அம்மை போற்றி
பூத்தவளே
புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே
பின்கரந்த வளேகரை கண்டனுக்கு
மூத்தவளே
யென்றுமூவா முகுந்தற் கிளையவளே
மாத்தவளே
யுன்னையன்றி மற்றோர்தெய்வம் வந்திப்பதே
1.
ஓம் அகந்தை அழிப்பவளே போற்றி
2.
ஓம் அக்கினி மண்டலத்தாளே போற்றி
3.
ஓம் அங்குசம்
தரித்தவளே போற்றி
4.
ஓம் அச்சத்தை
அகற்றுபவளே போற்றி
5.
ஓம் அசுரரை அழித்தவளே போற்றி
6.
ஓம் அண்டத்தின்
ஆதாரமானவளே போற்றி
7.
ஓம் அத்திரம்
பொழிபவளே போற்றி
8.
ஓம் அந்தரியே போற்றி
9.
ஓம் அமிழ்தக்
கடலே போற்றி
10.
ஓம் அமுதமழை பொழிபவளே போற்றி
11.
ஓம் அமைதி வடிவானவளே போற்றி
12.
ஓம் அரக்கரை அழிப்பவளே போற்றி
13.
ஓம் அருள்சக்தி
வடிவானவளே போற்றி
14.
ஓம் அரைஞாண் பூண்டவளே போற்றி
15.
ஓம் அழகிய நுதலே போற்றி
16.
ஓம் அழகுப் புன்னகையே போற்றி
17.
ஓம் அழிவற்றவளே
போற்றி
18.
ஓம் அளப்பரியவளே போற்றி
19.
ஓம் அறநெறித்
தாயே போற்றி
20.
ஓம் அறத்துடன்
கூடியவளே போற்றி
21.
ஓம் அறம் வளர்த்த
நாயகியே போற்றி
22.
ஓம் அறியப்படும்
பொருளே போற்றி
23.
ஓம் அறியாமை போக்குபவளே போற்றி
24.
ஓம் அறியாமை வென்றவளே போற்றி
25.
ஓம் அற்புதச்
சரித்திரம் உடையவளே போற்றி
26.
ஓம் அற்புத லீலை
புரிபவளே போற்றி
27.
ஓம் அனைத்துமாக
இருப்பவளே போற்றி
28.
ஓம் அனைத்தும்
அறிந்தவளே போற்றி
29.
ஓம் அனைத்தும்
படைப்பவளே போற்றி
30.
ஓம் அன்பின் வடிவானவளே போற்றி
31.
ஓம் அன்ன வடிவினளே போற்றி
32.
ஓம் ஆகாயத்தைப்
படைத்தவளே போற்றி
33.
ஓம் ஆங்காரியே போற்றி
34.
ஓம் ஆசை அற்றவளே போற்றி
35.
ஓம் ஆசையின் முடிவே போற்றி
36.
ஓம் ஆணவம் அற்றவளே போற்றி
37.
ஓம் ஆணைகளின்
பிறப்பிடமே போற்றி
38.
ஓம் ஆதார சக்தியே போற்றி
39.
ஓம் ஆதி பராசக்தியே
போற்றி
40.
ஓம் ஆத்ம வித்தையே போற்றி
41.
ஓம் ஆயிரம் கமலத்தாளே போற்றி
42.
ஓம் ஆரணப் பங்கயத்தாளே போற்றி
43.
ஓம் ஆறு குணம்
நிறைந்தவளே போற்றி
44.
ஓம் ஆறு முகம்
உடையவளே போற்றி
45.
ஓம் ஆனந்தத்தில்
திளைப்பவளே போற்றி
46.
ஓம் ஆனந்த வடிவமே போற்றி
47.
ஓம் ஆனந்த வல்லியே
போற்றி
48.
ஓம் ஆனைமுகன்
தாயே போற்றி
49.
ஓம் ஆன்ம வடிவமே போற்றி
50.
ஓம் இடையூறு போக்குபவளே போற்றி
51.
ஓம் இதயத்தில்
இருப்பவளே போற்றி
52.
ஓம் இந்திராணியே போற்றி
53.
ஓம் இமவான் மகளே போற்றி
54.
ஓம் இருநிலை நீக்கியவளே போற்றி
55.
ஓம் இருமுகம்
உடையவளே போற்றி
56.
ஓம் இறப்பு இல்லாதவளே போற்றி
57.
ஓம் ஈசுவரியே போற்றி
58.
ஓம் உத்ர காளியே போற்றி
59.
ஓம் உயர்ந்த மனம்
கொண்டவளே போற்றி
60.
ஓம் உலகீன்ற அன்னையே போன்றி
61.
ஓம் உலகைத் தாங்குபவளே போற்றி
62.
ஓம் ஊழ்விழை தீர்ப்பவளே போற்றி
63.
ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி
64.
ஓம் எண்ணுவதற்கு
அரியவளே போற்றி
65.
ஓம் எண் வடிவானவளே போற்றி
66.
ஓம் எல்லா உலகும்
ஈன்றவளே போற்றி
67.
ஓம் ஐந்து முகம்
உடையவளே போற்றி
68.
ஓம் ஐந்தொழில்
புரிபவளே போற்றி
69.
ஓம் ஐம்பெரும்
வடிவே போற்றி
70.
ஓம் ஒப்பிலா அன்னையே போற்றி
71.
ஓம் ஒருத்தியாக
இருப்பவளே போற்றி
72.
ஓம் ஒலி வடிவானவளே போற்றி
73.
ஓம் ஒளி வட்டம்
உடையவளே போற்றி
74.
ஓம் ஓங்கார நாயகியே
போற்றி
75.
ஓம் கட்டளை வடிவானவளே போற்றி
76.
ஓம் கணங்களின்
தாயே போற்றி
77.
ஓம் கணபதித் தாயே போற்றி
78.
ஓம் கண்டனுக்கு
மூத்தவளே போற்றி
79.
ஓம் கதம்ப வனத்தவளே போற்றி
80.
ஓம் கந்தரியே போற்றி
81.
ஓம் கமலக் கன்னியே போற்றி
82.
ஓம் கயல் விழியாளே போற்றி
83.
ஓம் கருணைத் தாயே போற்றி
84.
ஓம் கருமாயி தாயே போற்றி
85.
ஓம் கரும்பச்சை
நிறத்தாளே போற்றி
86.
ஓம் கலிதோஷம்
போக்கியவளே போற்றி
87.
ஓம் கலைகளின்
தலைவியே போற்றி
88.
ஓம் கலைக் களஞ்சியமே போற்றி
89.
ஓம் கலைமாலை தரித்தவளே போற்றி
90.
ஓம் கல்விக்கு
வித்தே போற்றி
91.
ஓம் களங்கம் இல்லாதவளே போற்றி
92.
ஓம் கவைய காளியே போற்றி
93.
ஓம் கற்பனை கடந்தவளே போற்றி
94.
ஓம் கஸ்தூரித்
திலகமே போற்றி
95.
ஓம் காட்டில்
உறைபவளே போற்றி
96.
ஓம் காமாட்சியே
போற்றி
97.
ஓம் காயத்திரி
வடிவினளே போற்றி
98.
ஓம் காலனை அழிப்பவளே போற்றி
99.
ஓம் காளியே போற்றி
100.
ஓம் காளி சுவரித்
தாயே போற்றி
101.
ஓம் குங்குமக்
காளியே போற்றி
102.
ஓம் குணங்களின்
குடியிருப்பே போற்றி
103.
ஓம் குண்டலினி
சக்தியே போற்றி
104.
ஓம் குமரன் தாயே போற்றி
105.
ஓம் குருதியில்
உறைபவளே போற்றி
106.
ஓம் குரு மண்டல
வடிவே போற்றி
107.
ஓம் குரு வடிவம்
ஆனவளே போற்றி
108.
ஓம் குல தெய்வமே போற்றி
109.
ஓம் குலப்பெருமை
காப்பவளே போற்றி
110.
ஓம் கோடாயாளே போற்றி
111.
ஓம் கோரைப்பற்கள்
உடையவளே போற்றி
112.
ஓம் கௌமாரியே போற்றி
113.
ஓம் சச்சிதானந்த
வடிவினளே போற்றி
114.
ஓம் சத்திய விரதம்
இருப்பவளே போற்றி
115.
ஓம் சந்தியின்
வடிவமே போற்றி
116.
ஓம் சரிபாகம்
கொண்டவளே போற்றி
117.
ஓம் சாட்சி இல்லாதவளே போற்றி
118.
ஓம் சாதுர்யம்
மிக்கவளே போற்றி
119.
ஓம் சாம்பவியே போற்றி
120.
ஓம் சித்த வித்தையே போற்றி
121.
ஓம் சிந்தனைக்கு
எட்டாதவளே போற்றி
122.
ஓம் சிம்ம வாகினியே போற்றி
123.
ஓம் சிருங்காரச்
சுவையே போற்றி
124.
ஓம் சிவ சக்தியே
போற்றி
125.
ஓம் சிவஞானம்
தருபவளே போற்றி
126.
ஓம் சிவ வடிவானவளே போற்றி
127.
ஓம் சிவனுக்கு
உரியவளே போற்றி
128.
ஓம் சிவனைத் தூது
அனுப்பியவளே போற்றி
129.
ஓம் சினத்தைத்
துடைப்பவளே போற்றி
130.
ஓம் சினம் தணிந்தவளே போற்றி
131.
ஓம் சீர்வளர்
அன்னையே போற்றி
132.
ஓம் சுகத்தைத்
தருபவளே போற்றி
133.
ஓம் சுந்தரியே போற்றி
134.
ஓம் சுழிமுனை
ஒளியே போற்றி
135.
ஓம் சூரியப் பேரொளியே
போற்றி
136.
ஓம் செந்நிறமானவளே போற்றி
137.
ஓம் செல்வத்தின்
தேவதையே போற்றி
138.
ஓம் செழுமை வடிவானவளே போற்றி
139.
ஓம் ஞானம் தருபவளே போற்றி
140.
ஓம் ஞான வடிவே போற்றி
141.
ஓம் தடுத்தாட்
கொண்டவளே போற்றி
142.
ஓம் தண்டு மாரியே போற்றி
143.
ஓம் தத்துவங்கள்
வடிவே போற்றி
144.
ஓம் தந்திரங்களின்
வடிவே போற்றி
145.
ஓம் தயை வடிவே போற்றி
146.
ஓம் தர்ப்பணத்தால்
மகிழ்பவளே போற்றி
147.
ஓம் தற்பெருமை
ஒழிப்பவளே போற்றி
148.
ஓம் தன்னிகர்
அற்றவளே போற்றி
149.
ஓம் தன்னிறைவு
ஆனவளே போற்றி
150.
ஓம் தன்னொளி மிக்கவளே போற்றி
151.
ஓம் தாதுக்களில்
உறைபவளே போற்றி
152.
ஓம் திகம்பரியே போற்றி
153.
ஓம் தியானப் பரம்பொருளே போற்றி
154.
ஓம் திரிசூலியே போற்றி
155.
ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
156.
ஓம் திருக்கழுத்து
உடையவளே போற்றி
157.
ஓம் திருவடித்
தாமரையாளே போற்றி
158.
ஓம் தீச்சுடரில்
தோன்றியவளே போற்றி
159.
ஓம் துணிவு வடிவானவளே போற்றி
160.
ஓம் துர்க்கையே போற்றி
161.
ஓம் தூய மனம்
கொண்டவளே போற்றி
162.
ஓம் தூய்மை உருவானவளே போற்றி
163.
ஓம் தேவர்களின்
தலைவியே போற்றி
164.
ஓம் தொல்லை இல்லாதவளே போற்றி
165.
ஓம் தோன்றாப்
பரம்பொருளே போற்றி
166.
ஓம் நயனம் மூன்றுடையாளே போற்றி
167.
ஓம் நல்லன தருபவளே போற்றி
168.
ஓம் நல்லோரை விரும்புபவளே போற்றி
169.
ஓம் நல்லோர்க்கு
இனியவளே போற்றி
170.
ஓம் நல்வழியில்
நடத்துபவளே போற்றி
171.
ஓம் நல்வாக்குத்
தருபவளே போற்றி
172.
ஓம் நளினம் உடையவளே போற்றி
173.
ஓம் நாராயணியே போற்றி
174.
ஓம் நான்முகம்
உடையவளே போற்றி
175.
ஓம் நான்முகன்
வடிவே போற்றி
176.
ஓம் நிறைஞானம்
கொண்டவளே போற்றி
177.
ஓம் நீக்கமற நிறைந்தவளே போற்றி
178.
ஓம் நீலித் தாயே போற்றி
179.
ஓம் நெறிபிறழா
தேவியே போற்றி
180.
ஓம் நெற்றியில்
திகழ்பவளே போற்றி
181.
ஓம் நோய்கள் தீர்ப்பவளே போற்றி
182.
ஓம் பகமாலை அணிந்தவளே போற்றி
183.
ஓம் பகவதித் தாயே போற்றி
184.
ஓம் பக்தர்களின்
கற்பகக் கொடியே போற்றி
185.
ஓம் பக்தர்களின்
நிதியே போற்றி
186.
ஓம் பஞ்சமியே போற்றி
187.
ஓம் பண்ணாரி மாரியே போற்றி
188.
ஓம் பதியுடன்
வாழ்பவளே போற்றி
189.
ஓம் பரமசிவன்
பத்தினியே போற்றி
190.
ஓம் பரம மங்கல
வடிவினளே போற்றி
191.
ஓம் பரமானந்தம்
உடையவளே போற்றி
192.
ஓம் பராசக்தியே போற்றி
193.
ஓம் பலவடிவம்
கொள்பவளே போற்றி
194.
ஓம் பவானித் தாயே போற்றி
195.
ஓம் பற்றறுப்பவளே போற்றி
196.
ஓம் பாண்டாசுரனை
மாய்த்தவளே போற்றி
197.
ஓம் பாவம் அணுக
முடியாதவளே போற்றி
198.
ஓம் பாவம் போக்குபவளே போற்றி
199.
ஓம் பிரமானந்த
வடிவே போற்றி
200.
ஓம் பிரம்ம சக்தியே போற்றி
201.
ஓம் பிறப்பிடம்
இல்லாதவளே போற்றி
202.
ஓம் பிறப்பு இல்லாதவளே போற்றி
203.
ஓம் பிறவிப்பிணி
தீர்ப்பவளே போற்றி
204.
ஓம் புண்ணியம்
தருபவளே போற்றி
205.
ஓம் புவனம் பூத்தவளே போற்றி
206.
ஓம் புவனேசுவரி
அன்னையே போற்றி
207.
ஓம் புறங்கால்கள்
உடையவளே போற்றி
208.
ஓம் பூதேவி வடிவானவளே போற்றி
209.
ஓம் பூரிப்புத்
தருபவளே போற்றி
210.
ஓம் பேரரசு அளிப்பவளே போற்றி
211.
ஓம் பேரண்டம்
ஈன்றவளே போற்றி
212.
ஓம் பேரருள் உடையவளே போற்றி
213.
ஓம் பேரறிவு படைத்தவளே போற்றி
214.
ஓம் பேராற்றல்
படைத்தவளே போற்றி
215.
ஓம் பேரியக்க
வடிவினளே போற்றி
216.
ஓம் பெரிய பூசை
ஏற்றவளே போற்றி
217.
ஓம் பெருங்கயிலை
உறைபவளே போற்றி
218.
ஓம் பெருஞ்சித்தி
வடிவே போற்றி
219.
ஓம் பெருந்தீனி
கொள்பவளே போற்றி
220.
ஓம் பேரின்பம்
ஊட்டுபவளே போற்றி
221.
ஓம் பேரின்ப வடிவே போற்றி
222.
ஓம் பொருள் சக்தி
வடிவானவளே போற்றி
223.
ஓம் பொன்னிறம்
ஆனவளே போற்றி
224.
ஓம் போற்றிகளை
விரும்புபவளே போற்றி
225.
ஓம் மகமாயி தாயே போற்றி
226.
ஓம் மகா தேவியே போற்றி
227.
ஓம் மகாலட்சுமியே போற்றி
228.
ஓம் மகேசுவரியே போற்றி
229.
ஓம் மங்களம் பெறுபவளே போற்றி
230.
ஓம் மங்கள வடிவினளே போற்றி
231.
ஓம் மங்கை வடிவினளே போற்றி
232.
ஓம் மஞ்சள் அன்னம்
சுவைப்பவளே போற்றி
233.
ஓம் மணிப்பூரகமே போற்றி
234.
ஓம் மதுரை மீனாட்சியே போற்றி
235.
ஓம் மந்திர உச்சரிப்பே போற்றி
236.
ஓம் மந்திரங்களின்
வடிவே போற்றி
237.
ஓம் மரணங்கள்
தவிர்ப்பவளே போற்றி
238.
ஓம் மலர்க்கணை
கொண்டவளே போற்றி
239.
ஓம் மறைஞான வடிவே போற்றி
240.
ஓம் மனவாக்கு
எட்டாதவளே போற்றி
241.
ஓம் மனோமயம் ஆனவளே போற்றி
242.
ஓம் மன்மதனை உயிர்ப்பித்தவளே போற்றி
243.
ஓம் மாகாளியே போற்றி
244.
ஓம் மாங்காட்டு
மாரியே போற்றி
245.
ஓம் மாசற்றவளே போற்றி
246.
ஓம் மாயா சக்தியே போற்றி
247.
ஓம் மாரியம்பிகையே போற்றி
248.
ஓம் மான் விழியாளே போற்றி
249.
ஓம் முக்காலத்தில்
உறைபவளே போற்றி
250.
ஓம் முக்கோணச்
சுடரே போற்றி
251.
ஓம் முக்தி அளிப்பவளே போற்றி
252.
ஓம் முக்தி வடிவானவளே போற்றி
253.
ஓம் முக்குணம்
கடந்தவளே போற்றி
254.
ஓம் முக்குண வடிவானவளே போற்றி
255.
ஓம் முகுந்தற்கு
இளையவளே போற்றி
256.
ஓம் முத்துமாரியே போற்றி
257.
ஓம் முப்பால்
மயமானவளே போற்றி
258.
ஓம் முப்புரங்களின்
தலைவியே போற்றி
259.
ஓம் முப்பொருள்
அருள்பவளே போற்றி
260.
ஓம் மும்மலம்
அகற்றுபவளே போற்றி
261.
ஓம் மும்மூர்த்தி
வடிவினளே போற்றி
262.
ஓம் முழுநிலவு
ஒளியே போற்றி
263.
ஓம் முற்றறிவு
ஆனவளே போற்றி
264.
ஓம் முன்னங்கால்கள்
உடையவளே போற்றி
265.
ஓம் முன்னைப்
பழம்பொருளே போற்றி
266.
ஓம் மூப்பிருளின்
சூரியகாந்தியே போற்றி
267.
ஓம் மூல மந்திரமே போற்றி
268.
ஓம் மூலாதாரமே போற்றி
269.
ஓம் மூன்று முகம்
கொண்டவளே போற்றி
270.
ஓம் மூன்றெழுத்து
வடிவினளே போற்றி
271.
ஓம் மென்னடை கொண்டவளே போற்றி
272.
ஓம் மொழிகளின்
வடிவே போற்றி
273.
ஓம் மோகம் அற்றவளே போற்றி
274.
ஓம் மோகினி வடிவே போற்றி
275.
ஓம் யாதுமாகி
நின்றவளே போற்றி
276.
ஓம் யாவருக்கும்
தேவியே போற்றி
277.
ஓம் யோக வடிவானவளே போற்றி
278.
ஓம் யோகம் தருபவளே போற்றி
279.
ஓம் யோனி முத்திரை
வடிவினளே போற்றி
280.
ஓம் ராஜ ராஜேஸ்வரியே போற்றி
281.
ஓம் வடிவழகு மிளிர்பவளே போற்றி
282.
ஓம் வணங்கத் தக்கவளே போற்றி
283.
ஓம் வரம் அளிப்பவளே போற்றி
284.
ஓம் வனத்தில்
வசிப்பவளே போற்றி
285.
ஓம் வாக்கிற்குத்
தலைவியே போற்றி
286.
ஓம் வாம தேவியே போற்றி
287.
ஓம் வானவரின்
தேவியே போற்றி
288.
ஓம் வானவில்லாய்
ஒளிர்பவளே போற்றி
289.
ஓம் விசாலாட்சியே போற்றி
290.
ஓம் வித்தை வடிவானவளே போற்றி
291.
ஓம் விரதங்களில்
விரும்பமுடையவளே போற்றி
292.
ஓம் விரும்பப்படுபவளே போற்றி
293.
ஓம் விரும்பியதைத்
தருபவளே போற்றி
294.
ஓம் விரைந்து
அருள்புரிபவளே போற்றி
295.
ஓம் விளங்கா வடிவே போற்றி
296.
ஓம் வினை இல்லாதவளே போற்றி
297.
ஓம் வீடுபேறு
அளிப்பவளே போற்றி
298.
ஓம் வீர மாகாளியே போற்றி
299.
ஓம் வீரிய தேவதையே போற்றி
300.
ஓம் வெண்ணிறம்
ஆனவளே போற்றி
301.
ஓம் வெற்றி வடிவினளே போற்றி
302.
ஓம் வேத வடிவானவளே போற்றி
303.
ஓம் வேதாந்த உட்பொருளே போற்றி
304.
ஓம் வேப்பிலைக்
காரியே போற்றி
305.
ஓம் வேள்வி வடிவானவளே போற்றி
306.
ஓம் வைராக்கியம்
நிறைந்தவளே போற்றி
307.
ஓம் ஸ்ரீசக்கரம்
கொண்டவளே போற்றி
308.
ஓம் ஸ்ரீலலிதாம்பிகையே போற்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக