அகர நிரல் - அகரம் தொடங்கிய எழுத்துகளின் ஒழுங்கு
அகவெண் - ஒவ்வொரு ஏட்டின் நூற்பகுதிக்கு இடையில் கொடுக்கப்
பெற்றிருக்கும் பல்வேறு வகையான எண். அதாவது,
பாடலெண், உரையெண், பாடலுரையெண்,
அதிகாரவெண், படலவெண், அளவெண் போன்றன.
அசல்பிரதி - ஓலையில் எழுதிய முதற்படி
அசை - சுவடித்தூக்கு
அச்சடியோலை- முத்திரை இடப்பெற்ற ஓலைப்பத்திரம்
அச்சரம் - எழுத்து
அச்சுநூல் - அச்சிடப்பெற்ற நூல்
அச்சுநூற் சுவடி - அச்சிடப்பெற்ற நூலைப் பார்த்தெழுதிய ஓலைச்சுவடி
அச்சுப்படி - அச்சிடப்பெற்ற நூல்
அச்சுப்பிழை - அச்சிடும் போது ஏற்படும் பிழை
அச்செழுத்து - உருக்கெழுத்து
அட்சர சுத்தி - கையெழுத்துத் திருத்தம், உச்சரிப்புத் திருத்தம்
அட்சரம் - எழுத்து
அணிந்துரை - பாயிரம்
அண்மைப்படி - இப்பொழுதுள்ள சுவடிக்கு முன் சுவடி
அதிகாரப் பதிப்பு - நூலாசிரியரின் ஒப்புதல் பெற்ற பதிப்பு
அதிசாரம் - 1/18,38,400 என்னும் பின்னவலகான கீழலகு
அத்தியம் - ஒரு பேரெண், ஒரு மேலலகெண்,
1,00,00,00,00,00,00,00,000 எனும் எண் மதிப்பு
அரை - ஒரு பின்னவெண், ஒரு நடுவலகெண், லு
அரைக்காணி - ஒரு பின்னவெண், ஒரு நடுவலகெண், 1/160
அரைக்கால் - ஒரு பின்னவெண், ஒரு நடுவலகெண், 1/8
அரைமா - ஒரு பின்னவெண், ஒரு நடுவலகெண், 1/40
அரைவீசம் - ஒரு பின்னவெண், ஒரு நடுவலகெண், 1/32
அலகெழுத்து - அலகைக் குறிக்கும் எழுத்து. கீழ் அலகு, நடு அலகு,
மேல் அலகு என அலகு மூன்று வகைப்படும்.
அலி எழுத்து - ஆய்த எழுத்து, மெய்யெழுத்து
அளவலகு - நீட்டலளவு, முகத்தலளவு, நிறுத்தலளவு ஆகியவற்றைக்
குறிக்கும் சொல்
அளவுக்குறியீடு - அளவுகளைக் குறிக்கப் பயன்படும் குறியீடுகள்,
அளவலகு. அதாவது, நீட்டலளவு, முகத்தலளவு,
நிறுத்தலளவு ஆகியவற்றைக் குறிக்கும் குறியீடுகள்
அளவுச்சொல் - நீட்டலளவு, முகத்தலளவு, நிறுத்தலளவு ஆகியவற்றைக்
குறிக்கும் சொல்
அளவெண் - நீட்டலளவு, முகத்தலளவு, நிறுத்தலளவு ஆகியவற்றைக்
குறிக்கும் எண்
அற்புதம் - ஒரு பேரெண், பத்து கோடி, 1,00,00,00,000 எனும் எண்
மதிப்பு
ஆசிதம் - ஒரு வண்டிப்பாரம், 200 துலாம் (ஒரு துலாம்=3.4கிகி)
ஆசிரியர் கைப்படி - நூலாசிரியரே எழுதிய சுவடி
ஆடகம் - 5 பிரத்தங்கொண்ட நிறை
ஆடம்பரப்பதிப்பு - விலையுயர்ந்த பதிப்பு
ஆண்பனை - காயாப்பனை
ஆதம் - கூந்தற்பனை
ஆதிச்சுவடி - அரிச்சுவடி
ஆதிமூல புஸ்தகம்- அரிச்சுவடி
ஆதியெழுத்து - மூலவெழுத்து
ஆலேகணி - எழுத்தாணி, வரைகோல்
ஆவணக்களம் - ஆவணக்களரி, பத்திரப்பதிவுச்சாலை
ஆவணக்களரி - ஆவணக்களம், பத்திரப்பதிவுச்சாலை
ஆவணம் - ஓலை, உரிமைப்பத்திரம்
ஆவணச்சுவடி - உரிமைப்பத்திரச்சுவடி
ஆவணர் - உரிமைப்பத்திரம் எழுதுவோர்
ஆவணவோலை - உரிமைப்பத்திரம், சாசனமாக எழுதப்பட்ட ஓலை
ஆழாக்கு - அரைக்காற்படி
ஆளோலை - அடிமைச்சீட்டு
இ - லு என்னும் நடுவலகுக்குறி
இசையோலை - ஒப்பந்த ஓலை
இணக்கோலை - உடன்படிக்கைப் பத்திரம்
இணாட்டு - ஓலைத்தளிர், ஓலைத்துண்டு
இதழ் - ஏடு, ஓலை,
இம்மி - ஒரு சிற்றெண், 1/1075200 என்னும் ஓர் கீழலகு
இயற்கையழிவு - இயற்கையினால் சுவடிகளுக்கேற்படும் அழிவு
இராசியெழுத்து - குறியீட்டெழுத்து
இராமபாணம் - சுவடியை அழிக்கும் ஒருவகைப் புழு
இருப்பு நாராசம் - சுவடிகளைக் கோர்க்கவுதவும் ஒருவகை இரும்புக்கம்பி
இருமா - 1/10 என்னும் ஓர் நடு அலகு
இருமா அரை - அரைக்கால், 1/8 என்னும் ஓர் நடு அலகு
இருவிள - பனையோலை
இலஷ்மணசேன - ஓர் ஆண்டுப்பெயர், கி.பி.1179லிருந்து தொடங்கும்
தொடராண்டு
இலட்சம் - நூறாயிரம், ஒரு பேரெண், 1,00,000 எனும் எண் மதிப்பு
இலிகிதம் - எழுத்து, கடிதம்
இலிகிதன் - எழுத்தாளன்
இலிபி - எழுத்து
இலிபித்தல் - எழுதுதல்
இலேககன் - எழுதுவோன், சித்திரக்காரன்
இலேகனம் - எழுத்து, பூர்ஜ மரத்தின் மேலூரி
இலேகனி - எழுத்தாணி, எழுதுகோல்
இலேகை - எழுத்து
இழவோலை - இறப்புச் செய்தியைத் தெரிவிக்கும் ஓலை
இளம்பாலாசிரியன் - குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்
இளவெழுத்து - திருந்தாவெழுத்து, கிறுக்கலெழுத்து, தெளிவில்லாவெழுத்து
ஈரம்பனை - கூந்தற்பனை
ஈர்க்கு - ஓலை நரம்பு
ஈர்க்குல் - ஓலை நரம்பு
ஈர்வெட்டு - பனையீர்க்கினால் செய்யப்பெற்ற கயிறு
உணர்வெழுத்து - குறியீட்டினால் உணரப்பெறும் ஒருவகை எழுத்து
உருப்பெயர்த்தல் - ஒருமொழிச் சொல்லைப் பிறமொழி எழுத்தில் எழுதுதல்
உருவெழுத்து - வரிவடிவம் கொண்ட எழுத்து
உரைகாரர் - உரையாசிரியர்
உரைக்கோள் - உரைகாரர் கருத்து
உரைச்செய்யுள் - கட்டுரை
உரையெண் - மூல நூலுக்குண்டான உரையைத் தனியே எழுதும்போது
மூலப்பாடலுக்கென இடம்பெறும் உரையெண்
உரைவளப்பதிப்பு - ஒரு நூலுக்குப் பல உரையாசிரியர்கள் எழுதியுள்ள
பல்வேறு உரைகளையும் குறிப்புரைகளையும்
பாடவேறுபாடுகளையும் ஒருசேரத் தொகுத்துத் தரும் பதிப்பு
ஊக ஆதாரப்படி - ஊகித்தறியும் மூலச்சுவடி
ஊகத்திருத்தம் - ஊகித்தறியும் உண்மைப்பாடம்
ஊக மூலப்படி - ஊகித்தறியும் மூலச்சுவடி
ஊக மூலப்பிரதி - ஊகித்தறியும் மூலச்சுவடி
ஊசி - எழுத்தாணி
எண்குறியீடு - கீழ், நடு, மேல் அலகு எண்களைக் குறிக்கப் பயன்படும்
ஒருவகைக் குறியீடு
எண்குறியீட்டுச்சொல் - கீழ், நடு, மேல் அலகு எண்களைக் குறிக்கும் சொல்
எண் சுவடி - நெடுங்கணக்கு எழுதப்பெற்ற சுவடி
எண்ணெய்க்காப்பு - சுவடி பாதுகாப்பதற்காக மருந்தெண்ணை பூசுதல்
எண் வகுப்பு - ஒன்று முதல் 36 வகையான மேலலகு எண்களைக் குறிக்கும்
எண் வாய்ப்பாடு. ஒன்று, பத்து, நூறு, ஆயிரம்,
பதினாயிரம், இலட்சம், பத்துலட்சம், கோடி, பத்துகோடி,
நூறுகோடி, அற்புதம், நிகற்புதம், கர்வம், மகாகர்வம்,
பதுமம், மகாபதுமம், சங்கம், மகாசங்கம், க்ஷோணி,
மகாக்ஷோணி, க்ஷிதி, மகாக்ஷிதி, க்ஷோபம், மகாக்ஷோபம்,
பரார்த்தம், சாகரம், பரதம், அசித்தியம், அத்தியந்தம்,
அனந்தம், பூரி, மகாபூரி, அப்பிரமேயம், அதுலம்,
அகம்மியம், அவ்வியத்தம் போன்ற முப்பத்தாறு
எண்வாய்ப்பாடு.
எழுதாவெழுத்து - அச்செழுத்து
எழுதுகோல் - எழுத்து வரையும் கோல்
எழுத்தச்சு - அச்சிட உதவும் எழுத்தமைப்பு உரு
எழுத்தாணி - ஓலையில் எழுதப் பயன்படும் ஓருவகைக் கருவி
எழுத்தாணிப் பூச்சி - சுவடிகளில் காணப்படும் ஒருவகைப் பூச்சி
எழுத்திடுதல் - கைச்சாத்திடுதல், கையெழுத்திடுதல்
எழுத்து வாங்குதல் - கையெழுத்து வாங்குதல்
எழுத்துக்குத்து - எழுத்து மூலமான சாட்சியம்
எழுத்துக் குறியீடு - எழுத்தைக் குறிக்கும் குறியீடு
எழுத்தூசி - எழுத்தாணி
ஏடகம் - பலகை, பனை
ஏடாசிரியன் - குருவின் துணையின்றி ஏட்டின் உதவி கொண்டே கற்பவன்
ஏடு - பனையோலை இதழ், சுவடி
ஏடு சேர்த்தல் - பனையோலைகளை ஏடுகளாக சீவிக் சுவடிக் கட்டாக்குதல்
ஏடு திருப்புதல் - படி எடுத்தல்
ஏடு தூக்கி - சுவடிகளைச் சுமப்பவன்
ஏடு பிறழ்ச்சி - சுவடிக் கட்டுக்குள் ஏடுகள் முன்பின்னாக மாறியிருத்தல்
ஏடு வாருதல் - பனையோலைகளைச் சீவுதல்
ஏடெழுதுதல் - புதுச்சுவடி எழுதுதல்
எடெழுதுவிப்போர் - ஏடெழுதுபவரைக் கொண்டு சுவடியை எழுதச் சொல்பவர்
ஏடெழுதுவோர் - சுவடி எழுதுபவர்
ஏட்டுச்சுவடி - ஓலைச்சுவடி
ஏட்டுப்பொறி - ஓலையில் பதிந்த முத்திரை
ஏற்றைப்பனை - ஆண்பனை
ஐந்தரம் - பனை
ஒப்புநோக்குதல் - ஒரு சுவடியை மற்றொரு சுவடியோடு ஒத்திடுதல்
ஒப்புநோக்கு நிரல் - ஒரு நூலிலிருக்கும் சொற்களையும், பெயர்களையும்,
பொருள்களையும் அகரவரிசையில் பிற நூல்களில்
இடம்பெறுபவற்றோடு ஒப்பிடுதல்
ஒருமா - 1/20 என்னும் ஒரு நடுவலகு
ஒருமா அரை - 3/40 என்னும் ஒரு நடுவலகு. ஒருமாவும் அரைமாவும்
இணைந்த கீழ்வாயிலக்க எண்
ஒற்றி நறுக்கு - பனையோலையில் எழுதிய அடமானப்பத்திரம்
ஒற்றுதல் - பனையோலைகளில் முத்திரையிடுதல்
ஓலை - செய்தி தாங்கிய ஓலை, ஓலைச்சுருள், ஓலைக்குடை, கடிதம்,
திருமுகம், முடங்கல்
ஓலை எழுதுதல் - ஏடெழுதுதல்
ஓலைக்கணக்கர் - பள்ளியிற் படிப்போர், ஓலையில் கணக்கெழுதுபவர்
ஓலைக்கண் - ஓலைச்சட்டத்தில் விழும் துளை
ஓலைச்சட்டம் - ஓலையாலான காப்பேடு
ஓலைச்சிறகு - நரம்பு பிரிக்கப்பட்ட பனையோலையிதழ், இதழ், ஏடு
ஓலைச்சுருள் - ஓலைக்கடிதம்
ஓலைச்சுவடி - எழுதிய ஓலைக்கட்டு
ஓலை தீட்டுதல் - ஓலையில் எழுதுதல்
ஓலை தீட்டும் படை - எழுத்தாணி
ஓலைத்தூக்கு - சீட்டுக்கவி
ஓலைநாயகம் - தலைமை அமைச்சர்
ஓலை போக்குதல் - ஓலையில் செய்தி அனுப்புதல்
ஓலைப்பாசுரம் - கடிதச் செய்தி, ஓலைப்பாயிரம்
ஓலைப்பாயிரம் - ஓலைப்பாசுரம்
ஓலை முத்திரை - ஓலையின் முகப்பிலிடும் முத்திரை
ஓலை முறி - ஓலைச்சீட்டு
ஓலையாள் - செய்திகொண்டு போவோன்
ஓலையெழுதுவிப்போர் - ஏடெழுதுவிப்பவர்
ஓலையெழுதுவோர் - ஏடெழுதுபவர்
ஓலை வாங்குதல் - இறத்தல்
ஓலை வாசித்தல் - திருமண அறிக்கை வெளியிடல்
ஓலை வாரி - ஓலை சீவுங் கத்தி
ஓலை வாருதல் - எழுதுவதற்கேற்ற அளவில் ஓலையை நறுக்குதல்
ஓலை வெட்டுப்பனை - ஓலையைத் தவிர வேறெந்த பயனும் தராத பனைவகை
க - ஒன்று என்றும் எண்ணின் குறி, மேலலகின் முதல் அலகு
கஃசு - 1/4 பலம் என்னும் நிறையளவு, 8.8கிகி
கசு - 1/4 பலம் என்னும் நிறையளவு, 8.8கிகி
கங்கஅப் - கி.பி.496லிருந்து தொடங்கும் தொடராண்டு
கஜானா - கருவூலம்
கச்சாச்சேர் - 8 பலம் கொண்ட நிறையளவு
கணக்கட்சரம் - சங்கேத எழுத்து
கணக்காயர் - நூலோதுவிப்போர்
கணக்குச் சுருணை - கணக்கோலைக் கட்டு, கணக்குச் சுருள்
கணக்குச் சுருள் - கணக்குச் சுருணை
கணக்கோலை - கணக்கு எழுதப்பெற்ற ஏடு
கணம் - ஒரு பேரெண், ஒரு மேலலகு, 1,00,00,00,00,000 எனும் எண்
மதிப்பு
கணிகம் - நூறு கோடி
கண்டம் - எழுத்தாணி
கண்டி - பாரம் என்னும் நிறையளவு, 360 படி=4 கலம், 75 ஏக்கர்
என்னும் நீட்டலளவு
கதம்பை - எழுதுவதற்குப் பனையோலையை வாரிக்கழிக்கப்பட்ட பகுதி
கம்பை - சுவடிச்சட்டம்
கம்பை கட்டுதல் - சுவடி கட்டுதல்
கயிறு சாத்துதல் - நிமித்தம் பார்ப்பதற்காக இராமாயணம், தேவாரம் மற்றும் ஆரூடச் சுவடியினுள் கயிறிடுதல்
கரம் - ஓலைக்கொத்தின் திரள்
கரம் பதிவுக்கணக்கு - வரிப் பதிவுச் சுவடி
கரிக்காப்பு - மைக்காப்பு, ஓலையில் எழுதப்பெற்ற எழுத்து
விளங்குவதற்காகக் கரி பூசுதல்
கலம் - 96 படி கொண்ட முகத்தலளவு
கலியப்தம் - கி.மு.3102லிருந்து தொடங்கும் தொடராண்டு, கலியுகம்
கலியுகம் - நான்காவது யுகம், கி.மு.3102லிருந்து தொடங்கும்
தொடராண்டு, கலியப்தம்
கலியெழுத்து - சங்கேத எழுத்து வகை
கழஞ்சு - ஒரு முகத்தலளவை, 1/6 அவுன்ஸ்
களை - 80 வரற்கடை அளவு
கறையான் - சிதல், செல்
கற்பம் - பத்து கணம், இலட்சங்கோடி, 10,00,00,00,00,000 எனும் எண்
மதிப்பு, ஒரு மேலலகு
கா - 100 பலம் கொண்ட நிறையளவு
காணி - 1/80 எனும் பின்னவெண், நடுவலகு,
100 குழி அல்லது 1.32 ஏக்கர் நிலம்
காப்பொன் - 100 பலம் நிறையளவு பொன்
கால் - நான்கில் ஒரு பங்கு, 1/4
கால்வீசம் - 1/64 யைக் குறிக்கும் எண்சொல், நடுவலகு,
காவோலை - முற்றினவோலை
கான்சிபட் சுவடி - அகர் மரப்பட்டையில் மசி கொண்டு எழுதப்பெற்ற சுவடி
கிணாட்டு - ஓலை நறுக்கு
கிரந்த தானம் - சுவடியைத் தானமாகக் கொடுத்தல், புத்தக தானம்
கிரந்தம் - வடமொழியைத் தமிழர் எழுதுவதற்குப் பயன்படுத்திய
ஒருவகை எழுத்து, ஒற்று நீக்கி உயிரும் மெய்யுமாகப்பட்ட
32 எழுத்தின் கூட்டம்
கிருதயுகம் - 17,28,000 வருடங்கொண்டது, நான்கு யுகங்களுள் முதல்
யுகம்
கிளி மூக்கு - சுவடிகளைக் கட்டும்போது ஏடு உதிராமல் தடுக்கும்
ஒருவகை ஓலையீர்க்குத் துண்டு
கிளிமூக்கெழுத்தாணி - தலைப்பக்கம் கிளி மூக்குப் போன்ற கத்தியமைப்புடைய
எழுத்தாணி வகை
கீழரை - 1/640 எனும் பின்னவெண், ஒரு கீழலகு
கீழரைக்காணி - 1/51,200 எனும் பின்னவெண், ஒரு கீழலகு
கீழரைக்கால் - 1/2,560 எனும் பின்னவெண், ஒரு கீழலகு
கீழரைமா - 1/12,800 எனும் பின்னவெண், ஒரு கீழலகு
கீழலகு - முந்திரி முதல் ஒன்று வரையுள்ள பின்னவெண்
கீழலகெழுத்து - கீழலகைக் குறிப்பிடும் அலகுக் குறியீட்டெழுத்து
கீழிருமா - 1/3,200 எனும் பின்னவெண், ஒரு கீழலகு
கீழொருமா - 1/6,400 எனும் பின்னவெண், ஒரு கீழலகு
கீழ்க்காணி - 1/25,600 எனும் பின்னவெண், ஒரு கீழலகு
கீழ்க்கால் - 1/1,280 எனும் பின்னவெண், ஒரு கீழலகு
கீழ் நாலுமா - 1/1,600 எனும் பின்னவெண், ஒரு கீழலகு
கீழ் முக்காணி - 3/25,600 எனும் பின்னவெண், ஒரு கீழலகு
கீழ் முக்கால் - 3/1,280 எனும் பின்னவெண், ஒரு கீழலகு
கீழ் முந்திரி - 1/1,02,400 எனும் பின்னவெண், ஒரு கீழலகு
கீழ் மும்மா - 3/6,400 எனும் பின்னவெண், ஒரு கீழலகு
கீழ் மூன்று வீசம் - 3/5,120 எனும் பின்னவெண், ஒரு கீழலகு
கீழ் வீசம் - 1/5,120 எனும் பின்னவெண், ஒரு கீழலகு
குடவெழுத்தாணி - குண்டெழுத்தாணி, தலைப்பக்கம் குண்டாய்த்
திரண்டிருக்கும் எழுத்தாணி வகை
குடவோலை - பழங்கால தேர்தல் முறையில் பயன்படுத்திய தேர்தல் சீட்டு
குடைப்பனை - தாளிப்பனை
குண்டெழுத்தாணி - குடவெழுத்தாணி, தலைப்பக்கம் குண்டாய்த் திரண்டிருக்கும் எழுத்தாணி வகை
குந்தம் - 4 பலம் கொண்ட நிறையளவு
குப்த-வல்லம் - கி.பி.319லிருந்து தொடங்கும் தொடராண்டு
கும்பம் - பத்து நிழற்புதம், 10,00,00,00,000 எனும் எண் மதிப்பு,
ஒரு மேலலகு
குயிலெழுத்து - நடுகல்லில் பொறிக்கப்பட்ட (குயிற்றிய) எழுத்து
குருத்தோலை - குருத்தாயுள்ள பனையோலை
குரோசம் - 2ரு மைல் தூரம், 2000 தண்டம் = 2ரு மைல்
குழி - 576 சதுர அடி நிலப்பரப்பு
குறிப்போலை - கணக்கு எழுதிய ஓலை
குறுணி - 8 படி கொண்ட முகத்தலளவை, ஒரு மரக்கால்
கூட்டெழுத்து - ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகளைச் சேர்த்தெழுதுமெழுத்து
கூந்தற்பனை - தாளிப்பனை
கூர்ச்சிகை - எழுதுகோல்
கூர்னிபாம் - ஓட்டுச்சில்லில் எழுத்தாணியால் கீறியெழுதும் எழுத்து
கூளிப்பனை - தாளிப்பனை
கெவியூதி - இரண்டு குரோசம், 4லு மைல் தூரம்
கேதியாண்டு - கி.பி.248லிருந்து தொடங்கும் தொடராண்டு
கைமுறி - ஓலைமுறி, ஓலைச்சீட்டு
கையெழுத்துப்படி - கையாலெழுதிய நூற்படி
கொல்லமாண்டு - கி.பி.824லிருந்து தொடங்கும் தொடராண்டு
கோடி - நூறு நூறாயிரம், ஒரு பேரெண்,
1,00,00,000 எனும் எண் மதிப்பு
கோட்டை - 21 மரக்கால் கொண்ட முகத்தலளவு
கோணி - 8 மரக்கால் கொண்ட முகத்தலளவு
கோலெழுத்து - வட்ட வடிவமான எழுத்து(தமிழ், தெலுங்கு,,,)
கோல் - 24 அடியுள்ள நீட்டலளவு, எழுத்தாணி, எழுதுகோல்
கோணோலை - அரசாணை எழுதப்பெற்ற ஓலை
சகாப்தம் - சாலிவாகனன் பெயரில் வழங்கும் கி.பி.78லிருந்து
தொடங்கும் தொடராண்டு
சகஸ்வரம் - ஆயிரம்
சங்கம் - பத்து பதுமம், ஒரு பேரெண்,
1,00,00,00,00,00,00,000 எனும் எண் மதிப்பு
சட்டோலை - சட்டம் எழுதுவதற்குரிய ஓலை
சட்டம் வாருதல் - எழுதுஞ்சட்டம் சித்தம் செய்தல்
சதம் - நூறு
சந்திரகம் - ஓலையின் உறைச்சுருள்
சந்திரிகை - ஓலைச்சுருள்
சபாது - படி எடுத்தல்
சரசுவதி பண்டாரம் - சுவடிச்சாலை
சரசுவதி பீடம் - சிக்குப்பலகை
சரவை - தெளிவற்ற எழுத்து, எழுத்துப்பிழை, மூலத்தோடு
ஒப்பிடாத சுவடி
சரவையெழுத்து - திருத்தப்பெறாத மூலச்சுவடி
சரவையிடுதல் - ஓலைச்சுவடியிலுள்ள எழுத்துப்பிழையைத் திருத்தம் செய்தல்
சலகை - 60-80 படி கொண்ட தானிய அளவு
சலாகை - சிறிய நாராசம்
சாமம் - 7லு நாழிகை கொண்ட காலவளவு, மூன்று மணி நேரம்
சாரோலை - முதிராத குருத்தோலை
சார்வோலை - முதிர்ந்த குருத்தோலை
சாலிவாகனசகாப்தம் - கி.பி.78லிருந்து தொடங்கும் தொடராண்டு
சிக்குப் பலகை - சுவடிகள் மற்றும் நூல்களை வைத்துப் படிப்பதற்கென
ஒன்றுக்குள் ஒன்றாகச் சிக்கியிருக்கும் ஒருவகைப் பலகை
சிதம்பர பதம் - 34 அங்குல அளவுகோல்
சிதலை - கறையான், சிதல்
சிதல் - கறையான், சிதலை
சிதிலவேடு - சிதைந்த சுவடி
சிதைவேடு - செல்லரித்த சுவடி
சிறுகுழி - 36 சதுர அடி கொண்ட அளவு
சிறுகோல் - 4 முழங்கொண்ட அளவுகோல்
சீட்டுக்கவி - ஓலைப்பாசுரம்
சீதாளம் - கூந்தற்பனை, தாளிப்பனை, குடைப்பனை, தாள பத்ரம்
சீதாளப்பனை - கூந்தற்பனை, தாளிப்பனை, குடை பனை, தாள பத்ரம்
சீதாளவேடு - எழுதுதற்குரிய கூந்தற்பனையேடு,
எழுதுதற்குரிய தாளிப்பனையேடு
சீதாளி - சீதாளப்பனை
சுகஸ்த லிகிதம் - தன் கையாலெழுதிய சுவடி
சுதர்சன ஆண்டு - கி.பி.599லிருந்து தொடங்கும் தொடராண்டு
சுத்தபாடம் - பிழையற்ற மூலபாடம்
சுத்தப்பிரதி - திருத்தச்சுவடி
சுந்தரபாண்டியன்கோல் - 24 அடி நீளமுள்ள கோல்
சுரி - ஏட்டுத்துளை, பனையேட்டில் துளையிடும் கருவி, சுரியூசி
சுரிப்புறம் - பனையேட்டின் துவாரமுள்ள பக்கம்
சுரியாணி - கம்பை, நாராசம்
சுரியூசி - பனையேட்டில் துளையிடும் கருவி, சுரி
சுருக்க விளக்கம் - நூலினுள் சுருக்கமாகக் கையாளப்பெற்றுள்ள வடிவத்திற்கான
விளக்கம்
சுருணை - கணக்கெழுதப்பெற்ற ஓலைச்சுருள்
சுருதி - மூல நூலாசிரியரிடம் நேரிடையாகக் கற்ற கல்வியை
பிறிதொருவருக்கு நேரிடையாகச் சொல்லுதல்,
வாய்மொழிப்பாடம்
சுவடி - பனையேட்டுச் சுவடி
சுவடி எண் - சுவடி நூலகத்தில் சுவடிகளுக்கு நூலகரால் இடம்பெறும்
புறவெண்
சுவடி சேர்த்தல் - ஏடு சேர்த்தல், சுவடி நூலகம், சுவடிச்சாலை
சுவடியெழுதுதல் - அட்சரம் எழுதப் பழகுதல்
சுவடியைக் கட்டுதல் - படிப்பை நிறுத்துதல், சுவடி திரட்டுதல், சுவடி வரவுப்
பதிவேடு, சுவடி வேறுபாடு, சுவடி விளக்க அட்டவணை
சுவாமியம் - சுள்ளாணி, சுள்ளாணித்தலை
செந்திருக்கும் - ஓலைக்கடிதத்தின் முழுச்சுருள், ஓலையை அடைக்குஞ் சுருள்
செல் - கறையான், மரம், தோல், ஓலை, தாள் சுவடிகளை அரித்துத்
தின்னும் ஒருவகை எறும்பு
செவிடு - 360 நெல்லளவு கொண்ட முகத்தலளவு
சேர் - 8 பலம் கொண்ட நிறுத்தலளவு
சொல்நிரல் - நூலில் வந்த முக்கியமான சொற்களை அகரவரிசையில்
அமைத்து அவற்றிற்கான பக்கவெண் குறிப்பிடுதல்
சொற்பொருள்நிரல் - இலக்கிய இலக்கண நூல்களில் வழங்கும் சொற்களைத்
தொகுத்து அகரநிரலாக்கி அவை வழங்கும் இடத்தையும்
பொருளையும் சுட்டுவது
சோற்றுப்பனை - வயிரமற்ற பனை
தடை - 80 பலம் கொண்ட நிறுத்தலளவு
தண்டம் - 4 முழங்கொண்ட நீட்டலளவு, ஒரு நாழிகை நேரம்
தமிழ் விரகன் - இறையிலி நிலம் பெற்று சுவடிகளைப் புதுப்பிப்பவன்
தரகு - இரண்டு படி அளவு கொண்ட முகத்தலளவு
தராசு - 800 பலம் கொண்ட முகத்தலளவு
தலப்பம் - தாளிப்பனை
தலை நறுக்கு - ஓரையின் முன்பாகம்
தலைப்படி - 6 பலம் கொண்ட முகத்தலளவு
தளிர்பனை - குட்டைப்பனை, நாட்டுப்பனை போன்று
குட்டையானதுமான ஒருவகைப் பனை
தற்குறி - எழுதத் தெரியாதவன் தன் கையெழுத்தாக இடும் கீறல்
தற்குறி மாட்டெறிதல் - பெயரெழுதத் தெரியாதவன், கைக்கீறல் இதுவென்று
எழுதிச் சாட்சி போடுதல்
தாயேடு - மூலயேடு
தாலம் - கூந்தற்பனை, பனை, மூன்று பிடிகொண்ட நீட்டலளவு
தாளிப்பனை - கூந்தற்பனை
திருகூசி - ஓலையில் துளையிடும் ஒரு கருவி
திருக்கைக்கோட்டி - கோயில்களில் சுவடிகள் வைத்துக் காப்பாற்றப்படும்
கோயில் மண்டபம்
திருத்திய ஏடு - நகலேடுகள் பெருகிய பின் ஒப்பீட்டு முறையில் சரியான
மாற்றுச்சுவடி உருவாக்குதல்
திருமந்திரஓலைநாயகம்- தலைமை அமைச்சர், இப்பதவி கி.பி.16ஆம் நூற்றாண்டின்
இறுதியில் மதுரை நாயக்கர்களால் தோற்றுவிக்கப்பட்டது.
திருமந்திர ஓலை - அரசவையில் செய்தி வாசிப்போன்
திருவள்ளுவராண்டு - கி.மு.31லிலிருந்து தொடங்கும் தொடராண்டு
திரேதா யுகம் - 12,96,000 வருடங்கள்,
நான்கு யுகங்களில் இரண்டாவது யுகம்
துரோணம் - 2 மரக்கால், பதக்கு, ஒரு முகத்தலளவு
துலாம் - 100 அல்லது 200 பலம் கொண்ட நிறுத்தலளவு, 5 வீசை
துவாபர யுகம் - 8,64,000 வருடம். நான்கு யுகங்களில் மூன்றாவது யுகம்
தூக்கு - சுவடித்தூக்கு, 50 பலம் கொண்ட நிறுத்தலளவை
தூக்குத்தூக்கி - சுவடித்தூக்கைத் தூக்குபவன்
தூணி - 4 மரக்காலளவு
தூரிகை - எழுதுகோல், எழுதுமிறகு, தூவல், தூலிகை
தூலிகை - எழுதுகோல்
தேரெழுத்தாணி - தேருருவக் கொண்டையுள்ள எழுத்தாணி
தேவ யுகம் - 12,000 தெய்வ வருடம் கொண்ட கால அளவு
தேவ வருஷம் - 365 மானுட வருடம் கொண்ட ஓராண்டு
தொடரேட்டெண் - சுவடிக்கட்டில் பல நூல்கள் இடம்பெற்றிருந்து அவ்வெல்லா
நூல்களுக்கும் இடப்பெற்றதொரு ஏட்டெண்
நகல் - படி
நகலேடு - படியேடு
நடுவலகு - முந்திரி முதல் ஒன்று வரையுள்ள பின்னவெண்கள்
நடுவலகெழுத்து - முந்தரி முதல் ஒன்று வரையுள்ள பின்னவெண்களைக்
குறிக்கும் குறியீட்டெழுத்து
நறுக்கு - ஓலைச்சீட்டு, ஓலைத்துண்டு
நாடுரி - 1லு நாழி கொண்ட முகத்தலளவை
நாராசமேற்றுதல் - ஓலையில் துளையிடுதல்
நாராசம் - கம்பை, ஏடுகளைக் கோர்க்க உதவும் ஓர் உலோகக் கருவி
நாராயம் - எழுத்தாணி
நாலுமா - 1/5 என்னும் பின்னவலகான நடுவலகு
நாவுரி - 1லு நாழி கொண்ட அளவு
நாழி - ஒரு படி, காற் படி
நாழிகை - 24 நிமிடம் கொண்ட காலவளவு
நிகற்பம் - பத்து கற்பம், பத்து இலட்சங்கோடி, ஒரு மேலலளகு,
1,00,00,00,00,00,000 எனும் எண் மதிப்பு
நியுதம் - பத்து இலட்சம், ஒரு மேலலளகு, 10,00,000 எனும் எண்
மதிப்பு
நிழற்புதம் - பத்து அற்புதம், ஒரு மேலலளகு, 1,00,00,00,000 எனும் எண்
மதிப்பு
நிறை - 100 பலம் கொண்ட நிறுத்தலளவு
நீட்டு - திருமுகவோலை
நீட்டோலை - திருமுகவோலை, ஊர் நடவடிக்கைகளை அறிவிப்பவர்
நுணுக்கெழுத்து - பொடிப்பொடியாக எழுதும் எழுத்து
நூலேட்டெண் - சுவடியில் ஒரு நூலோ ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்களோ
இடம்பெற்றிருக்கும்போது ஒவ்வொரு நூலுக்குமெனத்
தனியாகப் பெற்ற ஏட்டெண்
நூறாயிரம் - இலட்சம்
நூறுநூறாயிரம் - கோடி
நெடுமை - நெட்டெழுத்து
நெட்டெழுத்து - பெயர் முழுமையும் அடங்கிய கையெழுத்து
நெட்டோலை - திருமுகம்
நெல்லிக்காய்எழுத்தாணி- தலையில் நெல்லிக்காய் போன்ற உருண்டை வடிவம்
கொண்ட எழுத்தாணி
நேவாராண்டு - கி.பி.879லிருந்து தொடங்கும் தொடராண்டு
பகர்த்துதல் - பெயர்த்து எழுதுதல்
பகர்ப்பு - நகல்
பசலி - கி.பி591லிருந்து தொடங்கும் தொடராண்டு.
கி.பி.1555ஆம் ஆண்டு அக்பரால் ஏற்படுத்தப்பெற்ற
தொடராண்டு
பச்சோலை - காயாத ஓலை
படி - நகல், 100 பலம் கொண்ட முகத்தலளவு, 8 உழக்கு
கொண்ட முகத்தலளவு
படியெடுத்தல் - ஒரு சுவடியைப் பார்த்து மற்றொரு சுவடி எழுதுதல்
படியோலை - மூலவோலையின் நகலோலை
பட்டோலை - எழுதுவதற்குகந்த ஓலை, ஒருவர் சொல்ல பிறிதொருவர்
எழுதிய ஓலை, அரசரின் செயல் நடவடிக்கைகளை
எழுதுபவர்
பட்டோலைகொள்ளுதல் - பெரியோர் கூறியதை எழுதுதல்
பட்டோலைபோடுதல் - மூலத்திற்கு நகல் எழுதுதல்
பதக்கு - இரண்டு குறுணி கொண்ட அளவு
பதம் பார்த்தல் - பனையோலை எழுதுவதற்குகந்த நிலையிலிருக்கின்றதா
எனச் சோதித்துப் பார்த்தல்
பதித்தெழுதுதல் - அழுந்த எழுதுதல், மேலே இடம்விட்டுக் கீழே எழுதுதல்
பதுமம் - பத்து நிகற்பம், ஒரு மேலலளகு, 10,00,00,00,00,00,000 எனும்
எண் மதிப்பு
பத்து நூறாயிரம் - பத்து இலட்சம்
பரதம் - ஒரு பேரெண்
பரார்த்தம் - இலட்சம் கோடி, பத்து மத்தியம், ஒரு மேலலளகு,
1,00,00,00,00,00,00,00,00,000 எனும் எண் மதிப்பு
பர்லாங்கு - 220 கெஜம் கொண்ட நீட்டலளவு
பனையேடு - பனையோலை, ஓலைச்சுவடி
பாடம் பண்ணுதல் - எழுதுவதற்கேற்ப ஓலையைப் பக்குவப்படுத்துதல்
பாயிரம் - முகவுரை, வரலாறு
பிடியெழுத்தாணி - மடக்கெழுத்தாணி
பிரகுஞ்சம் - ஒரு கலம் கொண்ட நிறுத்தலளவு
பிரதி செய்தல் - படி எடுத்தல்
பிரி நகல் - படி எடுத்தல்
பிரம கற்பம் - பத்து புரியம், ஒரு மேலலளகு,
10,00,00,00,00,00,00,00,00,000 எனும் எண் மதிப்பு
பிற்குறிப்பு - சுவடியின் இறுதியில் கூறப்பெறும் சுவடி தொடர்பான
செய்திகள்(சுவடி எழுதியவர், சுவடி எழுதுவித்தவர், சுவடி
எழுதிய காலம் போன்ற பல செய்திகள்)
புடைநூல் - சார்பு நூல்
புத்தக தானம் - கிரந்த தானம், சுவடியைத் தானமாகக் கொடுத்தல்
புறவுரை - பாயிரம்
புறவெண் - சுவடியின் ஒவ்வொரு ஏட்டின் முதல் பக்கத்தில் இடப்பக்க
ஓரம் அல்லது வலப்பக்க ஓரம் கொடுக்கப்படும் ஏட்டெண்
பூர்ஜமரப்பட்டை - வடஇந்தியர்கள் எழுதுவதற்குப் பயன்படுத்தும் ஒருவகை
மரப்பட்டை
பெண்டை மரக்கால் - 2லு படி கொண்ட முகத்தலளவு
பெண்பனை - காய்க்கும் பனை
பெயர்த்தெழுதுதல் - நகலெழுதுதல்
பேட்டைப்படி - 1000 தோலா கொண்ட நிறுத்தலளவு
பையோலை - பச்சோலை
பொறியொற்றோலை - முத்திரையோலை
மகாகெசம் - 100 முழங்கொண்ட நீட்டலளவு
மகாகோடி - ஒரு பேரெண்
மகாகோணி - இலட்சங்கோடாகோடி
மகாசங்கம் - ஆயிரங்கோடாகோடி
மகாவரி - ஒரு பேரெண்
மகாவற்புதம் - ஒரு பேரெண்
மகாவேணு - ஒரு பேரெண்
மகாதோணி - ஒரு பேரெண்
மகாதோபம் - ஒரு பேரெண்
மகாஷிதி - ஒரு பேரெண்
மசி - பசுக்கோமியத்தில் சங்கை ஊரவைத்துக் கருக்கி மரப்பிசின்
(வேலம் பிசின்) மற்றும் நீர் சேர்த்துத் தயாரிக்கப்படும்
ஒருவகை மை. இம்மையைக் கொண்டு பூர்ஜ
மரப்பட்டைகளில் எழுதியிருக்கின்றனர்.
மஞ்சள் காப்பு - வௌ¢ளெழுத்தின் மீது மஞ்சளை மைக்காப்பு செய்தல்
மடக்கெழுத்தாணி - கத்தியுடன் பிடிக்குள் அடங்கும் எழுத்தாணி
மடக்கோலை - எழுதி மடக்கிய ஓலை
மடிப்பெழுத்தாணி - கைப்பிடியுள் மடங்கும் எழுத்தாணி
மணு - எட்டு வீசை கொண்ட நிறுத்தலளவு
மரக்கால் - 8 படி கொண்ட முகத்தலளவு
மனப்பாடம் - கற்றதை மறதியின்றிச் சொல்லும் பாடம், மனனம்
மா - 1/20 என்னும் பின்னவலகான நடுவலகு
முகரியோலை - முடங்கின பனையோலை
முகரீர் - முத்திரை
முகர் வைத்தல் - முத்திரையிடுதல்
முகூர்த்தம் - 1லு மணிநேரம் கொண்ட காலவளவு
முக்காணி - 3/80 என்னும் பின்னவலகான நடுவலகு
முக்கால் - 3/4 என்னும் பின்னவலகான நடுவலகு, நான்கில் மூன்று
பங்கு
முடங்கல் - சுருளோலை, செய்தி தாங்கிய ஓலை
முண்டாணி - மூன்று வீசம்
முத்ராசாலை - அச்சுக்கூடம்
முத்திரித்தல் - முத்திரையிடுதல்
முந்திரி - 1/320 என்னும் பின்னவலகான நடுவலகு
மும்மா - 3/20 என்னும் பின்னவலகான நடுவலகு
மும்மா முக்காணி - 3/16 என்னும் பின்னவலகான நடுவலகு, மும்முக்காணி
மும்மா முந்திரி - 40/320 என்னும் பின்னவலகான நடுவலகு
முறி - கொழுந்தோலை
முறிப்பத்திரம் - ஓலைப்பத்திரம்
முறியோலை - முகரிவோலை
முற்குறிப்பு - சுவடியின் தொடக்கத்தில் எழுதப்பெற்ற சுவடி
தொடர்பான செய்திகள்(சுவடி எழுதுபவர், சுவடி
எழுதுவிப்பவர், சுவடி எழுதத்தொடங்கிய காலம் போன்ற
பல செய்திகள்)
மூல ஏடு - நூலாசிரியன் எழுதிய முதலேடு, முகரியோலை
மூலக்காரன் - நூலாசிரியன்
மூலம் - மூலபாடம்
மூலவெழுத்து - மூலாக்கரம்
மூலவோலை - மூல சாஸனம்
மூன்று மா - 3/20 என்னும் பின்னவலகான நடுவலகு
மூன்று வீசம் - 3/16 என்னும் பின்னவலகான நடுவலகு
மேய்ச்சற் கறையான் - ஒருவகைக் கறையான்
மேலலகு - ஒன்றுக்கு மேற்பட்ட முழு எண்கள்
மேலலகெழுத்து - ஒன்றுக்கு மேற்பட்ட முழு எண்களைக் குறிக்கும்
குறியீட்டெழுத்து
மேலெழுத்து - சாட்சிக் கையெழுத்து
மேலொப்பம் - கையொப்பம்
மேல்செல்லா நின்ற - இதற்குட்பட்ட காலத்தில்
மேல்வாயிலக்கம் - ஒன்றிலிருந்து மேலெண்ணப்படும் எண் முறை, பின்னத்தில்
மேலெழுதப்படும் எண்
மைக்காப்பு - எழுத்து நன்கு தெரியுமாறு ஏட்டுச்சுவடிக்கு மை தடவுதல்
மையாடல் விழா - வருடத்திற்கொருமுறை குறிப்பிட்டதொரு நாளில்(சரஸ்வதி
பூசை போன்ற) சுவடியில் மை தடவிப் பாதுகாக்கும் விழா
மை யூட்டுதல் - ஓலைக்கு மை தடவுதல்
மையெழுத்து - மையால் எழுதும் எழுத்து
மையோலைபிடித்தல் - கற்கத் தொடங்கும் போது மை தடவிய எழுத்துள்ள
ஓலையைக் கைக்கொள்ளுதல்
மோடி - மோடி எழுத்து, மராட்டியர் எழுத்து
மோடியெழுத்து - மராட்டியர்கள் பயன்படுத்திய எழுத்து, இராயசவெழுத்து
யூகை - மூலத்திலிருந்து உரைகாரர் தீர்மானிக்கும் கருத்து,
1/8 என்னும் என்னும் பின்னவலகான நடுவலகு
யூரியம் - பத்து பரார்த்தம், ஒரு மேலலளகு,
1,00,00,00,00,00,00,00,00,000 என்னும் எண் மதிப்பு
லட்சம் - நூறாயிரம்
லோந்தர் பனை - கூந்தல் பனை போன்று நீள அகலங்களையும் நாட்டுப்பனை
போன்று தடிமனாகவும் இருக்கும் ஒருவகைப் பனை.
இப்பனை தென்கிழக்காசிய நாடுகளில் பரவலாகக்
கிடைக்கக் கூடியதாகும்.
வடப்படி - 144 பலம் கொண்ட முகத்தலளவு
வடிவெழுத்து - ஒலியின் குறியாக எழுதப்படும் எழுத்து, திருத்திய
கையெழுத்து
வட்டெழுத்து - ஒருவகைப் பழைய தமிழ் எழுத்து
வராகனெடை - 5/16 கொண்ட நிறுத்தலளவு, 54 கிராம்
வராகன் - 3லு ரூபாய் மதிப்புள்ளதும் பன்றி முத்திரை
கொண்டதுமான ஒருவகைப் பொன்நாணயம்
வராங்கனை - கூந்தற்பனை
வராடை - வராகனெடை
வரி - எழுத்து
வாசகச்சுவடி - உரைநடை நூல்
வாமலூரு - கறையான் புற்று
வாய்ப்பாடம் - நெட்டுருப் பண்ணியபாடம், கேள்வியாற் படித்த பாடம்
விக்கிரம சகம் - கிமு.57லிருந்து தொடங்கும் தொடராண்டு
விக்கிரம சகாப்தம் - விக்கிரம சகம்
விக்ரமாதித்தவருஷம் - விக்கிரம சகாப்தம்
விக்ரமாதித்தியாப்தம் - விக்கிரம சகாப்தம்
விக்ரமாப்தம் - விக்கிரம சகாப்தம்
விந்நம் - 64,00,00,000 கொண்ட ஒரு பேரெண்
விரியோலை - குருத்து விரிந்து முதிரும் பனையோலை
விற்கோடி - ஒரு பேரெண்
வீசம் - 1/16 என்னும் பின்னவலகான நடுவலகு
வெள்ளம் - பத்து சங்கம், ஒரு மேலலளகு, 10,00,00,00,00,00,00,000
என்னும் எண் மதிப்பு
வெள்ளேடு - வெற்றேடு, எழுத்தெழுதாவேடு
வெள்ளோலை - எழுத்தெழுதப்பெறாத ஓலை, முத்திரையிடப்பெறாத ஓலை
வெற்றோலை - எழுத்தெழுதப்பெறாத ஓலை
உறர்ஷ ஆண்டு - கி.பி.606லிருந்து தொடங்கும் தொடராண்டு
உறிஜரி ஆண்டு - கி.பி.580லிருந்து தொடங்கும் முகமதியரின் தொடராண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக