செவ்வாய், 13 அக்டோபர், 2026

காளப்பட்டி மாரியம்மன் பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

காளப்பட்டி மாரியம்மன் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

பன்னு புகழ்க்காளப் பட்டிநகர் தன்னிலருள்

மன்னுதெய்வ மாகிவளர் மாரித்தாய் - தன்னுரிமைப்

பத்தியினால் பாடல்பகர வருள்புரிவான்

அத்திமுகத் தைங்கரத்தை யன்.

 (1)

நூல்

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

பங்கயம்நேர் முகவழகும் நெற்றியில்நீற் றழகும்,

            பல்லழகு கொளவிளங்கும் பவளவா யழகுந்

துங்கமுறு கருணைவழி விழியழகும் பசுமை

            துலங்குதிரு மேனியினில் தோயுமுடை யழகுங்

கங்கணமார் கரத்திலணிச் சூலமுட னடுக்கை

            கவினழகுந் தாமரைநேர் கழலழகுங் காண

மங்களமார் திருச்சேவை வழங்கிடுவாய் மேலார்

            வளர்க்காளப் பட்டியினில் வாழ்மாரித் தாயே.

 (2)

உருமாறி மாறிவரும் பிறவிபல யெடுத்திட்டு

            உலகிலிது வரையெடுத்த வுடல்கணக்கை யறியேன்

திருமாயன் தருமகவாம் பிரமனுமெற் காகச்

            செய்தவுடம் பிவளவெனச் செப்புவதற் கறியான்

பொருகாலன் சொலவறியான் சித்திரபுத் திரன்பால்

                பொருந்துகணக் கினிலொருகால் பொலிவுறுமோ அறியேன்

கருவாதை இனியேனும் மருவாம லருள்வாய்

            காளப்பட் டிப்பதியில் கவின்மாரித் தாயே.

(3)

எங்கெவரும் முதற்போற்றும் முன்னவனாய்க் களிறாம்

            ஏந்தலையு மவற்கிளைய யெழிலனையுந் தந்தே

இங்கெவரும் நின்மகவென் றியம்பவைத்தா யெனையும்

            ஏற்றமுற வவ்வகையி லினிதருளப் பணிந்தேன்

சிங்கமிசை யூர்ந்தருளால் தெரிசனந்தந் தருளும்

            தேவியே பாவவினைத் தீயரையும் புரப்பாய்

தங்கமலை தன்னைவில்லாக் கொண்டசிவற் கினியாய்

            தண்காளப் பட்டிநகர் சார்மாரித் தாயே.                     

 (4)

அரிதரிது மானிடராய்ப் பிறந்திடுவ தென்ன

            அறிஞர்பல பனந்தவித மாகநுவன் றிட்டார்

பெரியபய னென்றுனருள் பேற்றைவிரும் பாமல்

            பேய்பிடித்தால்ப் போன்றுலக பித்தம் மிகக்கொண்டே

உரியமனை மக்கள் சுற்றமாகியவை மெய்யென்று

            உழலுமவர் மனிதரென வுற்றுமென்ன பயனே

திரிவிதமாம் மயலறுமெய்ச் சிவநெறியில் சேர்ப்பாய்

            திகழ்காளப் பட்டியினில் செறிமாரித் தாயே.             

 (5)

தன்மமொரு சிறிதளவு மின்றியுனை மறந்து

            தனம்சேர்த்துத் தேனீப்போல் சகத்துறைவார் பலபேர்

பன்மலரால் பூசைபுரிந் தேத்துமன்ப ராவார்

            பாழ்மிடியா லிரவுபகல் பரதவிப்பார் பாரில்

முன்புரியும் வினைப்பயனே யிவ்விதமாய் யவிரும்

            முறையென்னப் பலரறைதல் முறைமையென்றா லந்தக்

கன்மவினை தனையுன்ருட் கருணையினால் களைவாய்

            கவின்காளப் பட்டியினில் காண்மாரித் தாயே.          

 (6)

சஞ்சலத்துக் கேயிடமாய் நெஞ்சகத்தை யமைத்தாய்

            தக்கபெரி யோர்குழுவில் சாருமுயர் வளித்தாய்

தஞ்சமுன்னை யல்லாமெய்ச் சார்பறிய வைத்தாய்

            தவமலது பிறப்பகற்றத் தக்கதின்றென் றுணர்ந்தேன்

கொஞ்சமுமென் மனமமைதி கொண்டுனது தாளைக்

            குறித்துநிற்க மாட்டாத கொடுமைக்கென் புரிவேன்

வஞ்சமற நீயிரங்கி ஆளினன்றி உய்யேன்

            வளமலிகா ளப்பட்டி வாழ்மாரித் தாயே.                    

(7)

உம்பரெனத் தருநிழல்க்கீ ழிருந்தமுதுண் பாரும்

            உன்னடித்தொண் டன்பமையா ரென்னிலவர் கடையே

நம்பபடிமைத் தொண்டுசெய்வார் நரரெனினும் வான

            நாட்டிறைவ ரினுமுயர்வாம் நலமுடைய ராமென்று

இம்பர்களு மறியவுரைத் திடுபெரியோர் மொழியை

            எண்ணியுனைப் போற்றாம லிருந்திறப்ப தழகோ

செம்பதுமத் திருவடிசூட் டிச்சிறியேற் கருள்சீர்

            செறிகாளப் பட்டியினில் திகழ்மாரித் தாயே.             

(8)

காரிகைநன் னூலாதி கற்றுணர்ந்த புலவோர்

            கணம்பரவு பெரும்புலமை கைவருதல் வேண்டும்

பேரிகையா தியமுழங்க அரசுபுரி செல்வப்

            பெருக்கினரும் பரவுமருப் பெருஞ்செல்வம் வேண்டும்

ஊரிடம்தோ றமுரந்துண் டுயர்தவம்செய் பெரியோர்

            உளம்போலப் பற்றகன்ற வுளத்துறுதி வேண்டும்

சீரியநற் கருணைமனம் வேண்டுமிவை யருளிச்

            செய்காளப் பட்டியினில் சேர்மாரித் தாயே.               

(9)

மாயவனு மிந்திரனும் மலரவனும் மற்றும்

            வானவரு மசுரர்களால் வாட்டமுறுந் நாளில்

தூயநின்ற னருள்துணையா லிடரரபெற் றுய்ந்த

            சொலறிந்துஞ் சுரர்பதத்தில்  தோயுமிச்சை அமையேன்

காயநெஞ் சுடையவனா னாலுமடி யேனைக்

            கைவிடா தாண்டருளுங் கடனுனக்குண் டம்மா

தாயலது மகவினுக்குத் தாயகமார் சொல்லாய்

            தண்காளப் பட்டியினில் தழைமாரித் தாயே.              

 (10)

எவ்வுயிரை யும்தாயா யந்நாளி லீன்றாய்

            எய்த்தயரும் மனத்துயர மியன்றிடும்வாழ் வளித்தே

வெவ்வுரக மனையவஞ்சர் சூழலினால் நல்லோர்

            மெலிவடைந்து தடுமாற விடுவதழ காமோ

இவ்விதம்நீ செய்வாயேல் யாம்புரிவ தென்னே

            இன்பமுறச் செய்தாலு மிளப்பமுறச் செயினும்

செவ்வியநின் சித்தமென்றன் பாக்கியமா மம்மா

            சீர்காளப் பட்டியினில் திகழ்மாரித் தாயே.                 

(11)

செங்கமல னாதியரும் பரவுலிங்க வடிவாய்த்

            திகழ்சுயம்பு மூர்த்தியெனத் திருவுருக்கொண் டன்பர்

அங்கமதில் சீர்த்தமுகக் கண்ணோய்முற் றகற்றி,

            அடுத்துறும்பன் னிரண்டூரி லவ்விருமக்க ளன்பால்

பொங்கலிட்டுப் பால்பூசை புரியமகிழ்ந் தேற்றுப்

            புனிதமுறு நலம்பலவும் பொலியநல்குந் தாயே

மங்களமார் கொங்கிலவிர் எழிற்காளப் பட்டி

            வளநகரி லருள்மகிமை வளர்மாரித் தாயே.

 (12)

திருப்புகழ்

தானத்தத் தத்த தானன - தனதானா

பாகுக்கொப் புற்ற பாடல்கள் - பலவாயே

            பாடிப்பத் திக்கண் நீள்பெரி - யவரோடே

யோகுற்றுச் சித்த மாரமை - தியினாலே

            ஊனக்கட் கிச்சை தோய்தெரி - சனமீவாய்

சேகுற்றுக் கைக்கொ ளோர்கதை - யொடுபோர்சூழ்

            தீயிற்செற் றுக்கு லாவிய - திரிசூலி

காகுத்தற் கற்பு நீள்துணை - எனவாழ்வாய்

            காளப்பட் டிக்கண் மாரியென் - உமையாளே.

விண்ணப்பம்

(நேரிசை வெண்பா)

மாரியாய் நின்றிந்த மாநிலத்தோ ரைப்புரக்கும்

மாரியே சீர்கொள்கௌ மாரியே  - பாரில்

திருவருளா ராடல்பல செய்தடியார்க் கென்றும்

குருவருளார் மெய்ச்சீர் கொடு.

 

ஆக்கியோனும்  நூற்பயனும்

வந்தனக்கௌ மார மடத்தி லவிரடிமைச்

சுந்தரமன் பெய்திச் சொலும்பாடல் - சந்ததமுங்

கற்றுத் துதிப்பார் கவின்மாரி யம்மையருள்

பெற்றுத் திகழ்வார்மெய்ப் பேறு.       

 

வாழ்த்து வெண்பா

(நேரிசை வெண்பா)

காளப்பட் டிக்கண் கவின்மாரித் தாய்வாழ்க

நீளன்பு செய்வார் நிதம்வாழ்க - கோளற்று

நன்றமைந்து மக்களெலாம் ஞாலத்தில் வாழ்கவே

என்றுங் கோடி இசைந்து.      

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக