தவத்திரு
இராமானந்த சுவாமிகள் அருளிச் செய்த
(நேரிசை வெண்பா)
தெய்வத்தைத்
தேடித் திரிந்தலையு மானிகட்குக்
கைவைத்த
நெல்லிக் கனியாகும் - பொய்வைத்த
மாயா
வினோத வகையாலே விந்தைவிடா
ரோயாது
காயமுறு வார்.
(1)
எந்தவிதத்
தேனு மிணையிலாத் தெய்வமெனும்
விந்தைவிடார்
யாவருக்கு மேலாவர் - சந்ததமுந்
தெய்வமவ
ரென்று தெரிசிப் பவர்க்குமுத்தி
கைவந்து
கூடுங் கருத்து.
(2)
ஆணேனும்
பெண்ணேனு மம்புவியில் விந்தைவிடார்
வீணாகார்
யார்வந்தும் வேண்டுவார் - தோணாதாற்
சந்தோட
மென்றுநிதஞ் சையோகஞ் செய்துடலம்
வெந்தார்கள்
வீணா விலே.
(3)
விந்தைவிட்டால்
வையகத்தில் வேறெங்குந் தெய்வமில்லை
விந்திருந்தாற்
றெய்வம் வெளியாகும் - பந்தயமாய்க்
கோடாநு
கோடிசத்யங் கூறுகிறேன் விந்ததனுக்
கீடான
தெய்வமில்லை யென்று.
(4)
விந்தின்
பலமிருந்தால் வேறெங்குஞ் சொன்னடக்கும்
விந்துகெட்டால்
யாரும் விரும்பார்கள் - சந்ததமுங்
காட்சியாய்த்
தங்கள் கருத்தி லறிந்துகொள்ளச்
சாட்சி
யுலகே சரி.
(5)
எத்திரத்தோர்க்
கேனு மெழிலான விந்ததனை
வைத்திருக்க
வொட்டாமன் மாய்த்துநித - மெத்தி
மனமான
மாபாவி வாதிட் டுலகிற்
றனதாணை
யைச்செலுத்துந் தான்.
(6)
விந்தே
வெளியாகும் விந்தே யொளியாகும்
விந்தே
சுடரின் விரிவாகும் - விந்தே
யறிவாய்
விளங்க லறிந்துநடப் போரை
மரியாமற்
செய்யு மகிழ்ந்து.
(7)
வானிற்
கதிர்மதியாய் வந்ததுவும் விந்தேதா
னூனுக்கு
ளவ்விதமே யுற்றுப்பார் - நானிற்கக்
காட்டாமன்
மாயை கருத்தை மறைத்ததுமெய்த்
தேட்டாளர்
காண்பார் தினம்.
(8)
விந்துகட்டிக்
கொண்ட விளக்கத்தி னான்மிகவுஞ்
சந்தோடச்
சித்தரினந் தானானார் - வந்தே
யரச ரெதிர்சென்
றடிவணங்கத் தொண்டு
வரிசைபெற்று
நின்றார் மகிழ்ந்து.
(9)
தங்க
ளநுபவத்திற் சான்றோர் சரியென்பர்
பங்கம்ஞ்சொல்
வாரே பதராவார் - மங்கியவர்
தேடும்
பொருள்போய்த் தினந்தோறும் விந்தைவிட்டுக்
கூடு
மிழப்பார் குலைந்து.
(10)
பலசாத்
திரத்தைப் படித்துக் குழிவீழ்ந்
தலைவார்க்குச்
சொல்வ தவமே - தலையான
தந்தை
யொருவனுக்குத் தான்பிறந்த புண்ணியருக்
கிந்த
வழியிசையு மே.
(11)
முற்றிற்று.
வசனம்
அறிவுள்ள அநுபவசாலிகட் காநந்தம்
விளைக்கும். வித்து கெட்டால் சத்தி கெடும்; சத்தி கெட்டால் புத்தி கெடும்; புத்தி கெட்டால்
பத்தி கெடும்; பத்தி கெட்டால் சித்தி கெடும்; சித்தி கெட்டால் முத்தி கெடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக