வெள்ளி, 2 நவம்பர், 2018

தமிழ்ச்சுவடிகளில் எழுத்து மயக்கம்

        ஓரெழுத்து பிறிதொரு எழுத்துபோல காட்சி தருவதைச் சுவடிகளில் எழுத்து மயக்கம் என்பர்.  சுவடி எழுதுபவரின் கல்வியறிவிற்கேற்பவும், சுவடி எழுதுபவரின் கையெழுத்திற்கேற்பவும், ஒருவர் சொல்ல பிறிதொருவர் சுவடி எழுதும் போது சொல்பவர்-கேட்பவர் ஆகியோரின் மொழித்திறனுக்கேற்பவும், தொழில் முறையில் சுவடி எழுதுபவரின் வேகத்திற்கேற்பவும் தமிழ்ச் சுவடிகளில் எழுத்து மயக்கங்கள் தோன்ற வாய்ப்புண்டு. 

இவ்வெழுத்து மயக்கங்கள்  ககர வருக்கம்-சகர வருக்கம், சகர வருக்கம்- ககர வருக்கம், ககர வருக்கம்-தகர வருக்கம், தகர வருக்கம்-ககர வருக்கம், ணகர வருக்கம்-னகர வருக்கம், னகர வருக்கம்-ணகர வருக்கம், தகர வருக்கம்-நகர வருக்கம், நகர வருக்கம்-தகர வருக்கம், தகர வருக்கம்-றகர வருக்கம், றகர வருக்கம்-தகர வருக்கம், நகர வருக்கம்-னகர வருக்கம், னகர வருக்கம்-நகர வருக்கம், நகர வருக்கம்-றகர வருக்கம், றகர வருக்கம்-நகர வருக்கம், ரகர வருக்கம்-றகர வருக்கம், றகர வருக்கம்-ரகர வருக்கம், வகர வருக்கம்-யகர வருக்கம், யகர வருக்கம்-வரக வருக்கம், வகர வருக்கம்-லகர வருக்கம், லகர வருக்கம்-வகர வருக்கம், லகர வருக்கம்-ளகர வருக்கம், ளகர வருக்கம்-லகர வருக்கம், ளகர வருக்கம்-ழகர வருக்கம், ழகர வருக்கம்-ளகர வருக்கம், பகர வருக்கம்-மகர வருக்கம், மகர வருக்கம்-பகர வருக்கம் ஆகிய வருக்க எழுத்துகளுக்கிடையேயும்,   அ-இ, இ-அ, ஆ-ஏ, ஏ-ஆ, எ-ஏ, ஏ-எ, ஒ-ஓ, ஓ-ஒ, இ-உ, உ-இ, கு-சூ, கு-டு. கு-ரு, டூ-ரூ, மு-ழு, மூ-ழூ, யி-மி, யீ-மீ, பீ-டீ ஆகிய எழுத்துகளுக்கிடையேயும், சுவடி எழுதும் போது சொல்பவரின் ஒலிப்பு முறையாலும், கேட்பவரின் அறிவுத்திறனாலும் ர-ற;  ண-ந-ன; ழ-ல-ள ஆகிய எழுத்துகள் மற்றும் அவ்வவற்றின் வருக்க எழுத்துகளுக்கு இடையேயும் தோன்றும்.

மெய்யெழுத்துகள் அதனதன் அகரஉயிர்மெய்யாகவும், னகரம் ஐகார உயிர்மெய்க்குறியீடாகவும், ஐகார உயிர்மெய்க்குறியீடு னகரமாகவும், ஊகாரம் உளவாகவும், ஔகாரம் ஔவாகவும், ஐகார உயிர்மெய்க்குறியீடு இருகொம்பாகவும் இணைக்கொம்பாகவும், எகர உயிர்மெய்-ஏகார உயிர்மெய்யாகவும், ஏகார உயிர்மெய்-எகர உயிர்மெய்யாகவும், ஒகர உயிர்மெய்-ஓகார உயிர்மெய்யாகவும், ஓகார உயிர்மெய்-ஒகர உயிர்மெய்யாகவும், குறில் நெடிலாகவும், நெடில் குறிலாகவும் மயங்கி வரும்.  தமிழ்ச்சுவடிகளில் இன்று வழக்கத்திலிருக்கும் ரகரமும் ரகர வருக்கத்தில் இடம்பெறும் எழுத்துகளையும் 'ர' எழுத்தை 'கால்' என்றே எழுதியிருப்பர்.  எனவே, ரகரம் காலாக இருக்கும்.  இவற்றை,

அகரம் இகரமாகவும் இகரம் அகரமாகவும் மயங்கும்
ஆகாரம் ஏகாரமாகவும் ஏகாரம் ஆகாரமாகவும் மயங்கும்
இகரம் உரகமாகவும் உரகம் இகரமாகவும் மயங்கும்
எகரம் ஏகாரமாகவும் ஏகாரம் எகரமாகவும் மயங்கும்
ஒகரம் ஓகாரமாகவும் ஓகாரம் ஒகரமாகவும் மயங்கும்
எகர உயிர்மெய்கள் ஏகார உயிர்மெய்களாக மயங்கும்
ஏகார உயிர்மெய்கள்  எகர உயிர்மெய்களாக மயங்கும்
ஒகர உயிர்மெய்கள் ஓகார உயிர்மெய்களாக மயங்கும்
ஓகார உயிர்மெய்கள் ஒகர உயிர்மெய்களாக மயங்கும்
மெய்யெழுத்துகள் அதனதன் அகரஉயிர்மெய்யாக மயங்கும்
குகரம் சூகாரமாகவும் சூகாரம் குகரமாகவும் மயங்கும்
குகரம் ருகரமாகவும் ருகரம் குகரமாகவும் மயங்கும்
குகரம் டுகரமாகவும் டுகரம் குகரமாகவும் மயங்கும்
டூகாரம் ரூகாரமாகவும் ரூகாரம் டூகாரமாகவும் மயங்கும்
முகரம் ழுகரமாகவும் ழுகரம் முகரமாகவும் மயங்கும்
மூகாரம் ழூகாரமாகவும் ழூகாரம் மூகாரமாகவும் மயங்கும்
யிகரம் மிகரமாகவும் மிகரம் யிகரமாகவும் மயங்கும்
யீகாரம் மீகாரமாகவும் மீகாரம் யீகாரமாகவும் மயங்கும்
பீகாரம் டீகாரமாகவும் டீகாரம் பீகாரமாகவும் மயங்கும்
ககர வருக்க எழுத்துகள் சகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
சரக வருக்க எழுத்துகள் ககர வருக்க எழுத்துகளாக மயங்கும்
ககர வருக்க எழுத்துகள் தகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
தகர வருக்க எழுத்துகள் ககர வருக்க எழுத்துகளாக மயங்கும்
பகர வருக்க எழுத்துகள் மகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
மகர வருக்க எழுத்துகள் பகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
ணகர வருக்க எழுத்துகள் னகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
னகர வருக்க எழுத்துகள் ணகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
தகர வருக்க எழுத்துகள் நகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
நகர வருக்க எழுத்துகள் தகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
தகர வருக்க எழுத்துகள் றகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
றகர வருக்க எழுத்துகள் தகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
நகர வருக்க எழுத்துகள் னகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
னகர வருக்க எழுத்துகள் நகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
நகர வருக்க எழுத்துகள் றகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
றகர வருக்க எழுத்துகள் நகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
ரகர வருக்க எழுத்துகள் றகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
றகர வருக்க எழுத்துகள் ரகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
வகர வருக்க எழுத்துகள் யகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
யகர வருக்க எழுத்துகள் வகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
வகர வருக்க எழுத்துகள் லகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
லகர வருக்க எழுத்துகள் வகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
லகர வருக்க எழுத்துகள் ளகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
ளகர வருக்க எழுத்துகள் லகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
ளகர வருக்க எழுத்துகள் ழகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
ழகர வருக்க எழுத்துகள் ளகர வருக்க எழுத்துகளாக மயங்கும்
கால் ரகர வருக்கமாகவும் ரகர வருக்கம் காலா(£)கவும் மயங்கும்
னகரம் ஐகார உயிர்மெய்க்குறியீடாகவும் ஐகார உயிர்மெய்க்குறியீடு
னகரமாகவும் மயங்கும்
ஊகாரம் உளவாகவும் ஔகாரம் ஔவாகவும் மயங்கும்
இருகொம்பு இணைக்கொம்பாகவும் இணைக்கொம்பு  இருகொம்பாகவும் மயங்கும்
குறில் நெடிலாகவும் நெடில் குறிலாகவும் மயங்கும் என்றும் விரிவுபடுத்தலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக