தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த
கொங்கணகிரி
கந்தசாமிப் பெருமான் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
கொங்கில்ச்
சிறந்தநல்க் கொங்கணகி ரிக்கணருள்
தங்கு
மருள்கந்த சாமிமிசை - பொங்குமியல்
செந்தமிழ்ப்பாப்
பாடத் திகழானை மாமுகங்கொள்
ஐந்துகரன் தாள்காப்ப
தாம்.
(1)
நூல்
(எழுசீர்
ஆசிரிய விருத்தம்)
ஒளித்திரு
முடியும் பங்கய முகமும்
ஒள்நுதல்க் கண்ணொடு நலங்கள்
அளித்திடும்
விழியும் வச்சிர சூலம்
அபயமார் கரங்களும் மார்பும்
விளித்தருள்
வழங்கும் திருவடி மலரும்
விளங்கவன் னையர்நடுக் காட்சி
களித்திட
வழங்காய் கொங்கண கிரிவாழ்
கந்தசா மிப்பெரு மானே.
(2)
எண்ணிய
எண்ண மெளிதளித் தருளும்
எந்தையே சந்தவான் கவியால்
திண்ணிய
வருணை யூர்வரு முனிவன்
திருப்புக ழேற்றணி புயத்தில்
நண்ணியேத்
திடுமிச் சிறியனேன் புகலும்
நவையமை பாடலு முரிய
கண்ணியா
யேற்பாய் கொங்கண கிரிவாழ்
கந்தசா மிப்பெரு மானே.
(3)
குன்றினந்
தோறும் விளங்கிடும் பரனே
குறவர்தங் குலக்கொழுந் தாக
ஒன்றியெம்
மன்னை விளங்கிய நாளில்
ஒளிகொள்தா மரையடி வருந்தச்
சென்றைனை
யின்று பன்முறை வேண்டும்
சிறியனே னளம்பத மமைக்கில்
கன்றுமோ
பகராய் கொங்கண கிரிவாழ்
கந்தசா மிப்பெரு மானே.
(4)
நாவடி
சொல்ப்போ லநுபவ வருணை
நாதனார் பாடலேற் றவர்தம்
பாவடி
யேட்டில்ப் பொருந்திடு பாத
பங்கய மெங்களுக் கருள்வாய்
தாவடி
யோட்டும் மயிலவா சரணம்
சரவணா சரணம்யா மென்று
காவடி
யெடுப்பார் கொங்கண கிரிவாழ்
கந்தசா மிப்பெரு மானே.
(5)
திருப்பணி
புரிவார் திருப்புகழ் சொல்வார்
சேருமா றாம்படை வீட்டும்
விருப்புடன்
சென்று பணிகுவார் முருகா
விமலனே யெங்கள்கொங் கணப்பேர்ப்
பொருப்பனே
யென்பா ரவர்க்கிக நலமாம்
பொற்பெலாம் நல்கிமற் றொருதாய்
கருப்புகா
தாள்வாய் கொங்கண கிரிவாழ்
கந்தசா மிப்பெரு மானே.
(6)
கன்றினம்
வருந்த மலைகுடை யாக்கொள்
கண்ணனின் மருகனே தொண்டர்
ஒன்றிய
பஞ்சம் நீங்கிடப் படிக்காசு
உதவிய பரன்விழி மதலாய்
பொன்றிடப்
பயிர்கள் துயருற வுயிர்கள்
பொழிமழை தவிர்ந்ததா லெய்து
கன்றுதல்
நீக்காய் கொங்கண கிரிவாழ்
கந்தசா மிப்பெரு மானே.
(7)
கற்பகம்
கொண்ட குஞ்சரி யுடனே
கவின்மிகு வள்ளிமத் தியினில்
வெற்பகம்
பிளந்த சக்திவே லணிந்து
வெற்பெலாம் விளங்கிடும் முருகா
அற்பகங்
கொண்டு தோத்திரம் புரிந்து
அகம்குழைந் திடுமவர்க் கருளும்
கற்பகத்
தருவே கொங்கண கிரிவாழ்
கந்தசா மிப்பெரு மானே.
(8)
ஆரணம்
பரவும் சிவபிரான் விழியில்
அவதரித் தகிலமுண் டுமிழ்ந்த
நாரணன்
விழியில் தோன்றிடு மிரண்டு
நங்கையர் தமைமணங் கொண்டு
பூரணப்
பொருளாய் யுலகெலாம் விளங்கும்
புராதனா யென்னுள மமராக்
காரண
மியம்பாய் கொங்கண கிரிவாழ்
கந்தசா மிப்பெரு மானே.
(9)
ஆணவச்
சூரன் றனைவலி யடக்கி
அணிமயில் சேவலா யேற்று
மாணமைந்
திலங்கத் திருவருள் புரிந்த
மாட்சியா லுன்னடி யடைந்தேன்
வீணவத்
துழக்கு மென்வினை பொடித்து
விழிகுளிர் தரமயில்ப் பரியில்
காணவந்
தருள்வாய் கொங்கண கிரிவாழ்
கந்தசா மிப்பெரு மானே.
(10)
நாட்டுறு
மாறு வீட்டினுஞ் சென்று
நலந்தரு மாறெழுத் தோதி
பாட்டிசை
பாடி யாறதாம் கிழமை
பகருமா றாம்திதி, யறுமீன்
கூட்டிடு
கிருத்தி கைத்திரு நாளில்
கூடியே வழிபடும் தொண்டர்
காட்டிடுந்
திருப்பூர்க் கொங்கண கிரிவாழ்
கந்தசா மிப்பெரு மானே.
(11)
மாத்தளை
யுரத்தன் மருகனே சரணம்
வள்ளிபங் காசரண் உலகைப்
பூத்தவள்
மகனே புராரிதன் மதலாய்
புண்ணிய மூர்த்தியே சரணம்
ஏத்திடு
மடியே மிடரறக் களைந்திட்டு
ஏற்றமார் நலமெலாந் தந்து
காத்தருள்
சரணங் கொங்கண கிரிவாழ்
கந்தசா மிப்பெரு மானே.
(12)
பன்னிரு
புயத்தாய் திருவடி போற்றி
பற்றறுத் தாள்பதம் போற்றி
பன்னிய
ரிருவர் நடுவுளாய் போற்றி
பகர்தரு பரம்பொருள் போற்றி
நல்நிதி
யளிக்கும் நாயக போற்றி
நவிலுல கனைத்தையு மீன்ற
கன்னிதன்
சேயே கொங்கண கிரிவாழ்
கந்தசா மிப்பெரு மானே.
(13)
நூற்பயன்
புவிபுகழ்க்
கொங்க ணப்பெயர்ச் சித்தர்
போற்றிய யேற்றம்மிக் கதுவாய்க்
கவின்மிகப்
பொலியும் கொங்கண கிரிவாழ்
கந்தசா மிப்பெரு மானைச்
செவியினி
லேற்றுத் திருவருள் புரியச்
சிரவையூர்ச் சுந்தரன் புகல்பா
நவில்பவர்
முருகோ னருளினா லெல்லா
நலங்களும் பெற்றுவாழ் வாரே.
திருப்புகழ்
தந்தன
தனத்தந்தத் - தனதானா
ஒன்றிய
மனத்தின்பத் - தியினாலே
உன்றனை நினைத்தன்புற் - றடிநாயேன்
துன்றிய
கவிச்சந்தத் - தொடைபாடி
துன்பறு பதத்தொன்றப் - புரிவாயே
நன்றியல்
குறக்கொம்மைப் - புணர்வோனே
நம்பரன் நயக்குஞ்சொல்ப் - பகர்வோனே
குன்றினம்
மணக்கும்பொற் - பதநாத
கொங்கண கிரிக்கந்தப் – பெருமானே.
வாழி வெண்பா
(நேரிசை
வெண்பா)
கொங்கணப்பேர்க்
குன்றில் குலவுகந் தப்பெருமான்
தங்கும்
தளியமைக்கத் தக்கபொருள் - பங்களித்த
நல்லோர்கள்
வாழ்க நயந்து வழிபடுவோர்
எல்லோரும் வாழ்க
இசைந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக