வெள்ளி, 7 செப்டம்பர், 2018

ஓலைச்சுவடிகளில் தமிழ் எழுத்து


எல்லா சொற்களுக்கும் வருவதான எழுத்தை முதலெத்து, சார்பெழுத்து எனலாம்.  இதனைப் பொதுவெழுத்து என்றும் குறிப்பர்.  ஓலைச்சுவடிகளில் இப்பொதுவெழுத்து அமையும் விதம் பற்றி இக்கட்டுரை விவரிக்கிறது.

அ. முதலெழுத்து

உயிரெழுத்து, மெய்யெழுத்து என முதலெழுத்து இரண்டு வகைப்படும்.  அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய பன்னிரண்டும் உயிரெழுத்து என்றும்;  க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்து என்றும் கூறுவர்.  தமிழ்ச் சுவடிகளில் உயிரெழுத்து பன்னிரண்டில் அ, ஆ, இ, ஈ, உ, எ, ஐ, ஒ ஆகிய எட்டும் அவ்வவ்வெழுத்தின் தனித்தன்மையுடன் அமைந்திருக்கும். உயிரெழுத்தில் இடம்பெறாத ஊ, ஏ, ஓ, ஔ ஆகிய நான்கும் தன்னுடைய தனித்தன்மையுடன் இல்லாமல் ஒரு மயக்க நிலையில் தமிழ்ச்சுவடிகளில் அமைந்திருக்கும். உகரமும் ஒகரமும் ளகரத்தை உடன்பெற்று 'உள' என்று ஊகாரமாகவும், 'ஔ' என்று ஔகாரமாகவும் அமைந்திருக்கும். சுவடியெழுதும் முறையில் 'ஊ' எழுதுவதில் சில இடர்ப்பாடுகள் நேரிடுகின்றன.  அதாவது, சுவடியில் எழுத்து எழுத எழுத ஓலை எழுத்தின் அளவிற்கேற்ப இடமாக நகர்ந்துவிடும்.  இதனடிப்படையில் 'உ' எழுதும் போது உகரம் எழுதியதற்கான எழுத்திடம் ஓலையில் இடமாக நகர்ந்திருக்கும்.  உகர எழுத்தில் அமைந்திருக்கும் படுக்கைக்கோட்டின் நடுவே ளகரம் சேர்ந்தால்தான் அது ஊகாரமாகும். ஆனால்,  ஓலை உகர எழுத்தளவு இடமாக நகர்ந்துவிட்டதால் மீண்டும் அவ்வோலையை வலமாக இழுத்து எழுதுவது என்பது மிகவும் கடினம்.  எனவே, உகரத்தை அடுத்து ளகரத்தை அமைத்தனர்.  எகர ஏகாரம், ஒகர ஓகாரம் ஆகியவற்றிற்கு மட்டும் குறில்-நெடில் வேறுபாடு காட்டாமல் அமைந்திருக்கும். மெய்யெழுத்து பதினெட்டும் புள்ளியில்லாமல் அகரமேறிய உயிர்மெய் போன்றே அமைந்திருக்கும்.

"மெய்யின் இயற்கை புள்யியொடு நிலையல்" (தொல். எழுத்து. நூ.15)

"எகர ஒகரத் தியற்கையும் அற்றே" (தொல். எழுத்து. நூ.16)

என்னும் தொல்காப்பியரின் வழக்குப்படி எகரமும் ஒகரமும் புள்ளிபெறும் என்பதால் தொல்காப்பியர் காலத்தில் எகர ஒகரங்களின் மீது புள்ளி(சுழி) வைத்து எழுதினால் குறிலெழுத்து என்றும், புள்ளி(சுழி) இன்றி எழுதினால் நெடிலெழுத்து என்றும் கொண்டனர்.

புள்ளிவைத்து எழுதினால் ஓலையில் ஓட்டை(துளை)விழும் என்னும் கருத்து நிலவுகின்றது.  இது பொருந்துவதன்று.  அண்மைக்காலத்தில் எழுதப்பெற்ற சில சுவடிகளில் புள்ளிவைத்து எழுதப்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.  இதனைப் பார்க்கும்போது தொல்காப்பியரின் வழக்குப்படி தமிழ்ச்சுவடிகளில் பழங்காலத்தில் புள்ளிவைத்து எழுதியிருக்கின்றனர் என்பது தெரிகின்றது.  பழங்காலத்திலும் அண்மைக் காலத்திலும் தமிழ்ச்சுவடிகளில் புள்ளிவைத்து எழுதும் வழக்கம் இருந்திருக்கும் போது புள்ளியில்லா எழுத்து தமிழ்ச்சுவடிகளில் எப்படி வந்தது என்பதை ஆராயவேண்டும்.

தி.நா. சுப்பிரமணியம் அவர்கள் 'கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வரை புள்ளியிட்டு எழுதும் வழக்காறு இருந்தது.  அதன்பிறகே அவ்வழக்காறு கைவிடப்பட்டுப் புள்ளியின்றி எழுதும் நிலை உருவாகியுள்ளது' (மேற்கோள், சுவடியியல், ப.192) என்கின்றார்.  இக்கருத்தை மெய்ப்பிக்கும் விதமாக எஸ். சௌந்தரராஜன் அவர்கள் 'ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ்மொழியில் வடமொழியின் தாக்கம் மிகுதியாகிவிட்டது.  அதனால் கிரந்த எழுத்துகள் தமிழ்மொழியில் கலக்கத் தொடங்கின.  புள்ளியிட்டு எழுதும் வடிவம் கிரந்த எழுத்துக்களுக்குக் கிடையாது.  கிரந்தம் தெரிந்தவர்கள் தமிழ்ச் சுவடிகளை எழுதும் பொழுது சிறிது சிறிதாகச் சில கிரந்த எழுத்துக்களையும், புள்ளியின்றி எழுதும் கிரந்த எழுத்து முறைகளையும் சுவடிகளில் புகுத்திவிட்டனர்' (மேற்கோள், சுவடியியல், ப.193) என்கின்றார்.

இக்கூற்றுகளின்படி புள்ளிவைத்து எழுதும் வழக்கம் அற்றுப்போனதால் எகர ஏகார வேறுபாடும், ஒகர ஓகார வேறுபாடும் இன்றி சுவடியில் ஒன்றுபோல எழுதத் தொடங்கினர்.  இவ்வாறு புள்ளியின்றி எழுதுவதால் எழுதும் வரிகளும் ஓலைகளில்  அதிகமாவதைக் கண்டவர்கள் இம்முறையையே பின்பற்றத் தொடங்கியிருக்கின்றனர்,  பெஸ்கி என்னும் வீரமாமுனிவர்(கி.1680-1742) அவர்கள் கி.பி.1710இல் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.  அவர் வந்த சில ஆண்டுகளில் 'கொடுந்தமிழ் இலக்கணம்' என்னும் நூலை யாத்தார்.  இவற்றில் இதுநாள் வரை தமிழெழுத்தில் இருந்து வந்த சில இடர்ப்பாடுகளைக் களைய முற்பட்டிருக்கின்றார்.  இவற்றில் எகர ஒகர வேறுபாடும் அமையும்.  புள்ளியின்றி எழுதிய எகர(எ) ஒகர(ஒ)ங்களைக் குறில் உயிர் என்றும், எகர ஈற்றில் இடமாக சிறிய சாய்வுக்கோடு இட்டால் ஏகாரம்(ஏ) என்றும், ஒகர ஈற்றில் வலமாச் சுழித்தால் ஓகாரம்(ஓ) என்றும் கொண்டார்.  இம்முறை இன்றுவரை நடைமுறையில் இருந்துவருகின்றது.

ஆ. சார்பெழுத்துகள்

உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகிய பத்தும் சார்பெழுத்துக்கள் எனப்படும்.  இவற்றில் உயிர்மெய், ஆய்தம் ஆகிய இரண்டு வகையான சார்பெழுத்துகள் மட்டும் வரிவடிவ நிலையில் அமையக் கூடியவை.  ஏனையவை ஒலிப்பு முறையால் அமைவனவாகும்.  வரிவடிவ நிலையில் அமையும் சார்பெழுத்துக்கள்(ஆய்தம், உயிர்மெய்) இருநூற்றுப்பதினேழில் ஒருவரிவடிவ எழுத்து, இருவரிவடிவ எழுத்து, மூவரிவடிவ எழுத்து என மூன்று வகையான வரிவடிவ எழுத்துகள் அமைந்திருக்கும். இவ்விருநூற்றுப்பதினேழில் தமிழ்ச்சுவடிகளில் 97 எழுத்துகள் தனித்தன்மையுடனும், உயிர்மெய் எழுத்துக்களுக்கான பொதுக்குறியீடு இரண்டு(ª, ¬)ம் அமைந்திருக்கும்.  அவை பின்வருமாறு:

அகர உயிர்மெய்யில் க. ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன ஆகிய 18ம்; ஆகார உயிர்மெய்யில் ƒ, …, „ ஆகிய 3ம்; இகர உயிர் மெய்யில் கி, ஙி, சி, ஞி, டி, ணி, தி, நி, பி, மி, யி, ரி, லி, வி, ழி, ளி, றி, னி ஆகிய 18ம்; ஈகார உயிர்மெய்யில் கீ, ஙீ, சீ, ஞீ, டீ, ணீ, தீ, நீ, பீ, மீ, யீ, ரீ, ல¦, வீ, ழீ, ளீ, றீ, னீ ஆகிய 18ம்; உகர உயிர்மெய்யில் கு, ஙு, சு, ஞு, டு, ணு, து, நு, பு, மு, யு, ரு, லு, வு, ழு, ளு, று, னு ஆகிய 18ம்; ஊகார உயிர்மெய்யில் கூ, ஙூ, சூ, ஞூ, டூ, ணூ, தூ, நூ, பூ, மூ, யூ, ரூ, லூ, வூ,, ழூ, ளூ, றூ, னூ ஆகிய 18ம்; ஐகார உயிர்மெய்யில் ‚ண, ‚ல, ‚ள, ‚ன ஆகிய 4ம்; ஆய்தம் (ஃ)1ம் ஆகத் தொண்ணூற்றெட்டு எழுத்துகளும் தமிழ்ச் சுவடிகளில் ஒருவரிவடிவ எழுத்துகளாக அமைந்திருக்கும்.

உயிர்மெய் எழுத்துக்களுக்கேயுரிய பொதுக்குறியீடுகளாக கோடு அல்லது கொம்பு(ª), இணைகோடு அல்லது இருகோடு (இணைகொம்பு அல்லது இருகொம்பு) (ªª, ¬) ஆகியன தமிழ்ச் சுவடிகளில் அமைந்திருக்கும்.  மேலும், ரகரம் காலாகவும்(£), ளகரம் ஔகாரத்தைக் குறிக்கும் மூவரிவடிவத்தின் மூன்றாவது எழுத்தாகவும்(ள) அமைந்து உயிர்மெய் எழுத்துக்களுக்கான குறியீடுகளாக அமைந்திருக்கும்.  

அதாவது, அகர உயிர்மெய்யை அடுத்து புள்ளி அல்லது கால் (£-இது தமிழ்ச்சுவடிகளில் ரகரமாகவும் வழங்கப்பெறும்) பெற்று கா, ஙா, சா, ஞா, டா, தா, நா, பா, மா, யா, ££, லா, வா, ழா, ளா ஆகிய 15ம் ஆகார உயிர்மெய்யாகவும்; அகர உயிர்மெய்க்கு முன் கொம்பு(ª) பெற்று கெ, ஙெ, செ, ஞெ, டெ, ணெ, தெ, நெ, பெ, மெ, யெ, ரெ, லெ, வெ, ழெ, ளெ, றெ, னெ ஆகிய 18ம் எகர உயிர்மெய்யாகவும்; ஆகார உயிர்மெய்ய்கு முன் கொம்பு(ª) பெற்று  ªƒ, ª…, ª„ ஆகிய 3ம் ஒகர உயிர்மெய்யாகவும் அமைந்த 36 வகையான எழுத்துக்கள் இருவரிவடிவ எழுத்துக்களாக அமைந்திருக்கும்.  

அகர உயிர்மெய்க்கு முன் கொம்பு(ª)ம் ஈற்றில் காலும்(£) பெற்று கொ, ஙொ, சொ, ஞொ, டொ, தொ, நொ, பொ, மொ, யொ, ரொ, லொ, வொ, ழொ, ளொ ஆகிய 15ம் ஒகர உயிர்மெய்யாகவும்; அகர உயிர்மெய்க்கு முன் கொம்பும்(ª) ஈற்றில் ளகரமும் பெற்று கௌ, ஙௌ, சௌ, ஞௌ, டௌ, ணௌ, தௌ, நௌ, பௌ, மௌ, யௌ, ரௌ, லௌ, வௌ, ழௌ, ளௌ, றௌ,  னௌ ஆகிய 18ம் ஔகார உயிர்மெய்யாகவும் அமைந்த 33 வகையான எழுத்துக்கள் மூவரிவடிவ எழுத்துக்களாக அமைந்திருக்கும்.
அகர உயிர்மெய்க்கு முன் இருகொம்பு அல்லது இருகோடு(ªª, ¬) பெற்று ªகெ-கை, ஙெ-ஙை, ªசெ-சை, ªஞெ-ஞை, ªடெ-டை, ªதெ-தை, ªநெ-நை, ªபெ-பை, ªமெ-மை, ªயெ-யை, ªரெ-ரை, ªவெ-வை, ªழெ-ழை, ªறெ-றை ஆகிய 14ம் மூவரிவடிவம் மற்றும் இருவரிவடிவம் தாங்கிய எழுத்தாகத் தமிழ்ச்சுவடிகளில் அமைந்திருக்கும்.  உயிரெழுத்தில் 'எகர ஒகரம்' புள்ளிபெற்று வரும் என்று கூறிய தொல்காப்பியரின் கூற்றுக்கு உரைவரைந்த நச்சினார்க்கினியர் எகர ஒகர உயிர்மெய்களுக்கும் இக்கூற்று பொருந்தும் என்கின்றார்.  

தமிழ்ச்சுவடிகளில் கி.பி.12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு புள்ளிவைத்து எழுதும் வழக்கம் இல்லாததாலும், இன்று நமக்குக் கிடைக்கக் கூடிய தமிழ்ச்சுவடிகள் கி.பி.15ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட சுவடிகளானதாலும் சுவடிகளில் புள்ளியெழுத்துக்கள் காணப்பெறவில்லை எனலாம்.  எனவே, தமிழ்ச்சுவடிகளில் எகர-ஏகாரம், ஒகர-ஓகாரம் வேறுபாடு தெரியாதது போல் எகர-ஏகாரம் உயிர்மெய் எழுத்துக்கள் 18ம், ஒகர-ஓகார உயிர்மெய் எழுத்துக்கள் 18ம் ஆக 36 உயிர்மெய் எழுத்துக்களும் குறில்-நெடில் வேறுபாடின்றி அமைந்திருக்கும்.  

இவ்வேறுபாடுகளைக் களைவதற்கு வீரமாமுனிவர் அவர்கள் அரும்பாடுபட்டிருக்கின்றார்.  அவர் தம்முடைய 'கொடுந்தமிழ் இலக்கணம்' என்னும் நூலில், குறிலுக்கும் நெடிலுக்கும் ஒரே மாதிரியாக எழுதப்பட்டு வருகின்ற கொம்பு என்று சொல்லப்படுகிற 'ª' இந்த எழுத்து குற்றெழுத்தைக் குறிப்பிடவும், இக்கொம்பை மேலே சுழித்து வருகிற '«' இந்த எழுத்து நெட்டெழுத்தைக் குறிப்பிடவும் பயன்படுத்தவேண்டும் என்று கூறியிருக்கின்றார்.  இவரின் இக்கருத்தினை ஏற்றுக்கொண்ட தமிழன்பர்கள் அதன்பிறகு எழுதப்பெற்ற சுவடிகளில் இவ்வேறுபாட்டைக் காட்டியிருக்கின்றனர் எனலாம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக