புதன், 23 செப்டம்பர், 2026

சாத்தா அகவல் - வண்ணச்சரபர்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

சாத்தா அகவல்

கடல்வளைந் துடுத்த காசினித் தலைவா

ழடல்கெழு தேவ ரனைவர் தாமுஞ்

சிவகளை வென்றித் திருமால் களையென்

றவமில் சீர்ப்பெரி யோரறி யத்தோற்றலி

னவ்விரு களையு மமையு மும்மா

லெவ்வித நலனு மெய்தத் தகுமென்

றான்றநூல் பலவு மளவறப் புகன்று

மேன்றள வுரித்துற் றிறைஞ்சில னெனைநீர்

றாமே வலிதிற் றடுத்தெடுத் தெனது

பாமேல் விழைவுறு பண்பு காட்டிப்

பணிகொளல் விண்ணூர்ப் பண்ணவர் தாமு

மணிதர வேண்டு மாதலி னெனாது

பாக்கொடு நாளு பழிச்சுரர் தமக்கும்

வாக்கொடு திருவும் வழங்கி யப்பா

லறமு தல்பகர் வாம்பயன் நான்குந்

திறமு றப்பயற்சிற் செனிப்பறப் புரப்பீர்

பல்வகை நகரு பருப்பதத் திருளும்

செல்வழித் தொகையுந் திருக்குளக் கரையும்

வாரமி குள்ளார் மனந்தொறும் வைகிப்

பூரணை புட்கலை போகம் மாந்தி

யீடில்சீர்ப் புதல்வ ரிருவர்ப் பயந்து

கேடில்பல் கணமுங் கிளர்தரப் புரக்கு

மையனாரே யரிகர புத்திரச்

செய்ய நாமந் திகழ்குரு மணியே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக