துறைமங்கலம் சிவப்பிரகாசர் 34 நூல்களையும் 15 தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார். இவற்றில் செய்யுள் நூல்கள் 33ம் உரைநடை நூல் ஒன்றும் அடங்கும். கொச்சகக் கலிப்பா, தலவெண்பா ஆகிய இருநூல்கள் முற்றிலும் கிடைக்கவில்லை. ஏசுமத நிராகரணம் எனும் பிறசமய மறுப்பு நூல் மட்டும் இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. ஆக முழுமையாகக் கிடைத்த நூல்கள் 31 ஆகும். இந்நூல்களின் பதிப்புகளைத் தனிநூல் பதிப்பு, திரட்டு நூல் பதிப்பு என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
தனிநூல் பதிப்பு
ஒவ்வொரு நூலும் தனித்தனியாகப் பதிப்பிப்பதைத் 'தனிநூல் பதிப்பு' என்பர். இத்தனிநூல் பதிப்பு மூலப்பதிப்பு, உரைப்பதிப்பு என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். மூலம் மட்டும் கொண்ட பதிப்பை 'மூலப்பதிப்பு' என்றும், மூலமும் அதனுடன் உரை/குறிப்புரை/விளக்கவுரை/பதவுரை/ பொழிப்புரை கொண்ட பதிப்பை 'உரைப் பதிப்பு' என்றும் குறிப்பிடலாம். துறைமங்கலம் சிவப்பிரகாசரின் நூல்களில் மூலப்பதிப்பாக கூவப்புராணம், சதமணிமாலை, சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம், சிவஞானபாலைய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது, சிவஞானபாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ், சிவநாம மகிமை, சோணசைல மாலை, திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி, திருவெங்கைக் கோவை, நன்னெறி, நால்வர் நான்மணிமாலை, பழமலையந்தாதி, பிட்சாட நவமணிமாலை, பிரபுலிங்க ல¦லை, பெரியநாயகி கலித்துறை, பெரியநாயகி விருத்தம் போன்ற நூல்களும்; உரைப்பதிப்பாக இஷ்டலிங்கவபிக்ஷேக மாலை, கூவப்புராணம், சித்தாந்த சிகாமணி, சிவஞானபாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ், சிவப்பிரகாச விகாசம், சோணசைல மாலை, திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி, திருவெங்கைக் கோவை, நன்னெறி, நால்வர் நான்மணிமாலை, பழமலையந்தாதி, பிரபுலிங்க ல¦லை, வேதாந்த சூளாமணி போன்ற நூல்களும் வெளிவந்திருக்கின்றன.
திரட்டுநூல் பதிப்பு
ஒரு நூலாசிரயர்/வெவ்வேறு நூலாசிரியரின் ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்களைத் திரட்டிப் பதிப்பிப்பதைத் 'திரட்டுநூல் பதிப்பு' என்பர். துறைமங்கலம் சிவப்பிரகாசரின் திரட்டுநூல் பதிப்புகளை அமைப்புநிலைப் பதிப்பு, அளவுநிலைப் பதிப்பு, பொருள்நிலைப் பதிப்பு, திரட்டுகளின் தொகுப்புப் பதிப்பு என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. அமைப்புநிலைப் பதிப்பு
அமைப்புநிலையில் சிவப்பிரகாசரின் திரட்டு நூல்களை மூலப்பதிப்பு, உரைப் பதிப்பு என இரண்டாகப் பகுத்துக் காணலாம். திரட்டு மூலப்பதிப்பாக இஷ்டலிங்கவபிக்ஷேக மாலை முதலிய பிரபந்தங்கள்(1885, 1890, 1904), சிவஞான பாலைய சுவாமிகள் தாலாட்டு முதலிய 5 நூல்கள் (1877), சிவஞானபாலை தேசிகர் தாலாட்டு முதலிய பிரபந்தங்கள் (1887), சிவஞானபாலைய தேசிகர் திருப்பள்ளியெழுச்சியும் கலம்பகமும் (1934), சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த தோத்திரப் பிரபந்தத்திரட்டு (1890, 1907), சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள் (1944), சிவப்பிரகாசர் பிரபந்தத்திரட்டு (1916, 1941), சோணசைல மாலை முதலிய பிரபந்தங்கள் (1885, 1906), திருவெங்கைக் கலம்பகம் & திருவெங்கையுலா (1890, 1906), நன்னெறி (1874, 1875, 1877,1878,1879), நால்வர் நான்மணிமாலை முதலியன (1872, 1873, 1876, 1890, 1909), ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் கீர்த்திமாலைத் திரட்டு போன்றனவும்; திரட்டு உரைப்பதிப்பாக சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு (1972, 1978), சிவப்பிரகாசர் பிரபந்தத்திரட்டு (1916, 1941), சோணசைல மாலை & சிவநாம மகிமை (1899), சோணசைல மாலை - நால்வர் நான்மணிமாலை & நன்னெறி (1993), நன்னெறி (1869,1883, 1885,1887) போன்றனவும் வெளிவந்திருக்கின்றன.
2. அளவுநிலைப் பதிப்பு
சிவப்பிரகாசர் நூல்களில் பாடல்களின் எண்ணிக்கை அடிப்படையில் சிறுநூல் திரட்டு, பெருநூல் திரட்டு, சிறு மற்றும் பெருநூல் திரட்டு என மூன்று வகைகளாகப் பிரித்துக் காணலாம்.
அ. சிறுநூல் திரட்டு
சிவப்பிரகாசர் நூல்களில் 40 பாடல்களுக்குக் குறைவான நூல்களைச் சிறுநூல்கள் எனலாம். இவ்வகை நூல்களின் திரட்டைச் 'சிறுநூல் திரட்டு' என்கின்றோம். இவ்வகையில் இஷ்டலிங்கவபிஷேக மாலை முதலிய பிரபந்தங்கள் (நெடுங்கழிநெடில், குறுங்கழிநெடில், நிரஞ்சன மாலை, கைத்தல மாலை); நால்வர் நான்மணிமாலை முதலியன (பெரியநாயகி விருத்தம், பெரியநாயகி கலித்துறை, பிட்சாடன நவமணிமாலை) ஆகியன இடம்பெறுகின்றன.
ஆ. பெருநூல் திரட்டு
சிவப்பிரகாசர் நூல்களில் 40 பாடல்களுக்கு மேற்பட்ட நூல்களைப் பெருநூல்கள் எனலாம். இவ்வகை நூல்களின் திரட்டைப் 'பெருநூல் திரட்டு' என்கின்றோம். இவ்வகையில் திருவெங்கைக் கலம்பகம் & திருவெங்கையுலா ஆகிய இரண்டு நூல்களின் திரட்டு மட்டும் இடம்பெறுகின்றது.
இ. சிறு மற்றும் பெருநூல் திரட்டு
சிவப்பிரகாசர் நூல்களில் சிறுநூல் மற்றும் பெருநூல் ஆகிய இரண்டு நிலைகளும் கலந்த திரட்டு நூல்கள் பல வெளிவந்திருக்கின்றன. இவ்வகையில் சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு முதலிய 5 நூல்கள் (தாலாட்டு, கலம்பகம், திருப்பள்ளியெழுச்சி, நெஞ்சுவிடு தூது, பிள்ளைத்தமிழ்); சிவஞானபாலைய தேசிகர் திருப்பள்ளியெழுச்சியும் கலம்பகமும்; சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த தோத்திரப் பிரபந்தத்திரட்டு, சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு, சிவப்பிரகாசர் பிரபந்தத்திரட்டு ஆகிய மூன்று திரட்டுகளிலும் சிவப்பிரகாசரின் பிரபந்த நூல்கள் 22ம் கருணைப்பிரகாசரின் இட்டலிங்க அகவலும் மற்றும் திருவெங்கை மான்மியமும் இடம்பெற்றுள்ளன.
சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள் எனும் திரட்டு நூலில் சிவப்பிரகாசர் நூல்கள் அனைத்தும் வரிசைப்படி வரிசையெண் பெற்று வெளிவந்துள்ளன. இவர்தம் நூல்களில் கிடைக்காத நூல்களுக்கும் அந்நூலுக்கான வரிசையெண் கொடுத்து 'இந்நூல் இதுவரை கிடைக்கவில்லை' என்ற குறிப்போடு இத்திரட்டு வெளிவந்துள்ளது.
சோணசைல மாலையும் சிவநாம மகிமையும்; சோணசைல மாலை நால்வர் நான்மணிமாலை நன்னெறியும்; சோணசைல மாலை முதலிய பிரபந்தங்கள் (சோணசைல மாலை, நால்வர் நான்மணிமாலை, திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி, பழமலையந்தாதி, பிட்சாடன நவமணிமாலை, பெரியநாயகியம்மை விருத்தம், பெரியநாயகியம்மை கலித்துறை, நன்னெறி); ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் சீர்த்திமாலைத் திரட்டு (சோணசைல மாலை, நால்வர் நான்மணிமாலை, பிட்சாடன நவமணிமாலை,இஷ்டலிங்கவபிஷேக மாலை, நிரஞ்சன மாலை, கைத்தல மாலை, சதமணி மாலை) போன்ற சிறு மற்றும் பெருநூல் திரட்டுகளும் வெளிவந்திருக்கின்றன.
3. பொருள்நிலைப் பதிப்பு
பொருள்நிலையில் சிவப்பிரகாசரின் திரட்டு நூல்கள் பாட்டுடைத்தலைவர் பற்றியதாகவும், பாடல்பெற்ற தலத்தைப் பற்றியதாகவும் அமைந்திருப்பதைக் காண முடிகிறது. சிவஞானபாலைய தேசிகர் தாலாட்டு முதலிய பிரபந்தங்கள், சிவஞான பாலைய தேசிகர் திருப்பள்ளியெழுச்சியும் கலம்பகமும் ஆகிய இரண்டு திரட்டுகளும் பாட்டுடைத்தலைவராகிய சிவஞானபாலையரைப் பற்றியதாகவும்; திருவெங்கைக் கலம்பகம் & திருவெங்கையுலா ஆகிய திரட்டு திருவெங்கை எனும் தலம் பற்றியதாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.
4. திரட்டுகளின் தொகுப்புப் பதிப்பு
பல்வேறு காலகட்டங்களில் ஒரே அளவாக, ஒரே பதிப்பாசிரியரால் வெளியிடப்பெற்ற திரட்டு நூல்களின் தொகுப்பாகவும் சிவப்பிரகாசரின் திரட்டு நூல்கள் அமைந்திருக்கின்றன. சோணசைல மாலை முதலிய பிரபந்தங்கள் (1885), திருவெங்கைக்கோவை (1890), திருவெங்கைக் கலம்பகம் & திருவெங்கையுலா (1890), இஷ்டலிங்கவபிஷேக மாலை முதலிய பிரபந்தங்கள் (1888), சிவஞானபாலைய தேசிகர் தாலாட்டு முதலிய பிரபந்தங்கள் (1887), கருணைப்பிரகாசரின் இஷ்டலிங்க அகவல் (1890) ஆகிய தனித்தனித் திரட்டு நூல்கள் அனைத்தையும் முறையாகக் கொண்டு சிவப்பிரகாசரின் சரித்திரம் (1890) எனும் நூலை முன்னதாகக் கொண்டு 'சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச்செய்த தோத்திரப் பிரபந்தத்திரட்டு'(1890) எனும் திரட்டுகளின் தொகுப்புப் பதிப்பு வெளிவந்துள்ளது. முதற்பதிப்பின் முறைவைப்பிலேயே இவற்றின் மறுபதிப்பும் வெளிவந்துள்ளது. அதாவது முதற்பதிப்பில் வெளிவந்த திரட்டுகளின் முறைவைப்பானது 1906, 1906, 1906, 1904, 1904, 1906ஆம் ஆண்டுகளில் வெளிவந்த திரட்டுகளைத் தொகுத்து 1906ஆம் ஆண்டு மறுபதிப்பாக வெளிவந்துள்ளது.
முடிவுரை
இப்பதிப்பு வகைகளையெல்லாம் பார்க்கும்போது துறைமங்கலம் சிவப்பிரகாசரின் நூல்கள் மூலம் மட்டும் கொண்ட தனிநூல் பதிப்பாகவும், மூலமும் உரையும் கொண்ட தனிநூல் பதிப்பாகவும், அமைப்புநிலைத் திரட்டுப் பதிப்பாகவும், அளவுநிலைத் திரட்டுப் பதிப்பாகவும், பொருள்நிலைத் திரட்டுப் பதிப்பாகவும், திரட்டுகளின் தொகுப்புப் பதிப்பாகவும் எனப் பல நிலைகளில் பதிப்பிக்கப் பெற்றிருக்கின்றமை தெளிவு. ஒரு நூலாசிரியரின் நூல்கள் இவ்வளவு வகைகளில் பதிப்பாகி இருப்பது சிவப்பிரகாசர் நூல்களுக்கான தனிச்சிறப்பை வெளிப்படுத்துகின்றது எனலாம்.
துறைமங்கலம் சிவப்பிரகாசர் நூல்களின் பதிப்பு விவரம்
அ. தனிநூற் பதிப்பு
- இட்டலிங்க அபிடேகமாலை பழைய உரையுடன், மயிலம் பொம்மபுர ஆதீன வெளியீடு, உறனுமான் அச்சியந்திரசாலை, விழுப்புரம், 1965
- கூவப்புராணம், ஞானசுந்தர ஐயர் & எம். வீராசாமிச் செட்டியார், மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1880
- திருக்கூவப்புராணம், இராமலிங்க சுவாமிகள்(பதி.), சிதம்பரம் ஈசானிய மடம், மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1884
- கூவப்புராணம், க.வ. திருவேங்கட நாயுடு(குறிப்புரை), எஸ். மூர்த்தி & கோ வெளியீடு, கபாலி அச்சுக்கூடம், சென்னை, 2ம் பதிப்பு, 1908
- கூவப்புராணம், குமாரச்சேரி சுப்பராய முதலியார்(பதி.), 1969
- கைத்தலமாலை, சிவநாம மகிமை, மயிலம் பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1969
- திருக்கூவப்புராணம் மூலமும் உரையும், ஆ. சிவலிங்கனார்(உரை), பொம்மபுர ஆதீனம், மயிலம், 1999
- சதமணி மாலை, சரஸ்வதி பிரஸ், பாதிரிப்புலியூர், 1938
- சித்தாந்த சிகாமணி உரையுடன், நாகி ரெட்டியார்(உரை), கலாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1910
- சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம், இராமலிங்க சுவாமிகள்(பதி.), மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1887
- சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு மூலமும் உரையும், ஆ. சிவலிங்கனார்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1992
- சிவஞானபாலைய சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மூலமும் உரையும், ஆ. சிவலிங்கனார்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1993
- சிவஞானபாலைய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது, இராமலிங்க சுவாமிகள்(பதி.), மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1887
- சிவஞானபாலைய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது, சிவஞானபாலைய சுவாமிகள் வெளியீடு, ஆனந்தா பிரஸ், புதுவை, 1949
- ஸ்ரீசிவஞானபாலைய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது மூலமும் குறிப்புரையும், பொம்மபுர ஆதீனம், மயிலம், 1965
- சிவஞானபாலைய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது, பொம்மபுர ஆதீனம், மயிலம், 1995
- சிவஞானபாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ், இராமலிங்க சுவாமிகள்(பதி.), ஆறுமுகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1887
- சிவஞானபாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ் மூலமும் உரையும், பொம்மபுர ஆதீன வெளியீடு, உறனுமான் அச்சியந்திரசாலை, விழுப்புரம், 1968
- சிவநாம மகிமை, க.வ. திருவேங்கட நாயுடு(பதி,), கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1899
- சிவநாம மகிமை, பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், உறனுமான் அச்சியந்திரசாலை, விழுப்புரம், 1969
- ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் தனிப்பாடல்கள் மூலமும் உரையும், ஆ. சிவலிங்கனார்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1998
- சிவப்பிரகாச விகாசம், அடிகளாசிரியன்(பதி.), 1939
- சிவப்பிரகாச விகாசம்-பாட்டும் சிற்றுரையும், அடிகளாசிரியன்(உரை&பதி.), சரஸ்வதிமகால் நூலக வெளியீடு, தஞ்சை, 1977
- சீகாளத்திப்புராணம், அரங்கநாத முதலியார் & அருணாசலக் குருக்கள்(பதி.), கலாசாகர அச்சுக்கூடம், புதுவை, 1861
- சீகாளத்திப்புராணம், இராமலிங்க சுவாமிகள்(பதி.), மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1888
- சீகாளத்திப்புராணம் உரையுடன், இராமானந்தயோகி(உரை), பூ. சண்முக முதலியார்(பதி.), மதராஸ் டைமண்டு அச்சுக்கூடம், சென்னை, 1916
- சோணசைல மாலை, சி.பெருமாள் நாடார்(பதி.), சின்னயநாயர் அச்சுக்கூடம், 1888
- சோணசைல மாலை, வே.கி. வேலு முதலியார்(பதி.), 1891
- சோணசைல மாலை, கொ. லோகநாத முதலியார்(பதி.), மனோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902
- சோணசைல மாலை, லோகநாத முதலியார்(பதி.), 1915
- சோணசைல மாலை உரையுடன், இராமலிங்கத்தம்பிரான்(உரை), மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1925
- சோணசைல மாலை, நா. கதிரைவேற்பிள்ளை(பதி.), பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1932
- சோணசைல மாலை உரையுடன், க.வ. திருவேங்கடநாயுடு(உரை), ஆறுமுக நாவலர் அச்சுக்கூடம், சென்னை, 1961
- சோணசைல மாலை உரையுடன், பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1994
- சோணசைல மாலை, சிவனடியார் திருக்கூட்ட வெளியீடு, காஞ்சி, 1994
- திருச்செந்தில் நிரோட்டக யமக வந்தாதி, சதாசிவபிள்ளை(பதி.), வர்த்தமான தரங்கிணி அச்சுக்கூடம், சென்னை, 3ம் பதிப்பு, 1868
- திருச்செந்தில் நிரோட்டக யமக வந்தாதி, சதாசிவ பிள்ளை & ஆறுமுக நாவலர்(பதி.), வித்தியானுபாலன யந்திரசாலை, சென்னை, 4ம் பதிப்பு, 1873
- திருச்செந்தில் நிரோட்டக யமக வந்தாதி, சதாசிவபிள்ளை(பதி.), வித்தியானுபாலன யந்திரசாலை, சென்னை, 5ம் பதிப்பு, 1886
- திருச்செந்தில் நிரோட்டக யமக வந்தாதி, சதாசிவ பிள்ளை(பதி,), வித்தியானுபாலன யந்திரசாலை, சென்னை, 6ம் பதிப்பு, 1887
- திருச்செந்தில் நிரோட்டக யமக வந்தாதி, இராமலிங்கசுவாமி(பதி.), மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1888
- திருச்செந்தில் நிரோட்டக யமக வந்தாதி உரையுடன், ஆறுமுக நாவலர்(உரை), பொன்னம்பலபிள்ளை(பதி.), வித்தியானுபாலன யந்திரசாலை, 9ம் பதிப்பு, 1913
- திருச்செந்தில் நிரோட்டக யமக வந்தாதி, பழமலை அந்தாதி மூலமும் உரையும், ஆ. சிவலிங்கனார்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1994
- திருவெங்கைக் கலம்பகம் மூலமும் உரையும், ஆ. சிவலிங்கனார்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1997
- திருவெங்கைக் கோவை, இராமலிங்க சுவாமிகள்(பதி.), இந்து தியாலாஜிகல் யந்திரசாலை, சென்னை, 1890
- திருவெங்கைக் கோவை, இராமலிங்க சுவாமிகள்(பதி.), கலாரத்நாகர அச்சியந்திரசாலை, சென்னை, 2ம் பதிப்பு, 1906
- திருவெங்கைக் கோவை உரையுடன், இராமானந்த யோகிகள்(உரை), ரிப்பன் பிரஸ், சென்னை, 1909
- திருவெங்கைக் கோவை, சிதம்பர முதலியார்(பதி.), 1934
- திருவெங்கைக்கோவை உரையுடன், இராமானந்த யோகிகள்(உரை), ரிப்பன் பிரஸ், சென்னை, 2ம் பதிப்பு, 1938
- திருவெங்கையுலா மூலமும் உரையும், ஆ. சிவலிங்கனார்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1938
- நன்னெறி உரையுடன், ஊ. புஷ்பரதச் செட்டியார்(பதி.), கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 2ம் பதிப்பு, 1868
- நன்னெறிப் பதவுரை, சரவணபுரம் சண்முக முதலியார்(பதி.), விவேக விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1875
- நன்னெறி உரையுடம், ஊ. புஷ்பரதச் செட்டியார்(பதி.), கலாரத்னாகர அச்சுக்கூடம், சென்னை, 6ம் பதிப்பு, 1876
- நன்னெறி உரையுடன், சி. மாணிக்க முதலி & கோ., மனோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 2ம் பதிப்பு, 1877
- நன்னெறி மூலமும் உரையும், அருணாசல முதலியார்(உரை), கலைக்கியான முத்திராஷர சாலை, சென்னை, 1882
- நன்னெறி மூலமும் உரையும், சுப்பிரமணிய சுவாமி(பதி.), மாதவ நிவாச அச்சுக்கூடம், சென்னை, 1883
- நன்னெறி, ஆறுமுக நாவலர் & சதாசிவ பிள்ளை(பதி.), வித்தியானுபாலன யந்திரசாலை, சென்னை, 1889
- நன்னெறி, முத்து சிதம்பரம்பிள்ளை(பதி.), எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1895
- நன்னெறி, ஈ. மார்ஸ்டன்(பதி.), எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1897
- நன்னெறி, கா. நமசிவாய முதலியார் & சிவஞானம் பிள்ளை(பதி.), குமாரசாமி நாயுடு & சன்ஸ், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1904
- நன்னெறி, எஸ். சுப்பிரமணிய ஐயர்(பதி.), ஆ. கோவிந்தராஜூலு நாயுடுவின் வெஸ்ட் அண்ட் கம்பெனி, சென்னை, 1905
- நன்னெறி, சி.ஆர். நமசிவாய முதலியார்(பதி.), சி. குமாரசாமி நாயுடு & சன்ஸ், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1906
- நன்னெறி, ஈ. மார்ஸ்டன்(பதி.), மாக்மில்லன் கம்பெனி, எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1908
- நன்னெறி, சி.வை. தாமோதரம்பிள்ளை(பதி.), மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1909
- நன்னெறி மூலமும் உரையும், சி. குமாரசாமி நாயுடு சன்ஸ்,சென்னை, 1943
- நன்னெறி உரையுடன், ந.மு. வேங்கடசாமி நாட்டார்(உரை), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1962
- நன்னெறி உரையுடன், ந.மு. வேங்கடசாமி நாட்டார்(உரை), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 6ம் பதிப்பு, 1972
- நால்வர் நான்மணிமாலை உரையுடன், முருகேச முதலியார்(உரை), ஊ. புஷ்பரதஞ் செட்டியார், கலாரத்னாகர அச்சியந்திரசாலை, சென்னை, 1878
- நால்வர் நான்மணிமாலை விருத்தியுரையுடன், இராமலிங்க சுவாமிகள்(உரை), ஆறுமுக விலாச அச்சுக்கூடம், சென்னை, 1896
- நால்வர் நான்மணிமாலை உரையுடன், ச. சிவகாமி அம்மையார்(உரை), மாதர் கழகம், தூத்துக்குடி, 1950
- நால்வர் நான்மணிமாலை, இராமலிங்க சுவாமிகள் (விருத்தியுரை), தருமையாதீன வெளியீடு, தருமபுரம், முதற்பதிப்பு 1955, இரண்டாம் பதிப்பு 1973
- நால்வர் நான்மணிமாலை, இராமலிங்க சுவாமிகள்(விருத்தியுரை), செந்தமிழ் நூற்பதிப்புக்கழக வெளியீடு, சிதம்பரம், 1962
- நால்வர் நான்மணிமாலை, இராமலிங்க சுவாமிகள்(விருத்தியுரை), திருஐயன்பெருமாள் கோனார்(பதி.), பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1966
- நால்வர் நான்மணிமாலை, குமரன் செந்தமிழ் நூற்கழக வெளியீடு, 1970
- நால்வர் நான்மணிமாலை, திருஞானசம்பந்தர் கம்பெனி வெளியீடு, சென்னை, 1995
- நால்வர் நான்மணிமாலை உரையுடன், பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1995
- நால்வர் நான்மணிமாலை, கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சை
- நெடுங்கழிநெடில், குறுங்கழிநெடில் மூலமும் உரையும், பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1967
- நிரஞ்சனமாலை மூலமும் உரையும், ஆ. சிவலிங்கனார்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1990
- பழமலையந்தாதி, ஊ. புஷ்பரதஞ் செட்டியார்(பதி.), கலாரத்னாகர அச்சுக்கூடம், சென்னை, 1868
- பழமலையந்தாதி மூலமும் உரையும், அருணாசல குருக்கள்(உரை), லக்ஷ்மி விலாச சாலை, 1871
- பிட்சாடன நவமணிமாலை, ஆறுமுக நாவலர்(பதி.), வித்தியானுபாலன யந்திரசாலை, சென்னை, 1873
- பிட்சாடன நவமணிமாலை, வி. சுந்தர முதலியார்(பதி.), விக்டோரியா ஜுபிளி அச்சுக்கூடம், சென்னை, 1890
- பிட்சாடன நவமணிமாலை, அருணாசல முதலியார்(பதி.), மனோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை
- ஸ்ரீபிட்சாடன நவமணிமாலை மூலமும் உரையும், ஆ. சிவலிங்கனார்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1996
- பிரபுலிங்க ல¦லை, இராமசாமி சுவாமியார்(பதி.), ஜீவரட்சாமிர்த அச்சுக்கூடம், சென்னை, 1830
- பிரபுலிங்க ல¦லை, கல்வி விளக்கம் பிரஸ், சென்னை, 1846
- பிரபுலிங்க ல¦லை உரையுடன், கந்தசாமி ஐயர்(உரை),& சரவணப் பெருமாளையர்(உரை), கல்வி விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1847
- பிரபுலிங்க ல¦லை, ஆறுமுக நாவலர்(பதி.), 1864
- பிரபுலிங்க ல¦லை, ஏழுமலைப்பிள்ளை(பதி.), 1875
- பிரபுலிங்க ல¦லை, ஏழுமலைப்பிள்ளை(பதி.), 1882
- பிரபுலிங்க ல¦லை, பாரிப்பாக்கம் முனியப்ப முதலியார்(பதி.), விவேக விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1875
- பிரபுலிங்க ல¦லை, சரவண பண்டிதர்(பதி.), 1880
- பிரபுலிங்க ல¦லை, சுப்பராய நாயக்கர்(பதி.), விவேக விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1882
- பிரபுலிங்க ல¦லை, அ. சச்சிதானந்தம் பிள்ளை(பதி.), சென்ட்ரல் பிரஸ், சென்னை, 1885
- பிரபுலிங்க ல¦லை, டி, முருகேச முதலியார்(பதி.), சென்ட்ரல் பிரஸ், சென்னை, 1885
- பிரபுலிங்க ல¦லை, கண்ணலூர் கிருஷ்ணப்பச் செட்டியார்(பதி.), சகலகலா நிலைய அச்சுக்கூடம், சென்னை, 1888
- பிரபுலிங்க ல¦லை, நாராயண சரணர்(பதி.), ஸ்ரீகிருஷ்ண விலாச அச்சியந்திர சாலை, தஞ்சை, 1899
- பிரபுலிங்க ல¦லை, சொக்கலிங்க முதலியார்(பதி.), 1900
- பிரபுலிங்க ல¦லை, சாம்பசிவம் பிள்ளை(பதி.), 1901
- பிரபுலிங்க ல¦லை விருத்தியுரையுடன், ஈசூர் கணக்கு சச்சிதானந்தம் பிள்ளை (விருத்தியுரை), ஸ்ரீசச்சிதாநந்த சுவாமிகள் தர்மபரிபாலன சபை வெளியீடு, கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 2ம் பதிப்பு, 1905
- பிரபுலிங்க ல¦லை உரையுடன், கந்தசாமி ஐயர்(உரை), கல்வி விளக்கம் பிரஸ், சென்னை, 1906
- பிரபுலிங்க ல¦லை குறிப்புரையுடன், யாழ்ப்பாணம் நா. கதிரவேல் பிள்ளை (குறிப்புரை), வித்தியாரத்தினாகர அச்சுக்கூடம், சென்னை, 1909
- பிரபுலிங்க ல¦லை, டி.சி. பார்த்தசாரதி(குறிப்புரை), பூமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1930
- பிரபுலிங்க ல¦லை மூலமும் உரையும்-பகுதி 1, எஸ். துரைசாமி ஐயர்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1950
- பிரபுலிங்க ல¦லை மூலமும் உரையும்-பகுதி 2, எஸ். துரைசாமி ஐயர்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1953
- பிரபுலிங்க ல¦லை, சு.அ. இராமசாமிப் புலவர்(குறிப்புரை), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, முதற்பதிப்பு 1954, மறுபதிப்புகள் 1961, 1963, 1966, 1969, 1974
- பிரபுலிங்க ல¦லை, ருக்மணி அம்மையார்(பதி.), ஆதிசேஷ ஐயர் வெளியீடு, 1975
- பெரியநாயகியம்மை கலித்துறை, ஆறுமுக நாவலர் (பதி.), வித்தியானுபாலன யந்திரசாலை, சென்னை, 1873
- பெரியநாயகியம்மை கலித்துறை, அருணாசல முதலியார்(பதி.), மனோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1876
- பெரியநாயகியம்மை கலித்துறை, வி.சுந்தர முதலியார்(பதி.), விக்டோரியா ஜுபிளி அச்சுக்கூடம், சென்னை, 1890
- பெரியநாயகியம்மை கலித்துறை மூலமும் உரையும், ஆ. சிவலிங்கனார்(உரை), பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1995
- பெரியநாயகியம்மை நெடுங்கழிநெடிலாசிரிய விருத்தம், ஆறுமுக நாவலர்(பதி.), வித்தியானுபாலன யந்திரசாலை, சென்னை, 3ம் பதிப்பு, 1873
- பெரியநாயகியம்மை நெடுங்கழிநெடிலாசிரிய விருத்தம், வி. சுந்தர முதலியார் (பதி.), விக்டோரியா ஜுபிளி அச்சுக்கூடம், சென்னை, 1890
- வேதாந்த சூளாமணி மூலமும் உரையும, அருணாச்சல சுவாமிகள்(உரை), பாரிப்பாக்கம் முனியப்ப முதலியாரது மெய்ஞ்ஞான விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1861
- வேதாந்த சூளாமணி, அருணாச்சல சுவாமிகள்(பதவுரை), ஈசூர் கணக்கு சச்சிதானந்த பிள்ளை(பொழிப்புரை), த. கோவிந்தசாமி ஆச்சாரியார்(பதி.), சிவாநந்த நிலைய அச்சுக்கூடம், 2ம் பதிப்பு 1882
- வேதாந்த சூளாமணி, பிறைசை. அருணாசல சுவாமிகள்(விரிவுரை), கோ. வடிவேலு செட்டியார்(குறிப்புரை), சி.பொ. சுப்பிரமணிய பிள்ளை(பதி.), ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1908
- வேதாந்த சூடாமணி மூலமும் சந்தோஷதாயிநி உரையும், ஸ்ரீகாசிகாநந்த ஞாநாச்சாரிய சுவாமிகள்(உரை), பூவணநாதர் புத்தகாலயம், மதுரை,.
- ஆ. திரட்டுப் பதிப்பு
- இஷ்டலிங்கவபிஷேக மாலை முதலிய பிரபந்தங்கள், இராமலிங்க சுவாமிகள் (பதி.), மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1885
- இஷ்டலிங்கவபிஷேக மாலை முதலிய பிரபந்தங்கள், வி. சுந்தர முதலியார் (பதி.), விக்டோரியா ஜுபிளி அச்சுக்கூடம், சென்னை, 1890
- இஷ்டலிங்கவபிஷேக மாலை முதலிய பிரபந்தங்கள், இராமலிங்க சுவாமிகள் (பதி.), கலாரத்நாகரஅச்சியந்திரசாலை, சென்னை, 2ம் பதிப்பு 1904
- சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு முதலிய 5 நூல்கள், சேயூர் ப. கந்தசாமி தம்பிரான் (பதி.), சபா மாணிக்கம் பிள்ளை அச்சுக்கூடம், புதுவை, 1977
- சிவஞானபாலைய தேசிகர் தாலாட்டு முதலிய பிரபந்தங்கள், இராமலிங்க சுவாமிகள்(பதி.), மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1887
- சிவஞானபாலைய தேசிகர் திருப்பள்ளியெழுச்சியும் கலம்பகமும், சிவஞானபாலைய சுவாமிகள் வெளியீடு, ஜெகநாதம் பிரஸ், புதுவை, 1934
- ஸ்ரீசிவஞானபாலைய தேசிகர் நூற்றிரட்டு, பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 2000
- சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த தோத்திரப் பிரபந்தத்திரட்டு, இராமலிங்க சுவாமிகள்(பதி.), இந்து தியாலாஜிகல் யந்திரசாலை, சென்னை, 1890
- சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த தோத்திரப் பிரபந்தத்திரட்டு, இராமலிங்க சுவாமிகள்(பதி.), கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 2ம் பதிப்பு, 1907
- ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் சீர்த்திமாலைத் திரட்டு, பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1999
- சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு, சு. இராமசாமிப் புலவர் (விளக்கக்குறிப்புரை), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, முதற்பதிப்பு 1972
- சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு, சு. இராமசாமிப் புலவர் (விளக்கக்குறிப்புரை), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, மறுபதிப்பு 1978
- சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள், மயிலம் பொம்மபுர ஆதீன வெளியீடு, ஸ்ரீஷண்முக அச்சுக்கூடம், திருப்பாதிரிப்புலியூர், 1944
- சிவப்பிரகாசர் பிரபந்தத்திரட்டு, சுவாமிநாத பண்டிதர்(குறிப்புரை), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, முதற்பதிப்பு 1916
- சிவப்பிரகாசர் பிரபந்தத்திரட்டு, சுவாமிநாத பண்டிதர்(குறிப்புரை), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, மறுபதிப்பு 1941
- சோணசைல மாலை, சிவநாம மகிமை உரையுடன், க.வ. திருவேங்கட நாயுடு (உரை), கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1899
- சோணசைல மாலை, நால்வர் நான்மணிமாலை, நன்னெறி, பொம்மபுர ஆதீன வெளியீடு, மயிலம், 1993
- சோணசைல மாலை முதலிய பிரபந்தங்கள், இராமலிங்க சுவாமிகள்(பதி.), மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1885
- சோணசைல மாலை முதலிய பிரபந்தங்கள், இராமலிங்க சுவாமிகள்(பதி.), கலாரத்நாகர அச்சியந்திரசாலை, சென்னை, 2ம் பதிப்பு, 1906
- திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, இராமலிங்க சுவாமிகள்(பதி.), இந்து தியலாஜிகல் யந்திரசாலை, சென்னை, 1890
- திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, இராமலிங்க சுவாமிகள்(பதி.), கலாரத்நாகர அச்சியந்திரசாலை, சென்னை, 2ம் பதிப்பு, 1906
- நன்னெறி-மூதுரை-நல்வழி, அண்ணாசாமி முதலியார்(பதி.), ஆ.ம.து.வே. ஆரியர் முத்தமிழ் வாணி பீடம் பிரஸ், சென்னை, 1869
- நன்னெறி-வாக்குண்டாம்-நல்வழி, டி. பரசுராம முதலியார்(பதி.), பரப்பிரம்ம முத்திராசாலை, சென்னை, 1874
- நன்னெறி-மூதுரை-நல்வழி, பி.எஸ். கிருஷ்ணசாமிப் பிள்ளை(பதி.), சென்னை, 1875
- நன்னெறி(நீதிமஞ்சரித் திறவுகோல்), பு. தெய்வசிகாமணி முதலியார்(பதி.), மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1877
- நன்னெறி (செய்யுள் திரட்டு), த. செய்யப் முதலியார்(பதி.), ஸ்ரீநிதி பிரஸ், சென்னை, 1878
- நன்னெறி (நீதி மஞ்சரித் தருப்பணம்), முருகேச முதலியார் & ஊ. புஷ்பரதஞ் செட்டியார்(பதி.), கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1879
- நன்னெறி (நீதிநூற்றிரட்டு), பு.பெ. கிருஷ்ணசாமி நாயகர் & நமசிவாயம் பிள்ளை (பதி.), பரப்பிரம்ம முத்திராக்ஷர சாலை, சென்னை, 1879
- நன்னெறி மூலமும் உரையும் (வாக்குண்டாம், நல்வழி), சுப்பிரமணிய சுவாமி (பதி.), மாதவ நிவாச அச்சுக்கூடம், சென்னை, 1883
- நன்னெறி (நீதி மஞ்சரி), நமசிவாயம்பிள்ளை(உரை), மதராஸ் ஸ்கூல் புக் அண்ட் லிட்ரரி சொசைட்டி, சென்னை, 1884
- நன்னெறி (நீதி மஞ்சரி), நவசிவாயம் பிள்ளை(உரை), கல்பீனியன் அச்சுக்கூடம், சென்னை, 1885
- நால்வர் நான்மணிமாலை முதலியன, அருணாசல முதலியார்(பதி.), மனோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1876
- நால்வர் நான்மணிமாலை முதலியன, ஆறுமுக நாவலர்(பதி.), வித்தியானு பாலன யந்திரசாலை, சென்னை, 1872 & 1873
- நால்வர் நான்மணிமாலை முதலியன, வ. சுந்தர முதலியார்(பதி.), விக்டோரியா ஜுபிளி அச்சுக்கூடம், சென்னை, 1890
- நால்வர் நான்மணிமாலை முதலியன, சதாசிவம் பிள்ளை(பதி.), 1909
- பழமலையந்தாதி - திருப்புகலூரந்தாதி-தில்லைக் கலம்பகம் மூலமும் உரையும், நெற்குன்றவான முதலியார் & அருணாசல குருக்கள்(பதி.), லக்ஷ்மி விலாசபிரஸ்,
- ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் கீர்த்திமாலைத் திரட்டு,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக