தவத்திரு
இராமானந்த சுவாமிகள் அருளிச் செய்த
(நேரிசை வெண்பா)
நாரியர்சொ
ரூபமது நஞ்சுமா நல்வசனங்
காரியத்துக்
கென்றே கருதுவாய் - காரியம்போற்
சொல்வதெலாம்
வஞ்சகமாஞ்சொற் சூதாலே வயிரக்
கல்லுங்
கரைப்பார் கருத்து.
(1)
பெண்ணான
வௌவைசொன்ன பெட்டகத்தை யாரேனுங்
கண்ணாலே
பார்த்தாற் கருதுமோ - பெண்ணாலே
கெட்டவ
ரேயல்லாற் கேடில்லா தேபெருமைப்
பட்டவருண்
டோதான் பகர்.
(2)
நெஞ்சறி
வுறுத்தலினி கழ்த்தினனி ராமலிங்க
னஞ்சுவார்
பார்த்தா லறிவுள்ளோர் - வஞ்சியரைச்
சொற்பனத்துந்
தீண்டத் தொடங்காரென் சொல்லைமிகு
விற்பனர்கொள்
வாரே வியந்து.
(3)
பெண்ணாலே
கெட்டொழிந்த பேரை யளவுரைக்க
வொண்ணாதே
யுன்மதி லுற்றுப்பார் - பெண்ணாரைத்
தீண்டுவதி
லுங்கொடிய தீவிடத்தை யுண்டேனு
மாண்டுவிழ
மேன்மை வரும்.
(4)
பேதையர்க
ளென்று பெரியோர்சொல் வாக்கியத்தின்
சூதை
யறிந்தாற் தொடுவாரோ - மாதகடம்
வாய்ச்சூது
மெய்யில் வழங்குகின்ற சூதிலொன்று
பேய்க்கேனு
முண்டோநீ பேசு.
(5)
சத்திய
மாய்ச்சொல்வேன் சன்மார்க்கத் தோர்களுக்கே
வித்தியாச
மென்று விளம்பாதீர் - கத்தும்
புலியென்று
பெண்களைத்தம் புந்திவைத்த பேரை
நலியாத
வாழ்வி னடும்.
(6)
அநுபவமு
மவ்வை யறிவுரைத்த பெட்பு
மநுநூலு
மொத்திருந்த வாற்றாற் - சனிபோன்ற
பெண்ணார்கள்
சொல்லைப் பிரியா தெடுப்பாரென்
கண்ணாணை
கீழாவர் காண்.
(7)
அறிவேமெய்
யாண்சொருப மங்கனையா ரென்றும்
பிறியாத
மாயைப் பெருக்காஞ் - செறிவான
சேர்க்கையினாற்
புத்தி திடங்லைந்து மாயையெனும்
வாழ்க்கைநிச
மென்றார் மகிழ்ந்து.
(8)
நிலத்தி
னியல்பினா னீர்திரிந்தற் றென்றார்
நலத்தி
லுயர்நாய னார்தாந் - தலத்திலொற்றைக்
கோடு
டையமுனிபெண் கூடித் தவங்குலைந்து
நாடடைந்த
தென்ன நயம்.
(9)
மந்திரத்தி
லார்க்கு மடங்காது மாதெனும்பேய்
தந்திரத்தில்
வெல்லத் தகுங்கண்டாய் - சொந்தமுறு
தாயென்
றனைவரையுந் தன்மனத்துட் டங்கவைத்தான்
மாயாமல்
வைக்கு மருந்து.
(10)
அருட்சத்தி
யேபெற்ற வன்னையகி லத்து
மருட்சத்தி
யெல்லா மயக்கு - மிருட்சற்று
மில்லார்
மனத்திற் கிதுநிசமாய்த் தோன்றுமிகு
பொல்லார்
செவியிற் புகா.
(11)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக