செவ்வாய், 19 நவம்பர், 2019

தமிழ்ச் சுவடிகளில் குறியீடுகள்



  247 எழுத்துக்களுக்குள் அடங்காமல் அவ்வெழுத்துகளின் துணைகொண்டு சொற்குறியீடாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளின் கூட்டாகவும், சொற்களை உணர்த்தும் குறியீட்டெழுத்தாகவும் அமைவனவெல்லாம் குறியீடுகள் எனலாம். 
            தொடக்க காலத்தில் மனித இனம் பேசும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை.  விலங்குகளைப் போன்றே ஒலிகளை எழுப்பித் தங்களின் கருத்துகளைப் பிறரிடம் தெரிவித்து வந்தனர். பின்னர் உடலுறுப்புகளின் அசைவுகளினால் தன்னெதிரில் உள்ளவர்களுக்குத் தன் கருத்தைத் தெரிவித்து வந்தனர்.  இவ்வாறு ஒலிகள் எழுப்பியும் சைகைகள் காட்டியும் தங்களது கருத்துகளைப் பிறருக்குத் தெரியப்படுத்தியவர்கள் காலப்போக்கில் படங்கள் வரைந்து தங்களது எண்ணங்கள் யாவை என்று தெரிவித்தான்.  இவ்வாறு வரைந்த படங்களே குறியீடுகள் என்கிறோம்.  இக்குறியீடுகளை உருவ எழுத்துகள் என்றும் கூறுவர்.  காலநிலையில் அமைந்த குறியீடுகளின் அமைப்பினைக் கொண்டு அவற்றைப் பண்டைக்காலக் குறியீடுகள், இடைக்காலக் குறியீடுகள், தற்காலக் குறியீடுகள் என்று மூன்றாகப் பகுக்கலாம்.
பண்டைக்காலக் குறியீடுகள்
            உருவ எழுத்துகளே பண்டைக் காலத்தில் குறியீடுகளாக அமைந்தன.  இதன் காலம் கி.மு.க்களில் அமையும்.  இந்தியாவில் மொகஞ்சாதரோ, ஹரப்பா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிடைத்த களிமண் ஓடு, பானையோடு, காசுகள் போன்றவற்றில் உருவங்கள் காணப்படுகின்றன.  அவை அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய எழுத்துகளாகும். 
            ஒவ்வொரு படமும் ஒரு கருத்தைத் தெரிவிப்பனவாக உள்ளதுஎன்கிறார் நடன. காசிநாதன்.  இதனை ஒரு உதாரணம் வழியும் நிறுவுகின்றார்.  பகல்என்பதற்குச்சூரியனதுபடத்தை வரைந்தனர்.  அச்சூரியனது படமே நாளாவட்டத்தில்பகல்’, ‘வெப்பம்’, ‘கோள்ஆகிய எல்லாவற்றையும் அறிவிப்பனவாக அமைந்ததுஎன்கிறார்.
            பண்டைக்கால மக்கள் மொழியை வளப்படுத்துவதற்கு உரு எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது புலனாகிறது.  இவ்வுருவ எழுத்துகள் குறியீடுகளாக அமைந்து இன்று பண்டைக் காலக் குறியீடுகளுக்குச் சான்று பகர்கின்றன.  யானை, நரி, புலி, சிங்கம், மரம், இரதம், சூரியன், சக்கரம், காளைமாடு, பசுமாடு, தானியக்கதிர்கள், பெண் தெய்வங்களது உருவங்கள், கடவுளின் தலை மற்றும் ஆட்சியில் இருந்தவர்களின் சின்னங்கள் போன்றவை குறியீடுகளாகப் பெருமான்மை இருந்துள்ளன. 
            இன்று பண்டைக்காலக் குறியீடுகள் நாணயங்கள் வழியாகவே நாம் அதிகம் கண்டிருக்கின்றோம். உருவங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களைமுத்திரை நாணயங்கள்என்பர்.  நமக்குக் கிடைத்த மிகப் பழமையான நாணயம், கி.மு.1100இல் கண்டெடுக்கப்பட்ட முத்திரையிடப்பட்ட வெள்ளி நாணயம் தான்.  அதன்பிறகு நாணயங்கள் ஏராளம் கிடைத்துள்ளன. 
            அந்நாணயங்களில் வெறும் முத்திரைச் சின்னங்கள்தாம் உள்ளன; எந்த எழுத்துகளும் அவற்றில் பொறிக்கப்படவில்லை.  எழுத்துகளுக்குப் பதிலாக குன்றுகள், மரங்கள், பறவைகள், பிராணிகள், ஊர்வன, மனிதன் போன்ற உருவங்களைப் பல வகையிலும் பொறிக்கப்பட்டுள்ளன.  மதத்தின் அடையாளங்கள், சதுரம், முக்கோணம் போன்ற வடிவங்களையும் அவற்றில் பொறித்துள்ளனர்.  இவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்திற்காக அல்லது குறிக்கோளுக்காகப் பொறிக்கப்பட்டிருக்கின்றன.  அதாவது, இந்தவகை நாணயத்திற்கு இந்தச் சின்னம் அல்லது இந்த அடையாளம் என்று போட்டு இருக்கின்றனர்.  எனவே எந்தெந்த நாணயங்கள் எந்தெந்த அரசிற்குரியது எந்தக் காலத்திற்குரியது என்றும் எளிதாகப் பாகுபடுத்திவிடலாம்என்பார் டாக்டர் பரமேச்வரி லால் குப்தா.
            நாணயங்களில் காணும் குறியீடுகளைப் போன்று கல்வெட்டுகளிலும் காணமுடிகிறது.  தமிழிக் கல்வெட்டுகள் சிலவற்றில் அக்கல்வெட்டுக்களோடு சில குறியீடுகளையும் காணமுடிகிறது.  இதேபோன்று இலங்கையில் கிடைத்துள்ள சில பிராமிக் கல்வெட்டுகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் சில குறியீடுகள் காணப்படுகின்றன.
            தமிழ்நாட்டில் கிடைத்துள்ள குறியீடுகளோடு கூடிய கல்வெட்டுகளை எல்லாம் தொகுத்து ஆய்வு செய்கையில் அக்குறியீடுகள் வணிகர்களின் தொழிலையும், தச்சர், கொல்லர் போன்ற கைவினைஞர்களின் தொழிலையும் குறிப்பனவாகக் காணப்படுகின்றன.  உப்பு வணிகர் எனில் அவருக்கெனத் தனிக் குறியீட்டையும், அறுவை வணிகர் எனில் அவருக்கெனத் தனிக் குறியீட்டையும் பெற்றிருக்கின்றனர்.  தற்காலத்தியவியாபாரக் குறியீடுபோன்றதாக அவை இருந்திருக்கும்.  அதைத்தான் தமிழிக் கல்வெட்டுகளில் சிலவற்றோடு காணமுடிகிறது.  தச்சுத் தொழில் புரிந்தோரும், கூரை வேய்தல் தொழில் புரிந்தோரும் கூட தனித்தனிக் குறியீட்டைப் பெற்றிருந்தார்கள் என ஊகிக்க வேண்டியிருக்கிறது என்கிறார் நடன. காசிநாதன்.

இடைக்காலக் குறியீடுகள்
            மொழிக்கெனத் தனி எழுத்துகள் உருவாகும் வரை குறியீடுகள் மொழிக்குத் துணையாயின. மொழிக்குத் தனி எழுத்துகள் உருவாக்கப்பெற்றதும் குறியீடுகளின் தன்மை மாறத் தொடங்கியது.  இக்காலக் கட்டத்தில் எழுந்த குறியீடுகளை இடைக்காலக் குறியீடுகள் எனலாம்.  இக்குறியீடுகள் கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் ஆகியவற்றின் மூலம் அறிகிறோம். 
            மொழிக்குத் தனியெழுத்துகள் உருவானதும் குறியீடுகள் ஏதும் பெறாமல் முழுமையான எழுத்து நிலையையே மொழி கொண்டிருந்தது.  சிலவற்றில் மட்டும் எழுத்தும் குறியீடும் ஒருசேர அமைந்திருக்கும்.  குறிப்பாக நாணயங்களில் இப்போக்கு அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து இருப்பதைக் காணலாம்.  பழங்காலத்தில் எண் குறியீடுகள், அளவுக் குறியீடுகள் ஏதும் இன்றி எழுத்திலேயே எழுதி வந்தனர்.  குறிப்பாக, 192 என்னும் எண்ணைநூற்றுத் தொண்ணூற்றிரண்டுஎன்று எழுத்தால் குறித்தே வந்துள்ளனர். “நமக்குக் கிடைத்துள்ள பல்லவர் கால வட்டெழுத்துக் கல்வெட்டுகளிலும் எண்களாக எழுதப்படாமல் எழுத்துக்களாகவே எழுதப்பட்டு இருப்பதைக் காணமுடிகிறது.  ஆனால் செப்புப் பட்டயத்தில் கி.பி.4ஆம் நூற்றாண்டு அளவிலேயே எண்களைக் காணமுடிகிறது.  என்றாலும் கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உத்திரமேரூர்க் கல்வெட்டில்தான் 2 முதல் 10 வரையில் உள்ள எண்களைக் காணமுடிகிறது.  அதுமட்டுமில்லாமல் நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கான குறியீடுகளையும் காணமுடிகிறதுஎன்கிறார் நடன. காசிநாதன்.
            சங்க காலப் பாடல்கள் சில சுவரில் கோடு கிழித்துத் தலைவன் வரவை எதிர்பார்க்கும் தலைவியின் நிலையைச் சொல்கின்றன.  குறிப்பாக, அகநானூறு 289இல்
            சேன் உறைபுலம்பின் நாள்முறை இழைத்த
            தாண்சுவர் நோக்கி நினைந்து கண்பனி
            நெகிழ்நூல் முத்தின் முகிழ்முலைத் தெறிப்ப
என்பதைச் சுட்டலாம்.  கோடுகளை எண்ணி நாட்களை எண்ணும் நிலை இங்குத் தெரிகிறதுஎன்பார் கே. பகவதி.  இன்றும் சில மகளிர் பால்கணக்கு, மோர் கணக்கு எழுதுதல் போன்ற சில நிலைகளில் சுவரில் கோடு கிழித்து இறுதியில் எண்ணிக் கணக்கிடும் நிலையைக் காண்கிறோம்.
            தமிழ்நாட்டிலுள்ள சாசனங்களில் எண் குறிகள் எட்டாம் நூற்றாண்டில் இருந்துதான் கிடைக்கின்றன என்றும், எனினும் அதற்குமுன் ஆண்ட பல்லவர் முதலியோர் கல்வெட்டுகளிலிருந்து தொடர்ச்சியாக இவற்றின்  வளர்ச்சியை ஓரளவு அறியமுடிகிறது என்றும், முதலில் படுத்த கோடாக இருந்த (-) குறியீடு | என்பது கி.பி.10ஆம் நூற்றாண்டில் ஒரு குறுக்குக் கோட்டையும் அடைந்து காணப்படுகிறது என்றும், படுத்த கோடு பழைய சாசனங்களில் வாக்கிய முடிவுகளையும் செய்யுட்பகுதி முடிவுகளையும் காட்டுவதற்காகப் பல இடங்களில் பயன்பட்டுள்ளது என்றும், அதனின்றும் வேறாக எண் என்பதைக் குறிக்கவே குறுக்குக் கோடு சேர்க்கப்பட்டது என்றும்திரு. தி.நா. சுப்பிரமணியம் கூறுகின்றார். 
            இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தமிழர் சுன்னம் (பூஜ்ஜியம்) என்ற கருத்தை இனங்கண்டு அதற்கு ஒரு குறியீடு அமைத்தார்கள்.  சுமார் கி.பி.500இல் மாயர்கள் தாமாகவே பூஜியத்தின் குறியீட்டைக் கண்டுபிடித்தனர்.  கி.பி.9ஆம் நூற்றாண்டில் சுன்னம் என்னும் குறியானது அரபியரிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது.  சுழித்தற் குறியானது கி.பி.1202இல் பைசாவிலிருந்து இத்தாலிய வணிகரான வாயினார்டோவால் கண்டுபிடிக்கப்பட்டது.  தன் கடனைக் குறிக்கவே அக்குறியை ஏற்படுத்தினார்.  பெருக்கல் குறியும், கழித்தல் குறியும் பொதுவாக 14ஆம் நூற்றாண்டில் இருந்தே அமலிலிருந்து வருகின்றன”.
            இலட்சம்என்று இன்று சுட்டும் அளவு அன்றுநூறாயிரம்என்றும், ‘கோடிஎன்று இன்று சுட்டும் அளவு அளவு அன்றுநூறுநூறாயிரம்என்றும் குறித்துள்ளனர்.  பெருஞ்சேரல் இரும்பொறை தன் வெற்றியைப் பாடிய அரிசில்கிழாருக்கு ஒன்பது நூறாயிரம் காணம் பொன் தந்த நிலையினையும் (பதிற்றுப்பத்து, 8), ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் காக்கைப் பாடினியாருக்கு நூறாயிரம் காணம் பொன் தந்த நிலையினையும் (பதிற்றுப்பத்து, 6), பட்டினப்பாலை நூலாசிரியர் உருத்திரங்கண்ணனார் பதினாறு நூறாயிரம் பொன் பெற்ற நிலையினையும் (பெரும்பாணாற்றுப்படை, நச்சர். உரை, 477-80) காண இச்சொல் வழக்கு புலனாகிறது.
ஓலைச்சுவடிகளில் குறியீடுகள்
            இவ்வாறு வழங்கி வந்த குறியீடுகள் அண்மைக்கால ஓலைச்சுவடிகளில்  அலகெழுத்து, கூட்டெழுத்து, குறிப்பெழுத்து (சொற்குறியீடு) என  மூன்று வகையான எழுத்துக்களாக அமைந்திருக்கின்றன.

அலகெழுத்து
            கீழலகெழுத்து, நடுவலகெழுத்து, மேலலகு எழுத்து, அளவலகெழுத்து, கால அளவு என அலகெழுத்து ஐந்து வகைப்படும்.  அதிசாரம் முதல் முந்திரிக்கு முன் வரையிலான பின்னவெண்ணெழுத்துகளைக் கீழலகெழுத்துகள் என்றும், முந்திரி முதல் ஒன்றுக்கு முன் வரையிலான பின்னவெண்ணெழுத்துகளை நடுவலகு எழுத்துகள் என்றும், ஒன்று முதல் அதற்கு மேற்பட்ட முழுவெண்ணெழுத்துகளை மேலலகு எழுத்துகள் என்றும், நீட்டல், முகத்தல் மற்றும் நிறுத்தல் அளவுகளைக் குறிக்கும் எழுத்துக்களை அளவலகு எழுத்துகள் என்றும், கால அளவுகளைக் குறிப்பனவற்றை கால அளவு என்றும் அழைப்பர்.
கீழலகெழுத்து
            கீழ்முந்திரி, கீழரைக்காணி, கீழ்க்காணி, கீழ்மா, கீழிருமா, கீழ்மும்மா, கீழ்நான்மா, கீழ்க்கால், கீழரை, கீழ்முக்கால், கீழரைமா, கீழரைக்கால் ஆகிய கீழலகுகளுக்கு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வரிவடிவத்தைக் குறிப்பிடுகின்றார்.  இவையன்றி மேலும் பல கீழலகுகள் உண்டு என்பதையும் சுட்டிச் செல்கின்றார்.  நடைமுறையில் பார்க்கும்போது இக்கீழலகுகளுக்கு வேறுசில வரிவடிவங்களும் சுவடிகளில் வழங்கப்பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது.  இவையும் அவையும் பின்வருமாறு அமைவதைக் காணலாம்.   
கீழ்முக்கால்                      -        3/1,280       -
கீழரை                                      -        1/640          -
கீழ்க்கால்                         -        1/1,280       -
கீழ்நாலுமா                      -        1/1,600       -
கீழ் மூன்று வீசம்               -        3/5,120       -
கீழ்மும்மா                        -        3/6,400       -
கீழரைக்கால்                    -        1/2,560       -
கீழிருமா                          -        1/3,200       -
கீழ்மாகாணி, கீழ்வீசம்       -        1/5,120       -
கீழொருமா                       -        1/6,400       -
கீழ் முக்காணி                   -        3/25,600     -
கீழரைமா                         -        1/12,800     -
கீழ்க்காணி                       -        1/25,600     -
கீழரைக்காணி                  -        1/51,200     -
கீழ்முந்திரி                        -        1/1,02,400  -
இம்மி முந்திரி                   -        1/10,75,200
அதிசாரம்                         -        1/18,38,400
இம்மி                              -        1/21,50,400
நுண்மை முந்திரி               -        1/32,25,600
மும்மி                              -        1/2,36,54,400
அணு                               -        1/1,65,580,800
குணம்                             -        1/1,49,02,27,200
பந்தம்                              -        1/7,45,11,36,000
பாகம்                              -        1/44,70,68,16,000
விந்தம்                             -        1/3,12,94,77,12,000
நாகவிந்தம்                       -        1/53,20,11,11,04,000
சிந்தை                             -        1/7,44,81,55,54,56,000
கதிர்முனை                       -        1/1,48,96,31,10,91,20,000
குரல்வளைப்பிடி               -        1/59,58,52,44,36,48,00,000
வெள்ளம்                         -        1/35,75,11,46,61,88,80,00,000
நுண்மணல்                      -        1/35,75,11,46,61,88,80,00,00,000
தேர்த்துகள்                       -        1/2,32,38,24,53,02,27,20,00,00,000
இம்மி முந்திரிக்குப் பிறகு குறியீடுகள் கிடைக்கவில்லை.
நடுவலகெழுத்து
            முந்திரி, அரைக்காணி, காணி, அரைமா, முக்காணி, ஒருமா, அரைக்கால், கால், அரை, முக்கால் ஆகிய நடுவலகுகளுக்கு வண்ணச்சரபர் வரிவடிவத்தைக் குறிப்பிடுகின்றார்.  இவையன்றி மேலும் பல நடுவலகுகள் உண்டு என்பதையும் சுட்டிச் செல்கின்றார்.    நடைமுறையில் பார்க்கும்போது இந்நடுவலகுகளுக்கு வேறுசில வரிவடிவங்களும் சுவடிகளில் வழங்கப்பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது.  இவையும் அவையும் பின்வருமாறு அமைவதைக் காணலாம்.
கால்                                -        ¼                -
அரை                              -        ½                -
முக்கால்                           -        ¾                -
நாலுமா                           -        1/5              -
மும்மா                                       -        3/20            -
இருமா                            -        1/10            -
ஒருமா                              -        1/20            -
அரைமா                          -        1/40            -
அரைமா முந்திரி               -        9/320          -
அரைமா அரைக்காணி      -        1/32            -
அரைமாயரைக்காணிமுந்திரி-      11/320        -
அரைக்கால்                      -        1/8              -
வீசம்                               -        1/16            -
மூன்று வீசம்                     -        3/16            -
அரையரைக்கால்              -        5/8              -
அரைவீசம்                       -        1/32            -
கால்வீசம்                         -        1/64            -
மாகாணி (வீசம்)               -        1/16            -
மூவீசம் (மும்மாமுக்காணி) -        3/16            -
காணி                              -        1/80            -
காணி முந்திரி                   -        1/64            -
முக்காணி                        -        3/80            -
அரைக்காணி                    -        1/160          -
காணி அரைக்காணி                   -        3/160          -
அரைக்காணி முந்திரி        -        3/320          -
காணியரைக்காணி முந்திரி -        7/320          -
முக்காணியரைக்காணி      -        3/160          -
முந்திரி                            -        1/320          -

மேலலகெழுத்து
            ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, நூறு, ஆயிரம் ஆகிய மேலலகுகளுக்கு வண்ணச்சரபர் வரிவடிவத்தைக் குறிப்பிடுகின்றார்.  இவையன்றி மேலும் பல மேலலகுகள் உண்டு என்பதையும் சுட்டிச் செல்கின்றார்.  அவை பின்வருமாறு அமைவதைக் காணலாம்.           
1                                    -        ஒன்று                   
2                                    -        இரண்டு                
3                                    -        மூன்று                                    
4                                    -        நான்கு                  
5                                    -        ஐந்து                    
6                                    -        ஆறு                     
7                                    -        ஏழு                      
8                                    -        எட்டு                    
9                                    -        ஒன்பது                 
10                                  -        பத்து                     
11                                  -        பதினொன்று          ௰௧
12                                  -        பன்னிரண்டு           ௰௨
13                                  -        பதிமூன்று               ௰௩
100                                -        நூறு                     
200                                -        இருநூறு                ௨௱
300                                -        முந்நூறு                 ௩௱             
1000                              -        ஆயிரம்                 
2000                               -        இரண்டாயிரம்        ௨௲
3000                              -        மூவாயிரம்              ௩௲    
10000                                      -        பத்தாயிரம்             ௰௲
20000                                      -        இருபதாயிரம்                   ௨௰௲ 
30000                                      -        முப்பதாயிரம்          ௩௰௲
100000                          -        நூறாயிரம்              ௱௲
1000000                        -        பத்து நூறாயிரம்
                                                          ஆயிரமாயிரம்         ௲௲
10000000                      -        கோடி                    ௱௱௲
இவ்வெண்களில் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம்,பதினாயிரம், இலட்சம், பத்துலட்சம், கோடி என ஒன்றுக்கொன்று பதின்மடங்கு பெருக்கிக் கணக்கிடப்பட்டு வந்துள்ளனர்.  இவற்றிற்கு முறையே             (1), (10), (100), (1000), ௰௲ (10000), ௱௲ (100000), ௰௱௲ (1000000), ௱௱௲ (10000000) எனக் கோடி எண்ணிக்கை வரையில் எண் வடிவங்கள் உள்ளன.  கோடிக்கு மேல் வரும் எண்ணிக்கைகளுக்கு எண்வடிவங்கள் கெட்டி எண்சுவடி, கணக்கதிகாரம் போன்ற நூல்களில் காணப்படவில்லை.  கணக்கதிகாரத்தில் கோடிக்குமேல் வரும் பேரெண் எண்ணிக்கைகளைக் குறிக்கப் பாடல்களும் அவற்றிற்கு உரைகளும் உள்ளன.  அவை பின்வருமாறு:
            கோடி யுடன்சங்கம் விந்தங் குலம்பதுமம்
நீடு சமுத்திரமே நேரிழையாய்ஓடிவரும்
வெள்ளம் பிரளயம் யோசனைகற் பம்விகற்பம்
கள்ளவிழும் பூங்குழலாய் காண்.”   (கணக்கதிகாரம், பா.89)
            மகாமுந் தன்மனையும் அற்புதமும் உற்பலமும்
ஏகம் அனந்தமுடன் வேணுவாம்தேகாய்
சலஞ்சலமு மந்தரையுந் தாரகையும் மேரு
வலம்புரியின் பின்புலையோர் மட்டு        (கணக்கதிகாரம், பா.90)
மேற்கண்ட பாடல்களுக்கான உரைகளில் மகாகோடி முதல் மகாவிகற்பம் வரையிலும், மாகம் முதல் மகாவலம்புரி வரையிலும் எழுத்தால் எழுதப்பட்டுள்ளனவே யன்றி எண்வடிவங்கள் தரப்படவில்லை.  இவற்றிற்கு முற்காலத்தில் எண்வடிவங்கள் இருந்திருக்க வேண்டும்.  ஆனால் தற்போது இவைகளுக்கு எண் வடிவம் கிடைக்காமல் எழுத்து வடிவமே கொடுக்கப்பட்டுள்ளது.  பாடலின் அமைப்பைக் கொண்டு பார்க்கும்போது கோடி பத்துநூறு ஆயிரம் பத்து கொண்டது மகாகோடி என்றும், மகாகோடி பத்துநூறு ஆயிரம் பத்து கொண்டது சங்கம் என்றும் முறையே பின்வருமாறு கொள்கின்றனர்.


கோடி                              x ௰௱௲௰ = மகாகோடி
மகாகோடி              x ௰௱௲௰ = சங்கம்
சங்கம்                    x ௰௱௲௰ = மகாசங்கம்
மகாசங்கம்             x ௰௱௲௰ = விந்தம்
விந்தம்                   x ௰௱௲௰ = மகாவிந்தம்
மகாவிந்தம்             x ௰௱௲௰ = சமுத்திரம்
சமுத்திரம்               x ௰௱௲௰ = மகாசமுத்திரம்
மகாசமுத்திரம்         x ௰௱௲௰ = வெள்ளம்
வெள்ளம்                x ௰௱௲௰ = மகாவெள்ளம்
மகாவெள்ளம்         x ௰௱௲௰ = பிரளயம்
பிரளயம்                x ௰௱௲௰ = மகாப்பிரளயம்
மகாப்பிரளயம்        x ௰௱௲௰ = யோசனை
யோசனை              x ௰௱௲௰ = மகாயோசனை
மகாயோசனை        x ௰௱௲௰ = கற்பம்
கற்பம்                    x ௰௱௲௰ = மகாகற்பம்
மகாகற்பம்             x ௰௱௲௰ = விகற்பம்
விகற்பம்                x ௰௱௲௰ = மகாவிகற்பகம்
மகாவிகற்பம்          x ௰௱௲௰ = மாகம்
மாகம்                    x ௰௱௲௰ = மகாமாகம்
மகாமாகம்              x ௰௱௲௰ = தன்மனை
தன்மனை               x ௰௱௲௰ = மகாதன்மனை
மகாதன்மனை         x ௰௱௲௰ = அற்புதம்
அற்புதம்                 x ௰௱௲௰ = மகாஅற்புதம்
மகாஅற்புதம்          x ௰௱௲௰ = உற்பவம்
உற்பவம்                x ௰௱௲௰ = மகாஉற்பவம்
மகாஉற்பவம்                   x ௰௱௲௰ = வேணு
வேணு                   x ௰௱௲௰ = மகாவேணு
மகாவேணு             x ௰௱௲௰ = சலஞ்சலம்
சலஞ்சலம்              x ௰௱௲௰ = மகாசலஞ்சலம்
மகாசலஞ்சலம்        x ௰௱௲௰ = மந்தாரை
மந்தாரை                x ௰௱௲௰ = மகாமந்தாரை
மகாமந்தாரை         x ௰௱௲௰ = மேரு
மேரு                      x ௰௱௲௰ = மகாமேரு
மகாமேரு               x ௰௱௲௰ = வலம்புரி
வலம்புரி                x ௰௱௲௰ = மகாவலம்புரி
மேலும், கோடிக்கும் மேல் உள்ள மேலலகெழுத்தைப் பின்வருமாறும் சுட்டுவர்.
கோடி                              10000000                       ௰௲௲, ௱௱௲
          பத்துக்கோடி                    100000000                     ௰௱௱௲
          நூறுகோடி                       1000000000                            ௱௱௱௲
          ஆயிரக்கோடி                            10000000000                 ௲௱௱௲
          பதினாயிரக்கோடி             100000000000               ௰௲௱௱௲
          நூறாயிரங்கோடி              1000000000000             ௱௲௱௱௲
          பத்துநூறாயிரங்கோடி       10000000000000           ௰௱௲௱௱௲
          மகாகோடி(இருகோடி)      100000000000000                  ௱௱௲௱௱௲
பத்து மகாகோடி               1000000000000000      ௰௱௱௲௱௱௲
          நூறு மகாகோடி                1000000000000000      0        ௱௱௱௲௱௱௲
          ஆயிரம் மகாகோடி           100000000000000000  ௲௱௱௲௱௱௲
          பதினாயிரம்மகாகோடி      1000000000000000000 ௰௲௱௱௲௱௱௲
          நூறாயிரம் மகாகோடி       10000000000000000000        ௱௲௱௱௲௱௱௲         
          பத்துநூறாயிரம் மகாகோடி 100000000000000000000      ௰௱௲௱௱௲௱௱௲
          முக்கோடி                        1000000000000000000000 ௱௱௲௱௱௲௱௱௲

அளவலகெழுத்து
            ஆழாக்கு, உழக்கு, நாழி, குறுணி, பதக்கு, தூணி, கலம் ஆகிய அளவலகுகளுக்கு வண்ணச்சரபர் வரிவடிவத்தைக் குறிப்பிடுகின்றனர்.
கூட்டெழுத்து
            ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகளைத் தொடர்ந்து எழுதும் போது முதலெழுத்து அடுத்த எழுத்தோடு சேர்த்து வரும் எழுத்தைக் கூட்டெழுத்து என்பர்.  தமிழ்ச் சுவடிகளில் கூட்டெழுத்து எவ்வாறெல்லாம் அமைந்துள்ளது என்பதைப் பின்வருமாறு சுட்டலாம். 

அம்              -
கம்               -
கீழ்              -
கூடி             -
க்க               -
க்கி              -
க்கு              -
க்கை            -
ச்ச                -
ட்ட              -
ட்டி              -
ட்டு              -
ணம்             -
ண்ட            -
தும்              -
த்த               -
த்தி               -
த்து              -
ந்த               -
ந்திரு            -
ந்து              -
பட              -
படி              -
ப்ப               -
ப்பா             -
மும்              -
யும்              -
ராம             -
வும்              -
ளம்              -
ளும்             -
ற்றி               -
றும்              -
னும்             -

குறிப்பெழுத்து (சொற்குறியீடு)
            ஒரு சொல்லைக் குறிப்பதற்குப் பயன்படும் எழுத்தைக் குறிப்பெழுத்து அல்லது சொற்குறியீடு என்பர்.  தமிழ்ச் சுவடிகளில் இக்குறிப்பெழுத்துகள் எவ்வாறு குறியீடாக அமைந்திருக்கின்றன என்பதைப் பின்வருமாறு சுட்டலாம்.

அமுது          -
அரிசி           -
ஆக             -
எள்ளு          -
காசு             -
குழி             -
கேழ்வரகு     -
கோட்டை     -
சங்கிலி         -
சம்பா           -
சிரஞ்சீவி      -
சோடு           -
தடி               -
தானியம்       -
துவரை         -
தூக்கம்         -
தெற்கு          -
தேதி            -
நஞ்சை         -
நம்பர்           -
நயினார்       -
நல்லெண்ணை-
நவரை          -
நன்செய்       -
நாயக்கர்       -
நாளது          -
நிலம்            -
நிலுவை       -
நெல்            -
பணம்          -
படி              -
பலம்            -
பிள்ளை        -
புஞ்சை         -
புன்செய்       -
பூஞ்ஞியம்     -
பொன்          -
மகசூல்         -
மாதம்           -
மீதம்            -
மிளகு           -
முதலி           -
முதல்            -
மேற்படி        -
வடக்கு         -
வரகு            -
வருடம்         -
வாரம்          -
விராகனெடை-

அளவுக் குறியீடுகள்
            தற்காலத்தில் அளவுக் குறியீடுகள் பொதுமை கருதி உலகளாவிய முறையில் கிலோகிராம், கிலோமீட்டர், கிலோலிட்டர் போன்ற வகைகளில் முறையே நீட்டல் அளவு, முகத்தல் அளவு, நிறுத்தல் அளவு, கால அளவு என அமைத்திருக்கின்றனர்.  அவை பின்வருமாறு அமைவதைக் காணலாம்.
நீட்டலளவு
            10 கோண்                  -  1 நுண்ணணு
10 நுண்ணணு           - 1 அணு
            8  அணு                      -  1 கதிர்த்துகள்
            10 நுண்ணணு           -  1 அணு                   
            8  கதிர்த்துகள்           -  1 பஞ்சிற்றுகள்                  
8  பஞ்சிற்றுகள்         -  1 மயிர்முனை                    
            8  மயிர்முனை           -  1 நுண்மணல்                    
8  நுண்மணல்            -  1 சிறுகடுகு            
            8  சிறுகடுகு               -  1 எள்                                  
            8  எள்                         -  1 நெல்                                
            8  நெல்                       -  1 விரல் (3/4")
            12 விரல்                     -  1 சாண்(3/4’)
            2 சாண்                       -  1 முழம்(18")
            4 முழம்                       -  1 பாகம்(6')
            6000 பாகம்               -  1 காதம்       (12000 கெசம்)
            4 காதம்                      -  1 யோசனை
            16 விரல்                     -  1 அடி(9")
            12 அடி                       -  1 குழி
            100 குழி                     -  1 மா
            20 மா                         -  1 வேலி
முகத்தலளவு
            1 குணம்                     - மிகச் சிறிய அளவு
9 குணம்                     - 1 மும்மி
11 மும்மி                    - 1 அணு
7 அணு                       - 1 இம்மி
7 இம்மி                      - 1 நெல்
7 நெல்                        - 1 சிட்டிகை (சிறிய அளவு)
360     நெல்               -  1 செவிடு (37.6மி.லி.)       
            5          செவிடு           -  1 ஆழாக்கு (168மி.லி.)
            2          ஆழாக்கு        -  1 உழக்கு (336மி.லி.)       
            2          உழக்கு           -  1 உரி (672மி.லி.)  
            2          உரி                 -  1 படி (1.3லி)                      
            8          படி                  -  1 மரக்கால் (5.3லி)
96        படி                  - 1 கலம் (1248லி)
120     படி                  - 1 பொதி (1560லி)
            2          மரக்கால்
                        (குறுணி)        -  1 பதக்கு (10.7லி)
            2          பதக்கு             -  1 தூணி (21.5லி)
            2          தூணி              -  8 குறுணி (43லி)
            3          தூணி              -  1 கலம் (64.5லி)
            48        படி                  -  1 கலம் (64.5லி)
            3          மரக்கால்        -  1 பறை (16.5லி)
            80        பறை               -  1 கரிசை (1320லி)
            21        மரக்கால்        - 1 கோட்டை (111.3லி)
நிறுத்தலளவு
            1          உளுந்து          -  1 கிரெயின் (55மி.கி.)       
            4          நெல்லெடை  -  1 குன்றிமணி (110மி.கி.)
            2          குன்றிமணி    -  1 மஞ்சாடி (219மி.கி.)      
            2          மஞ்சாடி         - 1 பணவெடை (438மி.கி.)                         
5          பணவெடை   -  1 கழஞ்சு (2.190கி)
8          பணவெடை   -  1 வராகனெடை (3.5 கி.) 
            10        வராகனெடை-  1 பலம் (35கி)       
            4          கழஞ்சு            - 1 கஃசு (9.760மி.கி.)
1.5       கழஞ்சு            - 1 பவுன் அல்லது ஒரு சவரன் (8 கி.)
            4          கஃசு                -  1 பலம் (3.5கி)                   
            6          குன்றிமணி    -  1 மாஷம் (660மி.கி.)         
            18        குன்றிமணி    -  1 தோலா (12கி)
            32        குன்றிமணி    -  1 வராகனெடை (21கி)
            1          தோலா           -  1 ரூபாய்எடை(12கி)
            4          யவம்              -  1 குன்றிமணி(110மி.கி.)
            3          தோலா           -  1 பலம் (35கி)
            8          பலம்               -  1 சேர் (280கி)
            40        பலம்               -  1 வீசை (1.4கி.கி.)
            6          வீசை              -  1 துலாம் (8.4கி.கி.)
            8          வீசை              -  1 மணங்கு(11.2கி.கி.)
            20        மணங்கு         -  1 பாரம்(220.40 கி.கி.)
            100     பலம்               -  1 கா (3.5 கி.கி.)
            1/4       பலம்               -  1 கஃசு (8.8 கி)       
            50        பலம்               -  1 தூக்கு (1.75 கி.கி.)
            2          தூக்கு             -  1 துலாம் (3.5 கி.கி.)
            1          துலாம்                        -  12 சேர் (3.5 கி.கி.)
கால அளவு
Ø  1 குழி = 6.66 மில்லி செகண்ட்ஸ் ( கார்த்திகை நட்சத்திரம் ஒரு முறை மின்னும்  நேரம்)
Ø  10 குழிகள் = 1 மை (  கண் இமைக்கும் நேரம் ) =66.66 மில்லி செகண்ட்ஸ்
Ø  2 மை  = 1 கை நொடி =0.125 செகண்ட்
Ø  2 கை நொடி = 1 மாத்திரை  = 0.25 செகண்ட்
Ø  6 மை =  1 நொடி =0.40 செகண்ட்
Ø  2 மாத்திரை = 1 குரு =0.50 செகண்ட்
Ø  2 நொடி = 1 வினாடி = 0.80 செகண்ட் ( ஒரு இதயத் துடிப்பு)
Ø  2 ½ நொடி =  2 குரு = 1 உயிர் = 1 செகண்ட்
Ø  5 நொடி = 1 சணிகம்  = 2 செகண்ட்
Ø  10 நொடி = 1 அணு = 4 செகண்ட்
Ø  6 அணு = 1 நாழிகை-வினாடி  = 24 செகண்ட்
Ø  10 நாழிகை வினாடி = 1 கணம்  = 4 நிமிடம்
Ø  6 கணம் = 1 நாழிகை = 24 நிமிடம்
Ø  10 நாழிகை = 4 சாமம் = 1 சிறு பொழுது = 4 மணி
Ø  6 சிறு பொழுது = 1 நாள்  = 24 மணி
Ø  7 நாள் = 1 கிழமை (வாரம்)
Ø  15 நாட்கள் = 1 அழுவம் ( அரை மாதம்)
Ø  29.5 நாட்கள் = 1 திங்கள் (மாதம்)
Ø  2 திங்கள் = 1 பெரும் பொழுது ( காலம்)
Ø  6 பெரும் பொழுது = 1 ஆண்டு
Ø  64 ஆண்டு = 1 வட்டம்
Ø  4064 ஆண்டு = 1 ஊழி
            இவ்வாறு தமிழ்ச் சுவடிகளில் எழுத்துகள் உயிர், மெய், ஆய்தம், உயிர்மெய், அலகு, கூட்டு, குறிப்பு என்ற நிலைகளில் அமைந்திருக்கின்றன.  இவையன்றி, தமிழ்மொழியில் வடமொழிச் சொற்களின் கலப்பு ஏற்பட்டுவிட்டதால் அம்மொழியிலுள்ள ஒருசில எழுத்துகள் தமிழ்ச் சுவடிக்குள் நுழைந்துவிட்டன.  அவ்வகையில் பார்க்கும் போது , , , ஸ்ரீ, , க்ஷ ஆகிய ஆறு எழுத்துகளும், வடமொழி எழுத்துகளுக்கான உகர ஊகாரக் குறியீடான , ஆகிய இரண்டும் தமிழ்ச் சுவடிகளில் அமைந்திருப்பதைக் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக