தவத்திரு
கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த
பழனியாண்டவர்
திருப்பள்ளியெழுச்சி
வாழியெங் குடிமுழு
தாண்டுமெய் ஞான
வாழ்வினி லமைந்திட வரம்பில்மெய் யருளால்
ஊழிகள் தோறுநின்
றொளிர்தரு மகிமை
வுடையவ னே!யயிற் படையணி வோனே!
பாழிநன் மான்மிய
மிகப்பொலிந் திலங்கு
பழனியங் கிழித்தண்ட பாணியெம் பரனே!
யேழிசை மறையொளி
யேற்றருள் புரிய
யெம்பெரு மான்!பள்ளி யெழுந்தரு லாயே!
(1)
கொங்கவிழ் கூதளங்
கடம்பல ரலங்கல்
கொற்றவை வேற்படை குலவுதிண் புயமுஞ்
செங்கரத் திசையணித்
தண்டமுந் தொடையிற்
றிகழ்திருக் கையுடன் சிலம்புகிண் கிணிசொல்
பங்கயப் பதங்களுந்
துலங்கிடுங் கவினார்
பழனியங் கிரித்தண்ட பாணியெம் பரனே!
யெங்கண்முன் கண்டுமெய்
யின்பமெய் துறவே!
யெம்பெரு மான்!பள்ளி யெழுந்தரு லாயே!
(2)
சேவலங் கொடிசெய
செயவென வோதித்
தீரகௌ
மாரமெய்த் திருப்பெருந் தொண்டர்
ஆவல்கொண் டுலர்மணிப்
பணிசெழுந் தேன்பா
லாட்டியுஞ்
சூட்டியு மருள்பெற விழைந்தார்
பாவலர் புகழ்சிறப்
பணிநிறைந் தோங்கும்
பழனியங்
கிரித்தண்ட பாணியெம் பரனே!
ஏவலிட் டெந்தமை
யாண்டுகொண் டிடவே
யெம்பெரு
மான்!பள்ளி யெழுந்தரு ளாயே!
(3)
குணக்கிசை திசையினி
லிரவியின் கதிர்கள்
குலவிய
திருள்வலி குலைந்தென வெம்மை
உனக்கிடு மும்மல
வலியொழித் தின்ப
வுததியி
லாழ்த்திட வுளங்கரு திடுவாய்!
பணக்கவின் சேடனுச்
சியின்மணி போலும்
பழனியங் கிரித்தண்ட பாணியெம் பரனே!
இணக்கமிக் கெம்விழிக் கோர்மணி யாகும்
யெம்பெரு
மான்!பள்ளி யெழுந்தரு ளாயே!
(4)
புள்ளிசை யெங்கனும்
பரந்தன வுடுக்கள்
பொலிவிழந் தகன்றன பொங்குவெண் சங்கம்
துள்ளிசை மங்கள
மிகவொலித் திட்ட
தோடக மணம்திசை தொறும்நிறைந் திட்ட
பள்ளிசை நிறையணிப்
பழனங்கள் பொலியும்
பழனியங் கிரித்தண்ட பாணியெம் பரனே!
எள்ளிசை தயிலமொத்
தெங்கணும் நிறையும்
யெம்பெரு மான்!பள்ளி யெழுந்தரு ளாயே!
(5)
உதயவெற் பின்றிறம்
போன்றெது நாளு
மொருகணப் போதொழி யாமலிங் கடியேம்
இதயவெற் பூடிசைந் தோங்கறக் கருணை
யிலங்கிடுந் திருவரு ளிசைவடி வோனே!
பதமலர் பெறுந்திருத்
தொண்டடி யவர்சூழ்
பழனியங் கிரித்தண்ட பாணியெம் பரனே!
இதமிக யெமைப்பணித்
தெழுப்பிய வருட்சீர்
யெம்பெரு மான்!பள்ளி யெழுந்தரு ளாயே!
(6)
மதுமலர்ப் பொழில்மலி
கிரிதொறும் ஞான
மணங்கமழ்ந் திடுதிரு மேனிகொண் டென்றும்
புதுமைமிக் கமையரு
ளாடல்க ளியற்றிப்
பூதலம் பாதலம் புரந்தருள் முதல்வா!
பதுமன்வந் தனைவழி
பாடுகொண் டவிரும்
பழனியங் கிரித்தண்ட பாணியெம் பரனே!
இதுதின மெமக்கருள்
முதுதின மாக
யெம்பெரு மான்!பள்ளி யெழுந்தரு ளாயே!
(7)
மருவருட் கற்பகத்
தெய்வகுஞ் சரியும்
வள்ளியு மின்புற மருவிய ஞான
குருவருள் மேனிகொண்
டன்பரை யாளுங்
குணக்கட லே!திரு வருட்பெருங் குன்றே !
பருவதத் தொகைகளில்
மிகைபடு மணிசால்
பழனியங் கிரித்தண்ட பாணியெம் பரனே!
இருமையும் பெறயெமக்
களித்தருள் புரிய
யெம்பெரு மான்!பள்ளி யெழுந்தரு ளாயே!
(8)
சத்தியங் கைவிடு
கிலனுமை யெனல்போல்
சத்தியங் கையினிற் றரித்தருள் ஞான
சித்தியிங் களவறப்
புரிந்தெது நாளுந்
திசையிசை மானிடர் திரள்களை யெல்லாம்
பத்தியிற் பழக்கியங்
கவர்மனங் கவரும்
பழனியங் கிரித்தண்ட பாணியெம் பரனே!
எத்தியக் கங்களு
மின்றுடன் நீங்க
யெம்பெரு மான்!பள்ளி யெழுந்தரு ளாயே!
(9)
வாகைமிக் கிசைதருங்
கோழியங் கொடியும்
வரம்பில வாமண்ட வகைமுழு தடக்குந்
தோகையும் வாழியென்
றேத்துகௌ மாரத்
தொண்டர்கட் காம்பெருந் துணைப்புக லோனே!
பாகையொத் தியல்மொழி
மங்கையர் நடஞ்சால்
பழனியங் கிரித்தண்ட பாணியெம் பரனே!
ஈகைமிக் கிசையுநின்
கைவளங் காட்ட
யெம்பெரு மான்!பள்ளி யெழுந்தரு ளாயே!
(10)
முக்கனி ரசமு
மமிழ்தமுங் கூட்டும்
முறையினு மிகச்சுவை முதிர்தரு மின்பம்
மிக்கவர் தருமரு ணாசல நாதன்
விளம்பிசைத் திருப்புகழ் வளம்படைத் தோங்கும்
பக்கமுற் றியவொளி யெங்கணு முழங்கும்
பழனியங் கிரித்தண்ட பாணியெம் பரனே!
இக்கரை யிசைந்துநின் றக்கரை யெற்றும்
யெம்பெரு மான்!பள்ளி யெழுந்தரு ளாயே!
(11)
கடைப்படு பிறவிக
ளடைந்தள வற்ற
காலமும் வீணினிற் கழித்திடு மெமக்குக்
கிடைப்படு மானிடப்
பிறவிதந் திடுநின்
கிருபையைக் கருதியுட் கிளர்ச்சிமிக் கெய்தப்
படைத்தநின் றிருவருட்
கேதுகைம் மாறே!
பழனியங் கிரித்தண்ட பாணியெம் பரனே!
இடைப்பட லற்றமெய்
யன்பருக் கருள்வாய்!
யெம்பெரு மான்!பள்ளி எழுந்தரு ளாயே!
(12)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக