புதன், 23 செப்டம்பர், 2026

கண்டனூர் குமரவேள் சட்கம் - வண்ணச்சரபர்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

கண்டனூர் குமரவேள் சட்கம்

காப்பு

(நேரிசை வெண்பா)

கண்டனூர் வாழுங் கருணா கரக்குமரன்

றொண்டரியா மென்றுசும்மா சொல்வோர்க்கும் - விண்டலத்தோர்

வாழ்வெய்து மென்றால் வழிபாடு செய்வார்க்கோர்

தாழ்வெய் துமோகுரு நாதா.

 

நூல்

(அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

கனிச்சீருங் குற்றெழுத்துத் தனித்துவந்த முதலசையுங்

            கலப்ப வெண்பாத்

தொனிப்பேத முணராமற் பிதற்றலுங்குற் றியலிகரத்

            தோற்றங் காணா

தினிப்பாருந் தமிழ்கவிஞர்க் கிழச்சிகூற்றும் பிறவுமே

யந்தோர் சென்னி

குனிப்பாகத் திருவருட்பே றளித்தருள்வாய் கண்டனூர்க்

            குமர வேளே.

(1)

அலகிலவாம் வேதத்து மாகமத்தும் விரித்துரைத்து

            மடங்கா வண்மை

புலவதிவர் கானாகு முனையிகழ்ந்து சிற்றுயிரைப்

            பொருளென் றோதிக்

கலகமிடு வோர்க்கிகலரங் கவுமாரச் சித்தர்களைக்

            கருதி வாழ்வோர்

குலமகிழத் திருவருட்பே றளித்தருள்வாய் கண்டனூர்க்

            குமர வேளே.

(2)

புலையமணர் நூல்கருதிக் கலகலெனுக் குளறுவது

            புலமை யல்லத்

தலைவனையுந் தன்னையுந்தேர்ந் ததுக்கிரக நிக்கிரகத்

            தன்மை யோங்கு

நிலையினின்று களிகூர்ந்து துதிகூற லாகுமென்போர்

            பேய வாய்மை

குலைதலுறாத் திருவருட்பே றளித்தருள்வாய் கண்டனூர்க்

            குமர வேளே.

(3)

மாதுகர மாதியநன் னிலையினின்று முழுநீற்று

            வடிவ ராகிப்

போதுகொடு கதிர்வேலைப் பூசித்துச் சமரசச்சீர்ப்

            பொருத்த மேவித்

தீதுடையார் மதமழிய விளையாடு தொண்டரொடு

            சேரு மாறு

கோதுபடாத் திருவருட்பே றளித்தருள்வாய் கண்டனூர்க்

            குமர வேளே.

(4)

நீறணிந்தோ ரியாவருநின் றொண்டரென வேகருது

            நினைவுஞ் சந்தச்

சேறனையு முலைமடவார்க் காளாகிப் பாதவியர்த்

            திறலுந் தெண்ணீ

ராறமர்ந்த சடையுடையான் பெருவாழ்வும் பொருந்தலுற்றோ

ரன்றி  யாருங்

கூறரிய திருவருட்பே றளித்தருள்வாய் கண்டனூர்க்

            குமர வேளே.

(5)

விழுவில்சந்தத் தமிழ்பாடுந் திறலுமெல்லாச் சித்திகளு

            மருவப் பெற்றுப்

பழுதறுமெஞ் ஞானசுகப் பேரின்ப மூழுதயின்

            றுன்பதும் பாதந்

தொழுமவர் தம்மடிமை யாய்க்களிகூர்க் குறுமுனிவன்

            றொன்மைக் குன்றிற்

குழுவினர்சேர் திருவருட்பே றளித்தருள்வாய் கண்டனூர்க்

            குமர வேளே.

(6)

நூற் பயன்

கண்டனூர் வளர்கந் தனுக்கா கநரன்

விண்டதா டும்வியன்ற மிழ்ச்சட்கமீ – தண்டர

கோனுருவாய் பின்மா னிடங்கொண்ட மேலவர்

கொள்ளு வதரம ரோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக