தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச்
செய்த
கௌமார சமயக் கீர்த்தனைகள்
இராகம் : முகாரி தாளம் : ரூபகம்
(பல்லவி)
சத்தி
வேற்கர குமாரசாமி வெம்பினே - னுன்றன்
சரண நம்பினேன்
(அநுபல்லவி)
முத்தி
புகும்வழி காட்டா தென்றனை
மோசஞ்
செய்தால் வெகுதோஷ மெழிலுள - சத்தி
(சரணங்கள்)
விந்தை
யநேகஞ்செய் கந்தநாதனே! வேடமாதுடன்
விளை யாடச் சென்றவா!
பந்தமதின் மன நொந்தலை கின்றேன்
பத்திப் பிச்சை யரு ளத்த னிடமமர் - சத்தி
வஞ்சக
லோபமு மிஞ்சும் பொறாமையு மனத்தை வாட்டுதே
நிரய வழியைக் காட்டுதே
யஞ்சி யலறிநின் றஞ்ச மென்றேனே
யாரு மில்லை யிந்தப் பாரினை யீன்றருள் - சத்தி
காம மொழித்துநின்
நாமம் புகன்றவர் காணு நாதனே
யேழை பூணும் பாதனே
இராமானந் தன்கவித் தாமம் புனைந்தோனே
ரட்சித் தருளென்மேற் பட்சம் வைத்துப் பரா
- சத்தி
(1)
இராகம் : மோகனம் தாளம்
: ஆதி
(பல்லவி)
ஏழையேன்மீ
தின்னம்வாது செய்திருந்திடி
லென்னைக்
காப்பவரை யோது
(அநுபல்லவி)
இத்தரை
தனிலுள பத்தர்க டுதிசெயு
மத்தனே
சுத்தனே நித்திய நத்திடும் - ஏழை
(சரணங்கள்)
சூரர்குல
கால நாசனே மெய்ப்பத்தி செய்யுந்
தொண்டரநு கூல நேசனே
துதிசெயு மடியனுன் கதிபெற மதியரு
ளதிபனே யிதுவென சதியே நீ செய்வது - ஏழை
சொல்லுமுறை
கேட்க வில்லையா வுன்னை நம்பிய
தொண்டனைநீ காப்ப தில்லையா
சூதிதுவோ வெனக் கோதிடு மாதியே
நீதியோ வுனக்குநான் வாதியோ தொழுதிடும்
- ஏழை
செந்தினகர்
தன்னில் வாசனே திக்குவே றில்லாச்
சிறியேனை யாளு நேசனே
சீலனே யுமையருள் பாலனே ராமனநு
கூலனே கோலனே வேலனே தொழுதிடும் - ஏழை
(2)
காவடிச் சிந்து வர்ன்னமெட்டு
இராகம் : ஆனந்த பைரவி தாளம்
: சாப்பு
திருவடி
யருள்கந்த நாதா வென்றன்
சித்தமே குடிவைத்து நாடிய
பத்தியா லுயர் முத்தியே தரு
திவ்யகுண பூஷண நன்னீதா
கருவடை
யாதுகண் பாராய் நிதங்
கண்டு தேவனென் றண்டியே மலர்
கொண்டு நாடிய தொண்ட னாகிய
கடையனை யாண்டருள் செயவாராய் - திருவடி
பண்டை
வினையோடச் செய்வோனே யுன்றன்
பாதமே கதியோதி னேனுயர்
நாதனே முனம் வாதியாவரு
பாவி யசுரர் சிரங்தோனே - திருவடி
குறுமுனிக்
கருள்செயுஞ் சீலா தெய்வ
குஞ்சரிப் பெணையுஞ் சொலற்கரு
அஞ்சுகக் குறவஞ்சி யைப்புணர்
குமராவி மலையரு ளியபாலா - திருவடி
திவ்ய
சொரூப மெய்த் தேவா வுயர்
சேமமே தரு நாமமே புனை
தாமனே பணி ராம னாகிய
சிறியேனுக் கருள்புரிந் திட வாவா - திருவடி
(3)
இராகம் - கேதாரகௌளம் தாளம்
: ஆதி
(பல்லவி)
செந்தூரதனில்
வள ரெந்தை யுன்பத மல்லாற்
திக்குவேறெனக்
கேது
(அநுபல்லவி)
உந்தனை
நிதநினைந் தெந்தங் குறை சொல்லியுஞ்
சிந்தை
தனில் நினையா தெந்தவிதமோதிருச் - செந்தூர்
(சரணங்கள்)
பாழான
சென்மநெடு நாளா டுத்தலைந்துன்
பாதறுதனைக்
கண்டின்னஞ் சோதனை யேன்றிருச் - செந்தூர்
ஏது சொல்லியு
மெனைப் பாதுகா வாவிடி
லெனக்கா
ருதவியன்பர் துணைக்கா ரணனே திருச் - செந்தூர்
முத்தலத்
தோர்போற்றுஞ் சுத்த நிராமய
வத்தனே
தொழும் ராம பத்தற் கருளுந் திருச் - செந்தூர்.
(4)
இராகம் : சாவேரி தாளம் : ஆதி
(பல்லவி)
வேலும்
மயிலு நினைப்பாயே சற்றும்
வேறொன்று
நினையாதே மனப்பேயே
(அநுபல்லவி)
நாலுமறை
முடியின் மேலு நடனமிடுங்
காலுங்
கன்னிய ரிருபாலும் விளங்க வெற்றி - வேலு
(சரணங்கள்)
எண்டிசையு
நடுங்க வண்டவரையுந் தாவிக்
கொண்ட
சூரபன்மாவைப் பண்டுகிழித்த வடி - வேலு
காம மகற்றுந்
தூயோ னாமந்தனைத் துதிப்பாய்
ராமன்
சொல்லுக் கிணங்கி நேமமுடனே தினம்- வேலு
(4)
இராகம் : முகாரி தாளம் : ஆதி
பல்லவி
வேலையா
வுன்றன் பாலையா - ஏழை கேட்பது
வேறொன்று
மில்லைத் தண்டைக் காலையா
அதுகொடுத்தாற் சாலையா
ஓ வேலையா - வடி வேலையா
சரணங்கள்
பொல்லாமன
தென்னுடன்
சொல்லா
தெங்கெங்கு மோடிச்
செல்லாநின்ற தென்செய்வே
னல்லா
யுன்னிடத்தில்யா
னில்லாது கேட்டு வீணின்
மல்லாட்டஞ்
செய்யவில்லை - வேலையா
ஓமென்ற
வட்சரத்தின்
நாமப்பொரு
ளுரையாப்
பூமன்றனைப் புடைத்தே
யாமென்றழ
வடைத்தாய்
சேம நல்லோர்க் கருள்வோய்
ராமானந்தன்
பணிசெவ் - வேலையா
(6)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக