தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த
கீரநத்தம்
சென்னியாண்டவர் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
சீரனைத்தும்
நல்கித் திகழ்சென்னி யாண்டவன்மேல்
கீரநத்தத்
தின்று கிளத்துதுதி - பாரனைத்தும்
போற்றும்
புகழில் பொலியத் துணைமயிலும்
வேற்படையும் சேவலு
மாம்மெய்.
(1)
நூல்
(எழுசீர்
ஆசிரிய விருத்தம்)
திருவளர்
கயிலைச் சிவபிரான் விழியில்
தீப்பொறி யாகிவந் தாறாம்
உருவமைந்
துமையா ளுதவுபா லருந்தும்
ஒருவனே கருவநே கத்தில்
மருவிடா
தென்னைக் காத்தருள் புரிய
மயில்மிசை யொருதரம் வருவாய்
அருவுரு
ஆவாய் கீரணப் பதிவாழ்
ஐயனே சென்னியாண் டவனே.
(2)
கஞ்சமா
மலரோன் மாயவன் மதவேள்
காலனென் றிடுமவர் கரத்தில்
தஞ்சமா
யடியேன் நைவுறா தாண்டுன்
சரணமேத் திடவருள் தருவாய்
வஞ்சமா
மரமாம் சூரனைத் தடிந்து
வானவர் தமக்கருள் வழங்கி
அஞ்சலீந்த
தருள்வோய் கீரணப் பதிவாழ்
அண்ணலே சென்னியாண் டவனே.
(3)
கயிலையி
லுமையாள் காற்சிலம் பிடையே
கவினவந் திடுநவ வீரர்
பயிலவா
ழிலக்கம் வீரர்பூ தருஞ்சூழ்
பரமனே பாரினில்ப் பலவாம்
சயிலம்முற்
றாடல் புரியிரு சரணச்
சண்முகா விண்ணுளோர் பரவும்
அயிலணி
புயனே கீரணப் பதிவாழ்
அமலனே சென்னியாண் டவனே.
(4)
உரகபூ
டணனம் பரமனுக் கந்நாள்
ஓதிய தாரகப் பொருளைக்
கரகமேந்
தியகைக் குறுமுனி கிள்ளை
காதுறக் கேட்கமுன் னுரைத்தாய்;
இரவொடு
பகலு முன்பணி புரியும்
ஏழையேன் தனக்குமோ திடுவாய்
அரகர
வொலிச்சீர்க் கீரணப் பதிவாழ்
அத்தனே சென்னியாண் டவனே.
(5)
நாயினும்
கடையாம் பலபிறப் பெய்தி
நலிந்திடு மென்றனை யிரங்கித்
தாயினி
லெடுத்தாண் டருள்புரி முருகா
சரவணா சண்முகா குமரா
காயிரும்
பனைய குடுமிதோய் சேவல்
கவின்றிடும் கொடியுளாய் கவின்பேர்
ஆயிர
முள்ளாய் கீரணப் பதிவாழ்
அதிபனே சென்னியாண் டவனே.
(6)
ஊனையே!
விரும்பி வுண்டிடும் நீசர்
உறவைவிட் டுன்திருத் தொண்டுந்
தேனைநேர்
பாடல் செப்பியேத் திசையுஞ்
சேர்த்திட வருள்செய் வேல்ச்சேயே
மானைநேர்
விழியா ரிருவர்தன் பாகம்
மருவிட மயில்மிசை தகரில்,
ஆனையில்
வருவாய் கீரணப் பதிவாழ்
அற்புதா சென்னியாண் டவனே.
(7)
பெருமறை
பலவும் பேசிட முடியாப்
பெரும்புக ழுடையவேற் பிரானே
உருமறைத்
தந்நாள் வள்ளிநா யகிமா
உவந்தவா சிவந்தமே னியனே
திருமறை
யவனைக் குட்டி,வன் சிறையில்
தளர்வுறத் தளைசெயுந் தலைவா
அருமறைக்
கரியாய் கீரணப் பதிவாழ்
ஆதியே சென்னியாண் டவனே.
(8)
குருந்தமா
மரத்தின் கீழிருந் தன்று
குதிரைவாங் கிடவரும் தொண்டன்
பெருந்தவ
மாகி ஆண்டருள் பெருமான்
பெற்றருள் வெற்றிவே லவனே
பொருந்தருள்
கவுமா ரப்பெரு நெறியில்ப்
புனிதமெய்த் தவஞ்செயும் பெருமை
அருந்தவர்
மருவும் கீரணப் பதிவாழ்
அமரனே சென்னியாண் டவனே.
(9)
கொடியதாம்
கொலையும் புலையுமற் றுண்மை
குலவிய நியமசீ லர்களாய்
நெடியவேல்
தண்ட பாணிசந் நிதிமுன்
நின்றுபோற் றிப்பணிந் தேத்திப்
பொடிகொள்வெண்
ணீறு மக்கமா லிகையும்
பூண்டுமெய்த் தவம்செய்வோ ராகும்
அடியவர்
பலர்தோய் கீரணப் பதிவாழ்
அப்பனே சென்னியாண் டவனே.
(10)
நீறுதோ
யுருவுந் தண்டமும் குலவ
நீடருள் பழனியில் நின்றாய்
வீறுதோய்
அசுரர் குலமறக் கறுவும்
வெற்றிவேற் படையினை உடையாய்
ஊறுதீர்ந்
திடநக் கீரனோ தியபா
உவந்தவா பன்னிரு புயத்தெம்
ஆறுமா
முகனே கீரணப் பதிவாழ்
அழகனே சென்னியாண் டவனே.
(11)
விண்ணவர்
தாமும் போற்றுயர் பொதியை
மேவகத் தியன்கலை யாகி
எண்ணரும்
புகழ்க்கௌ மாரநல்ச் சபையில்
இலங்கிரா மானந்த முனிவன்
கண்ணருள்
பெற்றுத் தவமுயல் பெருமை
கவின்மரு தாசலப் பெயர்தோய்
அண்ணல்வாழ்
வமையும் கீரணப் பதிவாழ்
அருளனே சென்னியாண் டவனே.
(12)
பாடுவார் பாடிப் பரவுவார் பத்திப்
பணிபல யியற்றி உந்தனையே
நாடுவார்
நாடித் தேடுவார் உன்பேர்
நவிலுவார் நாள்தொறு முன்பால்
கூடுவார்
பலரும் காவடி தோளில்க்
கொண்டுமெய் மறந்துவந் தன்பால்
ஆடுவார்
பலர்சேர் கீரணப் பதிவாழ்
அறவனே சென்னியாண் டவனே.
(13)
விண்ணப்பம்
(நேரிசை
வெண்பா)
அன்பர்
பரவுசென்னி யாண்டவனே கீரணத்தூர்
இன்பமுற
மேவும் இறையவனே - நின்பதத்தில்
சுந்தரப்பேர்
தோயடியேன் சூட்டுமிப்பாக் கற்பவர்க்கு
வந்தருள்வாய் வேண்டும்
வரம்.
திருப்புகழ்
தன்ன
தாந்தன தானான தத்தத் - தனதானா
கன்ன
லேந்துகை
வேளாலி
டர்ப்பட் - டுழலாதே
கண்ணி வாய்ந்தபுள்
போலாசை
உற்றிட் - டயராதே
மின்னல்
போன்றொளிர்
வேலோட
திர்ப்பட் - டடியேன்நேர்
வெம்மை யாம்பவ
நோய்மாய்வு
றச்சற் - றருள்வாயே
தென்னன்
நீண்டுற
மாண்நீற
ளித்துப் - புரிவோனே
செம்மை
தோய்ந்துள
சீராரு
ருப்பெற் - றவிர்சேயே
செந்நெ
லார்ந்தவிர்
சீகாழி
உற்றுத் - திகழ்வோனே
சென்னி
யாண்டவ
னேகீர
நத்தப் - பெருமானே.
வாழ்த்து
(கலி
விருத்தம்)
சென்னி
யாண்டவர் கோயில் திருப்பணி
உன்னிப்
புரிந்தவர் ஓங்கு கும்பநீர்
தன்னைப்
பெய்தவர் சார்ந்து போற்றுவோர்
சொன்ன நலமெலாந் துய்த்து
வாழ்கவே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக