வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
அருளிச் செய்த
கழனி
நகர் கணபதி பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
கழனிநகர்
கோயிற் கணபதியே நின்தா
டொழவிழைந்தி
லேனைநின்கை தொட்டு – மழலை
மொழியாற்
றுதிக்கவருண் மொய்ம்பறிந்தாற் பாரோர்
பழியாரன்
றோகடைக்கண் பார்.
(கொச்சகக்
கலிப்பா)
அன்றடியேன்
வேண்டியவா றாடகமால் வரைப்பெருந்துண்
டொன்றளித்தா
லூர்தொறும்போ யுளமொல்கா திரப்பேனோ
நன்றறிவார்
முதற்போற்ற நகைமலர்ந்து நாடோறுங்
கன்றலறத்
தீர்த்தருள்வாய் கழனிநகர்க் கணபதியே.
(1)
புல்லர்களுங்
கண்டிகழப் பொறாமையுற்றுப் புலர்வேனை
யெல்லவரும்
போற்றிசைத்தற் கேற்றபே றின்றருள்வாய்
வல்லவைப்பெண்
சேர்கணவா வயமலிபா சாங்குசந்தோய்
கல்லனைய
நாற்றோளா கழனிநகர்க் கணபதியே.
(2)
செங்கைவிரித்
தேற்றலைந்து திரிகின்ற சிறியேற்கு
னங்கைதொட்டு
நீறணிந்த வாச்சரிய மவிராதோ
நங்கையுமை
கோன்புரியு நற்றவத்தின் முற்பயனாக்
கங்கைமதிச்
சடைகொண்டாய் கழனிநகர்க் கணபதியே.
(3)
மண்ணொடுவிண்
ணளந்தான்போல் வாழுமிச்சை வழங்கியப்பாற்
புண்ணொருங்கு
நல்கிமனம் புலரவிடத் தகுங்கொல்லோ
பெண்ணொருபங்
குடையான்றேர் பெயரலுமச் சிறக்கண்டாய்
கண்ணொருமூன்
றுறுமெந்தாய் கழனிநகர்க் கணபதியே.
(4)
நம்பாத
மனத்தார்போ னலிவுறுமென் னாப்பகருஞ்
செம்பாடற்
சுவைவேட்ட திருவுளமின் றிரங்காதோ
கொம்பானை யொன்றினைத்தன்
கோடொன்றார் கொன்றுவந்தாய்
கம்பாள்வாற்
காழியிட்டாய் கழனிநகர்க் கணபதியே.
(5)
சலிக்கின்ற
மனமுடையார் தம்பொருட்கு மாசைகொள்வே
னெலிக்குன்றூர் பவளவெற்பொத்
தென்றுனைக்கண் டின்புறுவேன்
புலிக்கன்றே
நிகர்வீரப் பொலிவறத்தாக் கிடும்பொல்லாக்
கலிக்கஞ்சார்க்
கெளியானே கழனிநகர்க் கணபதியே.
(6)
நற்பனவச்
சேய்நிமித்த நாடறியச் சிற்றுண்டி
வெற்பருந்தும்
பேராடல் விளம்புமெனக் கிரங்காயோ
பொற்பணமொன்
றாலிகழ்ந்த புலவனுக்கு மருள்செய்த
கற்பகம்போ
லைங்கரத்தாய் கழனிநகர்க் கணபதியே.
(7)
விற்றாங்கு
முகில்போல்வான் வீரைநகர்க் கேகுமென்னைச்
சிற்றாற்றாற்
றடுத்தாண்ட சீர்விளங்குந் திறஞ்செய்வாய்
வற்றாநீர்த்
துணையாறு வழங்கியகை வாரணமே
கற்றாருக்
கெளியாய்நங் கழனிநகர்க் கணபதியே.
(8)
சொற்சுவையும்
பொருட்சுவையுந் துய்க்கறியாத் துற்சனர்பா
லெற்சுணங்கச்
செய்தாலவ் விளப்பமுனக் கின்றுகொலோ
மற்சுடர்வேற்
செவ்வேளோர் மறக்கொடியால் வாடுறுநாள்
கற்சுனைப்பா
லருள்செய்தாய் கழனிநகர்க் கணபதியே.
(9)
பாரறிய
வெத்தனையோ பதிகமுனக் கிசைத்துளநா
னோரகவல்
சொற்றருள்போன் யொளிர்புகழெய் திலனந்தோ
வாரணத்தோ
டாகமங்க ளத்தனையும் போற்றுமுதற்
காரணனே
தென்பாண்டிக் கழனிநகர்க் கணபதியே.
(10)
செல்வியக
லாமருமத் திறன்மருதன் செங்கோலாற்
கல்வியறி
வார்மலியுங் கழனிநகர்க் கணபதியே
நல்வினையோர்
வாழுநெல்லை நகர்ப்புலவ னவின்றதமிழ்ச்
சொல்விழைவா
ராரேனுஞ் சுகம்பெருகத் தோய்வாரே.
(11)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக