தவத்திரு இராமானந்த சுவாமிகள் அருளிச்
செய்த
தயாநிதிக் கண்ணிகள்
சீராருஞ்
செம்பொற் சிலம்பணிந்த சேவடியைத்
தாரா
திருக்கத் தகுமோ தயாநிதியே.
(1)
பொன்னே
மணியே பொருளே மிகவொளிரு
மின்னே
யருளே விமலா தயாநிதியே.
(2)
ஆரணனு
நாரணனு மடிமுடியைத் தானறியாப்
பூரணனே
வேதப் பொருளே தயாநிதியே.
(3)
ஐயாவென
வுருகி யன்புகொளும் பக்குவர்க்கு
மெய்யாக
வந்தருளும் வித்தே தயாநிதியே.
(4)
ஊனே யுயிரேயென்
னுட்கலந்த தீபகமே
வானே
கருணைசெய்ய வாராய் தயாநிதியே.
(5)
மனத்துள்
ளிருக்கு மணியே யொளியேநின்
னினத்துள்
ளிருத்தமன மின்றோ தயாநிதியே.
(6)
தாயும்நீ
தந்தையும் நீ சற்குருவா வந்தவனீ
சேயனையா
ளாமையென்ன செப்பாய் தயாநிதியே.
(7)
கல்லா
லுருவமைத்த காரணத்தினா லிரக்க
மில்லா
திருப்ப தியல்போ தயாநிதியே.
(8)
பொய்யன்ப
னாகிப் புவியிற்றிரியு மென்னை
மெய்யன்ப
னாக்குவதெவ் வேளை தயாநிதியே.
(9)
வாசா
கயிங்கரிய மல்லாது மற்றிலைசர்
வேசா
மனதிரங்க வேண்டுந் தயாநிதியே.
(10)
பாவியிவ
னென்றெணிநீ பாராம லோர்மனதாக்
கூவியெனை
யடிமை கொள்வாய் தயாநிதியே.
(11)
விண்நாட்
டரசுறினும் வேண்டே னினதுதிருத்
தண்ணா
ரடிக்கமலந் தாராய் தயாநிதியே.
(12)
கோவம்
பொறாமை குடியோட வென்னகத்தில்
நீவந்
திருக்கமன நேராய் தயாநிதியே.
(13)
உன்னைத்
துதிக்கிலிட ரோடுமென் றுதானறிவோர்
சொன்னவையெல்
லாமெத்தச் சூதோ தயாநிதியே.
(14)
பொல்லா
மனத்துடனே போராட்ட மாயிருப்ப
தல்லா
துன்பாத மறியேன் தயாநிதியே.
(15)
திகிரிபோலே
யுழலுஞ் சிந்தை யடக்கநெறி
புகலிலுன
தருடான் போமோ தயாநிதியே.
(16)
ஏதுரைத்த
போதினும்யா னிரங்கே னெனமனதிற்
சாதித்
திருப்பதென்ன தன்மந் தயாநிதியே.
(17)
கற்றதனா
லென்னவுனைக் கண்ணாரக் கண்டவன்போற்
சொற்றதனா
லென்னசுகஞ் சொல்வாய் தயாநிதியே.
(18)
அந்தக்
கரணமுனக் காளாக வொட்டாமல்
பந்தப்
படுத்துவதைப் பாராய் தயாநிதியே.
(19)
பெண்ணாசை
யேகொண்டு பேயாய்த் திரியுமென்னைக்
கண்ணானீ
பார்க்கக் கருதாய் தயாநிதியே.
(20)
மெய்யடியார்
தம்மை விரும்பிமிக வாழாமற்
பொய்யுலக
வாழ்விற் புகுந்தேன் தயாநிதியே.
(21)
கல்லோ
வயிரமோ கருந்தாதோ வுன்கருணை
செல்லா
வழியோவென் சிந்தை தயாநிதியே.
(22)
தந்தைதாய்
பந்துவர்க்கத் தயவா லுனைமறந்து
சொந்தமென்
றுநம்பிச் சுழன்றேன் றயாநிதியே.
(23)
எல்லா
முனதுசெய லென்றே யுணராமற்
பொல்லா
நெறியிற் புகுந்தேன் றயாநிதியே.
(24)
சந்தையின்
கூட்டத் தனிமாயை யாமுலக
பந்தம
றுக்கமுகம் பாராய் தயாநிதியே .
(25)
வஞ்சங்
கொலைகளவு வாழ்தற் குரித்தான
நெஞ்சந்
திருத்தவென்மு னேராய் தயாநிதியே .
(26)
அன்னைதந்தை
பந்துசின மாற்றவே நேரமலா
லுன்னைத்
துதிக்கவகை யுண்டோ தயாநிதியே.
(27)
எத்தனையோ
ஞான மெடுத்துரைத்த போதினுமென்
சித்தந்
திரும்பியதுலதென் செய்வேன் றயாநிதியே.
(28)
உலகத்
தியல்பை யொழியாத பாழ்மனதைத்
துலையிற்
கிடத்தவகை சொல்வாய் தயாநிதியே.
(29)
கவிக்குலத்திற்
கெதிர்க்கிளைபோற் காண்பனவெ லாம்பிடித்துத்
தவித்தலையு
நெஞ்சைத் தவிர்ப்பாய் தயாநிதியே.
(30)
அந்தோவுன்
சீரடிமே லாசைகொண்ட வேளைமுன்னே
வந்தாதரி
யாதென் வர்மந் தயாநிதியே.
(31)
எட்டாயி
ரண்டாகி யேகமாய் நின்றொளிருஞ்
சுட்டாப்
பொருண்முடிவைச் சொல்வாய் தயாநிதியே.
(32)
அத்துவித
மாக வமர்ந்திருந்த மெய்ப்பொருளைச்
சித்தமதிற்
கண்டு தெளியேன் றயாநிதியே.
(33)
ஏகாட்
சரத்தா லிருளைக் கடிந்துவிட்டாற்
சாகா
திருக்கத் தகுமாந் தயாநிதியே.
(34)
இருவாசி
தன்னி னியல்பை யறிந்தவர்க்குத்
தருமோ
புவியதனிற் சன்மந் தயாநிதியே.
(35)
முச்சுடரி
னுச்சி முடிவை யறிந்தவர்க்கு
மிச்சகத்தி
னாசை யிதமோ தயாநிதியே.
(36)
அந்தக்
கரண மவித்தபெரி யோர்க்குப்
பந்தப்பிணி
யிலையிப் பாரிற் றயாநிதியே.
(37)
அஞ்சக்
கரத்தை நெஞ்சு ளாகவைத்த பேர்களுக்கு
வஞ்சப்
பிறவியின்னம் வருமோ தயாநிதியே.
(38)
ஆறா தாரத்தி
னடிமுடியைக் கண்டவர்க்கு
மாறாப்
பிறவி வருமோ தயாநிதியே.
(39)
எழுதாது
தன்னி னியல்பை யறிந்தவர்க்குப்
பழுதா
யுடலம் படுமோ தயாநிதியே.
(40)
அட்டாங்க
யோக மறிந்த தவத்தோர்க்குக்
கிட்டாப்
பொருளுலகிற் கேளேன் றயாநிதியே.
(41)
நவகோட்கள்
செய்கை நாடாநித முமுனைத்
தவநெறியிற்
காண்போர் தம்மைத் தயாநிதியே.
(42)
தசவாயு
தன்னைத் தகைந்துநிலை கண்டவருக்
கிசையாது
மண்ணி லிறப்பு தயாநிதியே.
(43)
அண்டத்தி
லுள்ளபல வாச்சரிய மத்தனையும்
பிண்டத்திலே
வெளியாய்ப் பேசுந் தயாநிதியே.
(44)
என்றும்
பெரியோ ரியம்புகின்ற நேர்வழியை
யின்று
னடிமைக் கியம்பாய் தயாநிதியே.
(45)
மூலா
தாரத்தின் முளைத்தசிவ லிங்கடனி
மேலேனும்
காட்டாதென் விந்தை தயாநிதியே.
(46)
முக்காலச்
செய்கை முழுதுமறி யவின்னு
மெக்காலமோ
வறியே னெந்தாய் தயாநிதியே.
(47)
மனக்கண்ணைத்
தந்துவழி யடிமை யாக்கவின்ன
நினைக்கா
திருப்பதென்ன நேயந் தயாநிதியே.
(48)
வாதோ
முன்சென்மத்து வன்மமோ யாவர்செய்த
சூதோ
வென்மீதிற் சொல்வாய் தயாநிதியே.
(49)
வேதச்
சிரத்தின்மிசை வீற்றிருக்கு மாமணிநீ
சோதித்
திருக்கிலென்ன சொல்வேன் றயாநிதியே.
(50)
கள்ளப்
புலன்னெரிற் காட்சிகொடுத்த தல்லாற்
தள்ளி
விடுப்பதென்ன தர்மந் தயாநிதியே.
(51)
குருவடிவே
தெய்வமெனக் கொள்ளாத பேதைமையா
லுருவா
யுலகி லுழல்கின்றேன் றயாநிதியே.
(52)
பூரணனே
யுன்னைப் போற்றித் துதிக்கநிதந்
தாரணியி
லிந்நாட் டனிப்பாய் தயாநிதியே.
(53)
பொன்னே
மணியே பொருளே யருளேயென்
னன்னே
யடிமைதனை யாள்வாய் தயாநிதியே.
(54)
கிருபா
நிதியே கேடிலாக் கற்பகமே
குருவாய்த்
திருமேனி கொண்ட தயாநிதியே.
(55)
தூண்டா
விளக்கே சொல்லரிய தூமணியே
வேண்டாமல்
வேண்டுமுள்ளே விளைவே தயாநிதியே.
(56)
கண்ணுக்
கடங்காத காட்சியே காணரிய
விண்ணைக்
கடந்த வெற்பே தயாநிதியே.
(57)
நானா
விதமறையு நாடி யறியாமற்
கோனாகி
நின்ற குருவே தயாநிதியே.
(58)
சொல்லுக்
கடங்காத சோதியே யெங்கணுநீ
யல்லா
தொருசெயலு மாமோ தயாநிதியே.
(59)
எத்தனையோ
தொண்ட ரிருந்தாலுஞ் சந்ததமு
மத்தனைபேர்க்
குங்காட்சி யாவாய் தயாநிதியே.
(60)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக