தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச்
செய்த
சித்திமகோர்க்கடர் பஞ்சகம்
எழுசீர் ஆசிரிய விருத்தம்
பொன்நிகர்
பாதப் புண்ணிய முதலே
புங்கவர் புந்திகொள் ளமுதே
மின்னிகர்
மேனிச் செழுஞ்சுடர்ச் சோதீ
வேண்டுவோர் விக்கின மகற்றி
யென்னிரு
கண்ணுண் மணியெனத் திகழு
மெந்தையே யுந்றனை மறவேன்
மன்னிய
சீர்த்தி மகோர்க்கட மூர்த்தி
வள்ளலே யெங்குரு மணியே.
(1)
காசிபன்
பாரி யதிதிசெய் தவத்தாற்
காதல னாவுருக் காட்டிப்
பேசிட
முடியா வற்புதம் விளைத்த
பெருமையைச் சொலவு மென்றரமோ
வாசியி
னிலையி லானந்தம் விளையும்
வழியெனக் கென்றருள் செய்வாய்
1மாசிலா தோங்கு மகோர்க்கட மூர்த்தி
வள்ளலே யெங்குரு மணியே.
பா.வே.
: 1. மாதுஇலாது
ஓங்கும்.
(2)
இறந்திடின்
முத்தி யெய்திடு நகருக்
கிறைவன்பா லெண்ணிலா வாடல்
சிறந்திடச்
செய்தங் கூறெலாந் தவிர்த்த
தெய்வமே சிறியனே னுலகிற்
பிறந்திடற்
கஞ்சி யுன்னடி யடைந்தேன்
பிழையெலாம் பொறுத்திது நாளின்
மறந்திடா
தருள்வாய் மகோர்க்கட மூர்த்தி
வள்ளலே யெங்குரு மணியே.
(3)
சோதிடன்
போல வந்திடு மாயைத்
துட்டனைக் கொன்றநிட் டூரா
வேதிடங்
கொடுத்தா யென்மன மாயை
யெனைவலித் திழுத்த தென்செய்வே
னோதிடு
முறையுன் காதிடங் கொள்ளா
தொறுத்திட வொண்ணுமோ துரையே
வாதியோ
வேழை மகோர்க்கட மூர்த்தி
வள்ளலே யெங்குரு மணியே.
(4)
ஆரண வாகம
முதலா யளந்துநிதங்
காணறியா
வகண்ட மாய்மெய்ப்
பூரண
மாய்நின் றருளும் புத்தமுதை
யென்னுளத்திற் புகுந்த தேவை
வாரண
வாசியி னிறைக்கு வந்துபல
காட்சியினை வழங்கி யன்று
காரணங்கண்
மிகவிளைத்த மகோர்க்கட மூர்த்தியைப்
பெரிது
கருத்துள் வைப்பாம்.
(5)
முற்றிற்று.
வாழ்வதற்
கான நல்லறஞ் சொன்ன
வான்புக ழவ்வையை யிருவர்
சூழ்வதன்
முன்னர் கயிலையி லுய்த்த
துதிக்கையை துதிக்கைநான் மறவே
னேழ்வகை
யிசையா லுன்னருள் நாடி
யேத்துவார் விழைவெலா முடிப்பாய்
மாழ்விலார்
வணங்கும் மகோர்க்கட மூர்த்தி
வள்ளலே யெங்குரு மணியே.
(குறிப்பு
: இப்பாடல் 1921ஆம் முதற்பதிப்பில் இல்லை. இடைச்செருகலாகி உள்ளது. மேலது “ஆரண வாகம” எனத் தொடங்கும் பாடலுக்கு மாற்றாக
இப்பாடல் மாற்றப் பெற்றுள்ளது. “ஆரண வாகம”
எனத் தொடங்கும் பாடல் வரிசை எண்.43க்கு அடுத்துக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. இதனையறியாமல், இப்பாடல் விடுபட்டதெனக் கருதி
2012 பதிப்பில் இடைசெருகலாகியிருக்கிறது).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக