திங்கள், 12 அக்டோபர், 2026

அன்னியூர் தோத்திரங்கள்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

அன்னியூர் தோத்திரங்கள்

திருப்பணி விளக்கம்

(நேரிசை வெண்பா)

கோவிந்த சாமிப்பேர் கொண்டவன்பன் பள்ளியறை

தாவும் விமானமுடன் தானமைத்தான் - மேவும்

திருமதிலும் பிற்பணியும் செய்தரும கர்த்தர்

அருமையுறச் செய்தார்க ளால்.

குடமுழுக்குக் கால விளக்கம்

(நேரிசை வெண்பா)

அன்ப ருதவியுட னாண்டு பராபவத்தில்

இன்பத்தை யொன்பன்நா ளேறுபிறை  - நன்மைமிகும்

ரோகணிசேர் ஞாயிறன்று லோகமுய்யக் கும்பநன்னீ

ரோகையுடன் பெய்தா ருவந்து.          

வாழி வெண்பா

(நேரிசை வெண்பா)

வாழ்கதிரு அன்னியூர் வாழ்கமன்னி யீச்சுரனார்

வாழ்க கணபதிவேள் மாயோனும்  - வாழ்க

அருந்தவத்தாய் அன்படியார் யாவர்களு மின்பம்

பொருந்திமிக வாழ்க பொலிந்து.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக