தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச்
செய்த
கௌமார சமயத் தனிக்கவிகள்
பெரியோர் வணக்கம்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
அகத்தீசன் முதலாக வளவிறந்த
முனிவரர்க
ளனைவோ ருக்குஞ்
சகத்திலுள்ள பத்தர்சித்
தர்முத்தர் முதற்றனிநின்ற
நாச்றோ ருக்கு
மகத்தான குருமூர்த்த
மெனவிளங்கி யருளளித்த
வல்லோ ருக்கு
மிகச்சிறியே னடைக்கலமே
புகுந்ததனா லருளளித்தென்
மெய்காப் பீரே.
(1)
காழிநக ரவதரித்த கண்மணிக்கும்
வாகீசக்
கனவா னுக்குந்
தோழனென வலிந்தாண்ட சுந்தரற்கு
மணிவாக்குத்
தோன்ற லார்க்கு
மாழிசூலு லகிடைவந் தவதரித்த
வடியார்க்கு
மடியேன் றஞ்சம்
வாழியென வாதரிப்பீ ரன்னையப்பர்
நீங்களன்றி
மற்றில் லேனே.
(2)
கல்லாத மூடனுங்கள் கருத்தறியேன்
கதியேறக்
கருத்துட் கொண்டே
னல்லோர்க டமையடைந்தோன்
பாவியே யானாலு
நயந்தாட் கொள்வார்
பொல்லாத சேயேனும் பெற்றதாயா
தரிப்பள்
புறந்தள் வாளோ
வில்லாத ஞாயமல வெவ்விடத்தும்
வழங்குவது
மியற்றை தானே.
(3)
எண்சீர் ஆசிரிய விருத்தம்
மெய்யன்பர் தங்களது
பவத்தோ டுற்ற
மேன்மைகுன்ற வவமதித்து விருத்பத் தோடு
பொய்யன்பர்க் குபசரிப்பா
யெதிர்சென் றேத்திப்
பூசனைசெய் தமுதூட்டப் புவியிற் கண்டோ
மையவிது கலியுகத்தின்
கொடுமை தானோ
வல்லதுல கவரறிவி னளவோ சொல்லாய்
மெய்யவுனக் கிதுவுமோ
ராட லோதான்
விந்தையுனக் கிதைவிடவே றில்லா தேனோ.
(4)
கல்வி கற்றிலேன் கற்றமே
லவரைக்
கண்டு பூசிக்கக் கருத்தினிற் கருதே
னல்வி திப்பயன் சிறிதிலேன்
பொல்லா
நாயுநக் கிடநளி ரெனச்சு ழன்றேன்
றொல்பு விச்சுமை யாகவந்
துதித்தேன்
றொண்டர் தாட்பொடி சுமப்பதற் கிசையே
னல்லிருந் திடுமன மிகவு
டையே
னைய னாட்கொள லதிசய மன்றே.
(5)
கலி விருத்தம்
உய்ய வேண்டிநா னாவலுற்
றேனலா லுவந்து
செய்ய வேண்டிய நன்னெறி
யீதெனத் தெரியேன்
வைய மீதினின் மிகமருள்
கொண்டுள மாழ்கி
நையும் வேளையீ தாதலா
னவைதவிர்த் தருளே.
(6)
எழுசீர் ஆசிரிய விருத்தம்
மேல்விளை வறியே னுன்னடி
யன்றி
வேறுதிக் கொன்றையுங் குறியேன்
மால்கொளு மனத்தாற் கலங்கிய
கலக்கம்
வள்ளனின் னுளமொன் றேயறியு
மோலமென் னப்பா வோலமுன்
னடிக்கே
யோலமுன் செவிதனி லேற்றிக்
காலநீ காட்சி கொடுத்தஞ்ச
லென்றே
காத்தருள் கடவுளே யோலம்.
(7)
ஐயனே யுன்றாட் கன்புசெய்
தொண்டர்க்
கழிவிலா மோட்சவீ டளித்தாய்
பொய்யனென் றென்னைப்
புறந்தள்ள வெண்ணிப்
புந்திகொண் டாயதன் சான்று
மெய்யெழுத் ததனை நீக்கியஃ
தளித்தாய்
வெண்மையிற் களங்கமு முளதோ
வுய்யநீ யென்னை யுளங்கொளல்
வேண்டு
முலகெலா மொன்றதா னவனே.
(8)
கலிப்பா
ஏகாவநே காவென்றிறைஞ்
சிமறை யோலிடவுங்
கூகாவென வுலகங்குறை
சொல்லிக் கூப்பிடவுந்
தேகாபிமா னத்தாற்றிகைத்
துநிதம்வா டுகின்றே
னோகோவெனக் கூவியுன்னடிக்
காளாக் குவையே.
(9)
ஆதிப் பொருளே யான்மாக்க
ளீடேறச்
சோதிப் பொருளாய்த் துலங்குவதைத்
தூயரெல்லா
நீதித் தவத்தாலே நெஞ்சுவந்து
பார்த்தறிவார்
வாதிக்கும் பாவியர்கண்
மாறுசொலி மாழ்குவரே.
(10)
நேரிசை வெண்பா
மெஞ்ஞானி யென்றென்னை
மேதினியோர் சொல்வதலா
லஞ்ஞானஞ் சற்று மகலவிலை
– விஞ்ஞானப்
பிர்ம சொரூபப் பெருவெளியி
லுன்னொடுசேர்
தர்மமெற்குத் தந்தாளு
வாய்.
(11)
நின்னடிக்கீழ் வாழு
நிலைமையைப்பெற் றுய்வேனோ
பொன்விருப்ப முள்ளவர்பாற்
போவேனோ – வென்னுடையா
யெவ்வாறா மோவெனநின்
றேங்குகின்ற வேழையெனக்
கிவ்வாறா மென்ன விசை.
(12)
கொன்றருந்தி வாழுங்
கொடியோர்க்குச் செல்வமது
பொன்ற லிலாதளித்த பூமானே
– மன்றுணித
மாடிய பொற்றாளி லன்புவைத்த
மேலோரைத்
தேடியுணச் செய்ததென்ன
செப்பு.
(13)
கட்டளைக் கலித்துறை
மனமே யுனக்குத் தினமே
துரைத்து மறந்துவிட்டா
யினமே யுனக்கொன்று சொல்லுவன்
கேட்டற் கிசைந்திடுவாய்
தினமே குருபரன் செய்யபொற்
றாடனைச் சிந்தைவைத்தாற்
கனமே கிடைப்பது மல்லா
மனற்கதி காண்குவையே.
(14)
சற்றா கிலுமென் மனமே
குருபரன் சந்நிதியி
லுற்றே துயரமுற் றோதிடு
நீயவ ருண்மகிழ்ந்து
குற்றே வலுக்கெனைக்
கொள்வா ருயர்நற் குணமிகவும்
பெற்றா யென்றேநித முன்புக
ழேமிகப் பேசுவனே.
(15)
தேட்டாளர் கண்டு தினந்தினம்
போற்றுந் திருவருளைப்
பாட்டாற் றுதித்துமெய்ப்
பதித்திசெ யென்றுபல் காலுரைத்துங்
கேட்டா யிலையிருட் கோட்டா
னைப்போலக் கிளருநெஞ்சே
சோட்டா லடிக்கினு மோகைகொண்
டாயென்ன சூதுகற்றே.
(16)
உண்மை கூறல் விண்ணப்பம்
பன்னிரு சீர்த் தாழிசை
எனது விருப்ப நினத டியார்க்
கேவல்புரியும் பெருந்தவமு
மெல்லா வுயிர்க்கு மூவி தத்து
மினிதேசெயவு மெப்பொழுது
மனது முதலாங் கரண மென்சொல்
வழிகேட்டிசைந்து நடந்திடவு
மாறா வன்பில் வரகு ணன்போல் வாஞ்சை
மேலும் வளர்ந்திடவுந்
தனதென்ப தற்றல் லமன்போற்
சஞ்சரிக்குஞ்சி
சித்தி கைவரவுந்
தடையி லாது பெருவெளியிற் றனிவாச
கன்போற் சாந்திடவு
முனது பதத்தின் மேலாணை
யுண்மை
யடியார் தமதாணை
யுறுதி மொழிமே லாணை யென்றனுள்ள
மறிவா யுவந்தருளே.
(17)
கட்டளைக் கலிப்பா
பாவ நாசப் பதியினிற்
பாவியேன்
பார்க்க நல்லுருக் காட்டிய பண்பினை
யீவை யேயெனக் கவ்வுரு
வத்தினை
யென்று நச்சிடு மேழைக் கிரங்குவாய்
கோவ மேகொளப் புல்லறி
வேன்செயுங்
குற்றம் யாவுங் குணமெனக் கொண்டினிச்
சாவ தும்பிறப் புந்தவிர்த்
தாட்கொளுஞ்
சாமியே யென்றன் சற்குரு நாதனே.
(18)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக