தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச் செய்த
இராமானந்தரின் குறள்
1. பிறனில் விழையாமை
1. திங்கட் சடையா னருளில்லார் தம்மனத்துட்
டங்கும்
பிறனிற் சனி.
(1)
2. எத்திறத் தோரேனு மாசை பிறனின்மேல்
வைத்திடிற்
சூழும் வினை.
(2)
3. அயலார் தனத்தையா சித்திலே னென்சொன்
நயடமா
முலகு நகும்.
(3)
4. பிறன்பெண் விரும்புமனப் பேதை யரைப்போ
லறங்கெடு
பாவிக ளில்.
(4)
5. நிரயவழி காட்டும் பிறன்பெண்டி ராசை
புரையுள
நெஞ்சிற் புகும்.
(5)
6. பெரியோ ரெனப்படுவா ரெல்லாம் பிறனிற்
குறியாது
மேற்செல் பவர்.
(6)
7. அரனருள் வேட்டோ ரருநர கேற்றும்
பிறனில்
புகாமை நலம்.
(7)
8. தன்போற் பிறனையோ சிக்கிற் பிறனின்மேற்
பின்பேரா
தற்ப மனம்.
(8)
9. எவ்விதத்தி லேனு மிடராம் பிறனில்லாற்
றவ்வை
முகத்தி லுறும்.
(9)
10. எண்ணி லடங்காத் தவத்தோர் பிறனில்லை
நண்ணி
லழிந்து விடும்.
(10)
11. பிறனில்லைச் சேருமனப் பேதையருக் கெல்லாம்
புருகூதன்
போதுங் கரி.
(11)
2. அறிவுடைமை
12. அறிவுடையா ராரென் றளக்கிலரன் பாதம்
பிறிவிலார்
நெஞ்சத்தி னுள்.
(1)
13. மட்ப்பொருளை யேசேர்த்து வைப்ப தறிவல்ல
வுட்ப்பொருள்
சேர்ப்ப தறிவு.
(2)
14. எல்லா வுயிர்க்கு மியற்கை பொருள்சேர்ப்ப
தல்லாற்
புதிதோ வது.
(3)
15. சுணங்கன் மனமென்பிற் சொக்குமரன் றாளை
வணங்கார்
மனமுமஃதே யாம்.
(4)
16. அரனருட் செல்வ மழியாதஃ தல்லாற்
றிரமாம்
பொருள்யாது மில்.
(5)
17. தேடும் பொருடான் சிலகா லழிந்துபின்
கூடு
நிலையாது கொள்.
(6)
18. எந்தை யடிச்செல்வ மெப்போது மாறாதுள்
ளைந்து
மவித்தோர்க் கறி.
(7)
19. மேற்குலத்தோ ரானாலும் மெய்ப்பொருளை நாடாதார்
கீழ்க்குலத்தோ
ராகிக் கெடும்.
(8)
20. நல்லோர் மனந்தினமு நாடு மரனடியைப்
பொல்லார்
மனமேன் புகும்.
(9)
21. நயமோ டருணல்கு நாத னடிக்குக்
கயவாய்
கரியாகுங் காண்.
(10)
3. அதிநட்பு
22. அரிதி லரிதே யறிவினர் கூடிப்
பிரிவிலாப்
பேறு பெறல்.
(1)
23. உள்ள துரைக்கு முரவோர்மெய் நட்பென்றும்
வள்ளற்
கினிமை தரும் .
(2)
24. உயிரு முடம்புமென வொன்று முறவே
செயிர்தீர்
சிறப்புத் தரும்.
(3)
25. கண்ணீர் பெருகக் கலந்த வுறவதுவே
யெண்ணி
லிகழா வுயர்வு.
(4)
26. காதலா யுள்ளே கலந்த வுறவேமெய்
மாதவத்தாற்
றேடப் படும்.
(5)
27. கனவினு மாறாக் கருத்துடை நட்பே
வினைதவிர்
மேன்மை தரும்.
(6)
28. காரணங் கூடிக் கலந்த வுறவேமேற்
பூரண
நோக்கந் தரும்.
(7)
29. பிறிவினை யெண்ணிப் பிரமைகொ ணட்பே
யறிவுளார்
கொண்டாள் வது.
(8)
30. பிரியாது நட்புப் பிறங்குமவ ரெல்லா
மரியாத்தே
வென்னப் படும்.
(9)
31. வல்லான் புகழ்பேசி மாறாத நட்பேபின்
னெல்லாச்
சிறப்புந் தரும்.
(10)
32. நடஞ்செய் திடுசரமே நட்பென வெண்ணி
லிடரேது
மில்லென் றியம்பு.
(11)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக