தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த
குறும்ப பாளையம் செல்வநாயகி அம்மன் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
பற்றுபுகழ்
தோய்குறும்ப பாளையத்தில்க் கோயில்கொளும்
நல்தகைய
சீர்ச்செல்வ நாயகிமேல் - சொற்றமிழால்
பாடுமியற்
பாவுக்குப் பன்னுமிய லைந்துகரன்
கூடுமருள் துணையா கும்.
(1)
நூல்
(ஏழுசீர்
ஆசிரிய விருத்தம்)
மதித்திரு
முகமு மருள்பொழி விழியும்
மங்களப் புன்னகை வாயும்
கதித்திடும்
படைகொள் கரங்களு மன்பர்
கருதிடும் பதமல ரிணையும்
பதித்திடச்
சிங்க வாகன மீதில்
பாக்கியக் காட்சிதந் தருள்வாய்
மதித்திடும்
சிறப்பார் குறும்பபா ளையத்தில்
மருவருள் செல்வநா யகியே.
(2)
விண்ணகத்
தவரும் போற்றிடு முனது
விரைமல ரடியிணை தன்னை
எண்ணிநல்ப்
பகலு மந்தியு முருகும்
ஏற்றமார் பேற்றினை நல்காய்
பண்ணிசைப்
பாடல் கேட்டருள் பரையே
பற்றிலா நல்த்தவர்க் கமுதே
மண்ணகத்
துயர்ந்த குறும்பபா ளையத்தில்
மருவருள் செல்வநா யகியே.
(3)
பரம்பொரு
ளாமுன் சேவடி கருதிப்
பாடவும் பணியவும் பக்தர்
உரம்பொலி
கூட்டத் திருக்கவுங் கூட்டாய்
உயரணிக் கோபுரம் மாடம்
வரம்பொலி
புன்செய் நிலத்தினி லுயர்வாம்
வளங்களுந் தென்னைமா ஆதி
மரங்களும்
பொலியுங் குறும்பபா ளையத்தில்
மருவருட் செல்வநா யகியே.
(4)
பொங்கருள்
கருணை வாரிதி நின்முன்
பொங்கலிட் டன்பினில்ப் பூசை
பங்கமில்
லாது புரிபவர்க் கிருமைப்
பயன்களுந் தந்துமா நிலத்தில்
சங்கடந்
தீர்த்தான் டருளருட் பரையே
சாற்றுநல் பசனை, வாத்தி யங்கள்
மங்கள
மாச்செய் குறும்பபா ளையத்தில்
மருவருட் செல்வநா யகியே.
(5)
கற்றவர்
போற்றும் காழியூர் ஞானக்
கவுணியர்க் கருள்திரு முலைப்பால்
சற்றளித்
துலகில் நல்த்தகைப் பண்பு
தழைத்திட என்னையாண் டருளில்
குற்றமென்
றுன்னைத் தடுப்பவர் யாவர்
குமரவே ளன்னையே சரணம்
வற்றிலில்
லாச்சீர்க் குறும்பா ளையத்தில்
மருவருட் செல்வநா யகியே.
(6)
தாய்யென
உயிர்கட் கிகபர நலங்கள்
தழைத்திடப் புரிபரா சத்தீ
மாயையா
லுழன்று வாடிடு மெனக்கு
மாண்புசேர் நிலையளித் துனது
சேய்யென
யெடுத்துக் காத்திடச் சிறியேன்
செய்ததீ வினையுடன் பாசம்
மாய்யெனத்
தொலைத்தாள் குறும்பபா ளையத்தில்
மருவருட் செல்வநா யகியே.
(7)
நாட்டகத்
துயர்ந்த கொங்குவே ளாளர்
நற்குடி தனிலவிர் பாண்டிக்
கூட்டத்தார்
தமக்குக் குலமுதல் தேவாய்க்
குலவுநின் திருத்தளி புதுக்கி
தேட்டகத்
துடனே திருக்குட நீர்பெய்
திருவிழாச் செய்யடி யவர்தம்
மாட்டருள்
வழங்காய் குறும்பபா ளையத்தில்
மருவருட் செல்வநா யகியே.
(8)
நன்னல
மனைத்தும் நல்குசிற் பரையே
நானிலத் தருள்கொள்மார்க் கண்டன்
றன்னிடத்
துற்ற பாவம்நீக் கிடற்காச்
சார்ந்துகா லன்புரி பூசை
உன்னியேற்
றருள்கா லேச்சுரப் பெம்மான்
உமையொடு மமர்நகர்த் தென்பால்
மன்னிடத்
திகழுங் குறும்பபா ளையத்தில்
மருவருட் செல்வநா யகியே.
(9)
கடதட
கும்பக் களிற்றுமா முகனும்
கந்தனா மெந்தையுஞ் சேயாய்த்
திடமுற
அளித்த முழுமுதல்ப் பரையே
திகழுமுன் கடைக்கண்நோக் கருள்வாய்
அடலருள்
குமர னமர்ந்தருள் வழங்கும்
அணிகொள்சீர் இரத்தின கிரியின்
வடகிழக்
காகுங் குறும்பபா ளையத்தில்
மருவருட் செல்வநா யகியே.
(10)
நிரந்தர
மாக நின்திருக் கோயில்
நிகழ்தரு பூசைசெய் திடுவோர்
சுரந்தநல்
லுள்ளத் துடன்திருப் பணிக்குத்
தூயநல்ப் பொருளளித் திடுவோர்
பரந்தநல்
விழவு செய்திடு மிவர்கள்
பாக்கியம் பலவும்பெற் றுய்ய
வரந்தர
வேண்டுங் குறும்பபா ளையத்தில்
மருவருள் செல்வநா யகியே.
(11)
வாழ்த்து வெண்பா
(நேரிசை
வெண்பா)
வாழிசெல்வ
நாயகியார் வாழி வழிபடுவோர்
வாழி
திருப்பணிகள் வந்துசெய்தோர் - வாழியவே
பாடிப்
பரவுமன்பர் பற்றுநலம் பெற்றுலகில்
நீடிசைவார் செல்வம்
நிலைத்து.
(12)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக