திங்கள், 12 அக்டோபர், 2026

சந்தப் பதிகம் (சற்குரு வண்ணப் பதிகம்)

 

தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச் செய்த

சந்தப் பதிகம் (சற்குரு வண்ணப் பதிகம்)

(எண்சீர்ச் சந்த விருத்தம்)

படியிற் பலபேர் கள்பகுத் தறிவோர்

            பகர்தற் கரிதா கியபண் பினனே

வடிவுற் றிடுமா தர்பொ னாசையெனும்

            வலையிற் படவே யெனைவைத் தனையோ

வடிமைக் குபதே சமளித் ததுவு

            மலலுற் றிடவோ சொலருட் கடலே

மிடியற் றுனைவேண் டிடவே யுனிரு

            விழியிற் கடையா லருள்வித் தகனே.

(1)

உனைநத் திடுபா லனெனக் கருதி

            யுளம்வைத் தருள்கூ ருனதே வலினார்

தனைமுற் றிலுநற் கதியே பெறவே

            தயவுற் றருள்செய் திடுவோய் நிதமு

மனைசுற் றமுமைந் தருமா தரெனு

            மயல்பற் றிடவோ வெனைவைத் தனைநீ

மினையொத் திடுவாழ் வைவெறுத் திடவுன்

            விழியிற் கடையா லருள்வித் தகனே. 

(2)

வேறு

குழிப்பு - வண்ணப் பாக்கள்

தனனா தனதன - தனதானா

அனைவோர் களுமுன தருளே பெறவெனை

            யயலா யலையவும் - விடலாமோ

மினைநே ரிடையினர் முலையான் மயலுறு

            விடவோ வுனதடி - பணிவேனான்

வினையே பலசெறி யுடலோ டநுதின

            மிகவே துயருற - லழகோதா

னினைவோ ரகமிசை விலகா தருள்புரி

            நிசமே யிலகிய - பெரியோனே

(3)

தான தத்த தான தத்த தான தத்தனா

கான லுற்ற நீரை யொத்த வாழ்வை மெச்சியே

            காத லுற்ற பாவி யைக்கை சோர விட்டிடில்

சான கிப்பெண் வாய்விடச் செயோர ரக்கனை

            சாடி வெற்றி யேபொ றுக்கும் வாழ்வி னிற்பனோ

கூன னுக்கொர் காவி லுற்ற தேற லெட்டுமோ

            கோத கற்றி வீற ளிக்கி லேது குற்றமோ

மோன முற்ற வாழ்வ ளிக்கி லீன முற்றதோ

            மூட லுற்ற வா லொத்த மூல கத்தனே.

(4)

தானா தனதன - தனதானா

சேலா கியவிழி மானார் கலவிசெய்

            தேநா னழிவுறன் - முறையாமோ

மூலா தரமுத லாறா தரவகை

            மூவா வழிசொல - வருவாயோ

நாலா மறைமுடி வேதா னெனநிகழ்

            நாதா மலரடி - யிணைநாடி

நோலா மடமைய ரேலா தருளும்வி

            னோதா வழகிய - பெரியோனே

(5)

தனத்த தந்தன - தானனா

கனைத்தி டுங்கடல் வளைத்த திண்புவி

                  களிக்க வந்திடு - நீதியே

            கலக்க மின்றிய மனத்தர் தம்புடை

                  கடுத்த லின்றியுண் - மேவுவாய்

நினைத்த லின்றிய வெனைப்பு ரந்தினி

                  நிவிர்த்தி தந்திட - வாழ்வனோ

            நிதிக்கு நெஞ்சுழி வுறப்பொ ருந்துபு

                  நெடித்த வென்றனை - யாளுவா

யனைத்து நின்செய லெனத்தெ ளிந்தில

                  னசட்டை நெஞ்சின - னாகினே

            னகைத்தல் கண்டுள முவக்க வின்றரு

                  ளயிர்ப்பு நெஞ்சினி - லாகுமோ

பனிப்பு றும்படி விடுக்கி லன்பொடு

                  பதிக்க வின்றருள் - வாரெவர்

            படுத்தன் மிஞ்சிடு புவிக்கு ழன்றிடு

                  பழிப்ப கன்றிடு - நாதனே.

(6)

தந்தா தத்தன - தானனா

அஞ்சா மட்டிக டம்பா னித்திய

                  மந்தோ கிட்டிட - லாகுமோ

            வங்கோ டிற்சுக முண்டா கிற்றென

                  வம்போ திச்செய - லாகினேன்

கஞ்சா மட்டுக ளுண்டார் வத்தொடு

                  கங்கா ளிச்செய - லாகவே

            கண்டோ ரொப்பிட வும்போ தித்திடல்

                  கண்டே னித்தரை - யாவுமே

யெஞ்சா மற்றசை யுண்டா ருக்கிட

                  ரெங்கே சொற்றிட - வாயிலே

            னெந்தா யிச்செயல் கண்டே னிப்படி

                  யிங்கே வைத்திட - ஞாயமோ

துஞ்சா தெற்கரு ளம்போர் கக்ழ

                  றுங்கா நிற்றலு - நாடியே

            தொண்டா கித்தொழு கின்றா ருக்கரு

                 டுதுஞ்சா துற்றிடு - நாதனே.

(7)

தாந்தன தானதன - தனதானா

ஏந்திழை யார்கண்முக காந்தியி னான்மிகவு

                  மேங்கிய பாவியன்மெய் - யிசைவாக

            வீண்டவர் காறொழுது மாங்குறு மேவல்கள்செய்

                  தேங்கிடு மேழையெனை - யினிதான

காந்தம தாவினி யாண்டிடுவா யுன்மதி

                  காந்தலி லாதருள - லெதுநாளோ

            காஞ்சியி னாருடலை யோம்பிய நானுலகர்

                  காண்டல்செய் வாழ்வுதர - வருள்கூராய்

சாந்தம தோருருவ மாந்தனி யாமுதல்வ

                  சாம்படி யேழையனை - விடலாமோ

            தாண்டவ வாசிநிலை தூண்டல்செய்தே எனிடை

                  தாண்டவ மேபுரிய - வருவாயோ

தாந்துணை யாமெனு மாந்தர்க ணோயழிவு

                  சார்ந்திடு நாளதனி - லடைவாரோ

            சார்ந்திடு வோர்கள்கதி சேர்ந்திட வேயருள்செய்

                  சாந்தை யெனாநிலவு – பெரியோனே.

(8)

தனத்தத் தந்தன தானன - தனதானா

தனத்திற் கின்புறு மாறெனை

            விடுத்துச் சஞ்சல மேதரு

            தலத்திற் கண்டதை நாடிமெய் - தளர்வேனோ

   தவத்திற் கஞ்சிய பாவிய

            னுளத்திற் றன்பம தேகிட

            தருக்கிப் பண்புறும் வாழ்வது - தருவாயோ

வுனைச்சற் றுந்துதி யாதவ

            னெனச்சித் தந்தனி னாடுவ

            தொதுக்கிச் சந்தத மேதொழ - வெதிர்வாரா

  யுறுத்தற் கண்டிட வேவினை

            யரற்றிப் புண்படு நானிவ

            ணுலைப்புக் கொண்டிட நீசெய - ல்ழகாமோ

கனைத்தற் கண்டிட வாடிடு

            வளைக்குக் கண்டித மாகவெ

            கலக்கிப் புண்பட வேசெயு - மனதாலே

   களிப்புக் கொண்டுல கோரவ

            மதிக்கக் கும்பியை நாடுபு

            களிப்புக் கொண்டிட வாழ்குத - றவிரேனோ

வனைத்திற் கும்பெறு தாய்தனை

            நிகர்த்துத் துன்புறு நோய்முழு

            தகற்றித் திண்புவி மீதினி - லடியேனை

   யலைத்துச் சங்கட மேகொள

            விடுக்கச் சிந்தைசெ யாதருள்

            ளறத்தைக் கொண்டுரு வாயுறை - பெரியோனே.

(9)

            தனனதன தனனதன தானான தானதன - தனதானா

உனதடியை யநுதினமு நாடாத பாதகனை

                        யுலகிலுள பலநினைவு மோயாத காதலனை

                        யுயிர்வதைக ளவைபுரியும் மாபாவி சோதரனை

- யுளநாளு

முறுதியுட னதிகடுமை மாயாது பேசுநனை

                        யளதையில தெனவுரைக ளேபேசு நாவதனை

                        யுடையவனை யொருநலமு மோராத பாவியனை

- யுயர்வாக

கனமுடைய முனிவரர்கள் போன்ஞான மோதிமிகு

                        கலகமிடு பலசமய நூலோது வோனைவெகு

                        கனிவினுட னினிமைமொழி பேசாத பேதயனை

- களவேகல்

             கசடருட னறவுதின மாறாத கேடனையோர்

                        கருணைபுரி திருவருளி னூடேசெ லாதவனை

                        கதியருளு முனதுநிலை தானேக லாதவனை                                                                                       - வெயில்காலும்

தினகரனை நிகருமெழி லார்சோதி நீடுபுகழ்

                        திருவடியை யலதுபுக லேதேது தேவவருள்

                        செயவிநல மையமமகி யோர்தாமு மேசும்வசை

- ஒழியாதோ

            திலகநுதன் மகளிரிட மாறாது தூதுசெலு

                        மனதுநிலை பெறவொருசொ லோதாது நீவிடுதல்

                        சிறிதுநல வழியலவ தானீயெ னேரில்வர

- நினைவாயே

சனகனுடன் முனிவரர்க ளேதேடி நாதநவில்

                        சதுமறையின் முடிவுசொலு மாதேவ னேயதிக

                        தவமுயலு முறையருள்செய் கோனேயி நாளுமொரு

- வடிவாகி

            தரணிமிசை மனிதர்பல ரேசூழ வாரருள்செய்

                        தனிமுதல்வ வடியர்பிழை பாராது காவல்புரி

                        தலைவனென வருள்புரியு மோர்தேசிகா வரிய

- பெரியோனே

(10)

முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக