தவத்திரு
கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த
விநாயகப்
பெருமான் மழைப்பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
தழைப்பதிகம்
பெற்றுத் தரணியெங்கும் வாழ
மழைப்பதிக
மொன்று வகுத்தே – னுழைப்பதிகம்
பெற்றதொண்டர்
வாக்கிலென்சொல் பேணுமிரா மானந்தக்
கொற்றவன்றா
ளென்னுட் குறித்து.
பதிகம்
(கொச்சகக்
கலிப்பா)
மைக்கண்
ணிந்திரன்செய் மலர்வனங்கா யாதுகும்பன்
கைக்கரகங்
கவிழ்த்தருளைங் கரமுடைய காரணனே
துக்கமிக
வாடுமுயிர் சோகமற மிக்கவின்பம்
புக்கமைய
யின்றுமழை பொழியவருள் புரிவாயே.
(1)
நன்கமையௌ
வையைச்சேரன் னம்பீயா ரூரன்முனங்
கொன்கயிலை
வுறவிடுத்த குஞ்சரமா முகத்தரசே
வன்கலிநோய்
மிக்குயிர்கள் வாழ்க்கைவெறுத் திடப்புரியும்
புன்கணற
யின்றுமழை பொழியவருள் புரிவாயே.
(2)
கணபதியின்
பூசைநலங் கைம்மிசையுண் டாகுமெனக்
குணமுடையோர்
கூறவருள் குஞ்சரமா முகத்தரசே
யிணரெரியின்
மிக்குயிர்கட் கின்னல்புரி கலிதீரப்
புணரியுடைப்
புவியில்மழை பொழியவருள் புரிவாயே.
(3)
அற்றமிலாப்
பெருந்துயரத் தழுஞ்சோம காந்தனெனுங்
கொற்றவற்கன்
பீந்தருளுங் குஞ்சரமா முகத்தரசே
வுற்றவெயிற்
புழுவேபோ லுயிர்கள்படுந் துயரறநின்
பொற்றடங்கை
போன்றுமழை பொழியவருள் புரிவாயே.
(4)
நலமலியுங்
கபிலமுனி நற்றவத்தா லுருக்கொடவன்
குலமணியை
யீந்தணிந்த குஞ்சரமா முகத்தரசே
புலம்வறும்பா
ழாய்விதையு பொன்றலின்வான் நோக்கினர்கட்
புலங்குளிற
யின்றுமழை பொழியவருள் புரிவாயே.
(5)
மாமலரவா
முருககொடியருள் வனத்தமைகாற் றோன்றியவன்
கோலமளித்
தாண்டருளுங் குஞ்சரமா முகத்தரசே
ஞாலமிசை
வருந்துயிர்கள் ஞானவருள் நிறைவுபெற்றோர்
போலமகிழ்ந்
தேத்தமழை பொழியவருள் புரிவாயே.
(6)
வேதமிசைத்
திடப்புகுந்த மிக்கவனுட் சார்மருட்சிக்
கோதகற்றி
யாட்கொண்ட குஞ்சரமா முகத்தரசே
பாதகவெஞ்
சுரத்தினிடை பட்டயரும் பண்பமைந்த
பூதலத்தோர்
குளிரமழை பொழியவருள் புரிவாயே.
(7)
அயன்றவத்தாஞ்
சித்திபுத்தி யணங்கினர்பொன் னலசநிகர்
குயம்பொருந்தும்
புயம்பொருந்துங் குஞ்சரமா முகத்தரசே
கயம்பொருந்துங்
கொடியர்செயற் கணிக்காதுன் றிருப்பாதம்
புயம்பொருந்தன்
பருக்குமழை பொழியவருள் புரிவாயே.
(8)
அவிர்புகழ்தோய்
நம்பியாண் டார்நம்பி யாவலொத்துக்
குவியுணவைக்
கணத்துண்ட குஞ்சரமா முகத்தரசே
யவியுணவு
கொள்வார்க்கு மாதார மாகியுற்ற
புவியிலுளோர்
களிப்பமழை பொழியவருள் புரிவாயே.
(9)
செழியபுகழ்
மெய்கண்ட தேவனருள் ஞானமுறக்
கொழியருளாற்
கவிமொழியுங் குஞ்சரமா முகத்தரசே
யிழிதகையே
னென்னாவி னிடமிருந்தின் பாவின்மழை
பொழிதகையைப்
போன்மழையும் பொழியவருள் புரிவாயே.
(10)
பாலிழந்த
வானினங்கள் பவிசிழந்த வான்மாக்கள்
கோலிழந்தார்
மன்னவருங் குஞ்சரமா முகத்தரசே
நூலிழந்தார்
தம்மகட்டில் நுழைந்தமகன் றன்னாண்மை
போலியல்பொய்
யாமல்மழை பொழியவருள் புரிவாயே.
(11)
நூற்பயன்
(நேரிசை
வெண்பா)
ஓர்பதிகஞ்
சொல்லி னுடனே மழைவருமென்
றார்வமுட
னோர்சேய் யறைந்ததுநின் – சீர்மொழியென்
றோது
பதிக முலகமுண ருண்மைபெறப்
போதுமென்ன
மாரி பொழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக