தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த
அரசூர்த் தங்கநாயகி அம்மைப் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
சந்தமலி
சோலைவளம் சாருமர சூரிலவிர்
நந்தலிலாச்
சீர்த்தங்க நாயகிமேல் - செந்தமிழின்
சீரார்
பதிகமொன்று செப்பவருள் செய்யுமெழில்
காரானை தன்பொற் கழல்.
(1)
சற்குரு துதி
(நேரிசை
வெண்பா)
வரம்மேவும்
கொங்கிலணி மன்னுமர சூரின்
தரம்மேவு
கோயிலினுட் சாரு - முரம்மேவுந்
தெய்வத்
துதிபகரச் சீர்தோ யருட்குரவன்
செய்யபதம் போற்றுதிநெஞ்
சே.
(2)
நூல்
(இரட்டை
ஆசிரிய விருத்தம்)
பங்கயாத
னம்மருவு நான்மறைப் பிரமன்
படைப்பினை யடைந்திடாமல்
பதுமம்முத லாம்மலர்க் கணைகொண்டு வரும்வேள்
படைக்குளமு டைந்திடாமல்
செங்கனக
மென்றபொரு ளாசையாம் காற்றினிற்
சிக்கியுளந் நைந்திடாமல்
சிந்தையொடு தேகமும்வ ருந்தும்ப டிக்குவரு
தீப்பிணியில் நொந்திடாமல்
வெங்கடாமி
சையேறி வருநமன் கைப்பாசம்
வீசநா சப்படாமல்
மேவும்முப் போதுமெப் போதும்நற் போதுகொடுன்
மெய்ப்பதம் வணங்குமடியார்
தங்கள்மா
மனமீதி லங்குசீர் மகதேவி
சாருமர சூரில்மேவுஞ்
சங்கநா யகிமறைத் துங்கநா யகியணித்
தங்கநாய கியம்மையே.
(3)
சந்தமா
ரின்தமிழ்த் துதிகூறி யேத்திடுந்
தவம்மேவு கவிராசனார்
தம்மகளெ னச்சமைத் துணவளித் தாறுமதி
சார்ந்துநடை
கொண்டதனிலும்,
இந்தமா
நிலமீதி லிந்திலா விருள்நாளி
லிறைவனா ணைக்கு ளஞ்சி
இனியநற் றுதிசொல்லபி ராமபட் டற்காக
எழில்மதிவ ரச்செய்ததிலும்
சிந்தனைவ
ருந்தன்மன மகிழ்வுறப் பாட்டொன்று
செப்பியதை மெய்ப்பிக்குந்நாள்
சீறியர சன்செயும் தண்டனைத டுத்தருட்
செங்கரம் காட்டியதிலும்
சந்தநீள்
சேவைதந் தெனையாளல் பெரியதோ
சாருமர சூரில்மேவும்
சங்கநா யகிமறைத் துங்கநா யகியணித்
தங்கநா யகியம்மையே.
(4)
பொங்கரவ
ணிந்துதலை மாலையுட னென்பும்
புனைந்துசுட லையினிலாடிப்
பூசும்வெண் சாம்பரொடு தாருகவ னத்திற்
பொருந்துதவ மாதவர்கள்தம்
பங்கமையும்
மாதரா ரிடமேற்ற விர்ந்திடும்
பரமனா ரூழிநாளில்
பரவுபதி னாலுலக மும்பிறவு மிரவிமதி
பலகோடி முனிவர்தேவர்
தங்களையெ
லாமிறுதி கண்டிடச் செய்துதான்
தலைவனாய் நித்தியனுமாய்ச்
சச்சிதா னந்தனாய் யைந்தொழிலை யாற்றிச்
சகத்தைப்பி னும்செய்முதலாய்ச்
சங்கரனி
ருப்பதுன் மங்கலப் பெருமையாய்ச்
சாற்றல்நிச மரசூரில்வாழ்
சங்கநா யகிமறைத் துங்கநா யகியணித்
தங்கநா யகியம்மையே.
(4)
கங்கையே
சாவித்ரி யேசரசு வதியெனும்
கலைவாணி யேமாரியே
கௌமாரி சாமுண்டி வாராகி சூலமவிர்
காளி
சாமளை வாமியாம்
மங்கையே
செங்கையில் பாசாங்கு சங்கொண்ட
மாதேவி சீதேவியே
மயிடனையெ திர்த்தடர்க் கும்கொற்றி யேஇமய
மலையரச னீன்ற வுமையாம்
நங்கையே
சிங்கவா கனமீதி லூர்ந்துவரும்
நாராய ணீகாரணீ
நண்ணுயிரெ லாம்பெற்ற தாயான நாயகீ
நாராய ணற்குரிமைசால்
தங்கையே
செங்கமல பாதம்ப ராவடியர்
தமையாள வரசூரில்வாழ்
சங்கநா யகிமறைத் துங்கநா யகியணித்
தங்கநா யகியம்மையே.
(5)
கலியாவு
மோடவருள் திரியம்ப கீயருட்
கமலபா தாம்புயத்தீ
கவின்நீடு செவ்வாய்ப்ப சுங்கிள்ளை யொன்றினைக்
கைக்கொள்கோ மளவல்லியே
மலிசீர்வி
சாலாட்சி காமாட்சி மீனாட்சி
வளரருட் பதுமாட்சியே
மருவேல வார்குழலி யேபச்சை மேனியொடு
மன்னுதிரி புரசுந்தரீ
ஒலிநீள்ம
றைச்சிலம் பவிர்சீற டித்துணைகொள்
உமையேப ராசத்தியே
ஓங்கும்வே தாந்தியே நாதாந்தி யேதவத்
துத்தமர்கொள் போதாந்தியே
சலியாது
வந்தருள்செய் விமலையே யமலையே
சாருமர சூரில்மேவுஞ்
சங்கநா யகிமறைத் துங்கநா யகியணித்
தங்கநா யகியம்மையே.
(6)
மேடத்தி
னோடிடப மிசைமிதுன முறுபவனி
வேள்கரத் தயிலாயினாய்
மிளர்கடக முற்றிடுகை சிங்கம்நிக ரானிடை
மேவெழிற் கன்னியானாய்
பீடவிர்து
லாவைநிக ரறிஞர்பர வம்மையே
பிசகுசெய்வி ருச்சிகம்போல்
பெருகுதுட் டரையட்டி டுஞ்சூல பாணியே
பெட்புமலி தனுசேந்தினாய்
மாடம்மலி
மதுரையினில் மகரக்கு ழைப்பரனை
மணமேற்றி டும்செல்வியே
மன்னுசம் பந்தருக் கருள்பாலு றும்கும்ப
மாதனத் தாயேபவம்
சாடவரு
தாளுடன், மீனனைய கண்ணுளாய்
சாருமர சூரில்மேவுஞ்
சங்கநா யகிமறைத் துங்கநா யகி!யணித்
தங்கநா யகியம்மையே.
(7)
கன்மங்கள்
பலகோடி செய்திருந் தாலும்நின்
கண்ணருட் கெதிர்நிற்குமோ
கடையனே னுற்றபிற விகள்தோறு மீன்றதாய்க்
கனிவுனது ளத்திலிலையோ
சென்மங்கள்
பலகோடி பெற்றிளைத் தேனினும்
சேராது காப்பதரிதோ
திருவருட் துளிசிறிதென் மேல்தெறித் தருளிலிச்
செகமெலா முய்யுமன்றோ
வன்மங்கள்
பலகோடி சேர்ந்த்தொப் பாம்கொடிய
மனமுடைய னேனுமுன்றன்
மகிமைமலி கருணைபெறு திருவுளமி ரங்கியருள்
வாழ்வருள வேண்டுமம்மா
தன்மங்கள்
பலகோடி நாளும்பு ரிந்துமகிழ்
சரதர்வள ரரசூரில்வாழ்
சங்கநா யகிமறைத் துங்கநா யகியணித்
தங்கநா யகியம்மையே.
(8)
சண்முகப்
பிரியைகலி யாணிநன் மோகனச்
சரசுவதி ரத்தினாங்கி
சங்கரா பரணியொரு பாதிசா ரங்கியீ
சன்தனக்
கேதாரமாம்
பண்முகத்
தானந்த பயிரவி சரசாங்கி
பாடுதேவ மனோகரி
பரவிடுங் கனகாங்கி யேமவதி தர்மவதி
பயிலருட் காந்தாமணி
விண்முகக்
கும்சகன் மோகினி ரூபவதி
மிளிர்காபி நாராயணீ!
விழைநாக நந்தினீ கௌரீ மனோகரி
மேதகைய ஸ்ரீரஞ்சனி
தண்முகக்
காங்கேய பூஷணி நீதிமதி
சாருமர சூரில்மேவுஞ்
சங்கநா யகிமறைத் துங்கநா யகியணித்
தங்கநா யகியம்மையே.
(9)
ஆழாழி
சூழ்புவியி லன்றிவிட் புலமீது
மவிர்போக மெதுவும்வேண்டேன்
அஞ்சேன்பி றப்பதனை, யொன்றே னிறப்பதனை
அருளையே வேண்டினேனென்று
ஊழாலு
யர்ந்தமெய்ப் பெரியோரு ரைத்திட்ட
உண்மையினை யோர்ந்தும்வீணே
உலகத்தி லொருகாலும் நிலையிலா துறுபொருளை
உறுதியென நாடியோடும்
பாழான
மனதையா னென்செய்கு வேனெனது
பக்கமொரு வழிநிலாதால்
பாதார விந்தத்தில் மன்னியழி வற்றமெய்ப்
பரஞானம் மேவவருள்வாய்
தாழாம
லெனையாத ரிப்பாயென் னன்னையே
சாருமர சூரில்மேவுஞ்
சங்கநா யகிமறைத் துங்கநா யகியணித்
தங்கநா யகியம்மையே.
(10)
கொங்கேந்து
பன்மலர்க் குவையேந்தி நின்றுனது
குளிர்பத
மருச்சிக்கிலேன்
கொடியேந்து மைவரா லுளமேந்து மிச்சைபல
கொண்டுலகி னிற்றளர்ந்தேன்
வங்கேய்ந்து
றும்கொடும் பாம்பெனச் சீறுசினம்
வாய்ந்தடுத் தோர்க்கெடுப்பேன்
மங்களம்மி குந்தநின் நல்லுருவை நொடியளவும்
மனதினில் நிறுத்தவறியேன்
எங்கேய்ந்த
தொண்டரையு மன்போடு தன்பால்
இழுக்கும் பெருந்தவத்தோர்
இசையும்பெ ருங்குழுவி லடியேனை யும்சேர்த்துன்
இன்னருட் காளாக்குவாய்
சங்கேந்தும்
நாராய ணற்கினிய தங்கையே
சாருமர சூரில்மேவுஞ்
சங்கநா யகிமறைத் துங்கநா யகியணித்
தங்கநா யகியம்மையே.
(11)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக