவ ணிந்த - வடிவேலா
பருமலர்ப் பேதை கொஞ்சு
மருமமுற் றோன்வி ழைந்து
பகர்தனிச்
சீர்பொ ருந்து - முருகோனே
படர்முகிற்
போர்வை துன்ற
வுலகினிற் காணு கின்ற
பலமலைக் கார னென்ற – பெருமாளே.
(35)
36. கவுமாரர் பன்னிய பதிகள்
தனதான
தய்யன - தனதானா
அதியாசை துன்னிய
மடமாதர் கண்வலை
யதனாலெ
னுண்ணிலை - தவறாதே
யநியாய
மன்னவர்
குடைநீழன் மன்னிய
வகல்பூமி
யின்னமு - மெலியாதே
கதிமேவு புண்ணியர்
பகர்நூலை யந்நியர்
கழிவாக
யெண்ணியு - மிகழாதே
கதிர்வேலொ
டுன்னிய
படிதோகை யின்மிசை
கருகூல
மென்னமுன் - வருவாயே
சதிகோடி பண்ணிய
முதுசூர னென்னொரு
தகுவேசன்
வென்னிட - முனிவோனே
தமிழ்பாடி
யுண்மையொ
டணிவார்க டம்முயிர்
தவியாது
முன்னிய - தருள்வோனே
பதினாறு தன்மைய
னெனவோதி யெண்ணறு
பலகோடி
வண்ணமுன் - வருவோனே
பழிதீரும்
நன்மைகொள்
கவுமாரர் பன்னிய
பதியாவு நண்ணிய – பெருமாளே.
(36)
முற்றிற்று.
நூற்பயன்
(நேரிசை வெண்பா)
ஆறு படைவீட்டை யாறா றெனப்பெருக்கிக்
கூறுந் திருப்புகழைக் கொண்டுவப்போர்
- பேறுரைக்கில்
வேதாவைச் செங்கரும்பு வில்லானைக்
கூற்றைவென்று
போதாந்த வீட்டிற் புகல்.
வேலு மயிலுந் துணை.