வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
அருளிச் செய்த
அரிகர
புத்திரர் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
ஓங்கார மூர்த்தி
யுரையா லொருசிறிதுந்
தீங்கரா வேற்பெருமான்
சீட்டினாற் – காங்காரும்
வண்ணநெடு மேனி
மகாசாத்தா வைத்துதிக்கு
மெண்ணமுற்றே னென்செயலின்
றே.
பதிகம்
(அறுசீர்ச்
சந்த விருத்தம்)
எண்டரு தேவ ரநேகரை
நாடி
யிறைஞ்சின னியாருமெனைக்
கண்டருள் செய்தில
ரும்மை நினைந்து
கரந்தொழுதே னருள்வீர்
பண்டயி ராணி தவங்குலை
யாது
பரிந்தருளுப் புகழ்வேட்
டண்டரு மானிட
ரும்பணி யத்திக
ழரிகரி புத்திரரே.
(1)
போகா திக்கமு
ளாரையு மூனுகர்
புல்லரெனக் கருதிச்
சாகா திக்கிடர்
செய்பவர் தம்மைவெல்
சால்புதரத் துணிவீர்
மாகா ளப்பெயர்
வீரன னார்பலர்
வந்தனை கொண்டுல
வாகா யத்தி னிறங்கொடு
நீடுறு
மரிகர புத்திரரே.
(2)
மானை நிகர்த்த
கணார்மயல் வாரியின்
மாழ்கினு மாசறுசெந்
தேனை நகந்தகு
பாடல்செய் வேன்மிசை
சிறிதருள் புரியீரோ
மேனை மகட்புரை
மோகினி தோளரன்
வெஃகிய நாளிலுதித்
தானை யிடத்துல
கெங்குமு லாவரு
மரிகர புத்திரரே.
(3)
நடலை மிகப்பெறு
வார்குடை நீழலி
னைவுறு நான்மகிழத்
திடமுறு சித்தியோ
ரெட்டும ளித்திரு
சேவடியும் புனைவீர்
கடல்பொரு மேனியி
லங்கிநி றங்கொள்
கவின்சடை யாதியதோய்ந்
தடல்கெழு செண்டுபி
டித்தவு ணர்செறு
மரிகர புத்திரரே.
(4)
அங்கம ரேசனி னைத்தலு
முன்ன
ரவிர்ந்தருள் செய்தலினென்
செங்கவி வௌவிய
தாலென தின்னல்
செகுக்க விழைத்தீரோ
பங்கமில் கோழிவ
ரைந்தப தாகை
பரித்திரு பன்னியர்கொண்
டங்கணி லத்துறு
மூர்முழு தாண்டரு
ளரிகர புத்திரரே.
(5)
வாசவ னாதியர்
தந்துயர் தீர
வரந்தரு நீர்பசுமே
னேசமி குந்தமி
யேனை யோர்சற்று
நினைந்தரு ளிற்பழியோ
வீசன் முராரி
யெனச்சது மாமறை
யேத்திரு வர்க்குளவா
மாசறு வல்லப மத்தனை
யும்பெறு
மரிகர புத்திரரே.
(6)
பல்லவ மிட்டவ
ருக்கும்வ ரந்தரு
பண்ணவ னால்வருநீ
ரல்லல்க ளைந்துவ
ருளாவிடி லும்மை
யணிந்தவி தார்பகர்வார்
நல்லகு ளங்கரை
யாதிய பல்வயி
னண்ணுபு ஞாங்கருளா
னல்லது வேறிணை
யின்றிவி ளங்குறு
மரிகர புத்திரரே.
(7)
காழியி லோர்பன
வச்சிசு வந்துகருஞ்
சமணர்ச் செறல்போன்
றேழிசை முத்தமி
ழாலெணி லீணரை
யான்வெலும் வாழ்வருள்வீர்
பாழிலெ திர்த்திக
லுஞ்சம யத்தினர்
பற்பல ரும்பழியா
தாழிவ ளைந்தபு
வித்தலை கைதொழு
மரிகர புத்திரரே.
(8)
சூரனெ னுந்தகு
வன்னினு தித்தவ
சோமுகி யைத்துணிசெய்
வீரனெ னாதுக லிக்கொட
நோயையும்
வெட்டவி டுத்தருள்வீர்
சீரள வின்றிய
கோடியு ளீர்தவ
சீலர்த மக்கெளியீ
ராரண மாகம மியாவுமி
கப்புக
ழரிகர புத்திரரே.
(9)
தீக்கலுழ் கண்பெறு
பேய்களும் நல்லன
தின்னல் செயக்கருதோ
ரூக்கமு ளேற்கருள்
செய்யிலு மக்குமொ
ரூதிய முண்டறிவீர்
மோக்கமு டன்பல
சித்தியு நம்பிய
முத்தர் பெறத்தரலா
லாக்கல் புரத்தல
ழித்தலு ளார்நிக
ரரிகர புத்திரரே.
(10)
வாசியொ டானையி
லூர்பலர் நும்மது
மாட்டுள ரேயவநீ
டேசிலொ ருத்தனை
யேனுமென் மெய்த்துணை
யென்றுற வின்றருள்வீர்
பூசிய நீறுடை
யீருயர் பூரணை
புட்கலை தோள்புணர்வீ
ராசிரி யத்திர
ளூடுறு சீர்பெறு
மரிகர புத்திரரே.
(11)
வாலிய நீறுபு
னைந்தபி ரானும
ருண்டுறு கச்செயுநல்
லாலிநி கர்த்தசொன்
மோகினி தந்தரு
ளரிகர புத்திரைச்
சாலிநி கர்த்தவ
மேநிக ருஞ்சிறு
சங்கர னோதியபா
வேலியெ னச்சுக
மேபெரு கத்தகு
மிக்கப யன்தருமே.
(12)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக