தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த
காளப்பட்டி
காளியம்மை பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
காளப்பட்
டிக்கண் கவின்காளி யம்மைபுகழ்
நீளத்
துதிப்பா நிகழ்த்துவேன் - தாளப்
பொருத்தமுட னாடும்மயில்ப்
புண்ணியனை ஐந்து
திருக்கரத்த னைப்பணுவுற்
றே.
(1)
நூல்
(எண்சீர்
ஆசிரிய விருத்தம்)
பூமருவும்
காமர்மலர்ச் சேவடியும் கவினார்
பொன்னுடையும் மின்னிடையும் பூணும்வளைக்
கரமும்
நாமருவும்
துதிக்கிரங்கி நல்லருள்செய் விழியும்
நண்ணுகுறு நகைவாயும் நல்நீற்று நுதலும்
சேமருவும்
பரமன்விரும் பிடுமுனெழில் பலவும்
திகழவடி யேன்கண்ணெதிர் தெரிசனம்தந் தருள்வாய்
-காமருவும் தேவர்களும் போற்றவரு சிவையே
காளப்பட் டிப்பதிவாழ் காளிவுமை யவளே.
(2)
செங்கையில்பா
சாங்குசமும் பைங்கிளியும் இலகத்
திகழும்மர கதவடிவில் சிங்கமிசை இவர்ந்து
நங்கையர்கோ
வானகலை மகளுடன்செந் திருவும்
நாடுபணி புரியவந்துன் நல்அருள்செய் குவையோ
மங்கைஒரு
பங்கன்எனப் புலவர்சொலச் சிவன்பால்
மன்னிஅவிர் கன்னிஎன வயங்குபரா சத்தீ
கங்கைமுதல்
ஒன்பதின்மர் தோழமைகொண் டுவந்தாய்
காளப்பட் டிப்பதிவாழ் காளிவுமை யவளே.
(3)
பொய்ச்சமய
நெறிச்சிறியோர் புகலும்மொழி நம்பிப்
புல்லருந்தும் மேடம்முதல் புகலுமுயிர்
தம்மை
அச்சமிலா
துன்னெதிர்கொன் றிடத்துணிவா ரந்தோ
அருள்நெறியி லவர்களெலா மமைந்திலகப் புரிவாய்
மெய்ச்சமயத்
துயர்வான சைவம்வளர் வுறமுன்
வியன்காழிப் பதிவருசம் பந்தருணத் தந்த
கச்சணிக்கொங்
கையினமுதம் யானுமுண வருள்வாய்
காளப்பட் டிப்பதிவாழ் காளிவுமை யவளே.
(4)
பைந்தமிழா
லுன்றனிசை பாடுகவி ராச
பண்டிதற்கா வெழில்க்காசிப் பதிவரைசென்
றவன்றன்
சொந்தமகள்
போலுருக்கொண் டமுதமைத்துத் தினமும்
துய்ப்பநல்கி மீண்டவுன்றன் தொல்புகழ்கேட்
டிருந்தும்
இந்தவுல
கினில்நிலையாப் பொருள்களையு முண்மை
இல்லாதார் தமையும்நம்பு இளைக்கவிட்டா யறமோ
கந்தனையும்
களிற்றுமுகத் தண்ணலையும் பெற்றாய்
காளப்பட் டிப்பதிவாழ் காளிவுமை யவளே.
(5)
உண்ணமுதும்
நீரும்வெறுத் தருந்தவம்செய் கில்லேன்
உன்னுருவை நாடியெழுத் தொருமூன்றும் பகரேன்
விண்ணரசும்
மண்ணரசும் மெய்யலவென் றறிந்தேன்
மேதினியில் பலயிடுக்கண் மேவியுளந் தளர்வேன்
தண்ணருனென்
மேல்ச்சிறிது சார்ந்திடநோக் கில்லாய்
தாய்யிருக்கச் சேய்தளர்தல் தக்கதென்பா
ருளரோ
கண்ணருமூன்
றுடையகவு மாரிதயா நிதியே
காளப்பட் டிப்பதிவாழ் காளிவுமை யவளே.
(6)
பழுத்தமது
ரத்தமிழா லுனருளை நாடிப்
பாடுமபி ராமபட்டர்க் காகவிருள் முதிர்ந்து
கொழுத்தவமா
வாசையினில் முழுமதியம் வரச்செய்
கொற்றமெடுத் தோதுமென்பால் சற்றருள்செய்
திடுவாய்
வழுத்தகில
சராசரமெல் லாமழிந்து மழியா
வண்மையுட னரனிருக்கும் மாண்பெதெனி லுன்றன்
கழுத்தணிமங்
கலவலியென் றார்பெரியோ ரன்றோ
காளப்பட் டிப்பதிவாழ் காளிவுமை யவளே.
(7)
மணம்மலிபூ
வகைகொடுநின் தாளிலருச் சித்து
வண்டமிழ்ப்பாக் கொடுதுதித்துன் மாணடியார்க்
கேற்ற
குணம்மலிநற்
பணிபுரிந்துன் திருவுருவைக் கருதிக்
குறையறுபே ரின்பநலம் கொள்ளவெனக் கருள்வாய்
பணவரவ
மாடவம்பொற் சபையிலர னாடல்
பயில்பொழுதி லெதிராடும் பச்சைநிறக் கவுரீ
கணம்மருவுஞ்
சித்தர்பணி கொங்கணன்போற் றிறைவீ
காளப்பட் டிப்பதிவாழ் காளிவுமை யவளே.
(8)
செங்கமலா
தனத்திருக்கும் பிரமன்விதிப் பிழையைத்
திருத்துமுன்ற னிளையமகன் திருவடியென் றருணைத்
துங்கமுனி
வரனுரைத்தா னக்குகனைப் பெறும்நின்
தூயமலர்த் தாள்களதைத் துடைக்கவிசைந் திலதேன்
பங்கயனைச்
சிறைபுரிந்த பண்ணவ னோராறு
பாலரெனத் திகழ்நாளோர் படிவமுறச் சேர்த்தாய்
கங்கணமென்
றரவணிந்த கைப்பரன்ற னிடத்தாய்
காளப்பட் டிப்பதிவாழ் காளிவுமை யவளே.
(9)
வெருவநிக
ழாயிரமா முகமுமிரா யிரமாம்
வியன்கரமு மாயுதமும் விளங்கவரு முன்றன்
திருவுருவைக்
கண்டபடி யேன்போற்றும்விற லில்லேன்
திகழ்வாலைப் பெண்மகவில் தெரிசனம்தந் தாள்வாய்
தருமனெனுஞ்
சமன்மடியத் தாளெடுத்த பரமன்
தன்னொருமுகக் கண்ணாலுஞ் சந்ததமும் நாடிக்
கருதுமுயி
ரோவியமாக் கவினுமழ குடையாய்
காளப்பட் டிப்பதிவாழ் காளிவுமை யவளே.
(10)
வாணியென
யிருந்தறுபான் நான்குகலைச் செல்வம்
வழங்கிடுவா யென்வகைத்தா வருதிருவா யிருந்து
பேணிடுமெண்
செல்வமன்பர் பெறத்தருவாய் ஞானப்
பெரும்பேற்றை யுமையவளாய் பிறங்கியருள்
புரிவாய்
வேண்முடிப்
பரனுடன்நீ வேறலனெ ணுணர்த்த
விமலனுரு வினிற்பாதி மேவியவிர் தாயே
காணியென
வுடலாதி நல்குமன்பர்க் கெளியாய்
காளப்பட் டிப்பதிவாழ் காளிவுமை யவளே.
(11)
புவிபுகழும்
பாபநா சத்திலுனைப் போற்றும்
புலவனாம் நமசிவா யற்கரசன் சொலல்போல்
கவின்மலர்ச்செண்
டுன்கரத்தி லிருந்ததனைத் தன்னோர்
கையிடத்தில்ச் சேரவருள் கருணைமலி தேவீ
குவிமணத்துத்
தொண்டருளக் கோவிலவிர் விளக்கே
கொடியிடையும் பிடிநடையும் கொண்டகருங் குயிலே
கவியரசர்
புவியரசர் போற்றருள்கற் பகமே
காளப்பட் டிப்பதிவாழ் காளிவுமை யவளே.
(12)
பன்னிரண்டு
கையழகும் வளைகளிலங் கழகும்,
பவளவித ழழகும்முத்துப் பலலழகும் குவளை
பன்னியல்பார்
கண்ணழகும், பதுமுக வழகும்
பட்டுடைசே ரிடையழகும் பரகதியாந் தாளில்
மன்னியபே
ரழகுமென்றன் மனத்தும்விழி முன்னும்
வயங்கவொரு தரமேனும் வந்தருள்வா யந்நாள்
கன்னியென
யிருந்துலகைப் பெற்றருள்சிற் பரையே
காளப்பட் டிப்பதிவாழ் காளிவுமை யவளே.
(13)
நூற்பயன்
வன்னிமதி,
பரிதி,விழி யானபரன் மதுரை
மாநகரில் மணம்முடிக்க மலைக்கொடிமன் னவன்றன்
கன்னியென
நாடாண்ட கயற்கண்ணம்மை யென்னுங்
காளப்பட் டிப்பதிவாழ் காளிவுமை யவளை
மன்னியசீர்ச்
சிரவையினில் கவுமார மடத்தில்
வருகுரவர் தொண்டனெனும் மாண்பமைசுந் தரன்தான்
பன்னியயிப்
பதிகமன்பால் படித்துணர்வா ரெல்லாம்
பரவுமிக பரத்திலின்பப் பயனடைவார் நிசமே.
(14)
திருப்புகழ்
தானத்தத்
தத்தன தானன - தனதானா
ஈனச்சித்
தத்தொடர் பாலுல
காசைக்குட் டவமார்செய
லேமிக்குற் றுத்தளர் வேனுயர்
- வுறுமாறே
ஏமத்துக்
கொத்தொளி நீடிய
சூலத்தைக் கைக்கொடு பேயுடன்
ஈமத்துற் றுத்தின மாடிடும்
- அரனார்தாம்
ஏனத்தைச்
செற்றிடு மாறுசெல்
காலத்திற் பிற்செலும் நீயெழில்
ஏய்பச்சைப் பொற்கிளி நேர்திரு
- உருவாயே
ஈடற்றுக்
கொற்றம்நி லாவிய
சீயத்திற் சற்றடி யேனெதிர்
ஈசற்குப் பக்கம தாய்யெதிர்
- வருவாயே
கானத்துற்
றுக்கிளி ஓவிடும்
வேடப்பொற் புக்கொடி மேல்மிகு
காமுற்றுப் பற்பல ஆடல்செய்
- குகன்மாதா
காரொக்கப் பெற்றவர் மேனிரு
லாவிக்கைச் சக்கரமும் மேவிய
காகுத்தற் குத்துணை யாவரும்
- இசையாளே
கானத்தைப்
பெற்றவிர் பாடல்கள்
பாடிப்பத் திப்பொலி வார்பவர்
காணச்சித் தத்திடை நாள்தொறும்
- அவிர்தாயே
காமர்ப்பெற்
றிட்டவிர் மாமயில்
ஆடச்சுற் றித்திகழ் சோலைகொள்
காளப்பட் டிப்பதி மேவிய -
உமையாளே.
கும்பாபிஷேகப் கால விளக்கம்
(நேரிசை
வெண்பா)
விசுவா
வசுவருடம் மேடமுப்ப தாம்நாள்
இசைதோய்
புதனத்தத் தின்ப - நசைமேவு
காளப்பட்
டிப்பதிவாழ் காளியம்மை யன்பர்தமை
ஆளக்கொண் டாள்குடநீ
ராட்டு.
வாழ்த்து வெண்பா
(நேரிசை
வெண்பா)
மன்னெழில்க்கா
ளப்பட்டி மாகாளி யம்மையன்பு
துன்னடியார்
வாழ்க துதிபகர்வோர் - நல்நலம்சேர்
ஆயினங்க
ளேமுதலா மாருயிரெல் லாம்வாழ்க
பூவிலறம் வாழ்க பொலிந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக