வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
ஆளனுப்பிப் பழனிக்கழைத்த பதிகம்
காப்பு
(நேரிசை வெண்பா)
காளமதன் சேனையையுங் கார்வுணர் தானையையுந்
தோளணியால் வென்றுமகிழ் தொல்குரவ – னாளனுப்பித்
தன்பழனி யூர்க்குத் தமியேன் றனையழைத்த
வின்பமதாற் பாடுகின்றேணி யான்.
பதிகம்
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
பாவி பொன்னைநின் றெய்வமென் றெண்ணிப்
பத்தர்
பாற்றுயர் பலசெயத் துணிந்தாய்
சேவி னந்தளர் சென்னையின் மருவுந்
திருட்டுக்
கந்தன்மேற் றெளிதமிழ் புனைந்துந்
தாவி லீகை வேட்டிங்ஙன மிருந்தேன்
றனத்தொடின்
னருடர் நினைத்த னையோ
வாவி னன்குடி மேவிய முருகா
வாளனுப்
பியேனழைக் கின்றாய் நீயே.
(1)
வந்தவ் வாறுனைத் துதித்தவென் றன்பால்
வாரியோ
லிடும்வளங் கொள்செந் தூரிற்
செந்தமிழ்ப் பயனெய்து மென்று ரைத்தாய்
சென்று
பாடியத் திருநகர்க்கு மான
சொந்த வாய்கொடு சொன்னசொன் னம்பித்
துடித்துள்
ளேன்பெருந் தொல்லருட் பழனிக்
கந்த நாட்குணம் விட்டுளான் போன்றின்
றாளவனுப்
பியேனழைக் கின்றாய் நீயே.
(2)
ஒருக னாவிலென் றன்னிடை தோன்றி
யுரிமைச்
சுந்தர முவப்புறும் பொருட்டுத்
திருநெல் வேலியூர்க் கேகெனப் பகர்ந்தாய்
செம்பொன்
வேட்டிவண் டிரியவிட் டிருந்தாய்
கருணையின் றுதித்திட் டதுகொல் லோக
மல்வே
தனைக்கன் னற்தே சிகனே
யருண்பங் கயத்தடம் பொலிய வயலூ
ராளனுப்
பியேனழைக் கின்றாய் நீயே.
(3)
படியி லுள்ளபன் மலைதொறு பாடிப்
பரிசு
நல்கிடும் பண்பினர்க் காணா
திடிவி னாவுபை யரவமொத் தொடுங்கி
யேழை மானிட
ரிடத்திரக் கின்றேன்
வடிகு லாவிய வேலுடைக் குகனே
வாஞ்சை யாவையும் வழங்கநா டினையோ
வடியர் சூழ்தரு பழனியூர்க் கென்னை
யாளனுப்
பியேனழைக் கின்றாய் நீயே.
(4)
தத்தை மென்மொழிச் சுந்தரத் தினிலுந்
தாழ்ந்த
மங்கையர் தங்கண்மா லெய்தி
முத்தை நேர்நகைக் குருகவுங் கண்டாய்
முதிர்சொற்
செந்தமிழ் மோகியா கிகாணேன்
சிந்தை யுந்தையா ரூரனுக் கீந்த
சீல மெண்ணினை
யோசெய் வேலா
வத்தை நீங்கரும் பழனியில் வருகென்
றாளனுப்
பியேனழைக் கின்றாய் நீயே.
(5)
பொங்குந் தீஞ்சுவைத் தமிழ்கொடு முள்ளாள்
பொருளு
நல்கிய புகழுறுஞ் சிவனுஞ்
செங்குன் றூரினிற் சொன்னசொற் பொய்த்தா
னறிகைத்துள்
ளேனருள் செயநினைத் தனையோ
வெங்குந் தன்மய மாகியெப் பொருட்கு
மிறையு
மாத்திக ழென்னுயிர் முருகா
வங்குன் றோங்குநின் பழனியில் வருமா
றாளனுப்
பியேனழைக் கின்றாய் நீயே.
(6)
தகப்ப னன்றொரு புலவனுக் காகத்
தைய லாரிடந் தனித்த தூதரயு
முகப்பச் செய்தமை யெண்ணி யென்றன்
மேலுரிமை
வந்துள மொல்கியுள் ளாயோ
மகத்தில் வந்தசெந் தகரிவர் வானே
வாரி யேழையும்
வடியவுண் டளித்த
வகத்தி யன்புகழ் பழனியி லிருந்தின்
றாளனுப் பியேனழைக் கின்றாய்
நீயே.
(7)
கஞ்சநாண் மலர்ப்பிர மனோர்சி னன்றாள்
கருது
வார்களைக் கழுவிலன் றிட்டாய்
வஞ்ச மீறியவுலை யார்மிக் கிந்நாள்
வாழல கண்டியாம்
வருந்துறச் செய்தா
யெஞ்ச றீர்புகழ்ப் பழனி வெற்பர்
சேயாது காரண மிருகரத் தாலு
மஞ்ச னல்கிய நினைவுவந் ததுவோ
வாளனுப்
பியேனழைக் கின்றாய் நீயே.
(8)
கசத்தி னீடிய மாமரம் பிளந்து
கலங்கும்
வானவர் களிப்புறப் புரிந்தா
னசத்தியாவை யுந்தாழ்த் தியபொல் லார்க்கு
றுகணீந் திடவுண் ணுகின்ற னையோ
நிசத்தி னாற்றொழ மயின்மிசை வந்து
நெடிய
சீர்ப்பழ னியிலவ ணிகழ்ந்து
மகத்தியக் குணந்த ணந்துளாய் போலு
மாளனுப்
பியேனழைக் கின்றாய் நீயே.
(9)
மூவ ராதிய கடவுளர் பலரு
முருகனே யெனமொழிந் துணைவ ழுத்தும்
பாவல ருட்னென் னையுஞ் சேராப்
படிறு
காட்டினை பரதவித் துள்ளேன்
சேவல் காட்டிய துகிற்கொடிப் பழனிச்
செல்வ
மேசிறு சிந்தையிற் கொளுமென்
னாவ வியர்வையு நல்சவல் லாயோ
வாளனுப்
பியேனழைக் கின்றாய் நீயே.
(10)
குரவர் பாற்பல ராப்பல நெறியுங்
குவல யத்திடை
குலவிடச் செய்யுஞ்
சரவ ணோற்பவச் சண்முக மணியே
தமியனே
னைநின் றமிழ்வய லூரைப்
பரவு நாளவ ணேங்குறச் செய்த
பண்பின்
றில்லைகொல் பரிசருள் வாயோ
வரவ நேர்பிடிக் கஞ்சுறு மெனையின்
றாளனுப்
பியேனழைக் கின்றாய் நீயே.
(11)
நெல்லைமா நகர்த்திருப் புகழ்க்கர னேடிச்
சென்னையி
னெடிய வேல வன்மேற்
சொல்லைமிக் கணிந்தீ
கைவேட் டுறுநாள்
சோலை சூழ்பழ
னிபுரித் தொல்லோ
னல்லை நேர்மிடி தீர்ப்பவன் போற்றன்
னாளனுப்
பியாங்கழைத் தமைநுவப் பாட
டெல்லையின் றிய நலத் ததென்று ணர்வார்க்
கிகமும்
வானமு மெய்துறு மன்றே.
(12)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக