தவத்திரு
இராமானந்த சுவாமிகள் அருளிச் செய்த
குருகீதரசம்
இராகம் : காபி தாளம்
: ஆதி
பூமியோர்
தெய்வமெனப் போற்று குருநாதா
பொன்னடி
தஞ்சமெனும் புல்லனென் மேல்வாதா
பாமரனாங்
காமியெனைச் சேமமருள் சாமியுனை
நேமமு
டன்றுதிக்க நின்றுகா வையா
என்னப்பனே
யிப்பவா சண்முகா னந்தகுரு
சாமி
தண்டபாணீ ஆஆநந்தகுரு சாமிதண்ட பாணீ.
(1)
நன்னிலைய
துதெரியா நாயி னேன்மட்டி
நாடியு
னைப்பணிந்து நாளையு நீயட்டி
என்னவினி
சொன்னதுகேட் டுன்னடிதந் தென்னையாள்வா யின்னம்ப ராமுகமி ருப்பதென்ன சாமீ
என்னப்பனே
யிப்பவா சண்முகா னந்தகுரு
சாமி
தண்டபாணீ ஆஆநந்தகுரு சாமிதண்ட பாணீ.
(2)
தஞ்சமென்
றுன்னைச் சரணடைந் தேன்சாமீ
ததியிது
வேளையிலுன் றாள்பணி யநேமி
கஞ்சமலர்ச்
செஞ்சரணா பஞ்சைதனை யன்சலென்பாய்
வஞ்சம்
மனத்திலேநீ வைத்திடாதே சாமீ
என்னப்பனே
யிப்பவா சண்முகா னந்தகுரு
சாமி
தண்டபாணீ ஆஆநந்தகுரு சாமிதண்ட பாணீ.
(3)
கள்வரை
வர்தம்மாற் கலங்குதே யென்னெஞ்சம்
கடையனை
யாளக் கருணையென் னபஞ்சம்
உள்ளமதி
லெள்ளவுங் கள்ளமிலாத் தெள்ளுகுணா
தள்ளிடா
தென்னைத் ததியிதுகா வையா
என்னப்பனே
யிப்பவா சண்முகா னந்தகுரு
சாமி
தண்டபாணீ ஆஆநந்தகுரு சாமிதண்ட பாணீ.
(4)
சற்றுமென்
மீதிற் றயவிலா தேது
சகிக்கொணா
திந்தச் சனனநோய் வாது
முற்றுமுனை
நற்றுணையாப் பற்றிடவுஞ் சற்றறியேன்
குற்றந்த
விர்த்தெனையாட் கொண்டிடுவாய் மெய்யா
என்னப்பனே
யிப்பவா சண்முகா னந்தகுரு
சாமி
தண்டபாணீ ஆஆநந்தகுரு சாமிதண்ட பாணீ.
(5)
ஏதுவ
ழுத்திடினு மின்னமென் னஞாயம்
ஏழையைப்
பாரா திருப்பத நியாயம்
மாதவனே
சூதுசெய னீதியோசொ லாதியனே
சோதியெ
னுந்துரியா தீதனேயென் சாமீ
என்னப்பனே
யிப்பவா சண்முகா னந்தகுரு
சாமி
தண்டபாணீ ஆஆநந்தகுரு சாமிதண்ட பாணீ.
(6)
சொந்தமெ
னத்தாய்தமர் சொல்வதென் னமெய்யா
சூழும்வி
னையதென்று சொல்வதென் னபொய்யா
வந்துனது
கந்தவர விந்தமலர் சொந்தமென
விந்தம
யக்கம்விடா தேதுசொலுஞ் சாமீ
என்னப்பனே
யிப்பவா சண்முகா னந்தகுரு
சாமி
தண்டபாணீ ஆஆநந்தகுரு சாமிதண்ட பாணீ.
(7)
பெண்டுடன்
பிள்ளையெனும் பேயது வளைக்கப்
பிறந்திறந்
துழல்வது பேதமென் றழைக்கக்
கண்டுனையே
யண்டுமெனைத் தொண்டுசெயக் கொண்டருளி
பண்டுவி
னையகற்றிப் பாதுகா வையா
என்னப்பனே
யிப்பவா சண்முகா னந்தகுரு
சாமி
தண்டபாணீ ஆஆநந்தகுரு சாமிதண்ட பாணீ.
(8)
பாவிபோ
வென்னினுமுன் பாதம்வி டுவேனோ
பாசத்து
ழன்றுபொய்ப் பாடுப டுவேனோ
கூவியுனைத்
தேவனென மேவிடுமென் னாவியருள்
தாவுபு
கழ்படைத்த தன்மகுண சீலா
என்னப்பனே
யிப்பவா சண்முகா னந்தகுரு
சாமி
தண்டபாணீ ஆஆநந்தகுரு சாமிதண்ட பாணீ.
(9)
ஆசைப்பே
யாலே யரிவைய ரைத்தேடி
யையநின்
பொன்னடிய றிந்திடா மல்வாடி
காசினியின்
பாசமதி லாசைபடு மாசுவிட
நேசமி
கராம தாசனைக்கா வையா
என்னப்பனே
யிப்பவா சண்முகா னந்தகுரு
சாமி
தண்டபாணீ ஆஆநந்தகுரு சாமிதண்ட பாணீ.
(10)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக