வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
அருளிச் செய்த
பனை
முறியப் பாடிய வெண்பாப் பதிகம்
(நேரிசை வெண்பா)
கந்தப்பன் னாணை
கதிர்வேற் படையாணை
சந்தப் பசும்பொற்
றமிழாணை – சந்ததமும்
வந்தற்ப ராட்டுடனே
வாரணமுங் கொல்லநிற்கு
மிந்தப் பனைமுறிக
வே.
(1)
செங்கதிரோ னாணை
சிவனாணை மாலாணை
சங்கரிப்பெண்
ணாணைதந்தி தன்னாணை – துங்கவைவே
லப்பன்தா ணையசக்கொ
லைக்கோர்கா ரணமா
மிப்பனையின் னேமுறிக
வே.
(2)
எவ்வுயிருந் தாயாய்
யினியதந்தை யாய்க்குருவாய்
வௌவுமொரு தெய்வமென்று
வாழ்வதுண்டே – லிவ்வுலகிற்
கோட்டுத் தகர்கோழி
கொன்றுதின்பார் கொண்டாடு
மீட்டுப் பனையிதிறு
மா.
(3)
சீவ கருணையைப்போற்
செய்தவம்வே றில்லையெனத்
தேவர்முத லியாவர்களுஞ்
செப்பன்மெய்யேற் – சேவலங்கை
ஞானப் பிரானடியார்
நன்குகளி கூரவின்னே
னீனப் பனையிதிறு
மா.
(4)
கொடியர்பல ராடுவெட்டிக்
கொண்டாட வென்றிப்
படியில்வள ரிந்தப்
பனைதா – னடியோ
டிடியிற் பெருங்காற்றி
லெஃகவேற் றாக்கி
லொடியு மொடியுமொடி
யும்.
(5)
ஐயகோ கோகோ வசமாதி
கொண்டுபலி
செய்யல் பிழையென்றே
தினஞ்சொல்லு – மெய்யடியார்
திண்மையறி யாருரநேர்
தீயபனை யீதருட்பே
ருண்மைவெளி யாகவுடை
யும்.
(6)
வண்ணமுலைக் கோபியர்கள்
வாழ்மனைதோ றுந்திகழ்ந்த
கண்ண னனையார்
கணங்களே – யெண்ண
வடியர் பதத்தூயி
னாணையுண்டே லிந்தக்
கொடியபனை துண்டுதுண்டா
கும்.
(7)
ஆறு சமயத் தவர்க்கும்
பொதுவாகி
வேறுதெய்வ மில்லையெனு
மெய்யுணர்ந்து – தேறுமன்பா
னீறுதொட்ட தொண்டர்
நிசத்தரே லிப்பனைதான்
கூறுபட்டுத் துண்டிரண்டா
கும்.
(8)
தன்னாட்டு வாகனமுந்
தன்கைவென்றிச் சேவலுமிக்
கின்னா வடையவள
ரிப்பனையை – முன்னாளாம்
வீரவா கேந்தும்
விதிர்வாளால் வெட்டுவிப்பான்
சேரன்மகிழ் தென்பழனிச்
சேய்.
(9)
ஈனர் களிப்புநல்லோ
ரின்னலுந்தீர்ந் தேனையெய்தற்
கான வடையாள மாகவே
– யூனமுற்றிவ்
வன்பனைதுண் டாக
வடிவேற் படைவிடுப்பான்
றென்பழனிக் குன்றில்வளர்
சேய்.
(10)
வாக்கிலிருந்
தியார்க்கேனும் வாஞ்சித்த வாறருளித்
தேக்கியதுண் டென்னிலுண்மைத்
தெய்வமே – நோக்கி
யடியேன்சொ லிப்பனைதுண்
டாகிவிழ வேண்டுங்
கொடியோர் திடுக்கங்
கொள.
(11)
இந்தப் பனையு
மெனதுமன வாதனையு
மந்தப் பகைவனுரத்
தாணவமுஞ் – சிந்தச்
சிவனாகி மாலாமோர்
தெய்வமெண்ணி டாதோ
குவலயமா தின்பங்
கொள.
(12)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக