தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச்
செய்த
குமரவேள் பதிகவந்தாதி
காப்பு
கட்டளைக் கலித்துறை
1.
அத்தி
யளித்திட்ட வானையைக் கண்டுள் ளகங்குளிர்ந்தோ
னத்தி
புரத்தையன் றாண்டவர் மைத்துன னார்மருக
னத்திடு
வோர்க்கருள் வேண்மீது சொல்கவி நன்குறநல்
லத்தி முகத்த னடியெனக் கென்று மருடருமே.
நூல்
2.
கருதரு
ஞானக் கடலே யடிமை படுங்கட்டத்தை
யொருதின
மோதினம் பன்முறை கூவி யுளதுரைத்தேன்
குருபர
னாவுருக் கொண்டே யெழுந்த குமரவரன்
பொருவரு
மின்பமெய்த் தேவா திருவடிப் போதருளே.
(1)
3. அருளே யுருக்கொடு போந்ததென் றேழையுள் ளார்வமுட
னருளே
புதுமலர்ச் சேவடி யேயேன வாசித்திலேன்
மருளோடி
ராகத் துவேச மணைந்த மவுட்டியனைப்
பொருளே
படுத்துநின் னன்பர்க டொண்டு புரிந்திடவே.
(மவுட்டியன்
- அறிவிலி)
(2)
4. வேதா முதலிய விண்ணவர் சூடும் விரைமலர்ப்பூம்
பாதா
விருவர்ச மேதா வுலகிற் பரவுமயற்
சூதான்
மிகமன மோதா வகையெனைத் தொண்டுகொளென்
றோதா நின்றேனெனை யாண்டிடு வாயென் றுனையடைந்தே.
(3)
5. தேனோடு முக்கனி சேர்ந்ததென் றேசொலத் தேவர்கடங்
கோனே
யெனமறை கூவிடு ஞானக் குருவுருக்கொண்
டோனே
யுனதரு ளேயறி யாத வுலுத்தனெனைத்
தானே
யடியரிற் கூட்டிலை யேற்பழி சார்ந்திடுமே.
(4)
6. மேலோர் சரித்த நெறியறி யாமன் மிகமயக்க
நூலே
பலகற்று நோக்கரி தாகிய நுண்ணியநின்
பாலே
மனமுவந் தன்பொடு போற்றிய பத்தர்கடங்
காலே
யெளியனைப் பாலித்து மேற்கதி காட்டிடுமே.
(5)
7. காட்டிடு மெய்யன்பர் முன்வினை யாவுங் கனன்றுவெளி
யோட்டிடு மேயென் றுணர்வை நெஞ்சேயினி யுன்றலையிற்
றீட்டிய
வேதன்றன் பாட்டையுங் காலன் றிருக்குலைந்த
கேட்டையும்
பார்த்துமின் னம்வேறு மென்ன கிளத்துவதே.
(6)
8. கிளத்துவ துன்பெயர் கேட்பது முன்புகழ் கிட்டியென்ற
னுளத்தினி
லுன்னுவ துன்னுரு வன்றி விலகினில்வீண்
சளத்தினை
யெண்ணித் தவியா தருள்புரி சாந்தர்களி
கொளத்தினைக்
கானிற் குறமா தணைதரு கொற்றவனே.
(7)
9. கொற்றவனே யென்குறை தீர வாண்ட குமரவெனைப்
பெற்றவனே
யென்று பேசாத பாவிநின் பெய்கழற்கன்
பற்றவனே
யிவனென் றெண்ணி னாலயர் வேனெனக்கிங்
குற்றவ
னீயன்றி மற்றறி யேனிவ் வுலகத்திலே.
(8)
10. உலகத்தி லேவயிற் றுக்கிரை தேடி யுழன்றுமின்னார்
திலகத்தி
லேமனஞ் சென்றிடச் சென்று தியங்கிமதன்
கலகத்தி
லேபட் டுழல்வேனை யாண்டருள் கற்பகஞ்சே
ருலகத்தி
லேவளர் தேவரைக் காத்தரு ளுத்தமனே.
(9)
11. உத்தம னென்றுல கஞ்சொலச் செய்யவு மொண்ணுமதோ
சுத்த
மயப்பரஞ் சோதிக்கு மோர்குறை சொல்லுவர்காண்
பித்த
மனமுடைப் பேயனை யாண்டருள் பெய்கழற்கீழ்
வைத்த
மனமுடை முத்தர் தமக்கருண் மன்னவனே.
(10)
12. மன்ன வனேயுல குள்ளே நிறைந்துள மன்னுயிரைத்
தன்னுயிர்
போலெனுந் தக்கோர்க்கு வேறு தவமுளதோ
பன்னரி
தாயதுயர் கூறி னேனெனைப் பார்த்திரங்கி
யின்னமுஞ்
சூது நினையாது தாவுன் னிணையடியே.
(11)
13. அடியேன் செயும்பிழை யாயிர மும்பொறுத் தன்பருக்குட்
குடியேற்றி
னாலுனை யாரேனு நின்று குறைசொல்வரோ
படிமீதி
லுண்மைப் பொருளா விளங்கிடு பண்ணவனே
கடியேறு
நீபப் புயத்தாய் நின்செய்கை கருதரிதே.
(12)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக