வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
திருக்கண்ணபுரம்
திருமால் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
கண்ணபுரத் தானே கரிய திருமாலே
விண்ணவரைக் காக்கும் விறலோனே –
யெண்ணமுற்று
நீயறிவா யென்றே நினைக்கின்றே னின்னுளத்து
மாயமதைக் காட்டாதே வா.
பதிகம்
(கலித்துறை)
தேசி கரிலொரு வனெனத் திகழ்தர வேட்டுள்ளே
னாசியஞ் செய்வார்க் கிலக்கர் பலமா
லாங்கொல்லோ
வாசியு கைத்தும் பேடி வாழ்வுறக்
கண்டாண்டாய்
காசினி மெச்சிய சீர்கொள் கண்ண புரத்தானே.
(1)
குலங்க ருதிநலங் கருதிக் கூத்தா
டுமவர்பான
மலங்க லெய்தி நின்றிர வாவாழ் வருளவேண்டு
மிலங்கை மன்னன் றன்னைவதைத் திளையனெனக்
கைக்கொண்டாய்
கலங்கலி னீர்வாய் காட்டுங் கண்ண
புரத்தானே.
(2)
பாவிக ளேமலி தலினா றப்படி வருந்துநாளென
னாவி யினுக் குடல ளித்த தநியாயமன்றோ
சேவின மேழ்தழு வியொரு சேயிழை யைக்கொண்டாய்
காவிய மலர்த்தடஞ் சூழுங் கண்ண புரத்தானே.
(3)
அரங்கம திலுனை நாடி யாயிரம் பாச்சொல்கா
லிரங்கலு றாதிருந் துமின்ன மேன்றுதி
வேகின்றாய்
குரங்கனந் தம்பணி செய்யக் குரைகடன்
மேற்சென்றாய்
கரங்க ளிலைம்படை யேந்துங் கண்ண
புரத்தானே.
(4)
பாட்டு விருப்பா லொருவன் பகர்ந்த
படியோய்மீ
ளாட்டு நுவல்வே னையி வாறலக் களிக்கலாமோ
தாட்டு ணைத்தாண் டியற்றொரு வன்றனக்
காக்குடுமி
காட்டும் விளையாட் டுடைய கண்ண புரத்தானே.
(5)
மதிளே றிப்புற் கொய்வ ரனமா யாமலுயவா
னதிரோ சைப்புள் ளாசையனுப் பல்பொய்
யாதாள்வாள்
விதிமா றிப்பல வாறு வெம்பி நித்தித்தாற்குங்
கதி(யா) யீந்தபே ரருளர் கண்ண புரத்தானே.
(6)
துட்டர் குலமறக் களைந்துன் றொண்டு
செயச்சலியாச்
சிட்ட ரொடுகளி கூரச் சிந்திக் கைபிழையோ
வெட்டணங் கார்களு மன்றி யெண்ணின் மின்னாருருக்குங்
கட்ட ழகுமிக் குடையாய் கண்ண புரத்தானே.
(7)
இராகவ னென்ற விரந்தாற் போலிந் நாளோருருவந்
தார்தலத் திற்கொண் டானின் றண்ணருள்
குன்றிடுமோ
பாரவு மொருவே ழமுய்யப் பாழி யங்கையாழி
காரமிசை விட்டெறிந் திட்டாய் கண்ண
புரத்தானே.
(8)
தெய்வ மின்றென் றோதுமொ ருதிற்ற
கனகற்செற்றாய்
பொய்வழக் கர்பலர் வாழப் பொறுக்கும்
விதமென்னோ
மைவ ருங்குன் றாய்கு டைமழை தடுப்பக்கொண்ட
கைவலி மிக்குடை யாய்நங் கண்ண புரத்தானே.
(9)
பத்தடி யார்கவி மாலை பரிந்த ணியுநீயிப்
புத்தடியே னறுதி வேட்ட புதுமை யறிகில்லேன்
வித்தக ராமத வாதர் வெவ்வே றுவிதஞ்சொல்
கத்தரெ லாந்தா னேயாங் கண்ண புரத்தானே.
(10)
கங்கை வருதா ளானைக் கண்ண புரத்தானைச்
செங்கை குவிப்பது வேட்டுத் திருப்புக
ழோணுவல்பாட
டங்கை நெல்லிக் கனியே யென்றறி பவரியவருக்குஞ்
சங்கை யற்ற பேரின் பந்தருந் தருஞ்சத்தியமே.
(11)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக