தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த
உடையாம் பாளையம் தோத்திரங்கள்
விநாயகர் துதி
(நேரிசை
வெண்பா)
கொடையாளர்
மன்னுகொங்கில் கோவைக் கணித்தாம்
உடையாம்
பதிக்கோயி லுற்று - மடைபோல்
மதம்பொழியு
மானைமுக வானவன்றன் பொற்றாள்
நிதம்பணிவேன் நெஞ்சில்
நினைத்து.
முருகப்பெருமான் திருப்புகழ்
தனதாந்
தானன
தானன
தனனத் - தனதானா
தெளிதீம்
பாகுறழ்
பாடல்கள்
பலசொற் - றிடும்மேலார்
திகழ்மேம் பாடுடன்
நாள்தொறும்
வதியப் - பெறலாலே
எளியேன்
றானுமு
னாதிசை
பகர்தற் - கிசைவானேன்
இனிதாம் பேறுகள்
யாவையு
முதவற் - கெதிர்வாராய்
வெளிறாம்
சேவல்கு
லாவிய
கொடியுற் - றவிர்தோளா
விடையூர்ந் தேகிடும்
ஈசனோர்
விழியில்த் - திகழ்வோனே
ஒளிர்பூஞ்
சோலைகொள்
மாமலை
தொறும்நட் - புடையோனே
உடையாம் பாளைய
மேவிய
முருகப் – பெருமானே.
வரதராசப்பெருமாள் துதி
(கட்டளைக்
கலித்துறை)
வேளையும்
பூமனை யும்சுத ராக்கொண்ட விண்ணவநின்
தாளை
உவந்து பணிவேற்கெச் செல்வமும் தந்தருள்வாய்
தோளை
யணிசெயு மைம்படை யாய்புகழ் தோயுடையாம்
பாளையம் மன்னும்
வரதரா சப்பெயர்ப் பண்ணவனே.
அண்ணமார் துதி
(எண்சீர்
ஆசிரிய விருத்தம்)
கொங்குநன்னாட்
டவிரும்மக்கள் பொங்குமுவப் புடனே
கூடியண்ணன் மாரெனும்பேர் கூறிவழி படவே
தங்குமிந்த
வுலகத்தில் வேண்டுநலம் யாவும்
தந்தருளும் பெருங்கருணை சார்ந்ததுணை யானீர்
சங்குபுனை
காதுடைய சங்கரன்தே வியுடன்
சாருடையாம் பாளையத்தில் சமைந்துளகோ யிலின்பால்
துங்கமலி
பூசைகொண்டு துலங்கிடுவீ ரன்பர்
சொல்லுநய மத்தனையுந் தொடுத்தருள்செய் வீரே.
முனியப்பன் துதி
(எண்சீர்
ஆசிரிய விருத்தம்)
மனிதகுலத்
துதித்தமக்கள் யாருமென்று மின்பம்
மருவவழங் கிடவுடையாம் பாளையநற் பதியில்
முனியப்ப
னென்றபெயர் கொண்டுவிளங் கிறைவா
மூதுலகில் சிலரன்பு முறையுடன்பூ சிப்பார்
கனிவிரக்க
மில்லாதூன் முதலியன படைக்கும்
காலத்தி லவர்கொடுமை கருதிமுனி யப்பா
முனியப்பா
வன்பர்துதி மொழியப்பா கருணை
முதிரப்பா நன்மையென்கை முற்றருளப் பாவே.
மாரியம்மை துதி
(எண்சீர்
ஆசிரிய விருத்தம்)
பாரிலகு
முயிர்களெலா மின்பமிகும் வாழ்வில்
பயனடையக் கருணைமழை பண்புறப்பெய் திடல்போல்
சீரிலகும்
மாரிபொழிந் துலகிலுயிர்ப் பயிர்கள்
செழிப்படையப் புரியருட்சீர் திகழ்வதனால்
மக்கள்
மாரியெனும்
பெயர்கூற வாழுமுமை யவளே
மாநிலத்தில் தவறாமல் மாரிவழங் கிடுவாய்
காரிசையும்
பொழிலுடையாம் பாளையத்தி லன்பர்
கருதுநல மத்தனையுங் கனிந்துகொடுத் தருளே.
பிளேக் மாரியம்மை துதி
(எண்சீர்
ஆசிரிய விருத்தம்)
சடையாட
மதியோடு தன்புனலு மாடத்
தங்கமன்றி லாடுமரன் தன்னருளால் சூலப்
படையோடு
தெய்வவுருப் பெற்றாய்நன் மக்கள்
பதைபதைக்கச் செயும்பிளேக் கென்னுநோய் முற்றும்
தடைமேவா
தடியோடு நீங்கவருள் புரியும்
தயைமருவும் தாயேநற் சங்கரியே வெள்ளை
விடையேறுஞ்
சிவன்மருவு முடையாம்பா ளையத்தில்
வியன்கோயி லிடத்தென்றும் விளங்குமருட்
சிவையே.
மாகாளியம்மன் துதி
(எண்சீர்
ஆசிரிய விருத்தம்)
முக்கணுடைப்
பரமனது வெங்கோபத் துதித்த
மூர்த்தியா யாயிரமாம் முகங்களுடன் தோன்றித்
திக்கறியத்
தக்கன்மகஞ் செற்றருளுஞ் செயந்தோய்
தீரம்மலி வீரபத்தி ரப்பரனோ டந்நாள்
உக்கிரமா
காளியெனச் சிவையினிடத் துதித்த
உத்தமியே தாயேநல் லுடையாம்பா ளையத்தில்
தக்கபடி
யயன்பர்தொழச் சந்ததமு மிருப்பாய்
சகத்திலுயிர் யாவுமின்பம் தழையவருள் புரியே.
நவகோள் துதி
(எண்சீர்
ஆசிரிய விருத்தம்)
விரிகடற்பார்
உலகிடத்தும் விண்ணிடத்து முள்ளார்
வினையகலத் தினந்தோறும் வியனுறும்பல் மலரால்
பரிவுறும்நல்
நிவேதனத்தால் திருமேனி மீதில்
பால்முதலா வனவாட்டும் பான்மையினால் போற்றத்
தெரிவுறுதல்
பயனனைத்தும் நல்கியருள் புரியும்
சீருடையீர் நவக்கிரகப் பேருடையீர் விண்சார்
பரிதிமதி
சேய்புதன்பொன் வெள்ளிசனி இரண்டு
பாம்பாவீ ருமையுடையாம் பாளையத்தேத் துவனே.
கும்பாபிஷேகக் கால விளக்கம்
(நேரிசை
வெண்பா)
ஆண்டுநிகழ்
சோபகிரு தான்றதையே ழில்த்திங்கள்
வேண்டுமுத்தி
ரட்டாதி மேவுநாள் - நீண்டபுகழ்
மன்னுடையாம்
பாளையத்தில் வண்குடநீ ராட்டுவிழா
துன்னுமுயர் நாளெனவே
சொல்.
வாழ்த்து வெண்பா
(நேரிசை
வெண்பா)
ஐங்கரத்தோன்
வேலன் அவிர்வரத ராசர்சிவன்
துங்கவுமை
கோள்களுக்குந் தோயடியார் - மங்களமாக்
கும்பநன்னீ
ராட்டிக் குலவுடையாம் பாளையத்தில்
உம்பர்சொல் வாழ்வார்
உவந்து.
நூற்பயன்
(நேரிசை
வெண்பா)
பற்று
புகழுடையாம் பாளையத்தூர்க் கோயிலிடை
உற்றதெய்வங்
கட்கா முயர்துதிப்பாச் - சொற்றணிந்த
சுந்தரன்பாக்
கற்றுணருந் தூயதொண்டர் யாகுமின்பம்
வந்தமையக் கொள்வார்பல்
மாண்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக