தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச்
செய்த
சற்குரு பதிகம் (குருவருள் வேண்டு பதிகம்)
(அறுசீர்ச் சந்த விருத்தம்)
பொன்னேர்
கழலாய் பூவார் புகழாய்
புனிதா வினியானே
யுன்னே
னெனக்கை விடிலோ கெடுவே
னுள்ள முணராயோ
சொன்னே
னினது துதியே யல்லாற்
தொழுவே
னோயொன்றை
மன்னா
வடியேன் றனையே மகிழ்ந்துன்
மலர்த்தாள் சேர்ப்பாயே.
(1)
கோவே
யடியார் குறைதீர்த் தாளுங்
குன்றே குருநாதா
தேவே
யுன்றன் செயலா ரறிவார்
சிறியே னறியேனே
காவே
சிறிதுன் கழலே மறவாக்
கருத்தே யிருத்தாயோ
கூவென்
றலற விடுத்தால் யாரென்
குறைதீர்த் தாள்வாரே.
(2)
அடியார்
பிழைதீர்த் தாள வுருவா
யவனி தனில்வந்தாய்
கொடியேன்
குறைதீர்த் தாண்டா லுன்னைக்
குறையார் சொல்வாரோ
மிடியார்
வைப்பே போன்றே யென்னுள்
விளைவாய் மெய்யானாய்
செடிசே
ருடல்வீழ்ந் தழிந்தா லுலகோர்
சிரித்தே யிகழாரோ.
(3)
நெஞ்சே
யுரையே யுடலே செயலே
யெல்லா நினதென்றே
தஞ்சே
யடைந்தார் வினைதீர்த் தன்றே
தாழா தருள்வோனே
வஞ்ச
னிவனென் றெண்ணி விடுத்தால்
வகையே தறியேனே
யஞ்சே
லென்னா யரனே யடிக்கீ
ழபயம்
மடைந்தேனே.
(4)
இதமாங்
கனியென் றொருவன் வளர்த்தா
லெடுத்தே நுகர்வாரை
வதைசெய்
கனியா யிடினுந் தருவை
வளர்த்தார் வதைப்பாரோ
சதமென்
றுன்தாள் சாராப் பாவிச்
சழக்க னுனைத்தாழ்த
லிதமென்
றடையே னெனினும் வலிதி
லெனைநீ யாள்வாயே.
(5)
காத்தாள்
வாயென் றுனையே பணியாக்
கடையே னானாலும்
மார்ச்சா
லத்தின் வகைதா னிலையோ
வண்ணக்கழற் கன்பாய்ச்
சேர்த்தே
யாளத் திறந்தா னிலையோ
சிறிதுன் கடைக்கண்ணாற்
பார்த்தா
லேழை பாவம் மழலிற்
பஞ்சாய்ப் பாறாதோ.
(6)
நிறைந்தா
யெங்கு நீயே யானாய்
நீங்கா வறிவோராய்த்
துறந்தோ
ரறியும் பொருணீ யன்றித்
துறக்கத் தொன்றுண்டோ
மறந்தா
னகற்றி வாவென் றருட்கண்
வழங்கா திருப்பாயே
லறந்தா
னிலையோ வந்தோ குறைநா
னாரோ டறைவேனே.
(7)
பொங்குங்
கடல்சூழ் புவியோ ரறியாப்
புனிதா கனிவாயென்
கங்கு
லிரியப் புரிவா யென்றுன்
கழலே மறவாதேன்
மங்கும்
படிநீ விடுவ தழகோ
மறையீ றறியானே
யெங்குஞ்
செவியா யெளியேன் முறைதா
னேற்கா தென்னேயோ.
(8)
வானாய்
நிலனாய் வளியா யொளியாய்
மழையா யாவர்க்குங்
கோனா
நின்றே கூட்டிப் பிரிக்குங்
கூத்தா கொடியேற்கு
மூனா
யுயிரா யொளியாய் வெளியாய்
யுருவா யருவாய்நீ
யானா
யென்கண் ணறியா திருந்த
வகித மறியேனே.
(9)
தூலங்
கொண்டா யடியேன் பொருட்டாய்த்
தோன்றா திந்நாளும்
பாலன்
கரத்திற் பொருளாய் விடுத்தேன்
பரிவா யருளாயோ
வேலங்
கொண்ட குழலார் மயல்வீழ்ந்
தேறா திழிவேனைக்
கோலங்
காட்டி யாண்டா லன்றிக்
கொடியே னுய்வேனோ.
(10)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக