ஞாயிறு, 4 நவம்பர், 2018

பயன்பாட்டு நோக்கில் அறிவியல் சிந்தனைகள்

உலகம் தோற்றம் பெற்ற காலந்தொட்டே அறிவியல் சிந்தனைகள் தோற்றம் பெறத் தொடங்கின எனலாம்.  மனிதன், தகவல் பரிமாற்றத்துக்கு முதலில் சைகை மொழியைக் கண்டவன், பின்னர் தன் வாயின் வழியாகப் பல்வேறு குரலொலிகளைக் கண்டான்.  அவ்வொலிகளை எல்லாம் பேச்சொலிகளாக உருவாக்கும் சிந்தனை அவனுக்கு உருவாயிற்று.  இப்பேச்சொலிகளை உருவமாக்க எண்ணி உருவெழுத்துக்களை உருவாக்கினான்.  இவ்வுருவெழுத்துக்களின் வளர்ச்சியில் வரிவடிவங்கள் உருவாக்கப்பெற்றன. கண்டதையும் கிடைத்ததையும் உண்டு வாழ்ந்தவனுக்குச் சூரிய ஒளியின் வெப்பத்தால் வெப்பப்படுத்தப்பட்ட பொருள்களில் சுவையை உணர்ந்தான்.  இதன் மூலம் சமைக்கும் சிந்தனை அவனுக்கு உருவாயிற்று.  இப்படியாக மனிதனின் வாழ்வில் ஒவ்வொரு கூறும் அறிவின் சிந்தனை ஊற்றாக அமைந்துள்ளது.  இவற்றில் இன்று பயன்பாட்டில் இருக்கும் சில அறிவியல் சிந்தனைகளை மட்டும் இங்குச் சுட்டிக்காட்டப்படுகிறது.

சமையல் எரிவாயு

அதிக அழுத்தத்துடன் அடைபட்ட ஒரு பொருள் வெளியேறும் வழியைக் கண்டவுடன் வெளியேறும்.  இந்நிலையில் அதிக அழுத்தத்துடன் அடைபட்டிருக்கம் LPGயானது சிலிண்டரின்மேற்பகுதியைத் திறந்தவுடன் வெளிவருகிறது.  வெளியேறும் இடத்தைத் தீக்குச்சியால் பற்றவைக்கும் போது வெளியேறும் வாயு எரியத் தொடங்குகிறது. வெளியேறும் வாயுவின் அழுத்தத்திற்கு ஏற்ப வெப்பத்தின் தன்மை அமையும்.

LPG (Liquied Petroliue Gas)யில் இருக்கக் கூடிய எரிபொருளின் இறுதி கட்டத்தில் தானாக சுடர் (Flame) நின்றுவிடும்.  இக்கால கட்டத்தில் சிலிண்டர்¢ (Cylender) முழுமையாக வெற்றிடம் ஆகி இருக்காது.  ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அளவு LPG இருக்கும்.  இதனைப் பயன்படுத்த மனிதன் தன்னுடைய அறிவியல் சிந்தனையைத் தூண்டுகின்றான்.  LPG எவ்வாறு எரிகிறது?,  அதன் தன்மை என்ன? போன்றவற்றை ஆய்கிறான்.  

இந்நிலையில், திருமண மண்டபத்தில் திருமண விருந்திற்குச் சமைத்துக் கொண்டு இருக்கும் போது, LPG தீர்ந்துவிடுகிறது.  உடனடியாக சில நிமிடங்கள் Gas தேவைப்படுகிறது.  அங்கு அவனுக்கு அறிவியல் சிந்தனை உற்பத்தியாகிறது.  உடனே, ஒரு அன்னக்கூடையில் சிலிண்டரை எடுத்து வைக்கிறான்.  பின்னர் அன்னக்கூடையில் பக்கத்து அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீரை எடுத்து ஊற்றுகிறான்.  அந்நேரத்தில் சிலிண்டரின் அடிமட்டத்தில் படர்ந்திருக்கும் LPGயானது வெப்பத்தின் காரணமாக ஆவியாகி மேல் நோக்கிச் சென்று வெளியேறி சுடர் (Flame)விடத் தொடங்குகிறது.  சிலிண்டர் வெற்றிடம் ஆகும் வரை, குறைந்தது ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் வரை அடுப்பை எரிக்க முடிகிறது.  காலியான சிலிண்டரில் Gas இருக்காது என்று எண்ணாமல், வெற்றிடம் எப்போதும் ஆகாது.  அதற்குரிய பொதுவான கொள்ளிடத்தில் அதற்கான அழுத்தத்துடன் வாயு நிரம்பியிருக்கும் என்ற அறிவியல் உண்மையை உணர்ந்தவன்.  அந்த வெற்றிடத்தில் பரவியிருக்கும் வாயுவையும் பயன்படுத்த எண்ணி,  தன்னுடைய சிந்தனையைத் தூண்டி எரிவாயுவைப் பயன்படுத்தும் தன்மையைக் காணமுடிகிறது.

இதேபோல், காலியான சிலிண்டரைச் சூரிய ஒளியில் வெப்பப்படுத்தப்பட்டும் பயன்படுத்துவதைப் பார்க்கமுடிகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக