வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
நெல்லை
மழைப்பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
தழையுங்
கடப்பமலர்த் தாரணிந்த வேளை
மழைபொழியச்
செய்யும்வண்ணம் வாழ்த்தக் – குழையுநெடுங்
கையா
லொருத்திகயி லையுறச் சேர்த்தருளு
மெய்யானைப்
போற்றுகின்றோ மே.
பதிகம்
(கொச்சகக்
கலிப்பா)
தொண்டர்வாய்
மொழிசிறிதுஞ் சோராது புவியிடத்துக்
கண்டருளு
புகழ்ப்பேறுங் கதிர்வேலு முடையானே
யண்டர்களு
பெரிதேத்து மருணகிரி முதலானோர்
வண்டமிழ்ப்பாட்
டொலிபோலு மழைபொழியப் புரிவாயே.
(1)
நஞ்சணிந்த
மிடறுடையா னடுமார்பி னடமாடுஞ்
செஞ்சரணத்
துணைநோவச் சிகரியெங்குந் திரிவோனே
பஞ்சவித
மானபெரும் பாதகங்கட் கிருட்பிடமாம்
வஞ்சகருக்
கஞ்சாது மழைபொழியப் புரிவாயே.
(2)
கானவர்தம்
புனத்திருந்த கரியகுயி லனையாள்பால்
போனவிதம்
பகர்ந்தேத்தும் புலவர்களுக் கினியோனே
யீனமில்சீர்ப்
புவியிடத்தி லிருப்பவரு மிமையாத
வானவருங்
களிகூற மழைபொழியப் புரிவாயே.
(3)
தென்னவன்றன்
முடிசூடிச் செண்டேந்திச் சிவன்வாழும்
பொன்னசல
நடுநடுங்கப் புடைத்துயிர்கட் புரந்தோனே
பன்னரிய
வளமோங்கும் பார்முழுதும் பரிந்தாளும்
மன்னவருக்
கடங்காத மழைபொழியப் புரிவாயே.
(4)
கூடாருக்
கெமனேபோற் குலவுதிறற் கவுமாரர்
வீடாய
திருவடியில் வெட்சிமல ரணிவோனே
மாடாள்வா
ருழுதுமிக வருந்தியிட்ட பயிரெல்லாம்
வாடாது
விளையும்வண்ண மழைபொழியப் புரிவாயே.
(5)
பாநிகழ்த்தி
யாறெழுத்தும் பகர்வாரை யிகழ்தீயோர்
தாநினைத்தற்
கரிதாய தனிவிளையாட் டுறும்வேலா
தூநிறத்து
நீறணிந்த தொண்டர்முதற் பலர்வாழு
மாநிலத்து
மிடிதீர மழைபொழியப் புரிவாயே.
(6)
கொழிதமிழ்ச்சீ
ருணர்வாருங் கொல்லாத விரதியரு
மழிவறுமெய்ப்
புகழ்தோய்வுற் றளிகூரச் செயுமுருகா
பழிசுமத்தற்
கஞ்சாத பறிதலைச்சா ரணர்தம்மை
வழிபடுவா
ரிகழாமே மழைபொழியப் புரிவாயே.
(7)
காழிமா
நகரிடத்துக் கவுணியனா மெனத்தோன்றி
யாழிசூழ்
புவிமுழுது மறியநல மமைத்தோனே
கோழியேந்
தியகரத்துக் குமரகுரு பரநாதன்
வாழியெனப்
பலர்கூற மழைபொழியப் புரிவாயே.
(8)
சூரனா
தியகொடியோர் துடிதுடிக்கச் சமராடும்
வீரவேற்
படையேந்தி வியன்கலப மயிலூர்வாய்
பாரதனிற்
பல்லுயிறும் பசிநோயாற் றளராமல்
வாரணத்தின்
றுதிக்கைபோன் மழைபொழியப் புரிவாயே.
(9)
செம்பதும
மலரோனுந் திருமாலு மனநாண
வும்பருடற்
பொடிபூண்டார்க் கொருமாற்ற முரைத்தோனே
யெம்பணுவற்
பொருட்டின்னே யிரங்கியெம திகலோராம்
வம்பரஞ்சத்
தக்கபெரு மழைபொழியப் புரிவாயே.
(10)
அன்பரகத்
தெண்ணியவா றருட்குரவன் வடிவாகி
யின்பநலங்
கொடுத்தாளு மிருமூன்று முகத்திறைவா
துன்பமிகு
மிடிக்கனலாற் சூடுண்டு சுழல்கின்ற
மன்பதைக்கோ
ருயிரான மழைபொழியப் புரிவாயே.
(11)
குழையிரா
றணிந்தசெவிக் கொற்றவனாங் குருபரனைக்
கழைவனத்து
முழுநீற்றுக் காரனென்னுங் கவிப்புலவன்
மழைபொழியப்
புரியென்று வழுத்தியபாப் பதினொன்றும்
பிழைதவிரத்
தினந்தோறும் பேசுநலம் பெரிதாமே.
(12)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக