வெள்ளி, 2 நவம்பர், 2018

திருமுருகாற்றுப்படைப் பதிப்புகள்

        "முருகு, பொருநாறு, பாணிரண்டு, முல்லை
பெருகுவள மதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை, கோல்குறிஞ்சி, பட்டினப்
பாலை, கடாத்தொடும் பத்து"

எனும் பழம்பாடலால் பத்துப்பாட்டில் இடம்பெறத்தக்க நூல்களின் பெயர்களை அறியமுடிகிறது.  இதில் திருமுருகாற்றுப்படை முதலாவதாக அமைக்கப்பெற்றுள்ள சிறப்பினைப் பெற்றுள்ளது.  சங்க இலக்கியப் பத்துப்பாட்டில் ஒன்றாகவும், பக்தி இலக்கியப் பன்னிரு திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் ஒன்றாகவும் திகழக் கூடியது நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை.  இத்திருமுருகாற்றுப்படை பல்வேறு கால கட்டங்களில் பலராலும் பாராயணம் செய்யப்பெற்றுள்ளது.  

காலந்தோறும் படிப்போராலும், பாதுகாப்போராலும் நக்கீரரால் எழுதப்பெற்ற திருமுருகாற்றுப்படையைக் கைப்பட பனையோலைகளில் எழுதிப் படியேடுகளைப் பலர் உருவாக்கினர்.  உரை எழுதும் முகத்தானும்,  உரையேடுகளைப் படியெடுக்கும் முகத்தானும் திருமுருகாற்றப்படைப் படியேடுகள் பல்கிப் பெருகின.  பின்னர், காகித வரவிற்குப் பிறகு இவ்வேடுகளைக் காகிதத்தில் அச்சிடத் தொடங்கினர்.  இதன் முதல் காகித அச்சுப்பதிப்பு கி.பி.1851ஆம் ஆண்டு தொடங்கியது. இத்திருமுருகாற்றுப்படைப் பதிப்பானது நாளது வரை பல்வேறு நிலைகளில் பல பதிப்புகளைப் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.  அதாவது, சங்க இலக்கியத் தொகுப்புப் பதிப்பு, பத்துப்பாட்டுப் பதிப்பு, பன்னிரு திருமுறைத் தொகுப்புப் பதிப்பு, பதினோராம் திருமுறைப் பதிப்பு மற்றும் திருமுருகாற்றுப்படை தனிநூற் பதிப்பு என வெளிவந்துள்ள இந்நூல், மூலமாகவும், வசன நடையுடனும், விளக்கவுரையுடனும், பொழிப்புரையுடனும்,  ஆய்வுரையுடனும், கருத்துரையுடனும் எனப் பல்வேறு நிலைகளில் வெளிவந்திருக்கின்றது.  இதுநாள் வரை திருமுருகாற்றுப்படை வெளிவந்த பதிப்புகளின் தொகுப்பைப் பின்வருமாறு காணலாம்.

  1. சங்க இலக்கியம் - இரண்டு தொகுதிகள், எஸ். வையாபுரிப்பிள்ளை (தொகுப்.), சைவ சித்தாந்த மகாசமாஜப் பதிப்பு, சென்னை, 1940. 
  2. சங்க இலக்கியம் - இரண்டு தொகுதிகள், எஸ். வையாபுரிப்பிள்ளை (தொகுப்.), பாரி நிலையம், சென்னை, இரண்டாம் பதிப்பு 1967.
  3. சங்க இலக்கியம், எஸ். வையாபுரிப்பிள்ளை (தொகுப்.), முல்லை நிலையம், மூன்றாம் பதிப்பு, சென்னை, 2006.
  4. சங்க இலக்கியம் மூலம் முழுவதும், ச.வே. சுப்பிரமணியன் (பதி.), மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2006.
  5. சங்க இலக்கியம் - இணைய தளப் பதிப்பு, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சென்னை (www/tamilvu.org).
  6. திருமுருகாற்றுப்படை, சதாசிவப்பிள்ளை மற்றும் ஆறுமுக நாவலர் உரையுடன், வித்தியானுபாலன யந்திரசாலை, சென்னை,  1ம் பதிப்பு 1851, 3ம் பதிப்பு மே 1873, 10ம் பதிப்பு 1930, 15ம் பதிப்பு 1935, 16ம் பதிப்பு 1947.
  7. திருமுருகாற்றுப்படை, ஊ. புஷ்பரதஞ்செட்டியார் (பதி.), கலாரத்நாகரம் அச்சுக்கூடம், 3ம் பதிப்பு, சென்னை, ஏப்ரல 1885.
  8. திருமுருகாற்றுப்படை, அ. இராமசுவாமிகள் (பதி.), ஜுவரஷாமிர்த அச்சுக்கூடம், சென்னை, 1886.
  9. திருமுருகாற்றுப்படை (தோத்திரச் சுருக்கம்), அ. இராமசுவாமிகள், ஜீவரக்ஷாமிர்த அச்சுக்கூடம், சென்னை, 1886
  10. திருமுருகாற்றுப்படை, கலாரத்னாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1887.
  11. திருமுருகாற்றுப்படை (சுப்பிரமணியர் பிரபந்தக்கொத்து), இராமசாமிச் சுவாமி (பதி), மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1888.
  12. திருமுருகாற்றுப்படை, சி.பெருமாள் நாடார் (பதி.), சின்னைய நாடார் யந்திரசாலை, சென்னை, 1888.
  13. திருமுருகாற்றுப்படை, வி. சுந்தர முதலியார் (பதி.), விக்டோரியா ஜீபிலி அச்சுக்கூடம், சென்னை, 1890.
  14. திருமுருகாற்றுப்படை, பே. இராமலிங்கம் பிள்ளை (பதி.), சித்தாந்த வித்தியானுபாலன யந்திரசாலை, சிதம்பரம், 1896.
  15. திருமுருகாற்றுப்படை, சரவண பெருமாளையர் (பதி.), விக்டோரியா அச்சுக்கூடம், சென்னை, 1902.
  16. திருமுருகாற்றுப்படை, ஆறுமுக நாவலர் (உரை), வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 8ம் பதிப்பு, 1906.
  17. திருமுருகாற்றுப்படை மூலபாடம் (கையடக்கப் பதிப்பு), மனோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910.
  18. திருமுருகாற்றுப்படை, ஆறுமுக நாவலர் (பதி.), விக்டோரியா அச்சுக்கூடம், சென்னை, முதற் பதிப்பு 1917, 13ஆம் பதிப்பு 1923, 16ஆம் பதிப்பு 1947.
  19. திருமுருகாற்றுப்படை, ஸ்ரீராமாநுஜ அச்சியந்திரசாலை, சென்னை, மே 1920.
  20. திருமுருகாற்றுப்படை, கோ. செல்வரங்கம் & கம்பெனி, மனோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை, நவம்பர் 1920 (கமலநாத முதலியாரால் பரிசோதிக்கப்பட்டது).
  21. திருமுருகாற்றுப்படை, எஸ். துரைசாமி ஐயரின் பொழிப்புரையும் அரும்பத விளக்கமும், கோ. செல்வரங்கம் & கம்பெனி, மனோன்மணி விலாசம் பிரஸ், சென்னை, ஏப்ரல் 1920.
  22. திருமுருகாற்றுப்படை மூலமும் பொழிப்பும், என்.எஸ். இராமச்சந்திரய்யா (சகாதாசன்), சென்னை, 1.11.1923
  23. திருமுருகாற்றுப்படை மூலமும் பரிமேலழகர் உரையும், எஸ்.என். பாலசுந்தரம் செட்டி (பதி.), மனோரஞ்சனி பிரஸ், சென்னை, மே 1924.
  24. திருமுருகாற்றுப்படை மூலமும் பரிமேலழகர் உரையும், அ. மகாதேவ செட்டியார் (பதி.), ஸ்ரீசாது இரத்தினசற்குரு புத்தகசாலை, சென்னை, 1924 (வடிவேலு செட்டியாரால் பரிசோதிக்கப்பெற்றது).
  25. திருமுருகாற்றுப்படை மூலம் (கையடக்கப் பதிப்பு), சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1924.
  26. திருமுருகாற்றுப்படை, ந.சி. கந்தையா பிள்ளை (பதி.), தையல்நாயகி அச்சியந்திர சாலை, யாழ்ப்பாணம், 1925.
  27. திருமுருகாற்றுப்படை - சிற்றாராய்ச்சி, எம். ஆறுமுகம் பிள்ளை, லாலி எலெக்டிரிக் அச்சுக்கூடம், தஞ்சாவூர், 1927.
  28. திருமுருகாற்றுப்படை, எஸ். வையாபுரிப்பிள்ளை உரையுடன், சைவசித்தாந்த மகா சமாஜம், சாது அச்சுக்கூடம், சென்னை, 1933, 1934, 1936, 1943, 1946.
  29. திருமுருகாற்றுப்படை மூலமும் உரையும், சைவ சித்தாந்த மகாசமாஜம், சென்னை, 1933.
  30. திருமுருகாற்றுப்படை, ஆர். மீனாட்சிசுந்தரம் பிள்ளை (விருத்தியுரை), அ. முத்துவடிவேல் (பதி.), பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1933.
  31. திருமுருகாற்றுப்படை மூலம் (இலவச வெளியீடு), வண்ணக் களஞ்சியம் காஞ்சி நாகலிங்க முனிவர் (பதி.), காமாட்சி விலாசம், சென்னை, 1934.
  32. திருமுருகாற்றுப்படை ஆராய்ச்சியுரை, வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியார் (பதி.), ஆனந்த பார்வதி அச்சகம், சென்னை, 1935, 1945, 1951.
  33. திருமுருகாற்றுப்படை மூலமும் புத்துரையும் ஆராய்ச்சியும்,  பிரம்ம ஸ்ரீநடேசன் (பதி.), எவரெடி அச்சுக்கூடம், சென்னை, 1936.
  34. திருமுருகாற்றுப்படை மூலமும் ஆராய்ச்சியுரையும், ஸ்ரீரங்கம் குருசுப்பிரமணி அய்யர் & வித்துவான் எஸ். சீதாராம அய்யர் (பதி.), சுந்தர நிலையம், திருச்சி, 1936.
  35. திருமுருகாற்றுப்படை மூலமும் பொருட்சுருக்கமும், பதவுரையும், குறிப்பும், தை.ஆ. கனகசபாபதி முதலியார் (பதி.), கே. பழனியாண்டி பிள்ளை கம்பெனி, சென்னை, 1937.
  36. திருமுருகாற்றுப்படை ஆராய்ச்சியுரை, க. அருளம்பலம் (பதி.), ஸ்ரீசண்முகநாத அச்சியந்திரசாலை, யாழ்ப்பாணம், 1937.
  37. திருமுருகாற்றுப்படை உரை வசனம் (கந்தர் கலிவெண்பாவுடன்), வெ.பெரி.பழ.மு. காசிவிசுவநாதன் செட்டியார் (பதி.), கழக வெளியீடு, சென்னை, 1040.
  38. திருமுருகாற்றுப்படை (கையடக்கப் பதிப்பு), அமரம்பேடு இரங்கசாமி முதலியார் (பதி.), பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1941.
  39. திருமுருகாற்றுப்படை உரையுடன், எஸ். வையாபுரிப்பிள்ளை (பதி.), தமிழ்ச் சங்கம், மதுரை, 1943.
  40. திருமுருகாற்றுப்படை (கந்தசஷ்டி, விரதச் சிறப்பு உட்பட), தருமபுர ஆதீனம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் (பதி.), குமரக்கட்டளை ஸ்ரீசுப்பிரமணியசுவாமி தேவஸ்தானம், குமரக்கட்டளை, 1945, 1948.
  41. திருமுருகாற்றுப்படை (வழிகாட்டி), கி.வா. ஜகந்நாதன், அல்லையன்ஸ் கம்பெனி, சென்னை, 1947.
  42. திருமுருகாற்றுப்படை கருத்துரையுடன், சோதி அரசு (பதி.), ஆவணி மாதம் சர்வதாரி வருடம் (1948).
  43. திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து, கே.எம். வேங்கடராமையா மற்றும் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் (பதி.), அன்னபூர்ணா பதிப்பகம், திருப்பனந்தாள், 1950, 1981.
  44. திருமுருகாற்றுப்படை கையடக்கப் பதிப்பு (திருஞானசம்பந்தரின் கோளறு பதிகம் உட்பட), தருமபுர ஆதீன வெளியீடு, தருமபுரம், 19.1.1951.
  45. திருமுருகாற்றுப்படை விளக்கம், ஆர். பஞ்சநாதம் பிள்ளை, திருச்சிராப்பள்ளி, 1953, 1956.
  46. திருமுருகாற்றுப்படை, சுப்பராய முதலியார் மற்றும் பொ.வே. சோமசுந்தரனார் (பதி.), சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரதிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1955.
  47. திருமுருகாற்றுப்படை, ஸ்ரீமதி சிவானந்தம் தம்பையா மற்றும் வித்துவான் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை (பதி.), சரஸ்வதி புத்தகசாலை, கொழும்பு, 1955.
  48. திருமுருகாற்றுப்படை மூலமும் உரையும், பொ.வே. சோமசுந்தரனார் (உரை), சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1955, 1960, 1964, 1969, 1973, 1978.
  49. திருமுருகாற்றுப்படை புறத்துறை விளக்கம், வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர், மாடல் மலிமறுகில் கூடல் கோபுரம், இரண்டாம் பதிப்பு 1956.
  50. திருமுருகாற்றுப்படை மூலமும் விளக்கவுரையும், த.பொ. தண்டபாணி (பதி.), மகாபாரதம் அச்சகம், கும்பகோணம், 1956.
  51. திருமுருகாற்றுப்படை மூலம், சுப்பிரமணியன் - சாந்தா திருமண அன்பளிப்பு, முத்தமிழ்க் கழக வெளியீடு, 23.5.1958.
  52. திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து, டி.எம். குமரகுருபரன் பிள்ளை(பதிப்.), கே.எம். வேங்கடராமையா (தொகுப்.), காசி மடம், திருப்பனந்தாள், 1959, 1981.
  53. திருமுருகாற்றுப்படை மூலம், ஸ்ரீகாமகோடி கோசஸ்தானம், சென்னை, 1959.
  54. திருமுருகாற்றுப்படை (கையடக்கப் பதிப்பு), ஆர்.ஜி. பதி கம்பெனி, சென்னை, 1959.
  55. திருமுருகாற்றுப்படை, இ.எம். வீரபாகுபிள்ளை (உரை), ஒற்றுமை நிலையம், சென்னை, 1960, 1965.
  56. திருமுருகாற்றுப்படை தெளிபொருள் சொல்லடைவு பொருளடைவு, சென்னை மாகாணத் தமிழ்ச்சங்க வெளியீடு, திருநெல்வேலி, 1960.
  57. திருமுருகாற்றுப்படை, புலியூர்க்கேசிகன் (உரை), மல்லிகைப் பதிப்பகம், சென்னை, 1960.
  58. திருமுருகாற்றுப்படை மூலமும் தெளிவுரையும், இரா. இராதாகிருஷ்ணன் (தெளிவுரை), திரிசிரபுரம் மௌனகுரு வழிபாட்டுக் கழகம், திரிசிரபுரம், 1962.
  59. திருமுருகாற்றுப்படை மூலமும் பொழிப்புரையும், கண்ணன் அடிகள் (பொழிப்புரை), அன்புநெறிக்கழக வெளியீடு, மதுரை, 1963.
  60. திருமுருகாற்றுப்படை, பொன். சுப்பிரமணிய பிள்ளை (பொழிப்புரை), மகாலிங்க சுவாமி தேவஸ்தானம், திருவிடைமருதூர், 1966.
  61. திருமுருகாற்றுப்படை பொழிப்புரையுடன், ஸ்ரீமகாலிங்கஸ்வாமி தேவஸ்தானம், திருவிடைமருதூர், 1966.
  62. திருமுருகாற்றுப்படை விளக்கம், மு.ரா. சாமி (பதி.), மூவர் பதிப்பகம், காரைக்குடி, 1966.
  63. திருமுருகாற்றுப்படை மூலம் (கையடக்கப் பதிப்பு), அழ.அ.நா. நாராயணன் செட்டியார் மணிவிழா வெளியீடு, சி.ப.சி.த. முத்துவிலாஸ், காரைக்குடி, 4.1.1969.
  64. திருமுருகாற்றுப்படை விளக்கவுரை, கி.வா. ஜகந்நாதன், அமுத நிலையம், சென்னை, 1970, 1978, 1994..
  65. திருமுருகாற்றுப்படை (கையடக்கப் பதிப்பு), ஸ்ரீகிருபானந்த வாரியார் சுவாமிகள் (பதி.), திருப்புகழமிர்தப் பதிப்பகம், சென்னை, 1.1.1971.
  66. திருமுருகாற்றுப்படை, ச.ரா. கச்சபேசுவரன் (உரை), லிட்டில் ப்ளவர் கம்பெனி, சென்னை, 1972, 1977.
  67. திருமுருகாற்றுப்படை மூலம் (கையடக்கப் பதிப்பு), அரு. அருணாசலம் செட்டியார் & அரு. உமையாள் ஆச்சி (பதி.), தேவகோட்டை கந்தர் சஷ்டி 28ஆவது ஆண்டு விழா வெளியீடு, தேவகோட்டை, 1973.
  68. திருமுருகாற்றுப்படை மூலமும் உரையும், கோ. வில்வபதி (உரை)இ பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1977.
  69. திருமுருகாற்றுப்படை மூலம், மதராஸ் ரிப்பன் பிரஸ் அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள், குமரப்பன் - உலகம்மை திருமண வெளியீடு, புதுக்கோட்டை, 4.12.1977.
  70. திருமுருகாற்றுப்படை உரைநடையும் குறிப்பும், இரா. இளங்குமரன் (பதி.), கழக வெளியீடு, சென்னை, 1977.
  71. திருமுருகாற்றுப்படை, வீ. குமார வீரையர் (பதி.), வீரசைவம், மலர் 1, இதழ் 4 முதல் மலர் 2, இதழ் 10 வரை.
  72. திருமுருகாற்றுப்படை, எஸ். வையாபுரிப்பிள்ளை, உரையாசிரியருரையுடன், செந்தமிழ், தொகுதி 38, பகுதி 1 முதல் தொகுதி 40, பகுதி 5 வரை, மதுரை.
  73. திருமுருகாற்றுப்படை, சிக்கல் சி. சானகிராமன் உரையுடன், குமரகுருபரன், மலர் 26, இதழ் 5 முதல் இதழ் 12 வரை, ஸ்ரீவைகுண்டம்.
  74. பத்துப்பாட்டு மூலமும் நச்சர் உரையும், வே. சாமிநாதையர் (பதி.), திராவிட ரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1889.
  75. பத்துப்பாட்டு மூலம், உ.வே. சாமிநாதையர் (பதி.), கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1918, 1931, 1950, 1956, 1961, 1974.
  76. பத்துப்பாட்டு மூலம், கா.ரா. நமச்சிவாய முதலியார் (பதி.), குமாரசாமி நாயுடு அண்டு ஸன்ஸ், சென்னை, 1920.
  77. பத்துப்பாட்டு மூலம் - திருமுருகாற்றுப்படை, உ.வே.சாமிநாதையர் (பதி.), உ.வே.சா. நூல் நிலையம், சென்னை, 1931. 
  78. பத்துப்பாட்டு, திருநெல்வேலி காசிம் முகையதீன் ராவுத்தர் (பதி.), சென்னை, 1934.
  79. பத்துப்பாட்டு உரையுடன் - திருமுருகாற்றுப்படை, பொ.வே. சோமசுந்தரனார் (பதி.), கழகம், சென்னை, 1956, 1962, 1966, 1968, 1971, 1973.
  80. பத்துப்பாட்டு மூலம் - திருமுருகாற்றுப்படை, எஸ். ராஜம் (பதி.), மர்ரே & கம்பெனி, சென்னை, 1957.
  81. பத்துப்பாட்டு ஆராய்ச்சி உரையுடன், வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியார் & சி. செகந்நாதாசாரியார் (உரை), வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியார் கம்பெனி, சென்னை, 1961.
  82. பத்துப்பாட்டு, தமிழண்ணல் (பதி.), பி.கே. புக்ஸ், மதுரை, 1975.
  83. பத்துப்பாட்டு, மர்ரே எஸ். இராஜம் (பதி.), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1981.
  84. பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், உ.வே.சாமிநாதையர் (பதி.), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், நிழற்படப்பதிப்பு, 1986.
  85. பத்துப்பாட்டு மூலமும் உரையும், புலவர் அ. மாணிக்கனார் (உரை), வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 1999.
  86. பத்துப்பாட்டு, தெ.முருகசாமி, நா. மீனவன், சுப. அண்ணாமலை மற்றும் தமிழண்ணல் (பதி.), கோவிலூர் மடாலய வெளியீடு, கோவிலூர்-காரைக்குடி, 2004.
  87. பத்துப்பாட்டு, வி. நாகராசன் (உரை), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, முதற் பதிப்பு 2004, இரண்டாம் பதிப்பு 2006.
  88. பழந்தமிழ் இலக்கியப் பேழை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1970.
  89. பதினோராந்திருமுறை, ஆறுமுக நாவலர் (பதி.), வர்த்தமான தரங்கிணீ சாகை யச்சுக்கூடம், சென்னை, 1869.
  90. பதினோராந் திருமுறைப் பிரபந்தங்கள், கன்னியப்ப முதலியார் &  சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார் (பதி.), அத்தினீயம் அண்ட் டேலி நியூஸ் பிரான்ச் அச்சுக்கூடம், சென்னை, 1869.
  91. பதினோராம் திருமுறை மூலம், ஸ்ரீகாசிமடம், திருப்பனந்தாள், 1991.
  92. பதினோராம் திருமுருறை, வர்த்தமானன் பதிப்பு, சென்னை, 1994.
  93. பன்னிரு திருமுறை, ச.வே. சுப்பிரமணியம் (பதி.), மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2007.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக