வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
விக்கிரமபாண்டி
தமிழ் கொண்ட அரி பதிகம்
காப்பு
(வெண்டளைக்
கலிப்பா)
விக்கிரம
பாண்டியினில் வேமனன்கூட் டத்தொருவ
னிக்கினைநேர்
பாடலரிக் கின்னமுபா டென்றானான்
மைக்கிரிபோன்
றென்கனவில் வந்தாற் பகர்வனென்றேன்
றிக்கிலுள்ளார்
சொல்லுந் திருடனென வந்தானே.
பதிகம்
(எண்சீர்
ஆசிரிய விருத்தம்)
முக்கண்னான்
முகன்மகவான் முதலாந் தேவர்
முனிவர்மற்றும் மொழியவல்லார் மொழிப வெல்லா
மைக்கருமா
முகிலனைய தானே யென்றோர்
மன்னனுக்குப் போர்க்களத்தில் வகுத்த வாயான்
றிக்கறிய
வேடணைப்பேய் வசத்த னாகித்
திரிகின்ற வென்மனத்திற் சிறிது தோன்றித்
தக்கபுகழ்
விக்கிரம பாண்டி யூரிற்
றனைத்திருட னெனப்பகர்ந்துந் தமிழ்கொண்
டானே.
(1)
அண்டமுழு
துண்டுமிழ்ந்திட் டளந்து காத்து
மாய்ச்சியர்தம் தவப்பயனா லவரூர் மேவி
வெண்டயிர்பா
னெய்கவர்ந்துண் டறநூல் வேண்டா
விடன்போன்று மாடல்பல விளைத்த மூர்த்தி
மண்டலத்தில்
வள்ளுரமுந் தின்பா ரார்வம்
மலிநாளிற் பிறந்துமிக வருந்து மென்பாற்
றண்டலைச்சீர்
விக்கிரம பாண்டி யூரிற்
றனைத்திருட னெனப்பகர்ந்துந் தமிழ்கொண்
டானே.
(2)
இருநிலமும்
வானகமு மளந்த பொன்றா
ளேற்றமெனிற் சகியாரா யெரிபோற் சீறுங்
கெருவமுற்ற
பாதகர்க்கு முணவு நல்கி
கேடிலருட் கடல்விளைக்குங் கீர்த்தி யுள்ளோன்
பொருவில்சம
ரசநிலையிற் றோய்ந்து நின்றும்
புல்லர்நிந்தைக் கிலக்காகிப் புலரு மென்பாற்
றருமமலி
விக்கிரம பாண்டி யூரிற்
றனைத்திருட னெனப்பகர்ந்துந் தமிழ்கொண்
டானே.
(3)
அடமிகுவா
ளவுணருக்கு மரக்க ருக்கு
மந்தகனா யும்பருக்கு மறத்தி னோர்க்குந்
திடமுறுபே
ருரிமையுடைத் தாயாய்ப் பாருந்
திருமகளுங் களிகூரச் செய்யுஞ் செல்வன்
படவரவிற்
பொல்லாராய்ச் சமய வாதப்
படுகுழிவீழ்ந் துழைப்பவர்மேல் பகைக்கு
மென்பாற்
றடமதிளார்
விக்கிரம பாண்டி யூரிற்
றனைத்திருட னெனப்பகர்ந்துந் தமிழ்கொண்
டானே.
(4)
கரதலத்து
வில்லுமர வுரியுஞ் சாத்திக்
கன்னியொடு வனம்புகுந்து கருணை காட்டிப்
பரதனுவப்
புறும்நிமித்த முடியுஞ் சூடிப்
பார்புரந்த பெரும்புகழும் படைத்த கோமான்
விரதநெறி
தொட்டுநெடுங் கால மாயும்
விரும்பியபே றடையாமல் வெதும்பு மென்பாற்
சரதர்வளர்
விக்கிரம பாண்டி யூரிற்
றனைத்திருட னெனப்பகர்ந்துந் தமிழ்கொண்
டானே.
(5)
வரையெடுத்துக்
குடைபிடித்தும் பசுக்கட் கின்பம்
வழங்கியதோர் பெருங்கருணை மனத்துள் வாய்ந்து
நிரைநிரையாக்
கொன்றருந்தும் பொல்லா ரிந்நா
ணிலம்புரக்கக் கண்டிருக்கு நீல மாயோன்
புரைதவிரட்
டாக்கரத்தின் முதற்கைக் கொள்வார்
புகலுநெறி யனைத்தினுக்கும் பொதுவா மென்பாற்
றரைபுகழ்சீர்
விக்கிரம பாண்டி யூரிற்
றனைத்திருட னெனப்பகர்ந்துந் தமிழ்கொண்
டானே.
(6)
பலிவேண்டும்
பார்ப்பனச்சேய் வடிவங் கொண்டு
பார்க்கவன்கண் கெடுத்துமகா பலியை யாண்டு
நலியாது
விண்ணவர்கோ னுவப்பச் செய்தோர்
நல்லவிள வரசாகி நணுகு நாத
னொலிநீர்த்தண்
கடலல்லிக் கேணி யூரி
லுதவியசீட் டினைமறந்தா னொத்தென் றன்பாற்
சலியாது
விக்கிரம பாண்டி யூரிற்
றனைத்திருட னெனப்பகர்ந்துந் தமிழ்கொண்
டானே.
(7)
மேனைமகள்
கேள்வன்முதற் றேவ ரெல்லாம்
வினைவியொல்கக் கணத்திலங்கு விரைந்து சென்றோ
ரானையினைச்
சக்கரத்தாற் புரந்து வென்றி
யவிர்தரச்சங் கூதுமவ னனந்தை யூரின்
மோனையுங்
குன்றாக்கவிதை யனந்தங் கேட்டு
மொழிதவறிச் செய்தவித முன்னா தென்பாற்
றானைதிகழ்
விக்கிரம பாண்டி யூரிற்
றனைத்திருட னெனப்பகர்ந்துந் தமிழ்கொண்
டானே.
(8)
ஓராமற்
றன்பெயரே யுலக மெல்லா
முரைக்கும்வண்ணந் துயர்செய்தா னுறுக்க
நொந்து
நாராயணா
முகுந்தா வென்று கூவோர்
நன்மகற்காத் தூணில்வந்த நளினக் கண்ணா
னாராதித்
துருகேனை வலிதாட் கொண்டன்
றருள்புரிந்தும் புரியான்போன் றலைத்தா
னின்று
தாரார்ந்த
விக்கிரம பாண்டி யூரிற்
றனைத்திருட னெனப்பகர்ந்துந் தமிழ்கொண்
டானே.
(9)
அங்கமறைத்
தலைப்பொருளைத் தமிழாற் சொன்ன
வருட்குருகூர்ச் சடகோப னாதி யாய
புங்கவர்சொல்
பாடல்பல புனைந்தும் பொல்லேன்
புன்சொல்விழைந் தாடல்பல புரிவா னிந்நாள்
பங்கவய
லிடைவரம்பிற் றடத்தின் முன்றிற்
பாளையடி யினிற்றெருவிற் பருமுத் தீன்று
சங்கலம்பும்
விக்கிரம பாண்டி யூரிற்
றனைத்திருட னெனப்பகர்ந்துந் தமிழ்கொண்
டானே.
(10)
வடகலைதென்
கலைப்பிணக்கும் மண்ணீ றென்னும்
வழக்குமொன்றா யறுவர்கொள்ளு மறையோர் நான்குங்
கடனிறத்தோன்
மகன்சொலெனத் தெளிந்த நெல்லைக்
கரடகொம்பன் புளியடியோன் கனவிற் சொன்ன
மிடலுறுசொற்
பலித்திடல்வேட் டுழைக்கு நாளில்
விக்கிரம பாண்டியினில் விளம்பிப் பாட
லடல்கெழுசத்
துருநாச முதலா மின்ப
மனந்தம்விளைத் திடுந்துதிக்கு மன்பி னோர்க்கே.
(11)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக