தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச் செய்த
சாத்தேய சமயக் கீர்த்தனைகள்
இராகம் - மோகனம் தாளம்
- ஆதி
பல்லவி
தாயே யெனக்கருள்செய் வாயே யுனைத்துதிக்கு
நாயே
னிடர்கெடுப்பாய் நீயே பல்லுயிர்க்கெல்லாம்
- தாயே
யெனக்கருள்
அநுபல்லவி
சேயென்
றெனையணைத்த தாயென் றுனைப்பணியா
பேயென்
றெனைக்கருதிச் சீயென் றொறுத்திடாவென்
- தாயே யெனக்கருள்
சரணங்கள்
காலை
முதலுனது காலைத் தெரிசித்திடும்
வேலை
பிர்மானந்த வேலை பாலித்தருள் வாலைத்
- தாயே யெனக்கருள்
மின்னே
ரிடைச்சிறிய மின்னே யுனதுதுதி
சொன்னேன்
கண்ணெதிரினி லின்னே வந்தொருமொழி
பன்னே
யெனைப் பெற்றிடும்
- தாயே யெனக்கருள்
உனது
பெயர்கொளொரு பனவன் றனையரசன்
வினவ
வமாவாசையின் றினமே மதிவரச்செய்
-தாயே யெனக்கருள்
கவிராச
பண்டிதற்கிப் புவிமீதி னினடந்து
குவியா
மலர்க்கரத்திற் சுவையா யமுதுபடைத்
-தாயே யெனக்கருள்
ஈசன்
றனக்குப்பிர காசந் தனையளித்தாய்
நேசத்
துடனிராம தாசன் துதிக்கிரங்குந்
-
தாயே எனக்கருள்செய் வாயே.
(1)
இராகம் - நாதநாமக்கிரியை தாளம்
- ஆதி
பல்லவி
மதுரா புரிவளர் மீனாட்சித் தாயேயுன்
மனமகிழ்ந் தருள்செய்வ தெந்நாளோ?
மாதாவே காப்பாய் - வனசப்பூம்
பாதாரஞ் சேர்ப்பாய்
அநுபல்லவி
கதிரோ
ரளவில கூடினு முனதெழிற்
கமல வடிக்குநிகர் காணுறுமோ
காத்தருளுந் தாயே - யண்ட கோடியும்
பூத்தருள் பவணீயே - மதுரா
சரணங்கள்
எண்ணான்
கறமுமிந்த மண்ணில் விளக்கஞ்செய்த
விறைவியுன்
மனதுசற் றிரங்காதா
வெளியவன்
மேல்வாதா - கைவிடிற் பெரும்
பழியுன்னைச்
சாராதா - மதுரா
பாவியா
னாலுமுன்னைக் கூவி யழுதமுகம்
பாரா
திருப்பதென்ன வநியாயம்
பஞ்சையைக்
காராயோ - வடியன்மனச்
சஞ்சலம்
தீராயோ - மதுரா
அடிக்கடி
மாறிமாறித் துடித்துப் புரளுமென்ற
னற்ப
மனத்தைநிலை செய்யாயோ
ஐயோநான்
படுங்கஷ்ட்டம் - பார்த்துன்னருள்
செய்யா
யேலிஷ்ட்டம் - மதுரா
என்னசொன்
னாலுமுன்றன் வன்னச் செவியிலென்சொல்
லேற்காதி
ருந்தாலேழை யுய்வேனோ
விருந்தா
யேசும்மா - வடிமைமனம்
வருந்தா
தோவம்மா - மதுரா
இல்லறந்
தன்னினாளு மல்லல் விளைவதல்லா
லேக
மனதுகொள்ள வொட்டாதே
யெடுத்துரை
செய்வேனோ - வெண்ணியெண்ணிச்
சுடுத்துள
நைவேனோ - மதுரா
முன்னநீ
யென்னைப்பெற்ற வன்னையல் லவோவிதை
முற்று
மறந்திருத்தல் சம்மதியோ
முறையைக்
கேளாயோ - இராமானந்தன்
குறைத்தீர்த்
தாளாயோ - மதுரா.
(2)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக