தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த
கணபதி இராயப்பெருமான் பதிகம்
விநாயகர் துதி
(நேரிசை
வெண்பா)
குணம்மலியு
மன்பர் குடிதழைத்து வாழுங்
கணபதிரா
யர்கோயில்க் கண்ணார் - கணபதியே
உன்னைப்
பணிந்தே னுலவாத பேரின்பந்
தன்னை யெனக்கின்று
தா.
(1)
முருகப்பெருமான் துதி
(நேரிசை
வெண்பா)
ராயர்கோ
யில்க்கண் ணிலங்குமிள மைக்கோலம்
மேய
குகமுருகா வேலவா - தூய
திருவடியைப்
போற்றினேன் செல்வத்துள் மேலாம்
திருவருளை யாம்பொருந்தச்
செய்.
(2)
நூல்
(கொச்சகக்
கலிப்பா)
திருவளர்சிந்
துரநுதலு மிந்தருளார் விழிமலரும்
மருவுமணி
வாள்கரமும் வயங்குதிரு வடியிணையும்
உருவளரும்
பரிமீதி லுலவுதிருக் காட்சிநல்கித்
திருவருள்தா கணபதியூர்த்
திகழ்ராயப் பெருமானே.
(3)
தாயிலுயர்ந்த
தாருயிர்க்குத் தயையுரிநீ யெழுந்தருளுங்
கோயிலினி
லெந்நாளுங் கோலாக லம்பொலியத்
தூவியலா
ரடியவர்கள் தொண்டுபுரி சிறப்பருள்வாய்
சேய்யெனையாள் கணபதியூர்
திகழ்ராயப் பெருமானே.
(4)
பொய்யான
உலகமயல்ப் பொருந்துவார் தமைத்திருத்தி
மெய்யான
திருவருட்சீர் மேவுதற்குமுன் கோயிலிடைக்
கையாலாம்
பணிசெய்யக் கருதும்விருப் பீடேறச்
செய்யாயோ கணபதியூர்
திகழ்ராயப் பெருமானே.
(5)
கற்றவுட
னாணவத்தால் கட்டுண்டு தவம்மறந்து,
வெற்றுரைகள்
பேசுகின்ற வீணர்களைத் திருத்துமுயர்
நற்றவம்சால்
பெரியோர்கள் நயந்தவதா ரம்செய்த
செற்றமறும் கணபதியூர்
திகழ்ராயப் பெருமானே.
(6)
மாதவம்செய்
மாண்புடனே மகிமைமிகும் துதிபாடி
ஏதமறும்
திருப்பணிசெய் தெனையடைந்தார்க் கெப்பொருளும்
ஈதல்புரி
கொடைநலமும் யானடைய நீயருள்வாய்
தீதறுசீர்க் கணபதியூர்
திகழ்ராயப் பெருமானே.
(7)
வந்துபணி
செய்வோர்க்கு மன்னுசெல்வந் தந்தருளும்
உந்தனடி
போற்றாரை உரையாலே திருத்துநலம்
எந்தனுக்குத்
தந்தருள்வா யெழிலாரும் பொழில்சூழும்
செந்தகையார் கணபதியூர்
திகழ்ராயப் பெருமானே.
(8)
சைவமென்றும்
வைணவமே தக்கதென்றும் வாதிட்டே
உய்வகையை
நாடாம லுழலுமவர் தம்மையெல்லாம்
தெய்வமொன்றே
யெனயெடுத்துச் செப்பியொப்பும் படியுனருள்
செய்திடுவாய் கணபதியூர்
திகழ்ராயப் பெருமானே.
(9)
உன்னைமிக
நினைந்துருகி உனதுதிரு வருள்மூழ்கி
என்னுடலை
மறந்தநிட்டை யெய்தும்வகை எண்ணுமெனைப்
பொன்னைமண்ணை
நினைந்தவாமே போகாம லாண்டருள்வாய்
தென்னைவளக் கணபதியூர்
திகழ்ராயப் பெருமானே.
(10)
கொழிதமிழார்
தேவாரங் குலவுதிருப் புகழ்திருமால்
வழியருளார்
பிரபந்த வகையுருகிப் பாடவருள்
தொழில்வளமார்
கோவைநகர்த் தொடர்பாக வடபாலில்
செழிநலம்சால் கணபதியூர்
திகழ்ராயப் பெருமானே.
(11)
வந்தனைசெய்
யுன்கோயில் வண்ணமுறப் புதுமைநலச்
சந்தமுறத்
திருப்பணிகள் தாராள மாய்ச்செய்யச்
சொந்தமுட
னுதவுமன்பர் சுகம்பொருந்த வருள்புரிவாய்
செந்திருவார் கணபதியூர்
திகழ்ராயப் பெருமானே.
(12)
ஆராத
காதலுட னாலயத்துத் திருப்பணிக்கு
நேராகப்
பொருளுதவி நெடிதளித்த யாவருக்கும்
தீராத
செல்வநலஞ் செழிப்பருள வேண்டுகின்றேன்
சீராருங் கணபதியூர்
திகழ்ராயப் பெருமானே.
(13)
நம்பாநின்
திருக்கோயில் வுயந்ததிருப் பணியுடனே
கும்பாபி
டேகமதுங் கோலமுறச் செய்வோர்க்கு
வெம்பாவ
வினைநீக்கி மேலான நலமருள்வாய்
தெம்பாளர் கணபதியூர்
திகழ்ராயப் பெருமானே.
(14)
திருப்புகழ்
தனதன தானத் - தனதான
சுருதிகள்
ஓலிட் - டறியாத
சுகம்மிக மேவற் - புதமான
திருவருள்
ஞானக் - கடலான
திருவடி நேயத் - தினையீவாய்
பருதியு
மேயொப் - பிலதான
படரொளி மேனிப் - பொலிவோனே
கருதிடு
வாருக் - கெளியோனே
கணபதி ராயப் – பெருமானே.
கருப்பராயசுவாமி துதி
(நேரிசை
வெண்பா)
ராயர்திருக்
கோயிலினில் நற்றுணையா வாழ்கின்ற
தூயகறுப்
பண்ண சுவாமிநினை - நேயமுடன்
நற்பொருளால்
நற்பூசை நாள்தொறும்செய் நல்லவர்க்கு
பற்பலவாம் நன்மைவரப்
பண்.
கும்பாபிடேகக் கால விளக்கம்
(நேரிசை
வெண்பா)
ஆண்டு
சவுமியத் தார்பங் குனிமாதம்
மாண்துலங்கு
மைந்தாம்நாள் வண்பூசம் - நீண்டபுதன்
நன்னாள்
கணபதியூர் ராயர்கும்ப நீராட்டுப்
பொன்னாள தென்னப்
புகல்.
வாழி வெண்பா
(நேரிசை
வெண்பா)
கணபதியூர்
வாழி கவின்ராயர் கோயில்
வணமாகச்
செய்தவன்பர் வாழி - குணமுடனே
பூசை
புரிவதற்குப் புண்ணியப்பொன் தந்திடுவோர்
நேசமுடன் வாழி நிதம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக