ஸ்ரீராமர் தாலாட்டு
பேராமரய் யோத்தி பெருமாளைத் தாலாட்ட
சீரார்குரு
கையர்கோன் சேவடிகள் காப்பாய்
(1)
அன்றமரர்க்காக அய்யோத்தி யெனும் பட்டணத்தில்
சென்றன்
றவரித்த திருமாலைச் சொன்னாரோ
(2)
தெள்ளுதமிழ்க் கொண்டாட
சீரார் தசரதற்குப்
பிள்ளைவிடாய்
தீர்த்த பெருமாளைச் சொன்னாரோ
(3)
காவலளியக்
கருதி லங்கை தானளிய
மூவருடம் பிறந்து மூவுலகை யாண்டாரோ
(4)
கருதலர்கள்
காவலனோ கண்ணார்ந்த கற்பகமோ
அறிவுடைய
தாயார்குப் பாற்குடமாய் நின்றானோ
(5)
வீராதி
வீரனோ வேந்தர் சூடாமணியோ
ஸ்ரீராம
னென்னும் திருனாமம் பெற்றானோ
(6)
பேரார்ப்
பெரியவனோ பேருலகை யண்டவனோ
சீரார்ச்
சிறப்புடைய செங்கண்முகில் மேனியனோ
(7)
குவலையத்தோர் கொண்டாடக் குடுமிப் பிராயத்திலே
தவமுனிவன்
சொற்கேட்டு தாடகையை எய்தவனோ
(8)
மாசிலா
முத்தோ மணிவயிரத் தோளானோ
கோசிகனார்
வேள்வி குரைதீர்த்த காவலனோ
(9)
அரிய
குடிக்கரசே ஆடவர்குப் பேரேரே
பெரியதொரு
சிலையை பெண்வடிவு செய்தவனோ
(10)
அலைகடல்சூழ்
வையகத்தே ஆறுமசைக்க வெண்ணா
சிலைவளையக்
குனித்துச் சீதைமணஞ் செய்தவனோ
(11)
தாய்கைகேசி சொற்படிக்கு தாமமுடி சூட்டாமல்
சீதையுடன்
கானகத்தே சென்ற பெருமாளோ
(12)
தாமமணி
மார்பேனோ தம்பிதுணை யுள்ளவனோ
மானணிவர்க்
கெல்லா மனக்கவலை தீர்த்தவனோ
(13)
தாக்குடனே
பேசும் தனக்கடங்காச் சூர்ப்பனகை
மூக்கரிந்த
சேவகர்கு முன்பு வந்த சேவகனோ
(14)
தன்மாய்கை
காட்டியல்லோ தையலுள மாலாக்கும்
பொன்மானின்
பின்போன புண்ணியனைச் சொன்னாரோ
(15)
தண்டகானகத்தே
அணி மயிலைத் தேடுதற்கு
அனுமான்
தன்னுடனே தோனமைகள் கொண்டானோ
(16)
கலக்கழிரோ கொற்றவர் தன் பேரேரோ
வாலியைக்
கொல்லவொரு சுக்ரீவ்வெய் சேவகனோ
(17)
கணையாழி
கொடுத்தே அனுமானைத் தூதனுப்பி
வாழு
மிலங்கை நகர் வழிபார்த்து நின்றவனோ
(18)
இருள்கடலைத்
தாண்டியல்லோ லங்கைநகர் தீய்மூட்டி
திரும்பியனு
மானுரைக்கச் சீதை செயல்க் கேட்டவனோ
(19)
வானரங்க
ளென்னும் மாகாசேனை தன்னுடனே
தானிலங்கை
வேரருக்கத் தண்டெடுத்த சேவகனோ
(20)
அடல்பெரிய
வீரியனோ வன்புகுடி கொண்டவனோ
கடல்கலங்க முன்னால் கணைதொடுத்த சேவகனோ
(21)
துலங்கும்
பெருங்கடலைத் தூர்த்தெரியப் புரம்போய்
லங்கை
நகர்கண்ட ராவணனைச் சொன்னாரோ
(22)
கொக்கரித்து
வானரங்கள் கூத்தாட வெத்திசையும்
அக்கடலைப்
பின்னிட் டரக்கர்பதி புக்கவனோ
(23)
குன்றுபோல்
வந்த கொடியதொரு ராவணனை
இன்று
போய் நாளை வா வென்ற பெருமாளோ
(24)
நாடி
யரக்கர்பதி நாலாயிரம் வெள்ளத்துடன்
கூடி
வரும் ராவணனைக் கொன்ற பெருமாளோ
(25)
பத்து
மணியும் பத்திரண்டு திருத்தோளும்
பத்திவிழச்
செய்த தடம் பெரிய சேவகனோ
(26)
எட்டி
லங்கையைச் சுட்டு லக்குமியைத் தான்மீண்டு
சுட்டமுடனய்
யோத்திநகர் சார்ந்த ரகுராமரோ
(27)
பூண்டமணித்
தேரும் பொன்னிலங்கை மானகரும்
மீண்டுமவன்
தம்பி விபூஷணருக் கீய்ந்தவனோ
(28)
ஸ்ரீராம
ராமனோ சீதைசிறை மீண்டவனோ
பேரார்ப்
பெரியவனோ பேருலகை யாண்டவனோ
(29)
செப்பமுடன்
சேர்த்தெடுத்த ஸ்ரீராமர் தாலாட்டை
முப்பதுங்
கற்றவர்கள் மூவுலகை யாள்வாரே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக