தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த
ஆர்.எஸ்.புரம் இரத்தின விநாயகர் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
ஏத்தணியார் கோவை
இரத்தினவி நாயகன்மேல்
சாத்தணியார்
பூதேர் தமிழ்ப்பாடல் - யாத்தணியார்
பங்கயத்தாள்
சூட்டவருள் பாலிக்கும் மெய்யடியார்
துங்கஇணைத் தாள்ப்பூந்
துகள்.
(1)
நூல்
(எழுசீர்
ஆசிரிய விருத்தம்)
கொங்கணி
மருவும் கொன்றையும் மதியும்
கொளும்சடைத் தந்தையைப் போலத்
தங்கணி
குலவுன் தரிசனம் தமியேன்
சார்ந்திடத் தயைபுரிந் தருள்வாய்
பொங்கணி
சேர நாரையூர் நம்பி
பூசையை நேசமோ டேற்றாய்
கொங்கணி
நாட்டுக் கோவையம் பதியில்
குலவிரத் தினவிநா யகனே.
(2)
பண்டுசுந்
தரரும் சேரனார் தாமும்
பரன்கயி லையையணு கிடலால்
வண்டுணர்
மலரால் பூசனை விரைந்து
வாஞ்சையோ டியற்றிநல் லியற்பா
விண்டுபோற்
றவ்வை தனையவர் வெள்ளி
வெற்புறு முனம்துதிக் கையால்
கொண்டுசேர்த்
திட்டாய் கோவையம் பதியில்
குலவிரத் தினவிநா யகனே.
(3)
கஞ்சநாள்
மலர்ப்பொற் பாதமுங் கருணைக்
கண்களோர் மூன்றும்மற் றவையும்
நெஞ்சகத்
திருத்திக் கருதிடு மடியார்
நிலையெனக் கருள்வதெந் நாளோ
நஞ்சணி
மிடற்றுப் பரமனு முமையும்
நண்ணிய புண்ணியப் பொருளாம்
குஞ்சர
முகனே கோவையம் பதியில்
குலவிரத் தினவிநா யகனே.
(4)
கலகமிட்
டிடுமைம் பொறிபுலன் வழிசெல்
கருத்தினால் வருத்தம்மிக் கடைந்தேன்
இலகருள்
துளநீ சிறிதேன்மேல் தெளிக்கின்
இன்பவாழ் வெய்துவேன் கண்டாய்
விலகரும்
மூன்று விதமல மகன்று
மெய்ந்நெறி யாகும்வீட் டின்கண்
குலவிட
விடுப்பாய் கோவையம் பதியில்
குலவிரத் தினவிநா யகனே.
(5)
செந்தகைப்
பவள மேனியும், கரத்தில்
திகழ்ந்தபா சாங்குச வணியும்
தந்தமார்
களிற்று முகமுட னசையும்
தகையுறு காதுமோர் கொம்பும்
வந்ததீங்
கனிசேர் கைகளும் பாத
வனசமும் குலவிட வருவாய்
கொந்தணிச்
சோலைக் கோவையம் பதியில்
குலவிரத் தினவிழ யகனே.
(6)
பணஅரா
வனைய சினம்முத லாகப்
பகர்குணம் ஆறும்நீள் மனத்தேன்
மணம்மலி
பூசைப் பெரியர்போல் துதிப்பேன்
மாண்புற நின்னருள் வழங்காய்
தணவரு
மீகை யிரக்கம்மெய் யன்பு
சத்தியம் நல்த்தவம் நிறையுங்
குணமுளார்
மருவுங் கோவையம் பதியில்
குலவிரத் தினவிநா யகனே.
(7)
மாபுரம்
வணங்கேன் நீர்பல தோயேன்
மாணுறு மன்புசற் றில்லேன்
நீபுரந்
தாள்வ துண்டுகொ லடியேன்
நின்பதந் தஞ்சமா தரிப்பாய்
நூபுரம்
புனைதாள் சித்திபுத் தியுடன்
நுவலும்வல் லவைமண வாளா
கோபுரத்
தணியார் கோவையம் பதியில்
குலவிரத் தினவிநா யகனே.
(8)
இறையள
வேனும் நின்னுருக் கருதி
இன்புறும்
யோகினில்ப் பழகேன்
முறையுடன்
சரியை கிரியையும் புரியேன்
முத்திசித் தித்திட விழைந்தேன்
மறையள
விலதேத் திடுமுனைப் பரவும்
மாதவர் குழுவிலெற் சேர்த்தாள்
குறையறும்
வளமார் கோவையம் பதியில்
குலவிரத்
தினவிநா யகனே.
(9)
பம்பிய
நெறிகள் பலவிருந் தாலும்
பரவிடு மவரிட ரகல
நம்பிடும்
தெய்வம் நீயென வறிந்தே
நால்நிலத் தினருனை முதலில்
தெம்பிசை
தரயேத் திடுவதை யறிந்துன்
சீரிசை தரத்துதித் தேன்காண்
கும்பிடு
மவர்வாழ் கோவையம் பதியில்
குலவிரத் தினவிநா யகனே.
(10)
கொட்டிடும்
தேளைப் புரையும்வெங் கொடியர்
கூடிநல் லவர்களை வருத்தி
மட்டிலின்
புறுவார் குழுவினை யவர்தம்
வன்மையைக் களைதிறம் வழங்காய்
கிட்டிநின்
றறுகு தும்பையா தியவால்
கிளர்மறை சொலியருச் சித்துக்
குட்டிநிற்
பணிவேன் கோவையம் பதியில்
குலவிரத் தினவிநா யகனே.
(11)
மன்னுயிர்
தழைய நன்மழை பொழியும்
மஞ்சென மக்களின் பெய்தத்
தன்னுயர்
முயற்சி கொடுநனீர் வழங்குந்
தகையிரத் தினசபா பதிப்பேர்
பன்னும்மே
லவன்றன் நினைவுற நிறுவும்
பான்மையால் இரத்தினப் பெயர்தோய்
முன்னவன்
பதிகம் சுந்தர னன்பால்
மொழிந்தன னன்பரின் புறவே.
(12)
திருப்புகழ்
தனத்தனன
தானத் - தனதானா
நயக்கொடியர்
சூதினற் - றளராதே
நலத்தகைகொள் மாதவத் - திளையாதே
முயற்சிகொ
ளெனாதுகட் - புலன்நேரே
முழுத்தயைகொ டாகுவிற் - றிகழ்வாயே
அயத்தினிலு
லாவயில்க் - குகன்மேனாள்
அழைத்தபொழு தேகும்நட் - புடையோனே
இயற்றமிழ்வி
நோதருக் - கினியோனே
இரத்தினவி நாயகப் - பெருமாளே.
கும்பாபிடேகக் கால விளக்கம்
(நேரிசை
வெண்பா)
பிலவஐப்ப
சித்திங்கள் பேசுமே ழாம்நாள்
குலவுதிங்கள்
ரேவதியும் கொள்கால் - நிலவியதே
கோவை
இரத்தினப்பேர் கொள்கணப திக்கிரண்டா
மேவுகும்ப
நீர்பெய் விழா.
வாழ்த்து வெண்பா
(நேரிசை
வெண்பா)
கோவை
இரத்தினப்பேர் கொள்ளும் விநாயகனைச்
சேவைசெயு
மன்பர் தினம்வாழ்க - பாவையன்பால்
போற்றுமவர்
வாழ்க புவியினிலெல் லோரும்நலம்
ஏற்றுமிக வாழ்க இனிது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக