புதன், 23 செப்டம்பர், 2026

விக்கிரமபாண்டி முருகன் திருப்புகழ், விமலன் வெண்பா - வண்ணச்சரபர்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த 

விக்கிரமபாண்டி முருகன் திருப்புகழ்

தத்ததன தாந்தன தானன – தனதானா

 

பைத்தவர வாங்கொடி யாரொடு – பழகாதே

            பத்தியறு தீங்குறு மூடரை – மதியாதே

பொய்த்தமயல் காண்டரு மாதரை – விழையாதே

            பொற்புமயி லூர்ந்தெதி ராயருள் – புரிவாயே

நெய்த்தமழு மான்புனை தோளினர் – தருபாலா

            நிர்க்குணநி ராஞ்சன வாழ்வருள் – குருநாதா

மெய்த்தகைய பாண்டிய னாகிமுன் – விரும்வேலா

            விக்கிரம பாண்டியில் மேவிய – பெருமானே.


விக்கிரமபாண்டி விமலன் வெண்பா

 

விக்கிரம பாண்டி விமலாவிம் மேதினியோ

ரக்கிரம மெல்லா மகற்றியே – முக்கியமா

நீதி முழுது நிலைநிறுத்தி நின்னருட்சீர்

மாதிரமெங் குந்திகழ வை.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக