தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த
அன்னியூர்ப் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
மன்னுபுகழ்
அன்னூர் வளர்மன்னி யீச்சுரன்மேல்
பன்னு
தமிழ்ப்பதிகம் பாடுதற்கு - மின்னுமியல்
ஐந்துகரம்
நால்வாய்மூன் றாம்கண் ணிருசெவிவென்
தந்தமொன்றுள் ளானருள்வான்
தான்.
(1)
நூல்
(அறுசீர்
ஆசிரிய விருத்தம்)
இந்தணிசெஞ்
சடைமுடியும் முக்கண்ணும்
மான்மழுவு மிலகக் கொண்டு
செந்தகையத்
திருவடியை வணங்குமவர்க்
கருள்புரியுஞ் சிவனார் கோயில்
கந்தமலர்ச்
சோலைமிகப் பொலிதரலால்
கொங்கெனும்பேர் கவினும் நாட்டில்
அந்தரரும்
வந்துபணி செயவிரும்பும்
தகைவாய்ந்த அன்னி யூரே.
(2)
இருவினைமும்
மலமறுத்துப் பதியுடனே
சேர்த்தருளும் இயல்பு தன்னை
வருமடியார்க்
கருள்புரிவா னருந்தவத்தாய்
உடனாக வதியுங் கோயில்
திருமகள்சேய்
பிரமன்வன்னி வனம்வந்து
பூசித்துச் சிறப்புப் பெற்றிட்டு
அருள்வன்னி
லிங்கமெனப் பெயர்சூட்ட
விளங்குதிரு அன்னி யூரே.
(3)
தேனினும்மிக்
கினியதிரு முறைபாடிப்
பணிவார்க்குச் செல்வம் நல்க
மானின்விழித்
தபோதகத்தா யுடன்மன்னி
ஈச்சுரனார் வதியுங் கோயில்
வானிலிங்கப்
பெயர்சூட்டி வியாசமுனி
பல்லாண்டு வழிபட் டேத்தும்
ஆணிலில்சீர்
மிகப்பொலியும் வள்ளிவனம்
என்னுமுயர் அன்னி யூரே.
(4)
தெள்ளுமுணர்
வுடையோராய் நீருடனே
பச்சிலையால் செய்ய பூசை
விள்ளும்விருப்
புடன்புரிவார்க் சிகபரச்சீர்
நலமளிக்கும் விமலன் கோயில்
வள்ளிலிங்கப்
பெயருடனே மார்க்கண்ட
முனிபன்னாள் வணங்கிப் போற்றும்
அள்ளுபுகழ்ச்
சோலையிடைக் கிள்ளையிசை
பாடுமியல் அன்னி யூரே.
(5)
தன்னிகரில்
லாக்கதியைத் தகையடியார்
தமக்கருளும் தன்மை வாய்த்த
மன்னிலங்கப்
பெருமானா ரருந்தவப்பேர்ச்
செல்வியுடன் வளருங் கோயில்
பன்னியுட
னுணவினுக்காகக் கிழங்ககழ்கால்
உதிரம்மிகப் பாய்தல் கண்டு
அன்னியெனும்
வேடன்மிகப் பயந்துபணிந்
தருள்பெற்ற அன்னி யூரே.
(6)
சிற்பரன்நற்
பரமகா ருண்ணியமார்
தகைமையினால் சிறுமைத் தாய
அற்பமதி
மதிதன்னை யணிமுடியில்
அணிந்தருளு மமலன் கோயில்
சிற்பமுறச்
சேயூரில் பணிசெய்த
சேரமன்னன் செய்தி கேட்டே
அற்பினுடன்
திருக்கோயில் மண்டபமா
தியபணிசெய் அன்னி யூரே.
(7)
குழகனறு
முகன்நாப்பண் குழலுமையாள்
இடப்பாகம் குலவ வெள்ளை
மழவிடைமேல்
வந்தருளி யடியரிடர்
நீக்கியருள் வரதன் கோயில்
பழகினிமைச்
சேரன்முயன் றெழுந்தருளா
தருட்சமயன் பக்திக் காக
அழகுமலி
இலிங்கமெனக் கருணையுடன்
கோயிலமர் அன்னி யூரே.
(8)
உமையவள்தன்
தவம்கண்டு திருமணம்கொண்
டிடப்பாக முரிமை யாக்கி
இமையவர்தம்
துயர்தீர்ப்பான் நுதல்விழியில்
செவ்வேளை யீந்தான் கோயில்
சமையனிரு
துர்க்கைக்குக் கோயில்கட்டி
நன்மார்க்கம் தழைக்கப் பூசை
அமைதரச்செய்
தணிமன்னிப் பெருமானார்
அருள்பெற்ற அன்னி யூரே.
(9)
கரியநெடு
மாலயனுக் கரியவனாம்
தனதடியைக் கருதும் தொண்டர்க்கு
உரியவனாத்
திருமேனி காட்டியருள்
சிவபெருமா னுறையுங் கோயில்
பெரியதிருத்
தளிகிலமா யுறக்கருப்ப
கவுண்டர்நிறை பேரன் பாலே
அரியதிருப்
பணியன்பர் முயற்சியுடன்
செய்தமைத்த அன்னி யூரே.
(10)
விந்தைமலி
விநாயகரு மாறுமுகச்
செவ்வேளும் விளங்கித் தோன்றச்
சந்தமலர்க்
குழலுமையுந் துலங்கமன்னிப்
பெருமானார் சாருங் கோயில்
கந்தமலர்ச்
சிரவைநகர்க் கந்தமுனி
தலமேன்மைக் கவிப்பு ராணம்
அந்தரரும்
வியக்கவுரைத் தணித்துதிப்பாப்
பலபகரும் அன்னி யூரே.
(11)
தெள்ளிமையோர்
துயர்நீங்கக் கருவேளைக்
காய்ந்தருளிச் செவ்வேள் தன்னைக்
கொள்ளும்நுதல்
விழிவழியா லளித்தமன்னிப்
பெருமானார் குலவுங் கோயில்
பள்ளியறைப்
புதுப்பணியும் பருமதிலின்
திருப்பணியும் பண்பாய்ச் செய்திட்டு
அள்ளுபுகழ்க்
கும்பநீ ராட்டுதல்செய்
யன்பர்மிகும் அன்னி யூரே.
(12)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக