தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச் செய்த
சமயாதீத தனிக்கவிகள்
மெஞ்ஞான
விருப்பத்தோர்க்கு விளக்குவது
பின்வருங்
கவிகளின் பயனை யூன்றி விசாரிக்கவும்.
(வெண்பா)
கலைமான்மா தங்கமுங் காணரிய விட்டி
றலையான தேனீ சலமீ - னிலையான
வைம்புல னொவ்வொன்றி லாவி யடங்குமெனின்
மொய்ம்புநரர்க் கென்னா மொழி.
(1)
முடிவி லெவைக்குமுர ணாவெளி யாகி
நடுவிலருட் சற்குருவா நண்ணி - யடியிற்
சராசரமாய் யாவையுந் தானாகி யெங்கும்
விராவியொளி யான வியன்.
(2)
ஆதிப் பொருளை யறிந்தே யடக்கமிலார்
சாதுவென்று சொல்லத் தகுதியோ - நீதி
யறியா முழுமூடர் நெஞ்சிரக்க மில்லார்
வெறிநா யனையார்சொல் வீண்.
(3)
பெரியோரைத் தூடணிக்கும் பேதைமதி
யுற்றா
ருரியோரென் றுண்ணுநல மோதிற் - கரிவால்விட்
டூழமிடு நாய்வா லுயர்வென்று பற்றிநதி
யாழங் கடத்தலொக்கு மாம்.
(4)
ஆலயம் போற்றனன்றென்
றௌவைசொன்ன வாக்கியத்தைப்
பாலியத்தி லேபடித்த பாவி நீ – யாலயத்திற்
பூசிக்கு நல்லோரைப் புண்ணியரென்
றுன்னாமற்
றூசிப்ப தென்னடா சொல்.
(5)
குமரன் குழந்தை யுருவாக் குலவி
யமரருங் காண்டற் கரிதாய்த் - திமிரமறச்
செய்த திருநடமென் சிந்தை யறியுமன்றிப்
பொய்ய ரறியாப் புகழ்.
(6)
எல்லிநீ யேகாதே யின்பா யிருதயத்திற்
றல்லி யிருக்கத் தயக்கமேன் - சொல்லிலொன்றை
கோடி வெளிதன்னை நுண்மையா யெப்போதுஞ்
சூடினா லுண்டு சுகம்.
(7)
(கலி
விருத்தம்)
இல்லறம் துறவற மெனுமி ரண்டினி
லில்லறம் புல்லரு மிகழ்வி லாததாம்
வல்லதோர் துறவுநீர் மாசு லாததா
யெல்லவன் போலுட லிலங்குந் தன்மையே.
(8)
(கலித்துறை)
உண்மை யாகுநற் றீரத்தில் உளபடி
முழுகித்
தண்மை யாகிய மணியொடு சாந்தநீ றணிந்து
வண்மை யாகிய மெய்யடி யார்குழு மருவி
வெண்மை யாகிய மனத்தனா வாழலென் விருப்பே.
(9)
ஈது சத்திய மல்லது பொய்மையென் றறிவீர்
வாது பேசிட வாய்துடிப் பதுபெரு
வம்பாங்
கோது தீர்த்திடு தேசிகன் குறிவழா
ததனைப்
பாது காத்திட லுத்தமர்க் காகுநற்
பண்பே.
(10)
குவல யத்தினின் மானிட தேகமாக் குறுகிச்
சவலை நெஞ்சமோ டுலகெலாஞ் சுழன்றிட
றகுமோ
திவலை யொன்றள வேனுமன் புள்ளவர்ச்
சேர்ந்து
கவலை யோடிடக் கற்பது கடமையாங் கண்டீர்.
(11)
தூய கங்கையிற் குளித்துநல் லமுதமே
சுவைப்போன்
றீய தோர்புழைக் கடைத்தண்ணீர் குளித்துபின்
தேடி
வாயி னான்மலம் புசித்திடல் வழக்கமோ
விதுதான்
ஞாய மோவித னுண்மையை யுலகர்கா ணவில்வீர்.
(12)
சாது சற்சனர் வாழிடந் தன்னையே தருக்காற்
றீது செய்திடுந் தீயரைக்க றுவியுந்
திகைக்க
நீதி யேபுரி நெஞ்சினர் நீங்கிடா
துமையைப்
பாதி கொண்டவன் பங்கயப் பதத்தினிற்
படிவார்.
(13)
(கட்டளைக்
கலித்துறை)
ஒருமூர்த்தி யேயுல கெங்கணு மாகி
யொளிருமற்றை
வருமூர்த்தி யாகக் கருதுவர் சிந்தை
மயக்கமல்லாற்
பெருமூர்த்தி வேறிலை யென்றறி வார்க்குப்
பிறப்பறுமெய்
தருமூர்த்தி யுண்மைக் குருமூர்த்தி
யென்பது சத்தியமே.
(14)
ஓங்கார வட்டத்து ளோர்மூர்த்தி தன்னை
யுறுதியுட
னீங்காது நெஞ்சி லுருவாகப் பாவித்து
நிற்பவருக்
காங்காரத் தோடைம் புலவேடர் செய்யு
மவத்தையில்லை
சாங்காலம் மில்லை பிறப்பில்லை யென்பது
சத்தியமே.
(15)
குன்றே யனைய பவச்செல்வந் தன்னிற்
குழம்பிடுவார்க்
கொன்றே பலதெய்வ மானதென் றோதி யுறுத்திடினு
நன்றே யெனக்கொண் டுறுதிவை யாரவர்
நாரியரைத்
தன்றேவெனக் கொள்வர்க்
கோதுதல் வீணென்கை சத்தியமே.
(16)
நானே பிரமமென் றோதிடுவார் கண்முன்
னதளிலவ
ரேனோ தவஞ்செயற்
கொல்கிய பேர்களென் றெண்ணியன்னோர்
பானேய நீங்கலல் லால்வா தவருடன்
பண்ணலும்விட்
டானேறு வான்முதற் றெய்வவுருச் சிந்தை
யாகச்செய்யே.
(17)
பானு நடுவிற் குருவாக வெண்ணிப்
பகலிரவு
நானென தற்றிடச் சிந்தைசெய் வார்களை
நண்ணுமுயர்
வானும் புகழுமிவ் வையமுந் தாழு
மறுக்கரிய
தேனுங் கைப்பாம்பர மானந்த வாரியிற்
றேக்குவரே.
(18)
எந்தை யென்றேநித முள்ளும் புறம்பு
மெழிலுருக்கண்
டந்தமி லானந்தக் கண்ணீர் சொரிந்தழு
தன்பொடுதன்
சிந்தை யடங்கச் செயுந்தவ மேமெய்
செருக்ககலா
நிந்தைகொள் பொய்த்தவம் வீணாகச்
செய்யு நெடுந்தவமே.
(19)
தாயற்றுப் பெற்றவத் தந்தையு மற்றுச்
சகோதரருஞ்
சேயற் றடைந்திட்ட செல்வமு மற்றுச்
சினந்துழறும்
வாயற்றுப் பெண்ணுமண்
ணாசையற் றெங்கணும் வாங்கித்தின்று
பேயொத் திருப்பவ ரெங்கினுங் காண்பர்
பெருவெளியே.
(20)
மடக்கு
அணங்கினைக் கண்டே யடிமலர் போற்றின
னப்புறம்போ
யணங்கினைக் கண்டே
யணங்குகொண் டானவ்வணங்கறிந்து
ளணங்குகொண் டாளவ் வணங்கத னாலவ்
வணங்குசெய்தா
னணங்குதன் னாற்கண் டணங்குசெய் யாரணங்
காலவரே.
(21)
வியப்புக்குறி
அத்தி யுடுத்த புவிமீதிற் கண்ட
வதிசயங்கேண்
முத்த நகைகொண் டரவை யிடையின் மூடியலர்
பைத்த கைமார்பினி னாயேறப் பார்த்தும்
பயமின்றியே
செத்தகு ரங்கைத் தலைமீது சூடினள்
சேயிழையே.
(22)
(அறுசீர்
விருத்தம்)
அறைவே னீங்களெனை யடுத்தே
யலைக்காதுங் கட்கான வொன்றை
மறைவா சகத்திற்கெட் டாத
மாதேவன் றன்னடி பற்றிக்
குறையாமனங் கொண்டெது வரினும்
குன்றாவறி வோடுறை வீரேன்
முறையா முத்திவீ டெளிதா
முடியாத தொன்றுமுமக் கிலையே.
(23)
விள்ளற் கரிய வுயர்ஞான
விருப்பமு டையோர் மேவுவதற்
குள்ளமத னிற்பொய் யுறவை
யொருங்கு விடுத்தே யுவகையொடு
வள்ளற்குரிய வாக்கி யத்தை
மாறாதே தம்மனத் தழுத்தில்
கொள்ளக் கிடையா வானந்தங் கு
றையா தென்றுநிறை வாமே.
(24)
இந்த நிலைமை தனைமாறா
திருக்க வென்றே யிறைவனடி
சொந்த மாக நாடிநிதம்
தொழுவே னல்லால் வேறில்லை
பந்த மறவேண்டி ரிதனைப்
பற்றில் வினைகள் பாழாகு
மெந்த வகைசெய் திடினும்பி
னிதுவன் றியினு முடியாதே.
(25)
உய்ய வேண்டி யாவல்கொண்டோ
ருறுதி யாகப் பற்றிநிற்பர்
வைய வாசை தனில்நிதமும்
மயங்கு வோர்க்கு விளங்காதே
யையன் மூன்று கண்ணுடன்வந்
தருளே தரினு மவர்மனது
பொய்யை நாடிப் புகுமல்லாற்
போத நெறியிற் புகுதாதே.
(26)
வீணே யவர்க்குச் சொல்வதெலாம்
விழலுக் கிறைத்த நீரொக்குந்
தூணா யினுந்தொட் டார்க்குள்ள
சுமையைத் தாங்கு முலகவர்கள்
காணா விடத்திற் புறங்கூறி
கண்டா லுரிமை தனைக்காட்டி
நாணா துறவு கொள்வோர்க்கு
நவின்றாற் பயனு நணுகாதே.
(27)
(வேறு)
பலபலவா விரித்துரைக்கில் பயனில்லை
யறிவுள்ளீர்
பகரக் கேண்மோ
உலகசுக மிதுவரையும் பார்த்ததுவே
போதுமென்ற
னுணர்வை மாற்றிக்
கலகஞ்செய் திடநினையா தென்றனைநீர்
கருணையொடு
காப்பீ ரென்று
நலமருள்வான் பதத்துணையை நாடியருள்
பெறில்யார்க்கு
நன்மை தானே.
(28)
இன்போடு பணிவோர்க ளெண்ணமெல்லா முடிக்கின்ற
யிறைவற் கென்று
மன்போடு முரிமையொடு மறிவோடுந் தொண்டுசெயி
லடுத்து வந்த
துன்போடு மெய்யிலுற்ற பிணியோடு
மிடையூறுந்
தூர வோடு
மென்போடு பாம்பணிந்த விறைவனது பதத்தாணை
யினிது வாழ்வீர்.
(29)
சன்மார்க்கத் தோர்களடி தாழ்ந்திறைஞ்சிச்
சாற்றுகின்றேன்
றக்கோர் கேளும்
புன்மார்க்க மாகவே பொறாமையொடு கெடுதிசெயும்
பொய்யும் நீக்கி
கன்மார்க்க மனம் கரைத்து,
கடவுள் அடி
எப்போதும் கருத்துள் கொண்டால்
நன்மார்க்கம் ஆனமுத்திக்கு இது
பாதை;
இறை ஆணை; நம்புவீரே.
(30)
(வேறு)
எந்தப் புத்தி யுடையோரு மேனோ மாற்றார்
சொற்கேட்டு
சொந்தப் புத்தி யிழப்பாரேற் றுக்கக்
கடலிற் றோய்ந்திடுவார்
மந்தப் புத்தி யுடையோரு மாற்றான்
சொல்லை மறுப்பாரே
னிந்தைக் கடலை நீந்தியவர் நெடிது
வாழ்வார் நிச்சயமே.
(31)
(வேறு)
காமாலைக் கண்ணுடையோர் கதிரோனை மஞ்சணிறங்
காணு மாபோற்
சாமாறு விரைந்துசெலுஞ் சண்டிகட்கு
ஞானிமொழி
சரியா காது
பாமாலை யொடுகண்ணீர் மாலைதனைக் கோத்தணியும்
பக்கு வத்தோர்
சேமேலே யெதிர்வருவோன் வார்த்தைீயென
வன்போடு
செவிசாய்ப் பாரே.
(32)
(வேறு)
நித்யகல் யாண னான நின்மலன் றன்னைச் சூழ்ந்த
பத்தர்கண்,
முத்தர்க் காகப் படைத்தமூ விதப்ப தார்த்த
நத்திடா தருந்தி யப்பா னகட்டினா
ருலகி லுள்ளோர்
கத்திடு நாய்போ லெச்சிற் கலைக்கடி
தடியா னாரே.
(33)
ஏங்கிய வேழை போலு மீசனே வருவா னன்பா
லோங்கிய வறிவாற் கண்டே யுபசரித்
துதவ வேண்டுந்
தூங்கிய மனத்தாற் றீயோர் தூடனை
செய்தெந் நாளு
நீங்கிடாத் துன்பம் சூழ்ந்து நிரயத்தி
லழுங்கு வாரே.
(34)
பன்னரும் பெரியோர் நட்பு பயிலுவோர்
தங்கட் கெல்லாங்
கன்னலை நுனிமுன் னாக நுகர்தலைக்
கடுக்கு மூலந்
தின்னலே முதற்கொண்
டாற்போற் றீயவர் கேண்மை யாகும்
நன்னய வறிவாற் கண்டு நட்டவர்
பெற்றி யோரே.
(35)
(வேறு)
மூடன் கள்வன் சதுரனுடன் வஞ்சன்
கபடி முதிர்பொய்ய
னீடுங் கோப னதிகாமி நிரம்பு நகுவி
மிகுபாஷி
கோடி வரம்பில் வார்த்தைசொல்வோன்
குலவின் னனதுற் குணத்தோர்க்குக்
கேடி றரமும் பின்வருமா கெடுதி விசாரிப்
புமிராதே.
(36)
(எழுசீர் விருத்தம்)
ஆகையால் மேற்கூ றியவர்க ளிடத்தி
லமைந்திடு சேர்க்கை யெந்நாளும்
வேகமுற்ற டங்கப்பெறு மனங்கொள்ளும்
விவேகிகட் கடாவிலக் கெனவே
யோகைபெற் றிடச்சற் குரவனன் கன்புற்
றோதியது ளமுறப் பதிப்போர்
வேகையார் பந்தக் காடகன் றின்ப
வீடடைந் திடுதல் சத்தியமே.
(37)
போலிச்
சிநேகரைக் குறித்துப் பாடியது
(எண்சீர்
விருத்தம்)
ஆதியினிற் செந்நெறிசென் றடைகுவமென்
றென்னை
யடுத்திருந்த நால்வர்களி லொருவனது செய்கை
நீதியினை விடுத்துமுன்னோர் நெறிதனையு
மறந்து
நெடும்பொருளே மோட்சமென நெஞ்சுறுதி கொண்டான்
கோதிலவன் போலொருவன் யாரிடத்தும்
பேசிக்
குலமகளைப் போற்பசப்புங் கூத்திகதி சார்ந்தான்
சாதிமுறைப் படியொருவன் போனான்பின்
னொருவன்
றன்மனத்தின் போக்கெல்லஞ் சரியெனச்சென்
றானே.
(38)
(வேறு)
வாச மார்தரு மலர்நிறை நந்தா
வனமொ டாலய மடமுடன் றுலக்கி,
யீசனே முதற்றெய் வம்யா வையுமா
யிலங்கு கின்ற தேசிகனடி யிறைஞ்சிப்
பாச நீங்கிய பத்தரை யிகழ்ந்து
பாழளற் றிடைபடுக் கும்பா வியர்க
ணீச பீசத்திற் குதித்தன ரெனமுன்
னெடிய வேதங்க ணின்றொலித் திடுமே.
(39)
அறிவுறுத்தல்
(வேறு)
கல்வியொடு செல்வமுயர் ஞானமெனு மூன்றின்
கடல்கடந்த புனிதர்நடை கண்டறிவாய் கல்வி
எல்லையிலா தென்றுமுன்னோ ரிசைத்தாலு
மழுக்கா
றெய்தாமை யாணவம்விட் டினந்தழுவல் செல்வ
நல்வினையா லெய்தியிடின் மமதையிலா
துயிர்க்கு
நாடோறுங் கருணையுட னண்ணியவை யீதல்
கொல்வினைநீத் திடுஞானங் கூறுபல
பிறப்பிற்
குணிக்கறியாத் தவம்புரிந்தோர் குறிப்பதெலா
மொன்றே.
(40)
(இரட்டையாசிரிய
விருத்தம்)
கத்துடல் சூழுலகி லுள்ளபொருண் மெய்யெனக்
காண்பவர்க ருத்தாளரோ
கருத்துவே றாய்ப்புறத் தொன்றினிமை பேசிக்
கலந்தவுற வுறவாகுமோ
பத்திவை ராகமுள் ளின்றிவெளி வேடமாய்ப்
பணிகுவது பணிவாகுமோ
பலசாத்தி ரங்களைச் சங்கித்து நடையிலார்
பகருவது பலனீயுமோ
செத்துப் பிறக்கின்ற வாதனைக் கஞ்சார்
செயும்பூசை பூசையாமோ
தீயமன மணுவேனு முள்ளவர் தினஞ்செயுந்
தியானமுந்தி யானமாமோ
புத்தியின் விசாரித்த லின்றியெவர்
செய்கின்ற
புண்யமும்
புகரீயுமோ
பூதலத்தி னிலறிஞர் மாதிரத் தவருமகிழ்
போதனைப் பொருவீர்களே.
(41)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக