செவ்வாய், 10 ஜூலை, 2018

ஓரெழுத்தோர்மொழி அகராதி

ஓரெழுத்தோர்மொழி அகராதி

ஒவ்வொரு மொழியிலும் அகராதியியல் துறை வளர்ச்சியடைதல் இன்றையத் தேவையாகும்.  தமிழ்மொழியில், தமிழ்மொழி அறிந்தவர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய அகராதிகள் (ஒருமொழி அகராதி), பிற மொழியினர் தமிழ்மொழியை அறியத்தக்க வகையில் அமைந்த அகராதிகள் (இருமொழி அகராதி) என இரண்டு நிலைகளிலும் பலப்பல அகராதிகள் தோன்றியுள்ளன.  ஒருமொழி அகராதி வரிசையில் இடம்பெறத்தக்க  வகையில் அமைவதே இந்த 'ஓரெழுத்தோர் மொழி அகராதி' ஆகும்.  இவ்வகராதி தமிழ்மொழியில் ஓரெழுத்திற்குப் பொருளுள்ள எழுத்துகளை எல்லாம் தெரிவுசெய்து அவ்வவ்வெழுத்துகளுக்கு என்னென்ன பொருள்கள் இருக்கின்றன என்பதையெல்லாம் தொகுத்து இங்கு அகரநிரல் படுத்தப்பெற்றுள்ளது.
'அந்த' என்னும் சுட்டுச்சொல், அழகு, ஆறாம் வேற்றுமை உருபு,
'எட்டு' என்னும் எண்ணின் குறி, சாரியை, சிவன், திப்பிலி, திருமால்,
நான்முகன், எட்டு என்னும் எண்ணின் குறி
அமை, ஆகுதல், ஆச்சாமரம், ஆறு, ஆன்மா, இகழ்ச்சி,                                                        இணக்கமாகுதல்,
இரக்கம், உடன்பாடு, உண்டாகு, உயர்வடை, எருது,
எருமை, ஒத்துப்போ, ஒப்பாகு, கட்டு, காளை, சிவஞானம், சிறப்படை,
செய்வி, துன்பம், தோன்று, நிகழ், நிகழ்த்து, நிந்தை, நினைவு, பசு,
பாராட்டுக் குறிப்பு, பெண்ணெருமை, பெண்மரை, பொருத்து, மரை,
மறுப்பு, முடிவுறு, முறை, வரை, விதம், வியப்பு
'இந்த' என்னும் சுட்டுச்சொல்
அம்பு, அரைநாண், அழிவு, இணங்கு, இந்திரவில், ஈதல், ஈன்,
உண்டாக்கு, குகை, கொக்கு, கொடு, சிறகு, தா, தாமரையிதழ்,
தானமாகக் கொடு, திருமகள், தேனீ, தேன்வண்டு, நரி, நாமகள், நீக்கம்,
நேர்,  படிப்பி, படை, பாம்பு, பார்வதி, வண்டு, வழங்கு, வியப்புக்
குறிப்பு, வீட்டு ஈ
அண்மை-அப்பால்-பின்புறம் ஆகியவற்றைக் குறிக்கும் சுட்டுச்சொல்,
இரண்டு என்னும் எண்ணின் குறி, உமையவள், சாரியை, சிவனின்
ஆற்றல், நான்முகன்
இறைச்சி, உணவு, ஊன், சதை, சந்திரன், சிவன், தசை, திங்கள்,
மாமிசம்
- அகவினாவெழுத்து, ஏழு என்னும் எண்ணின் குறி

அடுக்கு, அம்பு, இகழ்ச்சிக் குறிப்பெழுத்து, இறுமாப்பு, எய்தல்,
செலுத்துதல், பெருக்கம், மிகுதி, மேல்நோக்குதல்,                                                             விளிக்குறிப்பெழுத்து 
அரசன், அழகு, ஆசிரியர், இரண்டாம் வேற்றுமை உருபு, இருமல்,
ஐந்து, ஐயம், கடவுள், கடுகு, கணவன், கபம், குரு, கோழை, சர்க்கரை,
சவ்வீரம், சன்னி, சாரியை, சிலேட்டுமம், சிவன், சென்றுதங்குகை,
தண்ணீர்முட்டான் கிழங்கு, தந்தை, தலைவன், தும்பை, துர்க்கை,
நுண்மை, பருந்து, பாஷாணம், பெருநோய், மார்புச்சளி, மென்மை,
வியப்பு, வெண்ணெய்
- இயைபு அல்லது இணக்கம் உடையதாக ஆகு, இல்லாததொன்று
இருந்தாற் போலக் காண், ஒழுக்கமுடையராகு, ஒற்றுமைப்படு,
சமமாகு, தகுதியாகு, பொருந்து, போலஇரு, முரண்பாடற்றிரு
அழைத்தல், இணை, உயர்வு அல்லது இழிவைக் காட்டும் குறிப்பு,
ஐயம், ஒழிவு, கழிவு, சென்று தங்குதல், நான்முகன், நினைவு, புணர்,
மகிழ்ச்சி, மதகுநீர் தாங்கும் பலகை, வியப்பு, வினா
ஓள அழைத்தல், கடித்தல், நிலம், பூமி, வியப்பு, விளித்தல்
அக்கினி, அரசன், ஆனைமுகக்கடவுள், ஆன்மா, இமயன், உடல், ஒன்று
என்னும் எண்ணின் குறி, ஒளி, கதிரவன், காமன், காற்று, சூரியன்,
செல்வன், தலை, திங்கள், திரவியம், திருமால், தீ, தொனி, நமன், நலம்,
நனைதல், நான்முகன், நீர், பறவை, பிரமன், பொருத்து, மயில், மனம்,
முகில், வல்லவன்
கா அனுசரி, ஆதரவுகொடு, கடைபிடி, காகம் போன்றவற்றின்
குரலோசை, காத்தல், காப்பளி, காப்பாற்று, காவடி, காவடித்தண்டு,
காவல்செய், சரஸ்வதி, சோலை, தடு, துலாக்கோல், துலை,                                        தோட்சுமை, நிறைபாதுகா, நூறு பலம் குறிக்கும் ஒரு நிறையளவு,                           பூங்காவனம், பூந்தோட்டம், பூ வைக்கும் பெட்டி, வருத்தம், வலி,                                 வன்மை, விழிப்பாயிரு
கு இகழ்ச்சி, இன்மை, ஒலி, குற்றம், சிறுமை, தடை, தொனி, நான்காம்
வேற்றுமை உருபு, நிந்தை, நிறம், நீக்கம், நீக்குதல், பூமி
கூ அழுக்கு, கூச்சல், கூவுகை, கூவுதல், நிலம், பூமி
கை அஞ்சலி, அணிசெய், அத்தம், அலங்கரி, ஆதிக்கம், ஆள், ஆற்றல்,
இடம், உடனே, உடன், உப்புச் சுவையாக இரு, உலகவொழுக்கம்,
உள்ளங்கையில் வைத்துக்கொள்ளும் அளவுடையது, உன்னம், ஊட்டு,
ஏந்துவது, ஒப்பனை, ஒரு பணி செய்யும் ஆட்கள், ஒருவருடைய
செல்வாக்கு, ஒலியெழுப்பு, ஒழுக்கம், ஒழுங்கு, ஒளிக்கதிர்
கடும்துன்பம் அடை, கட்சி, கத்தரிகை, கரம், கரி, காந்தட்பூ, காம்பு,
கிரணம், கைத்தலம், கைத்தொழில், கைப்பிடி, கைப்பொருள்,                                 கைமரம்,
கையாந்தகரை, கையால் இயக்குவது, சங்கு, சட்டையின்கை, சதுரம்,
சந்திரன், சயம், சிறகு, சிறுமை, சினம்கொள், செய்கை, செய்யத்தக்கது,
செயல், செலுத்து, சேனை, தங்கை, தன்னுடையது, தான் செய்தது,
திங்கள், திறமை, துதிக்கை, தெப்பம், தெரிநிலை, தொனி,  தோளில்
தொடங்கி மணிக்கட்டு வரையில் உள்ள பகுதி, நரிப்பயற்றங்கொடி,
நாற்காலி போன்றவற்றின் கை வைக்கும் பகுதி, பக்கம், பகுதி, படை,
படையறுப்பு, பதாகை, பாணி, பிடிப்பு, பிண்டி, மணிக்கட்டுக்குப் பின்
உள்ள விரல்கள் அடங்கிய பகுதி, மரவட்டை, மிகுதி, மிதவை,
முகுளம், முறை, மெய்ந்நிலை, யானையின் துதிக்கை, வண்டு,                                  வரிசை,
வழக்கம், வழக்கு, விசிறிக்காம்பு, வெறு, வேதனைப்படு 
கோ அணி, அம்பு, அரசன், அரசியல், ஆகாயம், ஆண்மகன், இடியேறு,
இரங்கல், இரசம், இரு கை விரல்களைப் பிணை, இலந்தை, உடுத்து,
உரோமம், எதிர், எருது, ஒழுங்காக்கு, ஒழுங்குபடுத்து, ஒன்றுசேர்,
கணக்கிடு, கண், கம்பி போன்வற்றை ஒன்றில் நுழை, கவி, கிரணம்,
கோமேதக யாகம், சந்திரன், சாறு, சீழ், சுவர்க்கம், சூரியன், சொல்,
தகப்பன், தந்தை, தலைமை, தாய், திசை, திரள், துறக்கம், தேவலோகம்,
தொகுத்துரை, தொடு, நீர், நுழைத்து இணை, நூல், பசு, பால்பிடி,
புகுத்து, பேரரசன், பொறி, பொறிமலை, மண்பாண்டம் செய்பவர்,
மலை, மூடு, மென்மை, வச்சிராயுதம், வாணி, வானம், வியர்வை,
வெந்நீர், வெளிச்சம்
கௌ கிருத்தியம், கொள்ளு, தீங்கு, வாயாற் பற்று
சா இற, இறப்பு, சாதல், சாவு, சோர்தல், துன்பப்படு, பேய், மரணமடை,
வருத்திக்கொள்
சீ அகற்று, அடக்கம், அலட்சியம், இகழ்ச்சி-வெறுப்பு-சினம்-அலட்சியம்
போன்வற்றை வெளிப்படுத்தப் பயன்படும் சொல், இலக்குமி, உறக்கம்,
ஒளி, ஒளிர்வு, கலைமகள், காந்தி, கூர்மையாகச் சீவு, சந்பத்து, சளி,
சிறப்பு, சீழ், துடை, துடைத்து அகற்று, தேய்த்து அலம்பு, நகத்தால்
கீறிக் கிளறு, பார்வதி, புண்ணின் சீழ், பெண், போக்கு, விடம், விந்து
சு நலம், நன்மை
சூ - சலிப்பு-வெறுப்பு போன்வற்றின் வெளிப்பாடு, நாய்கள் ஏவுதல்
மற்றும் பறவைகள் விரட்டுதலுக்கான ஒலிக்குறிப்பு, வான வகை

சே அடை, அழிஞ்சில் மரம், இருக்கைகொள், உயர்வு, உறங்கு, எய்து,
எருது, காளை, கிட, சிவப்பாகு, சிவப்பு, சினங்கொள், சேங்கொட்டை,
சேரான்மரம், தங்கியிரு, வெருட்டுதல், வெறுப்பு, வெறுப்பு-இகழ்ச்சி
போன்வற்றின் குறிப்பு
சை ஓர் இகழ்ச்சிக் குறிப்பு, கைப்பொருள்
சோ அரண், உமை, கோட்டை, மதில், வாணாசுரன் நகர்
ஞா கட்டு, பற்று, பொருந்து
குபேரன், நான்முகன்
தா அழிவு, அழை, அளி, அறிவுறுத்து, ஈன்றெடு, உட்செலுத்து, உணர்த்து,
உண்டாக்கு, உருவாக்கு, கற்பி, குறை, குறைபாடு, குற்றம், கேடு,
கைப்பற்று, கொடியன், கொடு, சலுகையாக வழங்கு, சிதைவு, சுட்டு,
செருகு, தண்டுகை, தாண்டுதல், திரட்டு, துன்பம், தெரிவித்தல்,
தோற்றுவி, கொடையளி, நாசம், நான்முகன், நுழை, பகை, படை,
பரப்பு, பரிசாக அளி, பாய்கை, பாய்ச்சல், பாய்தல், பெறு, பொருள்
ஈட்டு, மாசு, வருத்தம், வலி, வலிமை, வழங்கு, வியாழம்,
வெளிப்படுத்து, வேகத்தாக்குதல்
தீ அழல், அழி, அறிவு, அனல், அனல்வீசு, இனிமை, உபாயவழி, எரிந்து
போ, ஒளி, கடும்சினம், கருகு, கனலி, கனல், காந்தவை, காந்து,
காயச்செய், கொடுமை, கொள், சினம், சீறு, சுடர், சுடு, ஞானம்,
ஞெகிழி, தழல், தீமை, நஞ்சு, நரகம், நெருப்பு, பொசுக்கு, வதக்கு,
வதங்கு, வாடு, வாட்டு, விளக்கு, வெப்பம் உறு, வேள்வித்தீ
து அசைத்தல், அனுபவம், உணவு, எரித்தல், கெடுத்தல், சுத்தம்,
சேர்மானம், துத்தல், நடத்தல், நிறைத்தல், பிரிவு, வருத்தம், வருத்தல்,
வளர்தல்
தூ அருவருப்பு அல்லது இகழ்ச்சிக் குறிப்பு, ஆதரவு, இறைச்சி, ஒளிர்வு,
சுத்தம், தசை, தூய்மை, பகை, பறவை இறகு, பற்றுக்கோடு, புள்ளிறகு,
வலிமை, வெண்மை
தே அருள், கடவுள், கொள்ளுகை, தலைவன், தெய்வம், நாயகன்
தை அம்பு-முள் போன்றவை குத்துதல், அலங்காரம், இடு, உடுத்து,
உட்புகு, உருவாக்கு, சித்திரி, சூழ், துணி முதலியவற்றில் ஊசியைச்
செலுத்தி இணைத்தல், படை, பதி, பத்தாவது தமிழ் மாதப்பெயர்,
புனைவு, பொருத்து, மரக்கன்று, மனத்தில் உறை, மாலை தொடு,
வருத்து

நா அயலார், அயல், சிக்கு, சுவாலை திறப்பு, சொல், தராசுமுள்,
திறவுகோலின் நாக்கு, தீச்சுடர், துலைநா, நடு, நடுநாக்கு, நாக்கு,
நாதசுரத்தின் ஊதுவாய், பூட்டின் தாள், பொலிவு, மணி
முதலியவற்றின் நாக்கு
நீ அகலு, இழி, பிரி, தாழ்த்து, தியாகம் செய், துற, நீங்கு, நீங்குதல், விடு,
விலகு, வெறு
நு தியானம், தோணி, நிந்தை, நேரம், புகழ், மரக்கரம்
நே அருள், அன்பு, இரக்கம், ஈரம், உழை, கருணை, தகுதி, நேயம்
நை அழி, இரக்கம்கொள்,  இரங்கு, இழை இழையாகப் பிரிதல், குறை,
சுருங்கு, தளர், தளர்ச்சியுறு, தன்னிலை இழத்தல்,  துணி
இற்றுப்போதல், நசுக்கு, நசுங்கு, நைதல், நைத்தல், பதனழி,
மனம்வருந்து, வருந்து
நொ இலேசு, சிறியதான தன்மை, துயர், துன்பம், துன்புறு, நோய்,
மென்மை, வருத்தம், வருந்து 
நோ இன்மை, குறைகூறு, சிதைவு, துக்கம், துன்பம், நோய், நோவு,                                   பதனழி,
பலவீனம், பிணி, பிரசவ வலி, பொறுப்பேற்று, மனம் புண்படு,
வருந்து, வலி, வறுமையுறு, வியாதி, வேதனை
நௌ கப்பல், தோணி, படகு, மரக்கலம்
காற்று, சாபம், பெருங்காற்று
பா அழகு, கடிகார ஊசி, கவி, கவிதை, காப்பு, கிழங்குப்பா, கைமரம்,
செய்யுள், தமிழ், தூக்கு, தூய்மை, தேர்த்தட்டு, தொடர்பு, நிழல்,
நெசவுபா, பகு, பங்கிடு, பஞ்சுநூல், பரப்பு, பரவுதல், பருகுதல், பாட்டு,
பாதுகாப்பு, பாம்பு, பாவு நூல், பிரபை, புனிதம், பூனைக்காலி, யாப்பு
பி அழகு
பீ அச்சம், தொண்டி, பூனை-நாய்-கோழி போன்றவற்றின் கழிவு, மனித
மலம்
பூ அலட்சிய உணர்வு போன்றவற்றைக் குறிக்கும் வியப்பிடைச்சொல்,
அழகு, இகழ்ச்சி, இடம், இந்துப்பூ, இருக்குதல், இலை, உப்பு படிதல்,
ஒன்றைத் தொடர்ந்து பார்ப்பதால் கண் பார்வை மங்கலாகுதல்,
ஓமாக்கினி, கண்ணின் கருவிழியில் தோன்றும் வெண்புள்ளி, கூர்மை,
சேவலின் தலைச்சூடு, தாமரை, தாவரங்களில் மலர் தோன்றுதல்,
தீப்பொறி, தேங்காய்த்துருவல், நாணயத்தின் தலைப்பகுதிக்கு
மறுபக்கம், நிறம், நுண்துகள், படை, பட்டம், பிறப்பு, புகர், புட்பம்,
புன்னகை புரிதல், பூஞ்சனம் பிடித்தல், பூத்தல், பூத்தொழில், பூப்பு,
பூமி, பெற்றெடுத்தல், பொலிவடைதல், பொலிவு, மகளிர்பூப்பு,
மத்தாப்பு முதலியவற்றின் பொறி, மலர், மாதரின் மாத விலக்கு,
மென்மை, யானையின் நெற்றிப்பட்டம், யானையின் நெற்றிப்புள்ளி,
வளம் பெறுதல், வனப்பு, விளைச்சலின் ஒரு போகம்
பே அச்சம், நுரை, மேகம்
பை அழகு, இளமை, உடல் உள்ளுறுப்பு, உடல்வலி, ஒளிர், குடல்,
கொள்கலம், கோணிப்பை, சட்டைப்பை, சாக்கு, சோபி, துணிப்பை,
தோல்பை, நிறம், பசுமை, மைபடர், பசுமையாகு, பச்சைநிறம்,
பாம்பின்படம், பாம்பு படம் எடுத்தல், பொக்கணம், பொங்கு,
மந்தக்குணம், மெத்தெனவு, மென்மை, வலிமை
பொ - கொப்புளி, துளை
போ - அதிகமாகு, இல்லாமல் போ, இற, உரியதாகு, ஏகு, ஒழி, ஓங்கு, கழி,
கழிக்கப்படு, காணாமல் போ, கூடு, செல், சென்று அடை, திறனடை,
நிரம்பு,  நீண்டு செல்,  நீங்கு, நேராகு, பயணம் செய், பர, பிரிந்து
போ, பிற, புணர், புறப்படு, மறை, விற்பனையாகு
இயமன், காலம், சந்திரன், சிவன், நஞ்சு, நேரம், மந்திரம்
மா அதிகமான, அரிசி முதலியவற்றின் மாவு, அழகு, அழைத்தல், அளவு,
அறிவு, அன்னப்பறவை, ஆணி, இடித்தமாவு, இடை, இலக்குமி, ஒரு
நிறையளவு, கட்டு, கருமை, குதிரை, சீலை, செல்வம், தாய், துகள்,
நஞ்சுக்கொடி, நில அளவையில் நூறு குழி கொண்ட அளவு, நிலம்,
நிறம், பசலை, பரி, பிரபை, பெரிய, பெருமை, பொடி, பொன்னின்
மாற்று, மகத்துவம், மரணம், மாமரம், மாற்று, மானம், மிகுதி,
மிகுதியான, மேன்மை, யானை, வண்டு, வயல், வலி, வலிமை,                                     விலங்கு,
விலங்கு வடிவாகப் பிறக்கும் மனிதன், வெறுப்பு
மீ ஆகாயம், உயரம், உயர்ச்சி, உயர்வு, மகிமை, மேலிடம், மேற்பரப்பு,
மேற்புறம், மேன்மை, வானம்
மூ கெடு, முதுமை அடை, முடி, மூப்பு, மூப்பு எய்து, மூன்று
மே அன்பு, உயர்வு, மேம்பாடு, மேவல், மேன்மை, விருப்பம்
மை அஞ்சனம், அழுக்கு, ஆடு, இருள், இளமை, எருமை, எழுது மை,
ஒளிமங்குதல், கருநிறம், கருமேகம், கருமை, களங்கம், கறுப்பு,
கறுமைநிறம், குற்றம், செம்மறியாடு, தீவினை, நீர், பசுமை, பச்சை
நிறம், பாவம், பிறவி, பெண்கள் கண்ணுக்குத் தீட்டும் கறுப்பு நிற
அலங்கார மசி, மசி, மந்திர மை, மலடி, மலடு, மலட்டெருமை,
மேகம், வண்டிச் சக்கரத்திற்கு இடும் மசகு, வௌ¢ளாடு
மோ ஈடுபடுதல், முகர், மூக்கால் நுகர்தல், மேற்கொள், மொள்ளுதல்,
மோத்தல்
யா அகலம், இல்லை, உள்ளடக்கு, ஐயம், கட்டுதல், சந்தேகம், தடுத்து
நிறுத்தல், நீங்காதிருத்தல், நீரை அணையிட்டுத் தடுத்தல், நூல்
இயற்றுதல், பாடல் இயற்றுதல், பிணி, மர வகை, யாத்தல், யாவை,
யானை
ரா இரவு
வா அறியப்படுதல், இயலுதல், உண்டாகுதல், உருவாகுதல், ஏற்படுதல்,
ஓடுதல், கருத்துடன் இரு, கிடை, குறிப்பிடப்படுதல், குறிப்பிட்ட
இடத்திற்குப் பெயர், குறிப்பிட்ட இடத்தை அணுகுதல், குறிப்பிட்ட
நிலையை அடைதல், தாவுதல், தெளிவாகுதல், தோன்றுதல், நேர்,
பரப்பு, பாய்தல், பெய், பெறப்படுதல், முடிதல், முற்றுப்பெறுதல்,
வருதல், விளைவுக்கு உட்படுதல், வீசு, வெளிப்படுதல்
வி அதிகம், அழகு, அறிவு, ஆகாயம், கண், காரணம், காற்று, திசை,
நிச்சயம், பறவை, பிரிவு, வானம், விசும்பு, விசை, விலக்கு
வீ அழி, அழிவு, இல்லாமல் போ, இற, ஒழிவு, கருப்பந்தரித்தல், கேடு,
கொல்லுதல், சாவு, சோர்வு, நீக்கம், நீங்கு, பறவை, பிறழ், பூ,
போடுதல், மகரந்தம், மரணம், மலர், மாறு, விரும்புதல், வீத்தல்
வே எரி, கொதிக்கும் நீர் அல்லது எண்ணெயில் உணவுப்பொருள்
பக்குவப்படுதல், சினமடைதல், துன்பமுறுதல், புடம் போடப்படுதல்,
வயறு அழலுதல், வெந்நீர் அல்லது நெருப்புப்பட்டுப் புண்ணாகுதல்,
வெப்பத்தால் புழுங்குதல், வெம்மையாக இருத்தல், வேகுதல், வேவு
வை அமைதல், அளி, இடுதல், இயங்கச்செய், இருத்து, எடுத்துரை,                                 ஏசுதல்,
ஏமாற்றுதல், ஒதுக்கீடு செய்தல், ஓரிடத்தில் இடுதல்(பொட்டு, புள்ளி,
குறி, தீ), காட்சிக்கு உரியதாக அமை, கூர்மை, கொடு(அடி),
கொண்டிருத்தல், கொள்(அன்பு, நம்பிக்கை), சபித்தல், சிறையிலிடுதல்,
சூட்டுதல், சேமி, தயாரி, தியானி, தெருமொழி கூறுதல், நடத்து,
நடுதல்(செடி), நிறுவு, பதிதல்(முத்திரை), பழி கூறுதல், பாதுகா, புல்,
மனத்தில் கொள், வஞ்சித்தல்,  வரையறு, விதிசெய்தல், விளக்கு
ஏற்றுதல், வைக்கோல், வைதல், வையகம்
வௌ - ஆறலை, ஈர், கவர், கைப்பற்று, பறி, பற்று, பிடி, மேற்கொள்,
வழிப்பறி கொள்ளையடி, வௌவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக